Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சினையை தீர்க்க அரசு துணியளவும் விரும்பவில்லை;மங்கள சமரவீர

Featured Replies

வடமாகாணத்துக்கு சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்காமல் மீண்டும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியை ஆளுநராக்கியதன் மூலம் தமிழர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் துளியளவும் விரும்பவில்லையென்பதை தெட்டத் தெளிவாக்கியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
 
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளானது இனங்களுக்கிடையில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது மாறாக மேலும் மேலும் குரோதத்தையும் இன முரண்பாடுகளையுமே தோற்றுவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக்கியமை தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
 
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்தது. இது போன்ற சந்தர்ப்பம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கிடைக்கவில்லை.
 
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் இன்னும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. மாறாக அம்மக்களின் மனங்களை புண்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகிறது.
 
mangala_6.jpg
 
வடக்கில் அளவுக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி விட்டு அங்கு சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தாம் நினைப்பதைத் தான் செய்வோம் என்பதை இந்த அரசாங்கம் நிரூபித்துள்ளது.
 
சாதாரணமான ஒரு ஆளுநர் நியமன விடயத்தில் விட்டுக் கொடுக்காத இந்த அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கப்போகிறது. எனவே தேசிய பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.
 
சர்வதேச அழுத்தங்கள் உச்சத்தில் இருக்கும் இத்தருணத்தில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இவ்வாறான செயற்பாடுகளானது மேலும் மேலும் சிக்கலான நிலைமையினையே தோற்றுவிக்கும். அது மாத்திரமல்லாமல் உள்நாட்டிலும் குழப்பங்களும் அமைதியின்மையுமே ஏற்படும்.
 
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இன மத மற்றும் மொழி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

Edited by Athavan CH

உவர் எது தீர்த்து வைக்க முயற்சி செய்தவர் போல், கதைக்கிறார் , சர்வதேஅச நாடுகள் தமிழார் பிரச்னையை தீர்க்க முயற்சித்தால் வன்முறை வெடிக்கும், அதை அரசாங்கம் கை கடி நின்று வேடிக்கை பார்க்கும் என மிரட்டல் விட்டவர் ஆச்சே. ஆனால் ஒன்று இவர் ஒரு திறமையான நிர்வாகி. தனியார் மயப்படுத்தல் எப்படி செய்வது என்று இவரிடம் இருந்து தான் பாடம் கற்க வேண்டும், குறிப்பக பிரித்தானியாவின் Margret Thatcher

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.