Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் - இந்திய ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத் தேசியவாத அமைப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்டியிலுள்ள தலதா மாளிகை போன்றன மதிப்பளிக்கப்படுதல் போன்றன சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலைக் கட்டியம் கூறுகின்றன.

இவ்வாறு Swapan Dasgupta என்னும் இந்திய ஊடகவியலாளர் THE ASIAN AGE ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2015ன் முற்பகுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியமுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெறுகின்றன. சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்திற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண சபைக்கும் இடையில் நிலவும் முடிவுறாத குழப்பநிலையானது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. வடக்கு மாகாண அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, வடக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்வாகம் மேற்கொள்வதற்கு முன்னரான நாட்களில் பேணப்பட்ட அரசியலைத் தற்போது தொடர்கின்றது.

சிறிலங்கா இராணுவத்தினரால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர், வடக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், இதன்மூலம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கடப்பாட்டைத் தாம் கொண்டுள்ளனர் என்பதை வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் நன்கறிவர்.

13 மாதங்களுக்கு முன்னர் நான் சிறிலங்காவில் இருந்தபோது, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நிறுத்துவது அல்லது சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளுக்குச் சார்பாக வாக்குகளைப் பதிவு செய்தல் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் 'இரகசிய' சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ராஜபக்ச அரசாங்கத்திலுள்ள கடும்போக்காளர்கள் ஒருபோதும் தமிழர் பகுதிகளில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கமாட்டார்கள் என அக்காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறான எதிர்வுகூறலை அடுத்து, ராஜபக்ச அரசாங்கத்தின் சதித் திட்டமானது பொய்யாகியது. சிறிலங்கா அதிபரின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தில் தேர்தல்கள் இடம்பெற்றன. இத்தேர்தலில் வடக்கில் வாழ்ந்த பெருமளவான மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். எவ்வித தேர்தல் மீறல்களும் இன்றி வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இத்தேர்தல் இடம்பெற்றதிலிருந்து கூட்டமைப்பிற்கும் கொழும்பிலுள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் வடக்கின் அரசியல் அதிகாரம் தொடர்பில் பனிப்போர் இடம்பெறுகிறது. குறிப்பாக 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வடக்கில் தனது பாதுகாப்பைத் தளர்த்துவதன் மூலம் இங்கே பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. 1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையில் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஏற்றுக்கொண்டதற்கமைவாக வடக்கில் இறையாண்மை ஆட்சி இடம்பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடையாக உள்ளதாக த.தே.கூட்டமைப்பினர் கருதுகின்றனர்.

ஈழத்தமிழர்கள் தொடர்பாக 370வது நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள 'சிறப்புத் தகுதியை' பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியா தனது முழுஅதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1980களின் பிற்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையானது சிறிலங்காவில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் பின்னர் இந்திய மத்திய அரசாங்கமானது, சிறிலங்கா விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான வரையறையைப் பின்பற்றுகிறது. அதாவது சிறிலங்காவிற்குள் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகளில் தனது தலையீட்டை மேற்கொள்வதை இந்தியா தவிர்த்து வருகிறது.

எதுஎவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்காவுடன் பேரம் பேசவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது. ஆனால் இந்த நகர்வானது பூச்சியமாகக் காணப்படுகின்றது. ஆனால் இந்திய நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக இந்திய மத்திய அரசாங்கமானது ஈழத்தமிழர் பிரச்சினைகளில் தலையீடு செய்ய முற்படுவதால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையைப் பயன்படுத்தி சிறிலங்காவின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதானது முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. இந்த இடைவெளியானது சீனா, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தற்போது கொழும்பில் எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன.

முதலாவதாக, பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் தேர்தலில் வெற்றியீட்டிய பாரதீய ஜனதாக் கட்சியானது தமிழ்நாட்டிலிருந்து முன்வைக்கப்படும் நியாயமற்ற கோரிக்கைகளைத் தீர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவானது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை மற்றும் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களின்; மாநாட்டை மன்மோகன் சிங் புறக்கணித்தமை போன்ற செயல்கள் மீண்டும் மோடியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாக, அனைத்துலக மனித உரிமை விவகாரம் தொடர்பில் திரு.மோடி போதியளவு அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளாமையானது, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் அந்நாடு பெற்றுக் கொண்டுள்ள கசப்பான அனுபவங்களை இந்தியா மேலும் புரிந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவில் மனித உரிமைகள் மற்றும் மீளிணக்கப்பாடு போன்றவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஊடாகச் செயற்படுத்த முனையும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ராஜபக்ச அரசாங்கம் அதிருப்தி கொள்வது தற்போது அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான போக்கிற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கும் என்கின்ற நம்பிக்கை நிலவுகிறது.

நிச்சயமாக, கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தால் நிறுவப்படும் முன்னோடித் திட்டங்கள் தொடர்பில் இந்தியா கவலை கொள்வதற்கு நியாயமான காரணம் முன்வைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கடந்த மாதம் சிறிலங்காவில் உள்ள ஐ.நா பணியகமானது, 'வாக்குப் பதிவு முறைமை' தொடர்பான கருத்தரங்குகளை நடாத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது வாக்களிப்பதில் இந்தியாவுக்கு முன்னரே உரிமையை வழங்கிய, வாக்களிப்பு வீதம் அதிகமுள்ள நாடான சிறிலங்காவில் ஐ.நா வாக்குப் பதிவு முறைமை தொடர்பில் கருத்தரங்குகளை வழங்குவதற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஐ.நா வின் இத்தகைய நகர்வானது, ராஜபக்ச எதிர்ப்பை உருவாக்கும் அரசியலுக்கான அனுசரணையா என எனக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மூன்றாவதாக, தமிழர் பிரச்சினையின் ஊடாக சிறிலங்காவுடனான உறவுநிலையை நோக்குபவர்களை விட, சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலை பாரதீய ஜனதாக் கட்சி நன்றாக ஆராய்ந்துள்ளது. மகாபோதி அமைப்பை நிறுவுவதற்காகவும் புத்தகாயாவை பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகவும் சியாமா பிரசாத் முகேர்ஜி நடவடிக்கைகள் எடுத்தமை மற்றும் இந்துத் தேசியவாத அமைப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்டியிலுள்ள தலதா மாளிகை போன்றன மதிப்பளிக்கப்படுதல் போன்றன சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலைக் கட்டியம் கூறுகின்றன. இவ்வாறான பண்பாட்டுத் தொடர்பாடலானது தற்போது, இரு நாடுகளுக்கும் இடையில் சேதுத் திட்டத்தைத் தொடர்வதற்கு மத்திய அரசாங்கமும் கொழும்பும் தமது ஆதரவுகளை வழங்கிவருதல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான பண்பாடு சார் தொடர்புகள் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலைத்திருந்தாலும் கூட, அண்மையில் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் பௌத்த சிங்கள அமைப்பான பொது பல சேனவுக்கும் இந்தியாவின் இந்துத் தேசியவாத அமைப்பான Rashtriya Swayamsevak Sangh அமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. சிறிலங்காவில் உள்ள முஸ்லீம் கலாசாரத்தை அழிப்பதற்காக கொழும்பு மற்றும் மத்திய மாகாணங்களில் இந்து-பௌத்த கூட்டணியை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பின்னணியில் செயற்படுவதாகவும் ஊடகங்களில் கூறப்படலாம்.

இந்தியாவில் திரு.மோடி போன்று சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் என ஊடகத்தில் செய்தி வெளியிடப்படும். மேற்குலகத்தால் வரையறுக்கப்பட்ட உயர் நெறிமுறை நியமங்களுக்கேற்ப மக்களின் வாக்குகள் பெறப்படுவதை உறுதிப்படுத்துவது தமது பொறுப்பென இந்தியாவைப் போன்று, வெளிநாட்டு ஊடகங்களும் சிறிலங்காவில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நம்புகின்றன.

 

http://www.puthinappalakai.com/view.php?20140728110970

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.