Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன்…” யாழ்.பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவன் பலி!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன்…” யாழ்.பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவன் பலி!? 

 

sutha2-225x300.jpgயாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது. நெல்லியடிப் பகுதியில் வசிக்கும் நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

விடிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் “மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என்று அவர் பதிவிட்டுள்ளாராம். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே போருக்கு பின்னர் கூடுதலாக ஏற்பட்டுவரும் தற்கொலை மனோபாவத்திலிருந்து விடுதலை செய்வதற்கு பல்கலைக்கழக சமூகம் எந்தவித ஆக்க ரீதியான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அவருடைய இறுதியான முகநூல் பதிவு;-

 

suthakaran.jpg

 

http://tamilleader.com/?p=37883

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வாழத் தெரியாத கோழைகளினால் சமூகத்துக்குதான் ஆபத்து

  • கருத்துக்கள உறவுகள்
பிறந்த நாளன்று சடலமான பல்கலை மாணவன்; மரணிப்பதாக முகப்புத்தகத்தில் அறிவிப்பு
புதன்கிழமை, 23 ஜூலை 2014 10:13
unnamed(153).jpg
 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கரவெட்டி அல்வாய் தெற்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் (வயது 21) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். 
 
இன்று இந்த மாணவனின் பிறந்த நாளாகும். இந்நிலையில், பிறந்தநாளில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அம்மாணவர், தனது முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) குறிப்பொன்றை பதிவேற்றம் செய்துள்ளார். 
 
இதன் பின்னரே, அம்மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
இவரது சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 
 
சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
முகப்புத்தகத்தில் தற்கொலை செய்வதாகப் பதிவிட்டபின் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன. 
 
அண்மைக்காலங்களில் மூவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில்இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/119188-2014-07-23-04-46-08.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.