Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாவலி ஆற்று நீரை திருப்பி விட்டு நெற்பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் முயற்சி

Featured Replies

140622161530_mavilaru_maavilaaru_mahavel

ஆற்றை திசை திருப்பும் முயற்சியாக மணல் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மாவிலாறு அங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கிவருகின்றனர்.

நீர் இன்றி ஆயிக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், வெருகல் மற்றும் சேருவில ஆகிய பிரதேசங்களில் மட்டும் சுமார் 22 500 ஏக்கர் செல் வேளாண்மை செய்கை நீர் இன்றி அழியும் ஆபத்தை எதிர்நாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதிகளில் மாவிலாறு நீரை நம்பி நெல் பயிரிட்டுள்ள தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் விவசாயிகள் தமது பயிர்களை பாதுகாப்பதற்கான முயற்ச்சிகளில் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.

கண்டல்காடு என்னுமிடத்தில் கிளையாக பிரிந்து கடலை நோக்கி செல்லும் மகாவலி கங்கை நீரை தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக அந்த இடத்தில் தற்போது மண் மூடைகளை அந்த பிரதேசங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் அடுக்கிவருகின்றனர்.

நீர்ப்பாசன இலாகாவின் அனுமதியுடனும் ஆலோசனையுடனும் இந்த பணி முன்னெடுக்கப்பட்டாலும், அது எந்தளவுக்கு பலன் தரக கூடியதாக அமையும் என தம்மால் உறுதிபட கூறமுடியாது என அந்த பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளில் ஓரவரான பி. மதிபாலசிங்கம் தெரிவித்தார்.

கடலுக்கு செல்லும் மகாவலி ஆற்று நீரை மண் அணை போட்டு தடுத்து மாவிலாறுக்கு திருப்புவதென்றால் சுமார் 8000 மண் மூடைகள் தேவைப்படுவதாக நீர்ப்பாசன இலாகா அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாட்டின் தெற்கில் தற்போது இனங்களிடையே முறுகல் நிலையொன்று தோன்றியுள்ள போதிலும், மாவிலாறு பிரதேசத்தில் தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் விவசாயிகள் கூட்டாக செயல்படுவதை இங்கு காண முடிவதாக எமது செய்தியாளர் இரா. உதயகுமார் கூறுகின்றார்.

2005ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச்திலிருந்த மாவிலாறு நீர்பாசன கதவை திறக்க அவர்கள் மறுத்த நிலையிலே, இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் ஆரம்பமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/06/140622_mavilaru_sand_bag.shtml

  • தொடங்கியவர்

1(5495).jpg
-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, பொலநறுவை, கண்டல்காடு என்னும் இடத்தில் மகாவெலி ஆற்று நீரை திசை திருப்பும் முயற்சியில் பிரதேச விவசாயிகள் சனிக்கிழமை (21) ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேசத்தில் நீர் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, வயல் நிலங்களுக்கு போதுமான நிர் கிடைப்பதில்லை இதனைக் கருத்தில்கொண்டும் மகாவெலி கங்கையின் நீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கும் வகையிலும் ஆற்றின் குறுக்காக  மணல் மூடைகளை அடுக்கி நீரை திசை திருப்பும் முயற்சி, நிர்ப்பாசன திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் மூலம் வீணாகும் நீர் மாவில்ஆறு ஊடாக பிரதேச  வயல்களுக்கு செலுத்தும் வாய்ப்பு ஏற்படள்ளது என விரதேச விவசாயிகள் தெரிவித்தனர். 
2(3140).jpg
3(2336).jpg
5(1821).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/115166-2014-06-22-08-18-10.html

அரசாங்க சம்பளக்காரர் எங்கே?

இதுதான் எல்லா நாட்டிலும் பிரச்சினை காசை கொண்டு போய் எல்லா இடமும் கொட்டுவார்கள் ஆனால் விவசாயிகளுக்கு ஒரு உதவியும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.