Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மையினருக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்தை பொறுக்க முடியவில்லை : சீ.வி.விக்கினேஸ்வரன்

Featured Replies

தெற்கில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதைப் பொறுக்க முடியாத பெரும்பான்மை இனத்தவர்கள் முஸ்லிம்களை அங்கிருந்து அடித்துத் துரத்தப்பார்க்கின்றனர். இதேபோல் மேலைத்தேய நாடுகளிலும் குடியேறியுள்ள எம்மவர்க்கும் ஏற்படலாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 
cv2_0.jpg
 
வடமராட்சி வட இந்து மகளர் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றபொழுது நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
இன்றைய காலகட்டத்தை எம் மக்கள் முற்றாக அறிந்து கொள்ளும் தருணம் உதயமாகி இருக்கின்றது. இது வரை காலமும் நாங்கள் பழைய முறையிலேயே செல்ல எத்தனித்து வந்துள்ளோம். அதனால் ஓரளவு வெ ற்றியும் கண்டுள்ளோம். ஆனால் போகும் போக்கைப் பார்த்தால் காலத்தின் கோலமாகப் பல மாற்றங்கள் உலகளாவிய ரீதியிலே ஏற்பட சந்தர்ப்பங்கள் எழுந்து வருகின்றன.
 
முன்னர் ஏன் தமிழர்கள் இலங்கையின் தெற்கில் இருந்து விரட்டப்பட்டார்கள்? இன்று ஏன் முஸ்லிம்கள் விரட்டப்படுகின்றார்கள்? சிறுபான்மையினரால் தமக்கு அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. போட்டிகள் உருவாகின்றன. அல்லது நிகழக்கூடும் என்று பெரும்பான்மையினர் நினைத்தால் உடனே சிறுபான்மையினரைத் துன்புறுத்தத் தொடங்கி விடுவார்கள். 
முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்த அரசாங்க உத்தியோகங்களில் பெரும்பன்மை இடங்களைக் கைப்பற்றி இருந்தார்கள். இதனால் தமிழர்களை விரட்ட 1958ஆம் ஆண்டு தொடக்கம் கலவரங்கள் தெற்கில் வெடித்தன. 1983இல் முற்றாக வெடித்தது.
 
இன்று முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதைக் கண்டதும் பெரும்பான்மையினருக்கு அதைப் பொறுக்க முடியாமல் இருக்கின்றது. அடித்துத் துரத்தப்பார்க்கின்றனர். தொழிலிடங்களைத் தீயிற்கு இரையாக்குகின்றனர்.
 
இதை ஏன் கூறுகின்றேன் என்றால் நாம் ஒன்றை மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். மேலைத் தேசங்களில் 12ஆம் வகுப்புக்குப் பிறகு உயர் கல்வி நாடுவோர் தொகை அங்குள்ள உள்ளூர் வாசிகளினுள் மிகமிகக் குறைவு. அவர்களின் எல்லா உயர்கல்வித் தொழில்களையும் இந்தியரும் இலங்கையரும் வேறு நாட்டினரும் தம் கைவசமாக்கியுள்ள இந்தத் தருணத்தில் பொருளாதார சரிவை மேலைத் தேசங்கள் எதிர்நோக்கவேண்டி வந்தால் என்ன நடக்கும்? உள்ளூர் மக்களின் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படும். அப்போது வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய எம்மவர்கள் மீது கோபம் ஏற்படக் கூடும். இன்று இந்நாட்டின் தெற்கில் எவ்வாறு அப்பேற்ப்பட்ட கோபம் பிரதிபலிக்கப்படுகிறதோ அதேபோல் மேலைத்தேசங்களிலும் அவர்களின் கோபம் மேலெந்து வந்தால் என்ன நடக்கும். எம்மவரைத் தமது சொந்த நாடுகளைத் தேடிச் செல்ல அப்பேற்ப்பட்ட ஒரு நிகழ்வு வழிவகுக்கும்.
 
எனவே எங்களுடைய மாணவ மாணவியர் உயர் கல்வியின் பின்னர் மேலைத்தேசங்களுக்குச் சென்று குடியேற வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று கூறுகின்றேன். எமது நாட்டில் இருந்தே மக்களுக்குத் துணையாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்று கூற ஆசைப்படுகின்றேன். அதுவும் வடகிழக்கு மாகாணங்களில் இத் தேவையானது முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு முக்கியமாகி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
 

தெற்கில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதைப் பொறுக்க முடியாத பெரும்பான்மை இனத்தவர்கள் முஸ்லிம்களை அங்கிருந்து அடித்துத் துரத்தப்பார்க்கின்றனர். இதேபோல் மேலைத்தேய நாடுகளிலும் குடியேறியுள்ள எம்மவர்க்கும் ஏற்படலாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

சிந்தனைக்குரிய விடயம் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.