Jump to content

புரூஸ் லீயின் தனித்துவமான ஒரு அங்குல குத்து


Recommended Posts

எந்த துறையானாலும் அந்த துறையில் தனித்துவமாக செயற்படுகின்றவர்களுக்கான இடம் என்பது என்றைக்கு நிரந்தரமாகிவிடுகின்றது.
 
58124.jpg
 
அந்த வகையில் தற்காப்புக் கலையினை தனக்கான பாணியில் மக்களை கவர்ந்த உன்னதமான கலைஞன் புரூஸ் லீ. உலகின் பல பாகங்களிலும் தற்காப்புக் கலை வளர்வதற்கு பிரபல்யமடைவதற்கும் நடிகரும் தற்காப்புக் கலைஞருமான புரூஸ் லீயின் பங்கு அளப்பரியது. 
 
குங்பூ, கரத்தே, வில்வித்தை, வாள் சண்டை போன்ற ஏராளமான தற்காப்புக் கலைகள் இன்று பல நாடுகளில் பல விதமான முறைகளில் பிரபல்யடைந்துள்ளன. ஆனால் அனைத்து தற்காப்பு கலை விரும்பிகளுக்கும் பொதுவான ஒரு முன்னுதாரணமாய் இன்றும் இருப்பவர் புரூஸ் லீ.
 
எந்த ஒரு தற்காப்புக் கலைஞனை விடவும் வேகமாகவும் விவேகமாகவும் தனித்துவமான தற்காப்பு நகர்வுகளை புரூஸ் லீ கையாண்டிருந்தமையும் அதற்கான காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஒரு அங்குலம் மற்றும் 6 அங்குலம் இடைவெளியிலான புரூஸ் லீயின் குத்து இன்றும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 
 
தற்காப்பு கலையை விட பிரபல்யமும் அச்சரியமிக்கதுமான குத்து அவை. இந்த குத்து கில் பில் எனும் ஹொலிவூட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
58121.jpg
 
32 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த புரூஸ் லீயை ஆராதிக்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர். ஒரு வகையான வலிப்பு மற்றும் தலைவலி காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் இவரது மரணத்தின் மர்மம் புதிராகவே நீடிக்கின்றது. அது போலவே புரூஸ் லீயின் தனித்துவமான சிறிய இடைவெளியிலமைந்த குத்துக்களும்.
 
இதனால் புரூஸ் லீயின் நகர்வுகள் குறித்து இப்போதும் ஆய்வு செய்யப்படுகின்றது. உலகின் மிக குறைந்த வெப்பமளிக்கா காலம் கொண்டவராக புரூஸ் லீ கருதப்படுகின்றது. இதுவே அவரது வேகமான செயற்பாட்டுக்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 
ஆனால் தனித்துவமான குத்துக்களுக்கு அண்மையில் விஞ்ஞான ரீதியிலான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
58123.jpg
 
ஒரு அங்குல இடைவெளி குத்தானது தசையை விட அதிகளவில் மூளையுடன் தொடர்புடையதாக உள்ளது ஏன் அறிந்து கொள்ள வேண்டும். இச்சிக்கலான முழு உடல் அசைவில் அமைந்து குத்து மில்லி செக்கனில் இடம்பெறும் செயற்பாடு. இருப்பினும் புரூஸ் லீ எவ்வாறு அதனை மேற்கொள்கிறார் என அறிய அவதானிப்பு முக்கியமானது என்கிறது இந்த ஆய்வு.
 
இவ்வாய்வினை அமெரிக்காவின் ஸ்டேன்போர் பலகலைக்கழ உயிரியல் இயந்திரவில் ஆய்வாளரான ஜேஸிக்கா ரோஸ் மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஜெஸிகா கூறுகையில், 'குத்துக்கான அசைவு கால்களில் இருந்து ஆரம்பமாகின்றன. ஒரு அங்குல குத்தினை உன்னிப்பாக அவதானிக்கும் போது புரூஸ் லீயின் முன் மற்றும் பின் கால்கள் விரைவில் நேராக வந்து அதிவிரைவில் வந்து செல்வதை உங்களால் காண முடியும்' என்கிறார் ரோஸ்.
 
 
 
கால் இவ்வாறு நேராகும் போது இடுப்பினூடாக தோட்பட்டைக்கு சக்தி கடத்தப்பட்டு கைக்கு செல்கின்றது. இதனால் மில்லி செக்கன் இடைவெளியில் கையில் கிடைக்கும் ஒன்று சேர்க்கப்பட்ட சக்தியால் எதிரியை ஒரேயொரு, ஒரு அங்குல குத்தினால் புரூஸ் லீயினால் வீழ்த்த முடிந்துள்ளது என விளக்களித்துள்ளார் ஆய்வாளர் ரோஸ்.
 
குறைந்த நேர இடைவெளியில் இடம்பெறும் இந்த குத்து கறித்து ரோஸ் கூறுகையில், 'இந்த ஒருங்கிணைப்பில் தசை நார்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அத்துடன் ஒரு அங்கு இடைவெளி போன்ற குத்துக்களுக்கு பிரதான பின்னணி காரணியாக ஒருங்கிணைப்பும் நேரமைப்புமே முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன' என்கிறார் ரோஸ்.
 
58122.jpg
 
2012ஆம் ஆண்டிலும் இந்த உடலமைப்பு முறையில் சிறிய இடைவெளியில அமைகின்ற குத்து குறித்து லண்டன் இம்பெரியல் கல்லூயின் நரம்பியல் விஞ்ஞானியான எட் ரொபேர்ட்ஸ் என்பவரும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேபோன்று புரூஸ் லீயின் வேகம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வம்சாவளியான புரூஸ் லீ, 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கலிபோர்னியாவில் பிறந்து ஜுலை 20ஆம் திகதி 1973ஆம் ஆண்டு தனது 32ஆவது வயதில் ஹொங்கொங்கில் மர்மமாக மரணமானார்.
 
அமெரிக்க ஆசிரியையான லிண்டா எமிரியை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரண்டன் லீ என்ற ஆண் குழந்தையும் ஷனொன் லீ என்ற பெண் குழந்தையும் பிறந்தனர். புரூஸ் லீயைப் போன்று செயற்பட்ட அவரது மகனும் ஹொலிவூட் நடிகருமான பிரண்டன் லீ படப்பிடிப்பின் போது தவறுதலாக சுடப்பட்டு 28ஆவது வயதில் 1993ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
 
சிறு வயது முதல் தற்காப்புக் கலையில் நாட்டம் கொண்டிருந்த புரூஸ் லீ தற்காப்புக் கலையை ஐபி மேன் என்பவரிடம் கற்றார். தனது தனித்துவமான திறனால் 1969 முதல் 1973ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் முhர்லோவ், த பிக் பொஸ், பிஸ்ட் ஒப் பியூரி, வெ ஒப் ட்ரகன், எண்டர் த ட்ரகன் மற்றும் கேம் ஒப் த டெத் (முழுமையாக முடிக்கப்படவில்லை) ஆகிய 6 படங்களில் மட்டுமே நடித்து நாயகனாகவும் பெரு வெற்றி பெற்ற புரூஸ் லீயின் படங்கள் இன்றும் அவரது சண்டைகளுக்காக ரசிக்கப்படுகின்றது.
 
இக்காலப் பகுதியில் கெமராவின் செக்கனுக்கான பிரேம் தற்போதைய கெமராவுடன் ஒப்பிடுகையில் பல ஆயிரம் மடங்கு குறைவு. இதனால் படப்பிடிப்பில் இவரது அதிவேகமான சண்டைகளை படம் பிடிக்க முடியாமல் அவரது நிஜமான வேகத்தினைக் குறைத்து படம்பிடிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
 
58125.jpg
 
அதி திறன்மிக்க இக்கலைஞனால் குறித்த காலப் பகுதியில் சீனப் பிராந்தியங்களில் தற்காப்புக் கலை நிலையங்கள் வெகுவாக அதிகரித்ததாகக் கூறப்படுகின்றது. புரூஸ் லீயின் மரணத்தின் பின்னர் அவரது மனைவி தற்காப்புக் கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அவரது மகள் தற்போதும் ஈடுபடுகின்றார். 
 
புரூஸ் லீ தனது 32 வயதில் மரணமடைந்த போதிலும் இன்னும் 32 தலைமுறைகளானாலும் மறக்க முடியாத தனித்துவக் கலைஞராக வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பார்.
 
-ஏ.எம்.ஆர்
 metronews
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நடிகர், 70/80 களில் இவரது படங்களை பார்த்து பல இளைஞர்கள், கராட்டி பழகினார்கள்.

ஒரு படத்தில் ‍‍‍‍‍chuck Norris என்பவருடன் மோதுவார் என் நினைக்கின்றேன். அவரும் ஒரு சிறந்த ‍‍‍‍

martial art காரர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
    • மறந்து போய் மன்னிப்பு மசோதாவில் கையொப்பம் வைக்காமல் போகாதவரை ஓக்கே🤣. இதை விட ரஸ்யா நேட்டோவில் தானே இணையலாம் 🤣.
    • ஜேர்மனியில் பொலிஸ்க்கு அதிகார சட்டங்கள் குறைவு. இனிவரும் காலங்களில் பல கூடுதல் சட்ட அனுமதிகளை வழங்க இருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி ஒன்று வருமாயின் ஜேர்மனியில் அகதியாக வரும்  அனைவரும் உடனேயே நாடு கடத்தப்படுவர்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.