Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிருமாறு மகிந்தவுக்கு மோடி அறிவுரை கூற வேண்டும்! - என்கிறார் 'ஹிந்து' ராம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிருமாறு மகிந்தவுக்கு மோடி அறிவுரை கூற வேண்டும்! - என்கிறார் 'ஹிந்து' ராம். 
[Tuesday, 2014-05-27 09:25:55]
N-ram-150.jpg
இலங்கையில், தமிழ் மக்களுக்கு, உரிய அதிகாரப்பகிர்வை அளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையும் அறிவுரையும் வழங்க வேண்டும் என்று 'தி ஹிந்து' பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், பதவியேற்பு விழாவில் பங்குபெற்றது ஒரு சிறப்பான அம்சம் எனவும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு என்றும், அதை அடித்தளமாகக் கொண்டு முன்னேற்றங்களை காண வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
 
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா போயிருக்கலாம் என்றும், மாநில அரசியலைக் கருத்தில் கொண்டே அவர் எச்சரிக்கையாக ஒரு முடிவை எடுத்துள்ளார் என்றும், அது புரிந்து கொள்ளக் கூடியதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்துக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, போதுமானதாக இல்லை, இது வருந்தக் கூடிய விஷயமாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், வேறு வழியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=110152&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் 13 ஆம் திருத்தத்தின் மூலம் நீங்கள் ஏற்கனவே பகிர்ந்து அளித்துவிட்டீர்களே..  :huh:  :D

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌சே அழைப்பை ஏற்றார் பிரதமர் நரேந்திர மோடி

459xNxrajapakse_1917060g.jpg.pagespeed.i

 

தமது நாட்டுக்கு வருகை தருமாறு இலங்கை அதிபர் ராஜபக்‌சே விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரக்கூடாது என தமிழக கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அதேவேளையில், இலஙகைத் தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாஜக தொடர்ந்து வலியுறுத்து வந்தது.

இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா வந்துள்ள ராஜபக்சே, பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

அப்போது, இரு தரப்பு மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு உறுதுணைபுரிவது என மோடியும் ராஜபக்சேவும் ஒப்புக்கொண்டனர்.

இந்தத் தகவலைத் தெரிவித்த வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தமது நாட்டுக்கு வருகை தருமாறு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

 

http://tamil.thehindu.com

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா வந்துள்ள ராஜபக்சே, பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

 

இதைத்தான் பேசினார்களா? அங்கே வேறு ஒரு பிரச்சினையும் இல்லையா? :rolleyes:

ஹிண்டு ராமை யார் அறிவுரை கேட்டார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.