Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர் கண்காணிப்புக்குள் – நவிப்பிள்ளை அலுவலகம் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை தொடர் கண்காணிப்புக்குள் – நவிப்பிள்ளை அலுவலகம் அறிவிப்பு!

 

இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.   கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச சமூகத்தோடும் ஐ.நா. மனித உரிமைகள் சபையோடும் இணைந்து தொடர்ந்தும் இக்கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஐ.நா.சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.   தற்போது ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தலைமையில் இயங்கும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலய செயலகம், ஜெனிவாவிலுள்ள ஐ.நா. செயலகத்தில் திங்கட்கிழமை 2013 ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2012 ஆம் வருட அமர்விலும், 2013 ஆம் வருட அமர்விலும், இலங்கை விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பலாபலன்கள் குறித்தும் இலங்கையின் நிலைவரம் குறித்தும் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அவதானிப்பை மேற்கொள்ளும் என்றும் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இலங்கையில் 2002 முதல் 2009 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போரின்போது இழைக்கப்பட்ட பெரும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறு இவ்வருட மார்ச் அமர்வில் அமெரிக்கா தீர்மானமொன்றின் மூலம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு ஆணை வழங்கியுள்ளது.

இன்னும் இரு வாரங்களில் நவநீதம்பிள்ளையின் அலுவலகம் இந்த விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.   மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலக அறிக்கையில், ஆணையாளர் நவநீதம்பிள்ளை பல விடயங்களில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.   அநேக விவகாரங்களில் இலங்கை அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை.

பொறுப்புக்கூறல் கடப்பாடு, வடபகுதியில் அதிகளவில் இராணுவக் குவிப்பு, இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், மதரீதியான வன்முறைகளை முடுக்கிவிடுதல், சுயாதீன நீதித்துறைக்கு குந்தகமான நடவடிக்கை ஆகியவற்றை நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ளார்.   மனித உரிமைகள் பேரவையின் 2013 ஆம் வருட அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல அம்சங்கள், 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும். எனினும் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

http://tamilleader.com/?p=34388

சிறி லங்காவின் வெளிநாட்டு அலுவலகங்களையும், அங்குள்ள சொத்துக்களையும் கவனிக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.