Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நந்திக் கடலிலிருந்து முத்தவெளி வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நந்திக் கடலிலிருந்து முத்தவெளி வரை

நந்தி முனி

எனது இள வயது நண்பன் ஒருவன் முன்பு இடதுசாரி அரசியலில் ஈடுபட்டவன். இடையில் இயக்கங்களோடு பிரச்சினைப்பட்டு வெளியில் போய்விட்டான். கன காலத்துக்குப் பின் நாடு திரும்பியவன் என்னிடம் வந்தான். நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்த பின் எங்கேயாவது போவோமா என்று கேட்டான். ''முத்தவெளிக்குப் போகலாம். அங்கே வெசாக் கொண்டாட்டத்தைப் பார்க்கலாம். நடப்பு அரசியலைப் பற்றி உனக்கொரு விளக்கம் கிடைக்கும்' என்று சொன்னேன். இருவரும் புறப்பட்டுப் போனோம்.

முன்னிரவில் முத்தவெளி ஒளிவெள்ளமாகக் காட்சி அளித்தது. ஆரியகுளத்திலும், புல்லுக்குளத்திலும் செயற்கைத் தாமரைகள் மிதந்தன. முனியப்பர் கோயில் முற்றத்தில் அன்னதான நிலையம் இருந்தது. வீதியின் ஒரு பக்கமாக வெசாக் பந்தல்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மங்கலான ஒளியில் ஜாதகக் கதைகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. நூலகத்திற்குப் பின்னாலிருந்த வெளியில் ஒரு பிரமாண்டமான வெசாக் பந்தல் காணப்பட்டது. அதனருகே பிரமாண்டமான ஒரு மேடையும் காணப்பட்டது. அங்கேயும் வெசாக் பந்தல்கள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன. சனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருந்தார்கள். சிங்களவர்களும், தமிழர்களுமாக கூட்டம் அலை மோதியது. எனது நண்பன் சனங்களைக் கண்டதும் புறுபுறுக்கத் தொடங்கினான்.

நண்பன்: பாரன் மச்சான், நந்திக் கடலில செத்துப் போன தங்கட சனத்துக்கு ஒரு விளக்கக்கூட ஏத்திறதுக்கு வக்கில்லாத சனம் இஞ்ச வெசாக் தோரணங்களப் பார்க்க வருகுது.

நந்திமுனி: சனங்களப் பிழை சொல்லாதை. ஆட்சி செய்கிறவன் விடுப்புக் காட்டினால் சாதாரண சனங்கள் பார்க்க வரும்தானே.

நண்பன்: ஏன் பாக்கவேணும்? பேசமால் வீட்டில இருக்கலாம்தானே. நேற்று மட்டும் 15000 பேர் அன்னதானம் வாங்கினவையாம். அவங்கள் அதை பெரிய சாதனையாச் சொல்லுறாங்கள்... எங்கட சனம் செத்தவனுக்கு அஞ்சலி செலுத்தாட்டிலும் பறவாயில்லை. அவங்கட நினைவா உப்பிடிப்பட்ட கொண்டாட்டங்கள பகிஷ்கரிக்கலாம் தானே?

நந்திமுனி: அதுக்கு சனங்களை அரசியல் மயப்படுத்தோணும். அதை யார் செய்யிறது?

நண்பன்: அப்படிச் சொல்லேலாது 38 வருச கால ஆயுதப் போராட்ட அனுபவம் இருக்குத்தானே. அதைவிடப் பெரிசா என்னத்தை அரசியல் மயப்படுத்திறது?

நந்திமுனி: இல்லை... அப்பிடிச் சொல்லேலாது. எங்கட இயக்கங்கள் சனங்கள ஆயுத மயப்படுத்தினதைவிடவும் அரசியல் மயப்படுத்தினது குறைவுதான். எல்லாரும் சனங்கள ஆட்சேர்ப்புத் தளமாத்தானே பார்த்தவை.

நண்பன்: அப்ப நீ சனங்களில பிழை இல்லை எண்டு சொல்லுறியே? இயக்கங்களும், கட்சிகளும் தான் பிழை விட்டவை எண்டு சொல்லுறாய்? அப்பிடித்தானே?... எங்கட சனம் வன்னியில இயக்கத்தை கைவிட்டுத் தப்பியோடாமல் கடைசி வரை நிண்டு பிடிச்சிருந்தால் முடிவு வேற விதமா அமைஞ்சிருக்கும்தானே?

நந்திமுனி: விசர்க் கதை கதையாதை. எங்கட சனம் மட்டுமில்ல.. பொதுவா உலகத்தில உள்ள எல்லாப் பொதுசனமும் உப்பிடித்தான் இருக்கும். சாதாரண சனங்கள் எண்டால் அதுதான் அர்த்தம். சுயநலமும் இருக்கும். கோழைத்தனமும் இருக்கும். தேசப் பற்றும் இருக்கும். மொழிப் பற்றும் இருக்கும். மதப் பற்றும் இருக்கும். வேற பற்றுக்களும் இருக்கும். இதெல்லாம் கலந்த ஒரு சிக்கலான கலவைதான் பொதுசனம். அதுகளுக்குத் தலைமை தாங்கிற இயக்கமோ அல்லது கட்சியோதான் அந்தச் சனங்கள ஒரு அரசியல் சக்தியா திரட்டி எடுக்கோணும். எங்கட சனம் எங்கட போராட்டத்துக்காக என்னதான் செய்யேல?

நண்பன்: சாப்பாடு தந்தது, நகை தந்தது. ஊர்வலம் போனது. ஓட்டுப் போட்டது. இதுகளையா சொல்லுறாய்?

நந்திமுனி: இல்லை... நீ சனங்கள அவமதிக்கிறாய். இந்தப் போராட்டத்தை பொத்திப் பொத்திப் பாதுகாத்தது எங்கட சனம் தான். 83 கலவரத்துக்குப் பிறகு எல்லா இயக்கங்களிலையும் வந்து சேர்ந்த பிள்ளையளின்ர தொகை எவ்வளவு சொல்லு பாப்பம். ஒரு 25 ஆயிரத்துக்குக்கூட வருமல்லே.

நண்பன்: ஓம்... அப்பிடித்தான் வரும்.

நந்திமுனி: அந்தப் பிள்ளையள் எல்லாம் யார். எங்கட சனங்கள் பெத்த பிள்ளையள் தானே. அதுகள சனங்களில இருந்து பிரிச்சுப் பார்க்கலாமே?

நண்பன்: பாக்கேலாதுதான்.

நந்திமுனி: எங்கட சனம் சுயநலம் தான். கோழைத்தனமும் இருக்குத்தான். ஆனால், உதுக்குள்ள இருந்துதான் ஒரு தற்கொலைப் படையும் வந்தது. அது மட்டுமில்ல.. இயக்கம் வா எண்டு இழுக்கேக்க இந்தச் சனம் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபட்டுப் போனதுதானே? தீவுப் பகுதியில காரைநகரில இயக்கம் வா எண்டு சொன்னோடன சனங்கள் வெளிக்கிட்டு வந்ததுதானே. 95ஆம் ஆண்டு இயக்கம் போ எண்டு சொன்னோடன வலிகாமத்தைவிட்டு போன சனம் தானே? 96இல வன்னிக்குப் போ எண்டு சொன்னோடன அங்கையும் போன சனம்தானே. அப்பிடியே போய் நந்திக் கடல் வரையும் போன சனம். அது ஒரு மரணப் பொறி எண்டு தெரிஞ்சிருந்தும் அங்கை போனால் சாப்பாடிருக்காது, மருந்திருக்காது, வளர்ந்த பிள்ளைகளையும் குடுக்கவேண்டியிருக்கும் எண்டெல்லாம் தெரிஞ்சு கொண்டு போன சனம்.... எங்கட சனத்தப் போய் குறைசொல்லாத.

நண்பன்: அப்ப பிழை முழுதும் இயக்கங்களிலையும், கட்சிகளிலையும் தான் எண்டு சொல்லுறியே.

நந்திமுனி: ஓம்.. அதுதான் சரி. எங்கட சனம் தங்கட வல்லமைக்கு மீறி தியாகம் செய்திருக்கு. அதில உச்சமான தியாகம் தான் நந்திக் கடற்கரையில் செய்தது. அதக் கொச்சப்படுத்தாத.

நண்பன்: அப்பிடியெண்டால் அப்பிடிப்பட்ட தியாகம் எல்லாம் செய்த சனம் ஏன் இப்பிடி திரண்டு வந்து வெசாக் கொண்டாட்டத்தைப் பாக்குது?

நந்திமுனி: சனத்தை முத்தவெளிக்குப் போகவேணாமெண்டும், அதை ஒரு மறைமுக அஞ்சலியா செய்யவேணுமெண்டும் எங்கட தலைவர்கள் யாரும் சொன்னவையே....? எங்கட தலைவர்கள் அஞ்சலி செலுத்தோணும் எண்டதை ஒரு அரசியல் தீர்மானமா எடுத்து அதுக்காகப் போராடத் தயாரில்லை. அப்பிடி யாரும் போராட வந்தாலும் கட்சிக்குள்ள அவையளுக்கு ஆதரவு குறைவாத்தான் இருக்கும். எல்லாரும் நோகாமல் தேசியம் கதைக்கப் பாக்கினம். தலைவர்கள் முன்னால போனால் சனங்களும் பின்னால போகும்.

நண்பன்: ஆனா எங்கட சனங்கள் தானே அந்தத் தலைவர்களை தேர்ந்தெடுத்தது?

நந்திமுனி: வேற வழியில்ல. அரசாங்கத்துக்கு எதிராக விழுந்த வாக்குகள் அது. ஒரு மாற்றுக் கட்சியும் இல்லை. மாற்று இயக்கமும் இல்லை. பிழையான இடத்தில் சனங்கள் வாக்கைப் போட்டுட்டுது. அதலாதான் ஐஞ்சு வருசமாகியும் ஒண்டும் விடியேல்ல.

நண்பன்: அப்ப உந்தச் சனம் பொன்னம்பலத்தின்ர பேரனை ஏன் வெற்றிபெற வைக்கேல்ல?

நந்திமுனி: அது அப்ப சண்டை முடிஞ்ச கையோட கூட்டமைப்பு புலிகளுக்கு விசுவாசமான ஆட்களை வெளியில தள்ளிவிடேக்க சனங்களுக்கு உண்மை தெரியேல்ல. வீட்டுச் சின்னம் தான் எல்லாற்ற மனதிலயும் படிஞ்சிருக்கு. அதுக்கு எதிராப் போனவைய அரசாங்கத்தின்ர ஆட்கள் எண்டு முடிச்சுப் போடுறது கூட்டமைப்புக்கு ஈசியாய் போச்சுது.

நண்பன்: அப்ப சனங்கள் கூட்டமைப்புக்கு ஒரு பழக்க தோசத்திலயும், விளக்கமில்லாமலும், அதோடு அரசாங்கத்துக்கு எதிராயும் போட்ட வாக்கு எண்டு சொல்லுறியே?

நந்திமுனி: அப்பிடி முழுக்கச் சொல்லேலாது. நோகாமல் தேசியம் கதைக்கிற ஆட்களுக்கு கூட்டமைப்புத்தான் வேணும். அவயள் இனியும் கூட்டமைப்புக்குத்தான் வாக்குப் போடுவினம். ஆனால், கூட்டமைப்பு தங்கள பிழையா வழி நடத்துது அல்லது ஏமாத்துது எண்டு தெரிஞ்சால் பெருமளவு சனம் அவங்களுக்கு எதிராய் திரும்பும்.

நண்பன்: பொன்னம்பலத்தின்ர பேரன் ஏன் அதைச் செய்யேல்ல?

நந்திமுனி: செய்யினம் தான். ஆனாக் காணாது. அவையளிட்ட ஆட்கள் இல்லை. ஐடியாவும் இல்லை. அந்தக் கட்சிக்கும் புலிகளுக்கும் தொடர்பிருக்கு எண்ட பயத்திலயே ஒரு பகுதி சனம் அவையளுக்குக் கிட்ட போறேல்ல. அவையளும் சின்னச் சின்ன ஊர்வலங்கள், சின்னச்சின்ன ஆர்ப்பாட்டங்கள், இடைக்கிடை அறிக்கையள், இடைக்கிடை பத்திரிகைச் சந்திப்புக்கள் எண்டதோட நிக்கினம். இதுகளுக்கு அங்கால அவையளுக்கும் அரசியல் செய்ய தெரியேல்ல. அந்தக் கட்சிக்கு தேர்தல் அரசியலும் தெரியுதில்ல. வெகுசன இயக்க அரசியலும் தெரியுதில்ல. ஆனா கூட்டமைப்பு தான் யாரெண்டதில தெளிவாய் இருக்கு.

நண்பன்: அதென்ன தெளிவு?

நந்திமுனி: தேர்தல் அரசியல்தான். தேர்தல் நேரத்தில வீரவசனங்கள். வெண்டாப் பிறகு வெள்ளையும் சொள்ளையுமா உடுத்தி, மாலையும் கழுத்துமா பத்திரிகையளுக்குப் போஸ் கொடுக்கிறது. அரசாங்கம் ஒண்டுக்கும் விடுதில்ல. அரசாங்கம் ஒண்டையும் தருதில்ல. வெளிநாடுகள் ஏதையோ தரப்போகுது எண்டு சொல்லிச் சொல்லியே ஒண்டையும் செய்யாமல் விடுகிறது.

நண்பன்: நீ சொல்லுறதைப் பாத்தால் புலிகள் இயக்கம் தோத்த ஐஞ்சு வருசத்துக்குப் பிறகும் எங்கட அரசியல் சேடமிழுக்கிறதுக்கு இந்த ரெண்டு கட்சியளும் தான் பொறுப்பெண்டிறியே?

நந்திமுனி: சரியாச் சொன்னாய்.... புலிகளுக்குப் பிறகு எங்களிட்ட சொல்லுறக்குத்தான் ஆட்கள் இருக்கு. செய்யிறதுக்கு ஆட்கள் இல்லை. எல்லாரும் வீரவசனம் கதைக்கலாம். ஆனால், யார் முன்னுக்கு வாறது?. அப்பிடி வராமல் பதுங்கியிருந்து கொண்டு சனத்தைப் பிழை சொல்லக்கூடாது. இப்பிடியே போனால், சனங்கள் அரசாங்கத்தின்ர கார்ணிவேல் அரசியலின்ர பார்வையாளராத்தானே மாறும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=f821a270-e0f9-42a4-a8b1-433bbb186084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.