Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக போராடுகின்றனர்

Featured Replies

siva_CI.jpg

முதற் பதிவேற்றம் - 04-07-2014 - 13:07

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் வாழ்க்கையை முன்னெடுப்பதில் போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் போராளிகள் வாழ்க்கையை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிNhநக்கி வருகின்றனர்.

மனிதாபிமான தொண்டர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு இரண்டு ஆண்டு கால புனர்வாழ்வு அளிக்கப்பட்டது.

இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கி, சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டனர்.

புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சுமார் 12000 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது.

தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படாத 132 உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர்.

சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட பெருமளவிலான முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொருளாதார பாதுகாப்புப் பிரிவு தலைவர் எம்.எஸ்.எம். காமில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 373 முன்னாள் போராளிகளுக்கு தலா 50,000 ரூபா உதவு தொகை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டில் மேலும் 150 பேருக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.

முன்னாள் போராளிகளுக்கு போதியளவு உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

வேறும் எந்தவொரு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமும் உதவிகளை வழங்கவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதில் நாட்டம் காட்டி வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க புனர்வாழ்வு அதிகாரி முருகேசு கயோதரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் சம்பாதிக்கக் கூடிய தொழில்களில் ஈடுபடவே புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பிலான சமூகப்பார்வையும் ஓர் பிரதான காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக ஊனமுற்றவர்களும் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடக்கில் யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஊனமுற்றுள்ளனர்.

இவர்களினால் இயல்பு வாழ்க்கையை தொடரவோ அல்லது குடும்ப பொருளாதாரத்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கவோ முடியாத நிலைமை காணப்படுகின்றது.

முன்னாள் போராளி இயல்பு வாழ்க்கையை தொடர்வதற்கு அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108964/language/ta-IN/article.aspx

தமிழ் தேசிய கூடமைப்பு ஒரு மறுவாழ்வு வேலை திட்ட அறக்கட்டளையை தொடக்கி புலம்பெயர் ஈழத்தமிழரின் உதவியோடு சிறு தொழில் கடன் திட்டம், தொழில் சார் கல்வி, மன திட ஊட்டல் கூட்டங்கள் நடத்தி உதவலாம்.

இவர்களை கூடுறவு பண்ணைகள் (பால்..கோழி, ஆடு இறைச்சிக்காக, பழவகை தோட்டங்கள்) அமைக்க வங்கிகள் கடன் கொடுத்தால் நல்லது... விவசாயமே உலகை மேம்படுத்த கூடிய ஒரேயொரு செயல்.....

 

(அமெரிக்காவில் fracking ஆல் நிலா நடுக்கங்கள் அதிகமாக உருவாவுதாக அலற தொடங்கி விட்டதால்.....oil விலை குறையாது :) )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.