Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உயர்மட்ட அமைச்சரவையில் ரணிலின் நண்பர்கள் நால்வராம்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய உயர்மட்ட அமைச்சரவையில் ரணிலின் நண்பர்கள் நால்வராம்!?

 

 

ranil-150x150.jpgஎதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால நண்பர்கள் நான்கு பேர் இந்தியாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரோந்திர மோடி ஆகியோரே அவர்கள் என தெரியவந்துள்ளது.

சட்டத்தரணியான அருண் ஜெட்லிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நட்புறவு இருந்து வருகிறது.

அத்துடன் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான ராஜ்நாத் சிங், ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால நெருங்கிய நண்பராவார்.

வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள இந்தியாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க தவறுவதில்லை.

சுஷ்மா சுவராஜ், எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பி.

அதேவேளை இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடி, ரணில் விக்ரமசிங்கவிற்கு, அடல் பியரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அறிமுகமானவர்.

மோடி 2001 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக பதவியேற்ற போது ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். அன்று முதல் இருவருக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டுள்ளது.

இருவரும் கடைபிடித்து வரும் லிபரல் ஜனநாயக கொள்கையே இதற்கு காரணம்.

லிபரல் ஜனநாயக பொருளாதார கொள்கை காரணமாக குஜராத் மாநிலத்தை மோடி 2001 ஆம் ஆண்டு முதல் கடந்த 13 வருடங்களில் பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர்த்தினார்.

அத்துடன் 2001 ஆம் ஆண்டு கீழ் மட்டத்தில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்தை 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் ரணில் 8.5 வீதமாக மேம்பட செய்தார்.

இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க விரைவில் அங்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளார்.

http://tamilleader.com/?p=34598

அப்ப இனி மஹிந்தவுக்கு ஆப்பு தான். ரணில் தான் சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி. ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க.  :D  :D  :D  :lol:  :lol:  :lol: 

கேபியால் புலிகளின் அடுத்த தலைவராக தெரிவு செயப்பட்ட தலைமை செயலகத்தின் தளபதிக்கும் இந்திய அமைச்சரவையில் இருக்கும் எல்லாரும் நண்பர்கள்தான். சுப்பிரமணியத்தின் நெருங்கிய நண்பராம். எனவே வியாபாரிகளால் தலைவர் வீழ்ந்த பின் அடுத்த தேசிய தலைவர் எங்கட தலைமை செயலக தளபதி தான் என்று பட்சி சொல்லுது. உண்மையாகவா?  :D  :D  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.