Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய், முருகதாஸ் பணயக்கைதிகளா!

Featured Replies

3896_content_rajapaksa_vijay_murugadoss0
 
இன்றைய சமுகத்தில் சினிமா என்பது ஒரு மிகப்பெரிய சக்தியாக மாறி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்காக உருவெடுத்துள்ளது.அப்படிப்பட்ட சினிமாவில் ஒரு புரட்சிகரமான விஷயத்தை புகுத்தி அதை வெளி உலகில் பூதாகரமாக வெடிக்க வைக்க முடியும்.அதிலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை.உடல்மொழி, வசனங்கள், உடை என சினிமாவின் தாக்கம் இங்கு மிக அதிகம். அதனால் தான் என்னவோ அரசியல்வரை இதன் தாக்கம் கெட்டியாகப் பிடித்துள்ளது!!!இப்படி ஒரு பிரதான கலையை தன் சுயநலத்துக்காகவும், ஈழ மக்களின் குரல்களை வேரோடு அழிப்பதற்காகவும் ஒரு கருவியாக பயன்படுத்த உள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்ஷ.
 
தன் மேற்பார்வையில் நடந்த ஈழ போரில் பல அப்பாவி மக்களை பலியாக்கி இன்றளவும் அங்கு இருக்கும் தமிழ் உணர்வு இயக்கங்களையும் மற்றும் போராட்ட இயக்கங்களின் ஆணிவேரையும் பிடுங்கி கொண்டு இருக்கிறார்.புலம் பெயர்ந்த தமிழர்களால் தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று எண்ணியிருந்த மக்களிடைய வேறு ஒரு விதத்தில் தன் மட்டமான புத்தியால் கருத்து மோதலை உண்டாக்கி அவர்களில் பலரை தன் வட்டத்துக்குள் போட்டு கொண்டார் ராஜபக்ஷ.அது மட்டும் இல்லாமல் உலகில் வாழும் பெரும் தமிழ் கோடிஸ்வரர்களோ, ஈழ மக்கள் என்றால் யார்? அங்கு என்ன நடந்தது என்று தெரியாத மாதிரி ராஜபக்ஷவை நாள்தோறும் சந்தித்து வர்த்தக ரீதியில் கூட்டாளியாக மாறி அவருடன் விருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர்.ஆனால் புலம் பெயர்ந்த மக்களையும் தன் வலைக்குள் சிக்க வைத்து வரும் ராஜபக்ஷக்கு தமிழகம் மட்டுமே கால் பதிக்க முடியாத வகையில் சிம்மசொப்பனமாக திகழ்கிறது. ஏனென்றால் 2009ல் நடந்த ஈழ போரின் தாக்கம் அங்கு சற்றும் குறையவில்லை.
 
எம் இனம், எம் மக்கள் என்று வாழ்ந்து வந்த அப்பாவி ஜனங்களை கொன்று குவித்த இந்த ராஜபக்ஷவை எமனை போல தான் இன்றளவும் பார்க்கிறார்கள்.அதே போல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ராஜபக்ஷக்கு கொஞ்சம் கூட சளைத்தவர் கிடையாது. நீ எமன் என்றால் நான் எமனுக்கே எமன் என்று அவருக்கு ஆதரவு தருவோரை எதிர்த்து வருகிறார். எவர் இருந்தாலும் மடக்க கூடிய ராஜபக்ஷவின் தந்திரம் ஜெயலலிதாவிடம் பலிக்கவில்லை.சரி என்று கன்னத்தில் கைவைக்காமல் எதோ ஒரு விதத்தில் தமிழகத்தில் கைவரிசை காட்ட நினைத்தவருக்கு கிடைத்தது தான் இந்த சினிமா.
 
அதற்கு அடிக்கல் நாட்டும் விதமாக இலங்கையில் பிரபல நிறுவனமாக திகழும் வர்த்தக கூட்டாளியான லைக்கா மொபைல்காரர்களை அய்ங்கரன் கருணா மூலம் கோடம்பாக்கத்துக்கு தூது அனுப்பி வைத்துள்ளார் ராஜபக்ஷ.லைக்கா நிறுவனம் கோடம்பாக்கம் வந்த ஆரம்பத்தில் சில பல சலனமும், கருத்துகளும் வந்தது சரி, அதற்கு பிறகு பலரும் அதை மறந்து விட்டனர்.அவர்களின் முதல் திட்டமாக தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களின் விருப்பமான நடிகர் முலம் ஈசியாக சினிமாவில் கால் பதித்தால் எந்த வித பிரச்சனையும் வராது என்று கணக்கு போட்டனர்.
 
அதன் முதல் படியாக முருகதாஸுடம் பெரும் தொகையை பரிமாற்றம் செய்து விஜய்யை வளைத்து போட்டனர்.தற்போது விஜய்  முருகதாஸ் கூட்டணியில் படம் ஜோராக வளர்ந்து வருகிறது. இது போதாது என்று ஏ. ஆர் முருகதாஸ் கிட்டத்தட்ட லைக்கா நிறுவனத்தின் பிஆர்ஓவாகவே மாறியிருக்கிறார்.அதாவது முருகதாஸ் தமிழகத்தில் இருக்கும் பல முன்னணி இயக்குனர்களை லைக்கா நிறுவனத்துக்கு சிபாரிசு செய்து வருகிறார். இன்னொரு பக்கம் இங்கு இருக்கும் பெரிய சினிமா கம்பெனிகளிடம் இணைந்து வருடத்துக்கு 2 படம் என்று தயாரிக்க முடிவு செய்து உள்ளது ராஜபக்ஷவின் வழியில் நடத்த படும் இந்த லைக்கா நிறுவனம்.அது மட்டும் இல்லாமல் இந்த ஒரு திட்டத்தின் வழியாக சிங்கள படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது. அதனுடைய முதல் முயற்சியாக தான்With You and Without You”என்ற சிங்கள படத்தை திரையிட முயன்றுள்ளனர்.இதை தொடர்ந்து இவர்களை போல பல கோடிகளைக் கொட்டத் தயாராகி வருகிறார்கள் லைக்கா மாதிரி நிறுவனங்கள் மற்றும் தமிழர் போர்வையில் சிங்களத்துக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும் வியாபாரிகள்!
 
வெட்கப்படுவது தவிர வேற என்ன செய்வது! வேரோடு அழிக்க வேண்டிய விஷ கிருமிகளை உரம் போட்டு வளர்க்கிறோம். அது என்றோ ஒரு நாள் நல்ல விளைச்சலாகி நம் வேரை புடுங்குவதற்கு முன் அதனை வேரோடு அழிப்பது தான் நல்லது.நமக்கு பிடித்த ஒரு முன்னணி நடிகர்  இயக்குனர் இணைந்து விட்டனர் என்று வேடிக்கை பார்க்கும் மக்கள் மத்தியில் நாமும் வாழ்கிறோம்.இதற்காக விஜய்யையோ அல்லது முருகதாஸையோ குற்றம் சொல்லி அவர்கள் அந்நியர்கள் என்று சொல்லவில்லை, ஏனென்றால் பணபோதைக்கு அடிமையாகி வாழும் சில மக்களுக்கு யதார்த்தம் தெரியவும் இல்லை, புரியவும் இல்லை என்று தான் வேதனை படுகிறோம்.இதன் முடிவு நாளைய தமிழ் சினிமா ராஜபக்ஷவின் கையில்? 
 

" புலம் பெயர்ந்த மக்களையும் தன் வலைக்குள் சிக்க வைத்து வரும் ராஜபக்ஷக்கு"

அப்படியொன்றும் வழைத்து போடவில்லை. முன்பிருந்த அதே அடிவருடிகள் தான் உரத்து புலம்புகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.