Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமராக தேர்வு: நன்றி உரையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுத்த மோடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று   கூறினார்.

நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க நாடாளுமன்ற குழு கூட்டத்தி்ல்,  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய மோடி, நாடாளுமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த கட்சிக்கும், அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புதினமானது என்று கூறிய மோடி, மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக பாடுபட வேண்டும் என்றும், மக்கள் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மக்களுக்கான பிரச்னைகளுக்குதான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு  அல்ல என்று தெரிவித்த அவர், வாழ்நாள் முழுவதும் பாஜக தொண்டராகவே செயல்படுவேன் என்றார்.

ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக பாஜக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும், ஏழைகளின் விருப்பதைவும், நாட்டு மக்களின் கனவையும் பாஜக அரசு நிறைவேற்றும் என்றும் மோடி கூறினார்.

உலக நாடுகளிடையே இந்தியாவின் ஜனநாயகம் பிரமிப்பை தருகிறது என்று கூறிய மோடி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன் என்றார்.

உணர்ச்சிவசப்பட்டு அழுத மோடி

மோடியை பாராட்டி அத்வானி பேசுகையில், " கண்களில் நீர் வழிய நமது வரலாற்றில் இந்த மறக்கமுடியாத தருணத்தை காண எனக்கு கிருபை அளித்த கட்சிக்கும், மோடிக்கும் நன்றி கூறுகிறேன்" எனக் கூறியிருந்தார்.

அத்வானியின் இந்த பேச்சை குறிப்பிட்ட மோடி, அத்வானிஜி சொன்னார் நான் அவருக்கு கிருபை அளித்திருக்கிறேன் என்று. தயவுசெய்து இந்த வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ஒரு மகன் தனது தாய்க்கு கிருபை செய்ய முடியுமா? இந்த கட்சி எனக்கு தாய் போன்றது. அதற்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இவ்வாறு கூறுகையில் மோடி பேச்சு வராமல் நா தழுதழுத்தபடியே உணர்ச்சிவசப்பட்டார். அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது.

இருப்பினும் தம்மை தேற்றிக்கொண்டு தண்ணீர் கேட்டு வாங்கி அருந்திய பின்னர் அவர் தொடர்ந்து உரையாற்றினார்.

 

வாஜ்பாயை நினைவு கூர்ந்தார்

மோடி தனது உரையின் இடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவு கூர்ந்ததோடு, அவர் இங்கே இருந்திருக்க வேண்டும் என்றார். 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28151

மக்கள் நலனே முக்கியம்: மோடி உருக்கமான உரை
 
513xNxmodi02_1903780g.jpg.pagespeed.ic.A
நாடாளுமன்ற அவையில் நரேந்திர மோடி
  •  
  •  
  • 513xNxmodi01_1903782g.jpg.pagespeed.ic.3
    நாடாளுமன்ற அவையில் அடியெடுத்து வைக்கும்போது, மண்டியிட்டு வணங்கிய மோடி. | படம்: ராஜீவ் பட்

பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, கண்ணீர் மல்க மிகவும் உருக்கமாக பேசினார்.

முன்னதாக நாடாளுமன்ற மத்திய அரங்குக்குள் நுழைந்தபோது மண்டியிட்டு வணங்கினார். பின்னர் மூத்த தலைவர் அத்வானியின் பாதம் பணிந்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் நடந்த கூட்டத்தில் அத்வானி முன்மொழிய, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, நிதின் கட்காரி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிய, பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இதனால், மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க வழிவகுக்கப்படுகிறது.

மோடி உரை:

"எனக்கு நீங்கள் அளித்துள்ள இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். மக்களவை தேர்தல் முடிவு ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒருவேளை மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைந்திருந்தால் அது முந்தைய ஆட்சியின் மீதான வெறுப்பின் விளைவாகவே மட்டும் இருந்திருக்க முடியும்.

ஆனால், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதற்கு, மக்கள் பாஜக மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே காரணம். மக்கள் மத்தியில், அவர்கள் எண்ணங்கள் பாஜகவால் பூர்த்தி செய்யப்படும் என்ற புதிய நம்பிக்கை மலர்ந்துள்ளது. மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகுந்த நன்றி. இளைஞர்கள் முன்னேற்றமும் மகளிர் முன்னேற்றமும் பாஜகவின் முதன்மை கடமைகளாக இருக்கும். ஏழை மக்களுக்காக இந்த ஆட்சி நடைபெறும்.

இந்த வேளையில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன். தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சி என் தாய்க்கு சமம். தாய்க்கு மகனைத் தவிர வேறு யார் நல்ல முறையில் சேவகம் செய்ய முடியும்.

பிரதமராகி மக்களுக்கு நான் ஆற்றப்போகும் சேவையை எனது கடமையாகவே கருதுகிறேன். கடந்த 5 தலைமுறைகளாக பாஜக தொண்டர்கள் பட்ட அரும்பாட்டுக்கு கிடைத்த வெற்றி இது.

மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி செலுத்துவேன். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை என்று பழிக்க மாட்டேன். அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களை பாராட்டுகிறேன்.

இத்தருணத்தில், பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் இங்கு இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நான் இங்கு நிற்க காரணம் கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்த உத்வேகமே. கட்சிக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை. அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட்டுவர்களே.

மக்கள் நலனே முக்கியம். மக்களுக்கு நன்மை செய்யும் நேரம் துவங்கிவிட்டது. பாஜக எம்.பி.க்கள் மக்கள் சேவையை தங்கள் பதவிக்கான கடமையாக மட்டும் நினைக்காமல் அதை ஒரு புனிதமான பணியாக கருத வேண்டும். மக்களுக்கான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர பதவிகளுக்கு அல்ல.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி, கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு நொடியையும், கட்சியின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பிரச்சாரத்துக்கு அர்ப்பணித்தேன்.

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு மே 10-ல் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ஒரு அறிக்கை அளித்தேன். அதே போல் மக்கள் என்னை பிரதமராக்கியிருப்பதற்கு 2019-ல் அவர்களுக்கு எனது செயல்திறன் அறிக்கையை அளிப்பேன்.

இந்திய தேசம் மிகுந்த ஆற்றல் கொண்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், தேசம் 125 கோடி அடிகள் முன்னேறிச் செல்லும்.

நன்நம்பிக்கையே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும். இந்திய ஜனநாயகத்தில் மட்டுமே ஒரு சாதாரண நபர் நாட்டின் பிரதமர் போன்ற உயர் பதவியை அடைய முடியும்" இவ்வாறு அவர் பேசினார்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/article6028306.ece?homepage=true

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.