Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

Featured Replies

அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா
 
யூரியூப்பில்  இசை சம்­பந்­த­மான பழைய நிகழ்ச்­சி­யொன்ரைப் பார்க்கும் சந்­தர்ப்பத்தில் எதேச்­சை­யாக  ஏற்­பட்­ட­போது  மனதுள் ஒரு கேள்வி எழுந்­தது. அதே நிகழ்ச்­சியை சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நேர­டி­யாக தொலைக்­காட்­சியில் பார்த்­த­போது இதே மனக்­கு­டைச்சல் அன்றும் எனக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.. பாடகர் ஒரு­வரால் நடத்­தப்­பட்­டி­ருந்த அதில் பங்கு கொண்­டி­ருந்­தவர் ஒரு தமிழ் இசை­ய­மைப்­பாளர்.
 
 அந்தப் பாடகர் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த அந்த இசை­ய­மைப்­பா­ள­ரிடம் மிகவும் பௌ­ய­மா­க, கூனிக் குறுகி  உரை­யா­டிக்­கொண்­டி­ருந்தார். அது பர­வா­யில்லை. சினிமா உலகில் இப்­ப­டி­யான மரி­யா­தையை எல்­லோ­ருமே எதிர்­பார்க்­கி­றார்கள் போலும்.  இங்கே அது­வல்லப் பிரச்­சினை. எனக்குள் ஏற்­பட்ட கேள்­விக்குக் காரணம் பாடகர் அந்த இசை­ய­மைப்­ப­ாளரை வார்த்­தைக்கு வார்த்தை   Legend (மேதை)  என்றும் கொம்­போசர் என்றும் கூறிக் கொண்­டி­ருந்­த­துதான். அதுதான்  தவறு. அங்கு வந்­தி­ருந்­த­வரை இசை­ய­மைப்­பா­ள­ராக வேண்­டு­மானால் யாரும் அழைத்துக் கொள்­ளுங்கள் ஆனால் அவர் நிச்­ச­ய­மாக ஒரு கொம்­போசர் (Composer) அல்ல. இதை என்னால் உறு­தி­படக் கூற­மு­டியும்.
 
 ஆங்­கி­லத்தில்  இசை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அவர்­களின் செயற்­பா­டு, திற­மை, புலமை அனு­ப­வம், சாத­னை, போன்ற இன்னும் பல கார­ணங்­களை அள­வு­கோ­லாகக் கொண்டு பல உப பெயர்­களில் பிரித்­துள்­ளார்கள். அப்­ப­டி­யான இரண்டு திற­மை­சா­லி­களின் பெயர்தான்  Music Director  மற்றும்   Music Composer   ஆகும். பொது­வாகப் நோக்­கும்­போது இரு­வ­ருமே ஒரே தொழி­லைத்தான் செய்­வ­தாகத் தோன்றும் ஆனால் அது தவறு.
 
27dirictors600.jpg
 
இதனை விளங்கிக் கொள்­வ­தற்கு அந்த இரு­வ­ருக்கும் இடை­யி­லுள்ள வித்­தி­யா­சத்­தையும் தனித்­த­ன­மை­க­ளையும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
 
பாடல் ஒன்­றுக்­கான மெட்டைப் அல்­லது காட்சி ஒன்­றுக்­கான மெட்­டைப்­போட்டு அதை பாட­லா­சி­ரி­ய­ரிடம் காட்­டு­ப­வரை இசை­ய­மைப்­பளர் என்று அழைக்­கலாம். அதா­வது அவர் ஒரு பாட­லுக்­கான மெட்டை அமைக்­கிறார். இதை யார் செய்­தாலும் அவர் இசை­ய­மைப்­பா­ளரே.
 
அதன் பின் அந்த மெட்டும் பாடல் வரி­களும் இன்­னொ­ரு­வ­ரிடம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. அவ­ரது தொழிற்­பெயர்  Arranger (அரேஞ்சர்)
 
(An arrangement is the adaptation of a previously written musical composition for presentation. It may differ from the original form by reharmonization, paraphrasing or development of the melodic, harmonic, and rhythmic structure)
 
இவர்தான் அந்­தப்­பா­ட­லுக்­கான வயி­லின்கள் எத்­த­னை­யென்­ப­தையும் எங்கு வாசிக்­க­வேண்டும் என்­ப­தை­யும் என்ன தாள­வாத்­தியம் எப்­படி வாசிக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தை­யும் Brass Section  எனப்­படும்  ஊதும்­வாத்­தி­யங்­க­ளை­யும் கிட்­டார் மற்றும் Beats. களையும் எவ்­வாறு எங்கு வர­வேண்டும் என்­ப­தைப்­போன்ற   பின்­னணி இசை­களை எழு­து­பவர் அல்­லது கோர்ப்­பவர். ஒரு பாடலின் தரத்தை இவரின் இசை­ய­றிவும் இசை அனு­ப­வமும் தீர்­மா­னிக்­கி­றது. இவரின் இசை­ய­றிவும் அனு­ப­வமும் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­தாக இருக்­கு­மாயின் அதை இவர் அரேஞ் பண்னும் பாடல்­களில் புரிந்து கொள்­ளலாம்.
 
 
இத­னால்தான் சில இசை­ய­மைப்­பா­ளர்­களின் பாடலைக் கேட்கும் போது பாடலின் மெட்டுப் புதி­தாக இருந்­தாலும் அதைத் தாங்கிச் செல்லும் பின்­ன­ணி­யி­சையை ஏற்­க­னவே எங்கோ கேட்­டதைப் போன்று உண­ரு­கின்றோம். காரணம் அரேஞ்சர் என்­ப­வ­ருக்கு அது ஒரு தொழில் அவ்­வ­ள­வுதான். அதில் அவரின் பெயர் வெளியே தெரியப் போவ­தில்லை. எனவே பத்­தோடு பதி­னொன்­றாக ஒரு பாடலை உரு­வாக்­கி­விட்டால் அவரின் கடமை முடிந்­து­விடும். ஒரு இசை­ய­மைப்­பா­ளரின் மெட்டை முழு­மை­யான  பாட­லாக மாற்­று­பவர் Musical Arranger. ஆனால் இசை­ய­மைப்­பாளர் அந்தப் பாடல் உரு­வாகும் போது அதை மேற்­பார்வை செய்­து­கொள்வார்.
 
இசை­ய­மைப்­பாளர் தேவாவின் அரே­ஞ்­ச­ராக அவரின் தம்­பிகள் மற்றும் இப்­போ­தைய இசை­ய­மைப்­பாளர் தினா ஆகியோர் இருந்­துள்­ளார்­கள், டி.ராஜேந்­தரின் அரேஞ்­ச­ராக வைத்­ய­நாதன் என்­பவர் இருந்­துள்ளார். எஸ்­.ஏ.ராஜ்­கு­மாரின் அரேஞ்­ச­ராக வித்­யா­சாகர் இருந்­துள்ளார் என்று கேள்­விப்­பட்­டுள்ளேன். ( மன­சுக்குள் மத்­தாப்புப் பாட­லான பொன்­மாங்­குயில் பாடலைக் கேட்­டுப்­பா­ருங்கள் அதில் ஒரு வித்­தி­யா­ச­மான வித்­தி­யா­சத்தை உண­ரலாம். )
 
 பொது­வாக இசை­ய­மைப்­பாளர் எனப்­ப­டு­ப­வ­ருக்கு இசைக்­க­ரு­விகள் வாசிக்­கத்­தெ­ரி­ய­வேண்­டிய  அவ­சி­ய­மில்லை. டி.ராஜேந்­தரை அத­னால்தான் இசை­ய­மைப்­பாளர் என்று கூறக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது..
 
 எம்மில் பலர் நினைப்­ப­தைப்­போல  தமிழ்த்­தி­ரை­யி­சை­யில், இரு இசை­ய­மைப்­பா­ளர்­களின் பாடல்­க­ளைத்­த­வி­ர,  நாம் கேட்­டு­வ­ளர்ந்து கிலா­கித்துப் பாராட்­டிய பல பாடல்­களின் இனி­மைக்கு முழுச்­சொந்­தக்­காரர் அந்தப் பாட்டின் இசை­ய­மைப்­பா­ள­ரல்ல. அவர் அந்தப் பாட்டின் மெட்­டுக்கு வேண்­டு­மானால் உரிமை கோரலாம் அவ்­வ­ள­வுதான்.
 
 சரி, இனி Composer  என்று அழைக்­கப்­படக் கூடிய தகுதி யாருக்கு இருக்­கின்­றது?
ஒரு பாடலை அல்­லது இசையை அதன் சூழ்­நி­லைக்கு ஏற்ப மெட்­டாகப் போட்டு, தான் உரு­வாக்­கிய அந்த மெட்­டுக்கு தானே பார்த்துப் பார்த்து இசை அரேஞ்­மெண்ட்­டுக்­கான இசைக்­கு­றிப்­புக்­களை எழு­தி, அந்­தப்­பா­ட­லுக்கு ஜீவனைக் கொடுக்­கக்­கூ­டிய இசை­களை தானே உரு­வாக்­கி,   அந்த இசைக் குறிப்பை இசைக்­க­லை­ஞர்­க­ளுக்கு விளங்­கப்­ப­டுத்­தி,  அந்த மெட்­டிற்குள் ஜீவனைக் கொடுத்­து, கலை­ஞர்­களின் வாசிப்பில் தடங்கல் ஏற்­பட்­டும்­போ­து,  தான் எதை எதிர்­பார்க்­கிறேன் என்­பதை வாத்­தியம் ஒன்றில் வாசித்­துக்­காட்­டக்­கூ­டிய திற­மையைத் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்­து, பாட­லையும் எழுதக் கூடிய வல்­ல­மை­யுடன் பாட­லை பாடும் திற­மையுடன் மிக முக்­கி­ய­மான ஒரு தன்­மையைக் கொண்­டி­ருக்­க­ வே­ண்டும்.
 
அதா­வது, இசையை இழை இழை­யா­க, அணு அணு­வாக, அறிந்­து­வைத்­து, ஒரு பாட­லுக்கு அல்­லது இசைக் கோர்­வைக்கு சேர்க்கும் இசையை ஒன்று ஒன்­றாக ரசித்து ரசித்து தானே கோர்க்­க­வேண்டும். புதிது புதி­தாக உரு­வாக்­க­வேண்டும். தான் எதை எதிர்­பார்ப்­பதை கலை­ஞர்­க­ளி­ட­மி­ருந்து அட்­சரம் பிச­காமல் வெளிக்­கொ­ணரத் தெரிய வேண்டும்.
 
 
உலக இசை வர­லாற்றில் இந்தத் திற­மை­களை தம்­ம­கத்தே கொண்­டி­ருந்த சிலரைப் பட்­டி­ய­லி­டு­கின்றேன்.
 
Johann Sebastian Bach,
Wolfgang Amadeus Mozart ,
Ludwig van Beethoven
Richard Wagner ,
Franz Schubert
 
நான் மேலே குறிப்­பிட்ட ஐவ­ரை­விட இன்னும் பலர் இருக்­கின்­றார்கள்.
ஒருவர் வெள்­ளை­வெ­ளே­ரென்ற நீள நஷனல் ஷர்ட்டும் வெள்ளை குர்தா போன்ற பாண்டும் வெள்ளைக் கால­ணியும் நெற்­றியில் குங்­குமப் பொட்டும் வைத்­து­விட்டு பந்­தா­வாக வந்தால் அவரை மிகப்­பெரும் இசை­மேதை என எண்­ணு­வது எங்­களின் வழக்­க­மா­கிப்­போய்­விட்­டது.
 
எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்­த­வ­ரையில் தமிழ்த் திரை­யி­சையில் கொம்­போ­சர்­என அழைக்­கக்­கூ­டிய தகுதி  இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வுக்கும்  ஏ.ஆர்.ரஹ்­மா­னுக்கும் இருக்­கின்­றது.
 
மெல்­லிசை மன்­னர்கள் இசை­மே­தைகள். ஆனால் அவர்கள் மெட்டை மட்டும் போடு­வார்கள். அதை வைத்துக் கொண்டு அரேஞ்மெண்ட் மற்றும் மேலைத்­தேய முறையில் இசைக்­கு­றிப்­புக்­களை கால­கா­ல­மாக எழு­தி­வந்­த­வர்கள் அவர்­களின் உத­வி­யா­ளர்­க­ளான ஹென்றி டானியல். ஜோசப் கிருஷ்ணா, மற்றும் ஷியாம் போன்றவர்கள்.
 
இதில் இசைஞானியை ஒரு கொம்போசர் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அதற்கான சான்றுகளில் இது ஒன்று:
 
 
metronews.lk

 

நன்றி சகோ..... ஆழமான அருமையான பதிவு .

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.