Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலைகள் மூவிஸ் தயாரிப்பான உயிர்வரை இனித்தாய் முழுநீளத் திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Uyirvarai-Eniththai-260714-seithy-300-20

அலைகள் மூவிஸ் தயாரிப்பான உயிர்வரை இனித்தாய் முழுநீளத் திரைப்படம் நாளை - 27.07.2014 பாரீஸ் நகரத்தில் - சொம்ஸ் எலிசே பகுதியில் அமைந்துள்ள சிறந்ததோர் திரையரங்கிலே திரையிடப்படுகிறது. உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் திரைப்பட ரசிகர்கள் இருப்பதை அவர்களுடனான நேரடி உரையாடல்களின் போது தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு உள்ளது. அதனை இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய ஒரு காலகட்டம் உருவாகியிருக்கிறது.

  

ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன.

தற்போது அந்த வேகம் கொஞ்சம் தணிந்துள்ளது.

குறும்படத்துறையில் எமது இளம் கலைஞர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றார்கள். இது மிக மிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே உள்ளது.

ஐரோப்பாவில் வேகம் கொண்ட ஈழத்துத் திரைப்படத் துறையின் நீட்சி - வளர்ச்சி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து, பிறிட்டன், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் ஈழத்துத் திரைப்படத் துறை தொடர்பான ஈடுபாடுகள் மேற்கொள்ளப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடப்பட்டு மக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றன.

அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் ஈழத்துத் திரைப்படத்துறை வளர்ச்சி நிலை பெற்று வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஈழதேசத்திலே இற்றைக்கு அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்துத் திரைப்படத்துறை தோற்றம் பெற்றது.

சமுதாயம் - தோட்டக்காரி எனத் தொடங்கிய ஈழத்துத் திரைப்படத்தயாரிப்பு 1993ம் ஆண்டு வெளிவந்த ஷர்மிளாவின் இதயராகம் திரைப்படத்துடன் நின்று போனது.

28 திரைப்படங்களே இந்தக்காலகட்டத்தில் தயாரித்து வெளியிடப்பட்டன.

பல படங்கள் ஆரம்ப பூசையுடன் நின்று போயிருக்கின்றன. சில படங்கள் குறிப்பிட்டளவு படப்பிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நின்று போயின.

இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற நிலையில் தயாரிப்பாளர்களின் பின்னடிப்பினால் நின்று போன திரைப்படங்கள் சில, என்று ஈழத்துத் திரைப்பட வரலாறு பதிவாகியிருக்கும் நிலையில் புலம்பெயர் தேசங்களில் திரைப்படத் தயாரிப்புகளில் ஈழத்தமிழ் கலைஞர்கள் ஈடுபடத் தொடங்கினர்கள்.

அதில், அவர்கள் வெற்றிப்பாதையை நோக்கி நகர்ந்து வருகின்றார்கள்.

கனடா தேசத்தில் பல முழு நீளத் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை தமிழ் சினிமாவின் கதை எனும் நூலை எழுதி வெளியிட்டுள்ள தம்பிஐயா தேவதாஸ் போன்றவர்கள் புலம்பெயர்தேசங்களுக்குப் பயணம் மேற்கொண்டு ஈழத்துத் திரப்படத்துறையின் நீட்சியையும் பதிவு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

"கண் அன்ட் றிங் " ( A GUN AND A RING ), ஸ்ரார் 67 ஆகிய திரைப்படங்கள் கனடாவில் அண்மையில் வெளிவந்து மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களாக உள்ளன.

"கண் அன்ட் றிங் " சீனா - சங்காய் திரைப்பட விழாவில் காண்பிக்க தெரிவு செய்யப்பட்ட திரைப்படமாக அமைந்தது என்பது ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதே ஆகும்.

ஈழத்தமிழர்களின் திரைப்பட முயற்சிகளில் கலைப்படம் - வர்த்தக ரீதியிலான படம் என்கின்ற ஒரு போட்டி நிலை நிலவிவருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

தவறு இல்லை ஆனால் அவை ஆரோக்கியமான பாதையில் பயணிக்கவேண்டும்.

எல்லா வகையான படங்களும் உருவாக வேண்டும், சகல தரப்பினரையும் மகிழ்விக்க வேண்டும்.

ஆடல் பாடல் மகிழ்வூட்டுவதற்கு வேண்டியவையாகவே அமைந்துள்ளன.

இந்த, "சமுதாயம் - தோட்டக்காரி" முதல் "ஷர்மிளாவின் இதயராகம்" வரை வெளிவந்த ஈழத்துப்படங்களில் தொழில் நுட்பக் குறைபாடுகள் மிக அதிகமாக இருந்தன. பாடல்கள், பின்னணி இசை என்பவற்றில் குறைபாடுகள் இருந்தன.

அவை கடைசி வரை நிவர்த்தியாகவில்லை.

ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் மேலைத்தேசங்களில் தயாரான திரைப்படங்கள் முழுமையான தரத்தை ஆரம்பக்கட்டத்தில் பெற்றிருக்கவில்லை என்பது உண்மை.

ஆனால் இன்று தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முழுமை பெற்று வெளிவருகின்றன.

"உயிர்வரை இனித்தாய்" திரைப்படம் தொழில் நுட்பத்தில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

Digital Cinema Package - DCP, இந்தத் தொழில் நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Digital Cinema Package - DCP, தொழில் நுட்பத்தில் "உயிர்வரை இனித்தாய்" தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் பல டெனிஸ்நாட்டு திரைப்பட வல்லுனர்கள் சம்பந்தப்ட்டுள்ளார்கள்.

உலகில் எந்த மூலையில் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படம் காண்பிக்கப்பட்டாலும் நீங்கள் எல்லோரும் நம்பிக்கையோடு சென்று படத்தைப் பாருங்கள், உங்கள் ஆதரவை ஈழத்துத் தமிழ்த்திரைப்படத்துறைக்கு வழங்கிக்கொள்ளுங்கள். யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நேற்று திரையிடப்பட்ட போது இலங்கைக் காவல்துறையினரால் தடை செய்யப்பட்ட சுவிஸ் ஓசை மூவிஸ் தயாரிப்பான "மாறுதடம்" தடை தாண்டி யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். யாழ் நகர மக்கள் அந்தப் படத்தைப்பார்த்து ரசிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட் வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நாளை மாலை 5.30க்கு உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தை பாரீஸ் - சொம்ஸ் எலிசே பகுதியில் அமைந்துள்ள PUBLICIS திரையரங்கில் பார்த்து ரசிக்க தயாராவோம்.

-எஸ்.கே.ராஜென்-

Publicis Cinemas

 

133 Avenue des Champs-Elysees, 75008 Paris,

M�tro : George V

RER A : Charles de Gaulle - Etoile

To purchase your tickets contact 0635307671

 

Uyirvarai-Eniththai-260714-seithy-221-(1

 

 

Uyirvarai-Eniththai-260714-seithy-221-(2

 

 

Uyirvarai-Eniththai-260714-seithy-221-(3

 

 

Uyirvarai-Eniththai-260714-seithy-300-(6

 

 

Uyirvarai-Eniththai-260714-seithy-338-(4

 

 

Uyirvarai-Eniththai-260714-seithy-883-(5

 

http://www.seithy.com/breifNews.php?newsID=113853&category=TamilNews&language=tamil

எமது கலைஞ்சர்கள் மூலம் எம் கலை வளர்வதை நாமே ஊக்குவிற்போம்..ஈகோ ,இமேஜ் எல்லாத்தையும் விட்டுட்டு .................சாகும்வரை நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.