Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவை மோடி புறந்தள்ளார் : ஐ.தே.க.எச்சரிக்கை

Featured Replies

உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப் போவதாக இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்உருவான 13 ஆவது திருத்தச் சட்டத் துக்கு அமைவாக வடக்கிற்கான அதிகாரத்தை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் அது பாரிய விளைவு களையே ஏற்படுத்தும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவை நரேந்திர மோடி புறந்தள்ளிவிடப்போவதில்லை.
531934_10151142222297063_102523337_n.jpg
 
அரச தலைவர்களை அழைத்து விருந்து படைப்பதால் நாட்டை கட்டியெழுப்பி விட முடியாது. மாறாக வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியாவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனுமான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
 
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
கிரியெல்ல எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
 
இந்தியத் தேர்தலால் தற்போது பாரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சி பாரிய வெற்றியீட்டியதன் மூலம் நரேந்திரமோடி புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார். புதிய பிரதமரான மோடி தனது குஜராத் மாநிலம் கண்ட அபிவிருத்தியைப் போன்று முழு இந்தியாவையும் மாற்றியமைக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
 
இலங்கையைப் பொறுத்தவரையில் நாம் 20 மில்லியன் சனத்தொகையையே கொண்டிருக்கிறோம். எனவே, எமக்கு அண்டை நாடான இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மாத்திரம் அல்லாது ஐரோப்பிய நாடுகளினதும் சர்வதேச நாடுகளினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதுடன் இராஜதந்திர உறவுகளையும் பேணி அதனைப் பலப்படுத்துவதற்கே முயற்சிக்க வேண்டும்.
 
இதனை விடுத்து அரச தலைவர்களை அழைப்பிப்பதும் அவர்களுக்கு விருந்து படைப்பதும் இலங்கைக்கு எந்த நன்மைகளையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. நாடு கட்டியெழுப்பப்படப் போவதுமில்லை.
 
இன்று வட மாகாண சபையை செயற்படவிடாது அரசாங்கம்தான் செயற்பட்டு வருகின்றது. அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரிடம் வழங்கியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இங்கு ஒரு விடயத்தைக் கருத்திற் கொள்ள வேண்டும். இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடி உலகம் முழுதும் வாழும் இந்தியத் தமிழர்களைப் பாதுகாப்பேன். அவர்களது உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
 
அது மாத்திரமின்றி வெளியுறவுக்கொள்கையில் மாநிலங்களின் ஆலோசனைகளையும் உள்வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இந்திய மக்களவை தேர்தலில் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான குழு 37 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில் வெளியுறவுக்கொள்கையில் மாநிலங்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும் எனத் தெரிவித்துள்ள மோடி தமிழகத்தை முழுமையாக வெற்றி கொண்டுள்ள ஜெயலலிதாவை அவர் புறந்தள்ளிவிடப் போவதில்லை.
 
எனவே, இலங்கை கடந்த காலத்தைப் போலல்லாது புதிய பாதையில் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இவையனைத்தையும் கவனத்திற் கொண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஊடாக இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கே உரிய அதிகாரத்தை வட மாகாணத்துக்கும் வழங்குவதற்கு அரசு செயற்பட வேண்டும்.
 
இது தவறப்படுமேயானால் எதிர்காலத்தில் நாம் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் இதனைத் தவிர்க்க முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேவேளை, இலங்கையின் நீதித்துறை, பொலிஸ்துறை மற்றும் அரச சேவைத்துறை அனைத்தும் ஜனாதிபதியின் பிடியிலேயே இருந்து வருகின்றது.
 
மேற்கூறப்பட்ட எந்தத் துறையும் சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை இல்லாதிருக்கின்றது. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு உயர்நீதிமன்றமே உதவி புரிந்தது.
 
இது மாத்திரமின்றி அரசாங்கத்தின் பாராளுமன்ற அதிகாரம் அதிகரிப்பதற்கும் உயர் நீதிமன்றமே உதவியது. கட்சி மாறுகின்ற அரசியல்வாதிகளையும் உயர் நீதிமன்றமே பாதுகாத்து வருகின்றது. கட்சி தாவுகின்றவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற வழக்குகளில் உயர் நீதிமன்றம் முறையாக செய்றபட்டிருந்தால் இன்று இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காது.
இரண்டு அல்லது மூன்று பேரின் பதவிகளை நீக்கி உத்தரவிட்டிருப்பின் கட்சித் தாவல்கள் இடம்பெறுவது தடைப்பட்டிருக்கும் என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கெடு குடி சொல் கேளாது.

  • கருத்துக்கள உறவுகள்

கெடு குடி சொல் கேளாது.

சொல் கேளாமல் இருப்பது தான் சில விசையங்களுக்கு நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.