Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளையுடன் முடிகிறது சந்திரசிறியின் அதிகாரம் – வடக்கின் அடுத்த ஆளுனர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்தநிலையில், புதிய ஆளுனராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை.

13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஆளுனர் ஒருவரின் பதவிக்காலம், அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் என்று சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 2009ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் சிறிலங்கா அதிபர் முன்பாக பதவியேற்ற, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தனது 5 ஆண்டுப் பதவிக்காலத்தை நாளை  - ஜுலை 11ம் நாள் நிறைவு செய்கிறார்.

இந்தநிலையில், புதிய ஆளுனர் ஒருவர், நாளை மறுநாள் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், புதிய ஆளுனர் யார் என்ற விபரம் இன்னமும் சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.

Ramaphosa-chandrasiri.jpg

வடக்கு மாகாணசபையில் ஆளுனராகப் பதவி வகித்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்தார்.

கடந்த செப்ரெம்பர் மாதம், வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்ட போதிலும், அதனைச் சுதந்திரமாக இயங்க விடாமல் தடுத்து வந்ததுடன், அதன் நிர்வாகத்தில் தலையீடுகளைச் செய்து குழப்பம் விளைவித்து வந்தார்.

இதன்காரணம், வடக்கு மாகாணத்தில் இரட்டை நிர்வாக நிலை நடைமுறையில் இருந்து வந்தது.

வடக்கு மாகாணத்துக்கு இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனர் வேண்டாம் என்றும், சிவில் பின்னணி கொண்ட ஆளுனர் ஒருவரை நியமிக்குமாறும், வடக்கு மாகாணசபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும்,சிறிலங்கா அதிபர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

எனினும், கடந்த ஜனவரி மாதம், தெல்லிப்பளையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சிறிலங்கா அதிபருடன், இதுகுறித்து வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பேசிய போது, சந்திரிசிறியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே உள்ளதாகவும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டிருந்தார்.

அதன் பின்னர், சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், வடமாகாண முதல்வருக்கு சிறிலங்கா அதிபர் உறுதிமொழி அளித்திருந்தார் .

இந்தநிலையில், மீண்டும் பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடையவரும், கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க வடமாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இதுவரை அடுத்த ஆளுனர் யார் என்பது உறுதியாகவில்லை.

 

http://www.puthinappalakai.com/view.php?20140710110855

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.