Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 ஐ நினைவுகூர பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு

Featured Replies

முள்ளிவாய்க்கால் மே 18ஐ  நினைவு தினத்தினை நினைவுகூர வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

'அன்பான எம் உறவுகளே. மே மாதம் என்றதும் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக தமது உயிர்களைக் காவு கொடுத்த அந்தக் காட்சிகளே எமது மனதின் முன் தோன்றும். பலர் எம் கண் முன்னாலும் இன்னும் பலர் எவ்வாறு என்று தெரியாமலும் தமது உயிர்களைக் காவு கொடுத்தனர்.

இக்கொடூரக் காட்சிகளை இதயமுள்ள எவருமே மறக்கமாட்டார்கள். இலங்கையில் இவ்வாறு பல தடவைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குச் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு காட்டப்படவில்லை. ஆனால் 2009 மே மாதம் வன்னியில் நடந்தது போல் எந்தவொரு காலகட்டத்திலும் நடந்ததில்லை. 

இங்கு குழந்தைகள், சிறுவர்கள் சிறுமியர்கள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், இளைஞர்கள் என எந்தவொரு பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடித்து மாண்டனர்.

எனவே மே மாதம் என்பது சொல்லொணாத் துன்பங்களை நாம் அனுபவித்த துன்பங்களில் மாதங்களில் மிகவும் துயரம் மிகுந்த மாதமாகும். 
எம்மவர்கள் மறைந்ததையிட்டு அவர்களின் இறுதிச் சடங்குகளைக்கூட நாம் செய்ய முடியவில்லை. எம்மவர் ஒருவர் இறந்துவிட்டால். வருடா வருடம் திவசம் செய்வோம். இதை அவர்கள் இறந்த திதியில் தான் செய்வோம்.

ஆனால் ஒருவர் இறந்த திதி தெரியாவிட்டால், நாம் மாயம் என்ற ஒன்றைப் பயன்படுத்தி ஒரே நாளில் செய்வோம்.

அதேபோல் வன்னியில் இறந்த எமது உறவுகளுக்காக ஒருநாள் பிரார்த்திப்போம். இது இலங்கையின் சட்டத்திற்கு முரணானதொன்று இல்லை. நாம் இலங்கையின் சட்டங்களை மதிப்போம். நாம் இலங்கையின் சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை எங்கும் நினைவு கூருவோம்.

வீடுகள், பாடசாலைகள், கோவில்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். எந்தவொரு கட்டத்திலும் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடாது பிரார்த்திப்போம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது,

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/110142--18-.html

சிங்கள ஆக்கிரமிப்பு கூலிகளுக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவினம். தமிழர் அடங்கி இருக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்...

நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.