Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும்.

 

17வருடங்கள் போராட்ட வாழ்வு. போராளியையே திருமணம் செய்து கொண்டான் பிள்ளைகள் 2. அவன் பங்கேற்ற களங்களில் பலமுறை காயமுற்று உடலில் எறிகணைத்துகள்கள் கலந்து அந்த வலிகளோடு வாழும் ஒரு முன்னாள் போராளி.

எல்லா விடயங்களிலும் அவன் ஒரு முன்னுதாரணம். இதைச் செய்யென்றால் இதற்கு மேலும் தனது வலுவை வழங்கி வேலைகளை முடிக்கும் கடமையுணர்வாளன்.

இறுதியுத்தத்தில் எல்லாம் இழந்து போனபின்னரும் அவனது குடும்பத்தின் முயற்சியில் உயிர் பிழைத்தவன். சிறை புனர்வாழ்வு என எல்லாத் துயரங்களையும் அனுபவித்தான்.

சிறையிலிருந்து ஊர் திரும்பியவனுக்கு அடுத்த வேளையைக் கொண்டு செல்ல ஆதரவற்ற நிலமை. அன்றாட வாழ்வை குழந்தைகளின் பசிபோக்க முடிந்தவரை கிடைக்கிற தொழில்கள் யாவையும் செய்து கொண்டிருக்கிறான். எனினும் போதிய வருமானம் இல்லை.

உடலெங்கும் கலந்திருக்கும் இரும்புத்துணிக்கைகள் உயிரை எடுக்கும் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வரையும் பல சத்திரசிகிச்சைகள் தொடர் மருத்தவத்தோடு காலம் கழிகிறது.

ஒரு தொழில் தனது குடும்பத்தின் நிரந்தர பொருளாதார முன்னேற்றத்திற்காக செய்ய விரும்பும் இந்தப் போராளியின் குடும்பத்திற்காக 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 285€) உதவியைக் கோரியுள்ளான்.

உங்கள் உதவி இக்குடும்பத்தின் நிரந்தர முன்னேற்றத்திற்கு ஆதரவாகும். உதவ விரும்புவோர் கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

http://nesakkaram.org/ta/285e-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

 

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி இந்த போராளிக்காக நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை சில நாட்களில் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன். கவலை வேண்டாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் சகாரா உங்கள் பிறந்த ஊரில்தான் இவர் வாழ்கிறார். விபரத்தை மடலிடுகிறேன் நேரடியாகவே உதவுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி சாந்தி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நான் அவர்களுடன் பேசி அவர்களுக்கான வாழ்வின் உயர்வுக்காக அவர்கள்  விரும்பும் சுயதொழிலுக்காக எதிர்பார்த்த 50 ஆயிரம் ரூபாய்களை அவர்களைச் சென்றடையும் வண்ணம் அனுப்பி வைத்து விட்டேன். இன்று மனம் முழுக்க மகிழ்வாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நான் அவர்களுடன் பேசி அவர்களுக்கான வாழ்வின் உயர்வுக்காக அவர்கள்  விரும்பும் சுயதொழிலுக்காக எதிர்பார்த்த 50 ஆயிரம் ரூபாய்களை அவர்களைச் சென்றடையும் வண்ணம் அனுப்பி வைத்து விட்டேன். இன்று மனம் முழுக்க மகிழ்வாக இருக்கிறது.

 

நன்றி  தாயே

கடவுள் உங்களுடன் இருக்கட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நான் அவர்களுடன் பேசி அவர்களுக்கான வாழ்வின் உயர்வுக்காக அவர்கள்  விரும்பும் சுயதொழிலுக்காக எதிர்பார்த்த 50 ஆயிரம் ரூபாய்களை அவர்களைச் சென்றடையும் வண்ணம் அனுப்பி வைத்து விட்டேன். இன்று மனம் முழுக்க மகிழ்வாக இருக்கிறது.

நன்றிகள் சகாரா,
நீங்கள் உதவிய குடும்பம் தன்து சுயபொருளாதாரத்தில் முன்னேறவும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடரவும் உங்கள் உதவி கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. 
 
இக்குடும்பத்திற்கு உதவுவுதாக சுவிசிலிருந்து ஒரு அமைப்பு விபரத்தை பெற்றுக் கொண்டது. விபரம் பெற்று ஒருமாதம் கடந்த நிலையில் தங்கள் அமைப்புக்கு குறித்த போராளி உண்மையில் போராளியென்பதனை உறுதிப்படுத்திய கடிதம் ஒன்று தங்களது மின்னஞ்சலுக்கு அவர்கள் அனுப்பினால் மட்டுமே தங்களால் உதவ முடியும் இழுபறிப்படுத்தினார்கள். இறுதியில் உங்கள் உதவியும் வேண்டாம் அந்தக்குடும்பத்திற்கு உபத்திரவமும் வேண்டாமென விட்டுவிட்டுத்தான் இங்கே விடயத்தை எழுதினேன். விடயத்தை பார்த்தவுடனேயே முன்வந்திருந்தீர்கள். 
 
கடவுளைவிடவும் இத்தகையவர்களுக்கு கைகொடுக்கிற போது ஏற்படும் மனநிறைவும் மகிழ்ச்சியும் வார்த்தைகளில் வடிக்க முடியாது அவற்றை உணரவே முடியும். நீங்கள் அந்த இனிமையான உணர்வை உணர்ந்திருக்கிறீர்கள். மீண்டும் நன்றிகள்.
  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

theep_zps106d2af2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.