Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 - ஒரு முகம் தெரியாத நண்பனின் கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மே 18 - ஒரு முகம் தெரியாத நண்பனின் கடிதம்! 
[Tuesday, 2014-05-13 20:11:49]
tamilmakkal-genoside-150.jpg
"தம்பி மகளுக்கு சாமத்தியச் சடங்கு செய்யிறம்! கட்டாயம் வரவேணும்!" என்று மறுமுனையில் இருந்து வந்த மாமியாரின் அழைப்பிற்கு செவிசாய்த்தவனிற்கு மே 18 ஞாயிற்றுக்கிழமைதான் அந்தச் சாமத்தியச்சடங்கு என்ற அவவின் அடுத்த வார்த்தையில் காத்திருந்தது அதிர்ச்சி. "மாமி! மே 18 தானோ? திகதியை வடிவாச்சொல்லுங்கோ?" என்றவனிற்கு "ஓம் தம்பி! மறவாமல் வந்திடு!" என்று வந்தது பதில். "என்ன மாமி சொல்லுறியள்..? ஞாபகம் இல்லையோ.? "என்றவனிற்கு "இல்லைத்தம்பி.! வயசு போகப் போக எல்லாம் மறக்குது" என்று பதில் வந்தது. "மே 18 முள்ளிவாய்க்கால்.." என்று சொல்லி முடிப்பதற்குள் "அப்பிடி எண்டால்..? என்ன தம்பி..?" என்ற மாமியாரின் வார்த்தையில் குண்டு பட்டுக் குற்றுயிரில் கிடப்பது போன்ற வலியையும் பயத்தையும் அனுபவித்தான் அவன்.
  
மேற்சொன்னது நண்பர் ஒருவரிற்கு அண்மைய வாரம் ஒன்றில் நடைபெற்ற உண்மையான சம்பவம்.
 
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றிற்குள் சிக்கியிருக்கும் இனம் ஒன்றின் இன்றைய நிலையை மேற்சொன்ன உரையாடலில் வரும் பாத்திரங்கள் இரண்டும் தெளிவாக பிரதிபலிக்கின்றன. இங்கு இடம்பெற்றிருக்கும் உரையாடல் பற்றிய சரி பிழை விவாதங்களைத் திறந்துவிடுவது இப்பத்தியின் நோக்கமல்ல. கடந்த ஐந்து வருடத்தில் இந்த அளவில் தான் முன்னேறி நிற்கின்றோம் என்று குறைகூறுவதும், குற்றம் சாட்டுவதும், வேதனைப்படுவதும் கூட இப்பத்தியின் நோக்கம் அல்ல.
 
அத்துடன் இங்கு அரசியல் சாணக்கியம் பற்றியோ ப+கோள சாதக பாதகம் பற்றியோகூட பேச வரவில்லை. ஏனெனில் இவையெல்லாம் காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் எதிர்பார்க்கும் வகையிலும் எதிர்பார்க்காத வகையிலும் மாறக்கூடியவை. ஆனால் விடுதலைதான் ஒரே வழி என்ற நிர்ப்பந்தத்திற்குள் நிற்கும் இனம் ஒன்றிடம் மாறாதிருக்கவேண்டியது மனோதிடம். இது உலகில் உள்ள எல்லாச் சக்திகளையும் விட பலமானது. வெல்லமுடியாத எந்த இலக்கையும் வென்றுவிடும் வல்லமை மிக்கது. இது ஒவ்வொரு சாமானியனதும் உதிரத்திலும் தினமும் கலந்தோடக்கூடியது.
 
அந்தச் சக்தியைப் பெறுவது அல்லது வளர்த்துக்கொள்வது தொடர்பான ஒரு முக்கிய விடயம் பற்றியே இப்பத்தியில் பேசப்படுகின்றது.
 
உலகெங்கும் ஆக்கிரமிப்பும் அழிப்பும் எவ்வாறு இயல்பானதும் நியாயமானதுவோ அதைவிட பலமடங்கு தற்காப்பதும் எதிர்த்துப்போரிடுவதும் இயல்பானதும் நியாயமானதுமே. ஆக்கிரமிப்பும் அழிப்புமே தற்காப்பினதும் போராடவேண்டியதனதும் அவசியத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை ஈழத்தீவில் தமிழ் இனம் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் எதிர்த்துப்போரிடவும் வேண்டிய தவிர்க்கமுடியாத சூழலிற்குள் தள்ளப்பட்டுநிற்கின்றது.
 
இன்று இருக்கும் நம் எதிரிகள் நம்மை விட பலம் மிக்கவர்கள். எம் எந்தச் சிறு எதிர்ப்பு அல்லது தற்காப்பு முயற்சிகளைக்கூட பெரும்பலத்தால், துரோகத்தால், புத்திசாலித்தனத்தால், பிரிவினையால் என பலவிதத்தால் முறியடிப்பார்கள். அவ்வாறான பெரும் எதிரிகளிற்கு எதிராக போராட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இனம் ஒன்று போராட எத்தனிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், முயற்சிகளிலும் கிள்ளியெறியப்படுவதையும், திசைதிருப்பப்படுவதையும், குற்றம்சாட்டப்படுவதையும், தடைசெய்யப்படுவதையும் கண்கூடாகக் காண்கின்றோம்.
 
இருப்பினும் எதிர்ப்பு அரசியல் விடுதலைப் போராட்டங்கள் எங்கும் தவிர்க்கமுடியாத ஒன்றே. ஆனால் இலகுவான ஒன்று அல்ல. காரணம் அதற்கு அதிகம் சக்தி தேவை. அந்தச் சக்தியைப் பெறுவதைத் தடுப்பதும் அதைப் பெறுவதற்காக முயற்சிப்பதுமே விடுதலைக்காக போராடுபவர்களிற்கும் ஆக்கிரமிப்பாளர்களிற்கும் இடையிலான அடிப்படை அல்லது முதல் மோதல். ஆனால் அந்தச் �சக்தி மூலம்� என்பது இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் எவ்வாறு இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தைக்கொண்டு மிகப்பாரிய அணுசக்தி படிப்படியாக பெறப்படுவது சாத்தியமாகிறதோ அதை விட அதிகம் சாத்தியமானது போராடுவதற்கான ஆண்ம சக்தியை பெறுவது.
 
அந்த ஆண்ம சக்தி விடுதலைக்காக வீழ்ந்தவர்களை நினைவுகூறும்போதும் அவர்கள் மீது சத்தியம் செய்யும் போதும் கிடைக்கின்றது. அந்த மூலத்தைக் கொண்டுதான் எந்தப்பெரிய சக்தியையும் தேடவும் திரட்டவும் உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தச் சக்தியைத்தான் போராட்டத்தின் எல்லாக் காலங்களிலும் எல்லாத் தேவைகளிற்கும் பயன்படுத்தி அதனை வென்றெடுக்கவும் முடியும்.
 
இதனால் தான் எதிரிகள் முதலில் சிதைப்பது நம் நினைவிடங்களை. ஏனெனில் போராடும் ஆண்ம சக்தியின் உறைவிடம் அங்கிருக்கின்றது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அத்தோடு நினைவுநாட்களில் ஒருங்கிணைய விடாது தடுப்பது நினைவுகளை மறக்கடிக்கச்செய்வது போன்ற செயல்பாடுகளில் துரிதமாகவும் இறுக்கமாவும் ஈடுபட்டு, போராடும் மக்களின் உளவியலையும் வாழ்வியலையும் படிப்படியாக மாற்றியமைத்து திட்டமிட்ட அழிப்பை துரிதப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
 
இந்நிலையில் எத்தகைய தடைகளைத் தாண்டியும் யாராலும் எங்கும் தவிர்க்கமுடியாதவாறு ஒரு நினைவுகூறலைச் செய்வது என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் ஆண்ம சக்தியையும் வழங்கும் விதமாகவும் ஆக்கிரமிப்பாளர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் மீது விழும் குறியீட்டு ரீதியான பதிலடியாகவும் அமையும். இவ்வாறான ஒரு அடிப்படை விடயம் பற்றி ஒவ்வொருவரும் சிந்திப்பதுவும் அதைச் சாத்தியப்பட வைத்தல் என்பதுவும் 2009 மே18 இற்குப் பின்னரான தமிழர் உளவியலிலும் போராட்டத்திலும் மிகவும் அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.
 
அவ்வாறான ஒரு நினைவு கூறலிற்கான மாதிரியை வரலாற்றில் இருந்துகூட தேடமுடியும். உதாரணமாகயூதர்கள் தாங்கள் சந்தித்த இன அழிப்பை நினைவுகூறவும் தமக்கான போராட்ட சக்தியைப்பெறவும் நினைவு கூறலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இறந்தவர்களின் பெயர்களை வாசித்தல் மற்றும் ஒரு கசப்பான திரவத்தை அருந்துதல் போன்றவற்றை கடைப்பிடித்திருக்கிறார்கள். பலர் பலவாறு சொன்னாலும் சாமானிய யூத இனத்தினன் ஒவ்வொருவனும் உலகில் நிமிர்ந்துநிற்கும் பேராற்றலை நினைவுகூறலில் இருந்துதான் அதிகம் பெற்றான் என்றால் அதில் மிகையில்லை.
 
தமிழினமும் இதுபோன்ற வரலாற்றுப் பதிவொன்றுக்கு தயாராக வேண்டிய காலம் இது.
 
மே 18 அன்று ஒரு கசப்பான திரவத்தைக் குடித்தல் ஒரு நினைவுகூறல் முறையாக உருவாகட்டும். அது உடலுக்கு ஆரோக்கியமானதும் இயற்கையோடு இணைந்ததாகவும், குறியீடாகவும் இருந்தால் நல்லது.
 
வேம்பு இதற்கு நல்ல தெரிவாக இருக்கும். ஒரு வேப்பிலையை ஒரு பெரிய பாத்திரத்துத் தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து அந்த தண்ணீரைக் குடித்தால் கூட அது உடலுக்கு மிக நல்லது. தைரியத்தைக் கொடுக்கவல்லது. இது போல வேப்பம் பூ, பிஞ்சு, காய், பழம், விதை, பட்டை என வேம்பின் அனைத்துப்பாகங்களுமே கசப்பானதும் மருத்துவக்குணம் மிக்கதும் ஆகும். (வன்னியில் மருந்து பொருளாதாரத் தடைக்காலத்தில் வேப்பம் பட்டையை அவித்துக் குடித்து உயிர்கொல்லும் பல நோய்களில் இருந்து உயிர் பிழைத்திருக்கின்றோம்.) அத்துடன் வேம்பினை �புல் அல்ல புயல் எதிர்த்து நிற்கும் நல்(கல்) வேம்பு� என பாடல்களில் குறிப்பிடுவார்கள். பெரும் புயலை எதிர்த்து நிற்பதுவும் சில வேளைகளில் வீழ்ந்து போவதுவும் வேம்பின் இயல்பு. இது மே 18 இற்கு பொருத்தமான குறியீடாகவும் இருக்கும். அந்த கசப்பான திரவம் குடித்தல் தமிழர் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு கலாச்சார வைபவமாக உருவாக்கம் பெறட்டும்.
 
காலப்போக்கில் அது அன்றைய நாளில் களியாட்ட வைபவங்களைத் தானாகத் தள்ளி வைக்கும். நீயா நானா யார் எங்கு நிகழ்வு நடத்துவது என்பது போன்ற பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும். இரும்புக்கரம் கொண்டு அடக்கநினைக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை மீறி அனைத்து மக்களையும் நினைவேந்தலில் பங்கேற்க வைக்கும். அழுது துயரைப்போக்கவும் அழுது முடித்து உறுதியெடுக்கவும் வழிசமைக்கும். உலகெங்கும் ஒரே நாளில் ஒரே முறையில் நினைவுகூர்தல் என்பது இலக்கால் இணைந்திருக்கின்றோம் என்ற செய்தியை உறுதிப்படுத்தும். தலைமுறைகடந்தும் உயிர்க்கலங்களில் அந்தச் செய்தி உள்வாங்கப்பட்டு மொழிகடந்த காலத்திற்கும் தேசத்திற்கும் தலைமுறைக்கும் காவப்படும்.
 
முடிந்தவர்கள் எல்லோரும் மே 18 இல் ஒன்று கூடுங்கள். அவ்வாறு ஒன்று கூட முடியாதவர்கள் தங்கள் இல்லங்களிலோ வேலைத்தளங்களிலோ மே 18 மாலை 6:00 மணிக்கு ( இரவும் பகலும் சந்திக்கும் நேரம்) ஒரு நிமிட நேரம் மட்டுமாவது எடுத்து அந்தக் கசப்பான திரவத்தைக் குடிப்பதை வழக்கமாக மாற்றுவோம். கூடிப்பேசி நினைவுகூறுவோம். திட்டமிட்ட தொடர் இன அழிப்பிலிருந்து விடுபட என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திப்போம். அது காலப்போக்கில் பல செய்திகளைத் தன்பாட்டில் தன்னுள்ளே காவிச்சென்று விடுதலைக்கு பயன் விளைவிக்கும்.
 
ஒரு வேளை ஈழத்தில் வேம்பினை தடைசெய்கின்றார்கள் என்ற செய்தி வந்தால் அதுகூட போராட்டத்தின் வெற்றிக்கான குறியீடாகவே அமையும். அத்துடன் மரங்களை அழிப்பவர்களே இவ் உலகின் முதல் எதிரிகள். மரங்களை அழிக்கும் எவரும் நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியாது. இறந்தவர்கள் நினைவாக எங்கும் மரங்களை நாட்டுவோம். மே 18 இல் வேம்பின் பாகத்தில் ஏதாவது ஒன்றை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்தல் தமிழர் கலாச்சாரத்தில் இணைந்த ஒரு வைபவமாக உருவாக்குவோம். செய்தியை எல்லோருக்கும் பகிருவோம்.
 
போராடும் இனம் ஒன்றிற்கு மே 18 ஆண்ம சக்தியை வழங்கும் நாளாக மாறட்டும். வீழ்ந்தவர்கள் மீது சத்தியம் செய்வோம். விடுதலையை விரைந்து வென்றெடுப்போம்.http://seithy.com/breifNews.php?newsID=109282&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.