Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் பெரும் விபச்சார வலையமைப்பு: காவல்த்துறை வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பெரும் விபச்சார வலையமைப்பு: காவல்த்துறை வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்!

முல்லைத்தீவில் பெரும் விபச்சார வலையமைப்பொன்றை காவல்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வெளிமாவட்டங்களிலிருந்து இளம்பெண்களை கொண்டு வந்து இங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன் மனைவியான இரண்டுபேரை நேற்று காவல்த்துறை கைது செய்தது. முல்லைத்தீவின் சிலாவத்தை தெற்கில் பெரும் விபச்சார விடுதியொன்றை இவர்கள் நிர்வகித்து வந்தார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவருடனும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர் இந்த விபச்சார வலயத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சிலாவத்தை பகுதியில் வைத்து 23 வயதான யுவதியொருவர் விபச்சார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் கிளிநொச்சியை சேர்ந்தவர். அவரை அழைத்து சென்று, கைவிடப்பட்ட கடையொன்றிற்குள் வைத்து ஒருகுழு விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், காவல்த்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் இருந்து பல பெண்களை அழைத்து வந்து இங்கு விபச்சாரம் பெரியளவில் நடத்தப்பட்ட தகவல் அம்பலத்திற்கு வந்தது. இவ்வாறு அழைத்து வரப்படும் பெண்களை தேடி முல்லைத்தீவு சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பணமுதலைகள் படையெடுத்து வருவதாகவும் அவர் வாக்குமூலமளித்தார்.

இவரது வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விபச்சார வலையமைப்பின் பிரதான சூத்திரதாரிகளென்ற குற்றச்சாட்டில் சிலாவத்தையை சேர்ந்த கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://pagetamil.com/?p=6418

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேர் விபச்சாரம் செய்தால் முல்லைத்தீவே விபச்சாரத்தில் ஈடுபட்ட மாதிரி தலையங்கம் போடுறாங்கள்.....மூதலாம் உலநாடுகளாகிய அவுஸ்ரேலியாவிலயே விபச்சாரம் நடக்கும் பொழுது மூன்றாம் உலகநாட்டின் போரால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் விபச்சாரம் நடப்பதில் தப்பே இல்லை ....இதில் என்ன அதிர்ச்சி தகவல்?.......காவல்துறை எத்தனை விபச்சாரியட்ட போனவிய்ள என்ற தகவையும் வெளியிட்ட நல்லம்

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.