Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு நன்றி தெரிவித்த யாழ். பொலிஸார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அரியாலை பகுதியில் கடந்த இரு வாரங்களிற்கு முன்பு 74 வயது தாயை கொலை செய்து தங்க தோடுகள் இரண்டு களவாடப்பட்ட சம்பவம், யாழ் மற்றும் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். 

 
மேலும் தெரிவிக்கையில்:-
 
இந்த சம்பவங்கள் தொடர்பில் மக்களிற்கு பெரியளவில் சந்தேகங்கள் இருந்தன பொலிஸ், இராணுவத்தினர் இருக்கின்றார்கள் யார் இதை செய்கின்றார்கள் இது எங்களிற்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.
 
இந்த நிலையில் அரியாலை பகுதியில் கொலை இடம்பெற்ற வீட்டில் தேடுதல் மேற்கொண்ட போது ஒரு கைவிரல் அடையாளம் மாத்திரம் எமக்கு கிடைத்தது. அதனை கொழும்பிற்கு அனுப்பி அதன் மூலம் ஒரு சந்தேகநபருடைய விபரம் எமக்கு கிடைத்தது.
 
குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு அந்த பிரதேச பொதுமக்கள்  பெரிதும் உதவி வழங்கி இருந்தார்கள் அவர்கள் செய்த உதவிக்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவருடன் இணைந்து செயற்பட்ட மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இவர்களால் செய்யப்பட்ட 8 பாரிய குற்றங்களிற்குரிய பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதுடன்  28 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
 
யாழில் இடம்பெற்றுள்ள பாரிய குற்றங்களை ஓர் இரு குழுக்களே செய்துள்ளது ஏனெனில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வாரம் பாரிய குற்றச்செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளது.
 
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்.கொட்டடி ,நாவற்குழி, நாரான்தனை வடக்கு,கஸ்தூரியார் வீதி, மற்றும் அபுவக்கர் வீதியினை சேர்ந்தவர்கள் இதில் களவெடுக்கப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளரும் அடங்குகின்றார்.
 
இவர்களால் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவங்கள் மற்றும் அவற்றிற்குரிய பிரதேசங்கள் வருமாறு:-
 
24.05.2014 அரியாலை பிரதேசத்தில் 60 ஆயிரம் பெறுமதியான தோடுகள் இரண்டை களவாடிவிட்டு கொலை செய்தமை.
 
20.05.2014 கொட்டடி பகுதியில் பகல்வேளை வீடொன்றை உடைத்து 1 லட்சத்தி 10 ஆயிரம் பெறுமதியான தங்கஆபரணங்கள் கொள்ளையிட்டமை. 
 
16.08.2012 கொட்டடி பகுதியில் 20 ஆயிரம் பெறுமதியான தோடுகள் இரண்டு களவாடப்பட்டமை.
 
23.05.2014 கொக்குவில் பகுதியில் 8 லட்சத்தி 65 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டமை.
 
02.06.2014 நீராவியடி பிரதேசத்தில் 1 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டமை.
 
26.10.2013 பிரவுன் வீதியில் 8லட்சத்தி 10 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டமை.
 
26.02.2014 கோப்பாய் பொலிஸ் பகுதியில்2 லட்சத்தி 80 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டமை.
 
07.06.2014 கோப்பாய் பொலிஸ் பகுதியில் வீடொன்றை உடைத்து 23 லட்சத்தி 12 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டமை. 
 
இவ்வாறு யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=789513116713514244#sthash.Pz0nkAeq.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் பாரிய குற்றங்களைப் புரியும் குழுவைக் கைது செய்து மக்கள் பாதுகாப்பிற்கு உறுதிவழங்கிய காவல்துறைக்கு முதலில் நன்றிகள்!!  :rolleyes:
 
இந்தக் கைதுகளினால் காவல்துறைக்குள்ளும், இராணுவத்திற்குள்ளும் இருந்தே செயற்பட்டு, மிகப்பெரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு புரிவதோடு, பாதகர்களுக்கும் உதவிபுரிந்து காடைத்தனம் செய்யும் கூட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளதையும் நினைவில் கொள்ளல் வேண்டும். :(  :o
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.