Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் : நிதி ஆலோசகர் பத்மநாபன்

Featured Replies

'முயன்றால் முடியாதது இல்லை!' செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கூறும் நிதி ஆலோசகர் பத்மநாபன்:

 

பெரும்பாலான வீடுகளில், வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இந்த செலவுகளை குறைப்பதற்கு, சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்; அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.சம்பளம் வந்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். சேமிப்புக்கு போக, மீதமுள்ள தொகையில், செலவுகளைத் திட்டமிடுவது நல்லது.உங்கள் மொத்த வருமானத்தில், வாடகை, மளிகை மற்றும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி கட்டணத்துக்கு இத்தனை சதவீதம் என, நீங்கள் திட்டமிடுகிற மாதிரி, எத்தனை சதவீத பணத்தை சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை முதலிலேயே எடுத்து வைத்து விடுவது அவசியம்.இப்படி செய்யும்போது, சேமிப்பதில் எந்த விதமான தடங்கலும் வராது. மாத சம்பளம் வாங்குவபவர்கள், பிசினஸ் செய்பவர்கள் என யாராக இருந்தாலும், கையில் பணம் கிடைத்தவுடன் என்ன செலவு செய்யலாம் என்று யோசிக்கக் கூடாது. எவ்வளவு பணம் கிடைத்துள்ளது, இதில் அவசியம் செய்ய வேண்டிய செலவுகள் என்னென்ன, அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை, திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.செலவு என்று வரும்போது, முதலில் கட்டாயம் செய்ய வேண்டிய செலவுகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். அடுத்து, சம்பளம் வந்தவுடன் பட்ஜெட் போடுவது முக்கியம். இப்படி பட்ஜெட் போடும்போது, கடந்த பட்ஜெட்டையும் எடுத்து வைத்து, பட்ஜெட் போட வேண்டும். அப்போது தான் கடந்த மாதம், எவ்வளவு செலவு ஆனது. இந்த மாதம் எவ்வளவு செலவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், பட்ஜெட் போட்டு செலவு செய்வதோடு, தினசரி செலவுகளையும் எழுதி வைக்க வேண்டும். அப்போது தான், பட்ஜெட்டை விட அதிகமாக ஏதாவது செலவாகியுள்ளதா என்பதை தெரிந்து, அதைக் குறைக்க முடியும். ஷாப்பிங் செல்லும்போது என்ன வாங்கப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அந்தப் பொருட்கள் வாங்க தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு செல்லலாம். கையில் காசிருக்கும் போது தான், தேவையில்லாதப் பொருட்களையும் நாம் வாங்குகிறோம். இது கஸ்டமர் சைக்காலஜி செல்லும் உண்மை!இதேபோல, கிரெடிட், டெபிட் கார்டில் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். இதன் மூலமும் தேவையில்லாதப் பொருட்கள் வாங்குவதை நம்மால் தடுக்க முடியும். தவிர, வட்டி செலவும் மிச்சமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே கிடையாது. முயற்சித்துப் பாருங்களேன்!

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

  • கருத்துக்கள உறவுகள்

ப்பூ! இவ்வளவுதானா?

  • தொடங்கியவர்
பணம் சேமிக்கும் வழிகள்
 
1.      ஒவ்வொரு மாதமும், உங்கள் வரவு மற்றும் செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
 
2.      ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்க்கு முன்பு, அது உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராய்வது மிகவும் அவசியும். நீங்கள் வாங்கும் பொருள் ஆடம்பரத்திற்க்காக இருந்தால், அதை வாங்குவதை தவிர்க்கவும்.
 
3.      ஒவ்வொரு பொருளையும் பேரம் பேசி வாங்குகள்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன்பு அதன் விலையை 2 அல்லது 3 கடைகளில் பேரம் பேசி வாங்குவது நல்லது.
 
4.      உணவு விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்கள் பணத்தை கரைப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடலுக்கு பல உபாதைகளை விளைவிக்கும்.
 
5.      வங்கிகளில் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். கடன் ஆரம்பத்தில் உங்களது தேவைகளை புர்த்தி செய்தாலும், அது போக போக உங்களுக்கு வட்டி என்ற நீண்ட கால சுமையை தரும்.
 
6.      நீங்கள் உபயோகிக்கும் பொருள் பழுதடைந்து விட்டால், புதிய பொருளை வாங்குவதற்க்கு பதிலாக, அதே பழைய பொருளை பழுது பார்த்து உபயோகிக்கலாம்.
 
7.      நீங்கள் குடி பழக்கம் உள்ளவரா அல்லது புகை பிடிப்பவராக இருந்தால், குடி மற்றும் புகை பழக்கத்தை குறைத்துக்கொள்வது அல்லது முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது நல்லது.
 
8.      இரவு நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை தேவைபட்டால் மட்டும் உபயோகிக்கலாம். உதாரணமாக யாரும் இல்லாத அறைகளில் எரியும் விளக்குகளை அணைப்பது வீட்டிற்க்கும்/நாட்டிற்க்கும் நல்லது.
 
9.      குண்டு மின்சார விளக்குகளுக்கு பதிலாக U–வடிவ CFL (Compact Fluorescent Light) மின்சார விளக்குகளை உபயோகிகளாம். இவைகள் 40%-லிருந்து  60%-வரை மின்சாரத்தை சேமிக்கும்.
 
10.  சத்துள்ள உணவுகளை மூன்று வேலைக்கு சாப்பிட்டு, காலையிலும், மாலையிலும் உடற்பயிர்ச்சி செய்துவந்தால் உங்களுக்கு எந்தவித நோயும் அண்டாது. இது மருத்துவத்துக்காக செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தும்.
 
11.  உங்கள் வீட்டு மளிகை சாமான்களை மாதத்திற்க்கு ஒரு முறை வாங்கி வைப்பது நல்லது. நீங்கள் மளிகை சாமான்களை Wholesale கடைகளில் வாங்குவது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். இருந்தபோதிலும் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்ந்து வாங்குவது நல்லது.
12.  சில மளிகை சாமான்கள் சில Offer-டன் வரும். அது போன்ற சாமான்களின் தரத்தை ஆராய்ந்து வாங்குவது நல்லது.
 
13.  நீங்கள் தொலைபேசிகளை உபயோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தொலைபேசியில் ஒவ்வொரு முறை பேசுவதற்க்கு முன்பு, நீங்கள் அடுத்தவருக்கு என்ன தெரியபடுத்த விறும்பிகிறீர்கள் அல்லது நீங்கள் என்ன அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விறும்பிகிறீர்கள் என்பதை அராய்ந்து அதன்பின் பேசுவது நல்லது.
 
14.  Post-paid-ஐ விட Pre-paid plan சிறந்தது. ஏனென்றால், PrePaid-ல் நீங்கள் உங்களது தொலைபேசி இறுப்பு தொகையை ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது உங்கள் பேசும் நேரத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கும்.
15.  நீங்கள் செல்லும் இடம் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து செல்வது உங்கள் பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் உங்களது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிர்ச்சியாக இருக்கும்.
 
16.  நீங்கள் தனியாக ஒரு இடத்திற்க்கு சில வேலை காரணமாக செல்வதாக இருந்தால் 2 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் 4 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம்.
 
17.  உங்கள் வீட்டு மின்சாரம் மற்றும் தண்ணி கட்டனங்களை கடைசி தேதிக்குள் கட்டுவது நல்லது. மேலும் அவைகளை online-ல் கட்டுவது உங்கள் வாகன எரி பொருளை சேமிக்கும்.
 
18.  உங்கள் வீட்டில் பயன்படுத்த படாத பழைய பொருட்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல உபயோகமான பொருட்களை வாங்களாம்.
 
19.  நிறைய துணிகள் மிக குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கிடைக்கும் போது, நீங்கள் ஏன் Branded துணிகளை வாங்க வேண்டும்? எதுக்கெடுத்தாலும் Branded துணிகளையே வாங்காதிர்கள்.
 
20.  உணவை ஒருபோதும் வீணாக்காதிர்கள். இது உங்களுக்கு நல்ல சேமிப்பை ஈட்டி தருவது மட்டுமில்லாமல், வீணாக்கபடாத அந்த உணவு ஏழை மக்களுக்கு மறைமுகமாக போய் சேரும் புன்னியத்தை அடைவீர்கள்.
 
 
  • தொடங்கியவர்

ohmenergy_savings_fuel.jpg

பணம் சேமிப்பது இலகுவன காரியம் அல்ல, கடினமாக இருந்தாலும் சிறியதொரு தொகையையாவது சேமித்து வைக்கும் போது, அவசர பணத்தேவை ஏற்படும் வேளையில் அது உங்களுக்கு கை கொடுக்கும்.

உங்களுடைய வருமானம் கிடைத்தவுடன், முதலில் சேமிக்கவேண்டிய தொகையை எடுத்து வேறாக வைத்துக்கொள்ளுங்கள். எஞ்சியதை மட்டுமே செலவு செய்யுங்கள். பணம் சேமிப்பதில் முதல் படி இதுவே.

கண்களுக்கு தென்படும் எல்லா பொருட்களையும் வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். கடைக்கு சென்றாலும் தேவையான பொருட்களை மட்டும் கொள்வனவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

வருமானத்துக்கு மீறிய செலவுகள் செய்ய பழகிக்கொள்ள வேண்டாம். கடன் வாங்கி நாளாந்த செலவுகளை மேற்கொள்ள வேண்டாம். கடனட்டை (Credit Card) என்றாலும் அவசியமான நேரங்களில் மட்டும் பாவிப்பது சிறந்தது. கடனட்டைக்கான மாதாந்த கட்டணங்களை வட்டி சேர்வதற்கு முன் செலுத்துங்கள்.

நாளாந்த செலவுகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியல்படுத்திக் கொள்ளுங்கள்.

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும்போதோ, வீட்டிற்கு தளபாடங்களை கொள்வனவு செய்யும் பொழுதோ, அயலில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அல்லது வீண் ஆடம்பரத்துக்காக தெரிவுகளை மேற்கொள்ளாது, உங்கள் தேவைக்கேற்ப கொள்வனவு செய்து கொள்ளுங்கள்.

அநேகர் சிகரெட்டிற்கும், மதுபான வகைகளுக்கும் அதிக பணத்தை விரையமாக்குகிறார்கள். இது பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

விசேட கொண்டாட்டங்களுக்கென நாங்கள் நினைப்பதை விடவும் அதிகமான பணம் செலவிடப்படுகிறது. அவ்வாறான செலவுகளை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நல்லது.

பஸ் வண்டியிலோ அல்லது புகையிரதத்திலோ பயணம் செய்வது வெட்கமான காரியம் என்று நினைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் இடவசதியை பொருட்டு, சிறிய முறையில் மரக்கறி அல்லது பழவகைகளை நடுதல் நல்லது. இது மனதுக்கு இதம் தரக்கூடிய செய்கையாக அமைவதுடன், புத்தம் புதிய தூய உணவு வகைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

மாதாந்த மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்ற கட்டணங்களை முடியுமான அளவு குறைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சேமிக்கும் பணத்தை, உங்களுக்காக உழைக்க செய்ய வேண்டும். அதற்கு நம்பகத் தன்மையான முதலீடுகளில் முதலீடு செய்வதும் நல்லது.

சிறந்த சேமிப்பினை கொண்ட ஒருவரே சிறந்த நிதி ரீதியான ஸ்திர தன்மை கொண்ட ஒருவராக கருதப்படுவார்.

இன்றே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!

http://insuranceservice.in/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.