Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு குடிநீர்த் திட்டம்: நிபந்தனையுடன் ஆதரவு தெரிவிக்கிறது கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரணைமடு குடிநீர்த் திட்டம்: நிபந்தனையுடன் ஆதரவு தெரிவிக்கிறது கூட்டமைப்பு! 
[Wednesday, 2014-05-28 09:42:57]
iranaimadu-kulam-150.jpg
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, திருத்தங்கள் செய்யப்படுமானால் யாழ்ப்பாணத்துக்கான இரணைமடு குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாம் ஒப்புக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் வளங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் 2 ஆம் அமர்வு நேற்றுயாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
  
இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மேற்படி ஒப்புதலை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் - இரணைமடு குடிதண்ணீர்த் திட்டம் கைவிடப்படவேண்டும், ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உடன்பாடில்லை. ஆனால் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முன் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். விவசாயிகளுடைய கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பேச்சு நடத்தினர். இரணைமடு திட்டத்திற்கு முன்னர் முன்மொழியப்பட்ட ஆறுமுகம் திட்டம் உள்ளிட்ட யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள நாம் ஒரு தொகை நிதியினைக் கோரியிருக்கின்றோம். அதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில் ஒருபுறம் அந்த ஆய்வுகள் இடம்பெற மறுபக்கம் திருத்தங்களுடன், விவசாயிகளின் நலனையும் கருத்தில் எடுத்துக் கொண்டு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் ஒப்புதல் தெரிவிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
இதன்பின்னர் கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாம் கிளிநொச்சியிலிருந்துதான் யாழ். மாவட்டத்திற்கான நீரினைக் கொண்டு வரவேண்டும் என்றில்லாமல் எங்களுடைய மாவட்டத்திலும் உள்ள நிலத்தடி நீர் மூலங்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு அவற்றினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
 
இதேவேளை, ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அது கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூகத்தைப் பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கருத்துத் தெரிவித்தார். இந்நிலையில் இரணைமடு குடிதண்ணீர் திட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக ஆராய்வதெனவும், மறு பக்கம் மத்திய நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சு குடாநாட்டின் நிலத்தடி நீர் மூலங்களை ஆராய்வதற்கு நிதி வழங்குவதாகக் கூறியதன் அடிப்படையில் அதற்கான ஆய்வுகளை 3 தொடக்கம் 4 மாதங்களில் செய்து முடிவினைப் பெறுவதெனவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.http://www.seithy.com/breifNews.php?newsID=110210&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி வராமல் விட்டாலும் குழாயைப் பிடித்து வைத்திருப்பதில் பெரும் விருப்பம் கொண்டுள்ளார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள்.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான குழாய்களைப் இணைத்து வைப்போம், எப்போது இரணைமடுவில் 35 அடிக்கு மேல் நீர் தேங்குகின்றதோ அப்போது யாழ்ப்பாணத்திற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ளவோம் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இதன்போது இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்த் திட்டம் பற்றி கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிதி வீணாகத் திருப்பி செல்லாதிருக்க குழாய்களை பொருத்தி வைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://cmrtamil.com/

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பது இந்த முடிவு, வடக்கில் வன்னிவாழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். காலாகாலத்துக்கும் இப்பழி கூத்தமைப்பினரையே சேரும்.

 

எதிர்காலத்தில் யாழ் குடாநாட்டின் சுற்றுச்சூழலில் கொஞ்சமேனும் கரிசனை இல்லாத சோம்பேறி மக்கள் தங்கள் தண்ணீருக்கான சியதேவையைப் பூர்த்திசெய்வதற்கான முயற்சிகளை முடக்குவதன்மூலம் மிகப்பெரிய தறுக்குள் யாழ் குடா மக்களைக் கொண்டுசெல்லவிருக்கிறார்கள்.

 

தவிர இத்திட்டத்தின்மூலம் பலன்பெறப்போவது தமிழர்கள் மட்டுமல்ல, இப்போது கேட்பாரற்றுக்கிடக்கும் யாழ் நகரப்பகுதியை அண்டிய பண்ணைக்கப்பால் உள்ள தீவுபகுதியின் நிலங்கள் சிங்களவரால் அபகரிக்கப்படுவதற்கும் துணைபோகும்.

 

தமிழர் கூத்தமைப்பும் அதற்குத் துணைபோகும், மற்ரும் இத்திட்டத்துக்காக வக்காலத்துவாங்கும் யாழ்கள உறவுகளும் சீரளிஞ்சுபோக... தினமும் இயற்கையை வேண்டுகிறேன்.

 

இது நூறுசதவீத சுயநலம்மிக்க பொறுக்கித்தனமான ஒரு முடிவாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.