Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கப் போகிறது இலங்கை! - அபாயச் சங்கு ஊதுகிறது ஹெல உறுமய.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐசிஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கப் போகிறது இலங்கை! - அபாயச் சங்கு ஊதுகிறது ஹெல உறுமய. 

[Friday 2014-08-01 10:00]
Jathika-Hela-Urumaya-200-news.jpg

படையினரின் அலட்சியத்தினால், சர்வதேச தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ் (ஐசிஸ்) அமைப்பு வெகுவிரைவில் இலங்கையை முழுமையாக ஆக்கிரமிக்கக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த வர்ணகுலசிங்க இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், தேர்தல்கள் ஆணையாளர் நேற்று முன்தினம் சகல கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஊவா தேர்தல் குறித்து பேச்சு நடத்தினார். இதன்போது, வாக்குச் சாவடிக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்கள் அணிந்து வரும் ஆடை குறித்து நாம் கேள்வி எழுப்பினோம்.

  

இதில், நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளுடன் வாக்களிக்க வரும் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் உறுதியாகத் தெரிவித்து விட்டார். நாட்டின் நீதி அனைவருக்கும் பொதுவானது என்ற கோட்பாட்டிற்கமையவே நாம் இந்த ஆடை விவகாரம் குறித்து பேச்சு நடத்தினோம்.

அதேவேளை, இஸ்ரேல் தாக்குதல் குறித்தும் நாம் முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும். பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் இதுவரை காஸாவில் 1,224 பேர் பலியாகியுள்ளனர். முஸ்லிம்களில் பெருநாளான ரமழான் தினத்திலும் கூட இந்தப் போரை நிறுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. காஸா பெண்கள், குழந்தைகள் மற்றும் அங்குள்ள மின் உற்பத்தி நிலையங்களை பிரதானமாகக் குறி வைத்தே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தக் கொடூர யுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையானது இதுவரையிலும் ஒரு கண்டனத்தையேனும் வெளியிட வில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இவை போர்க்குற்றமாகவும், மனித உரிமை மீறலாகவும் தெரியவில்லையா? உக்ரைன் வான் பரப்பில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட போது கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட ஐ.நாவும், நவிப்பிள்ளையும் ஏன், காஸா மீதான தாக்குதலைக் கண்டிக்கவில்லை? அதுமட்டுமல்லாது, நைஜீரியாவில் பொஹோராம் தீவிரவாதிகளால் 200 முஸ்லிம் மாணவிகள் கடத்தப்பட்ட போது ஐ.நா. ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? இதுவரைக்கும் அம்மாணவிகளின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலையில் ஐ.நா. இது குறித்து ஒரு நடவடிக்கையையேனும் எடுக்கவில்லை. இதிலிருந்தே இவர்களின் பாகுபாடு புலனாகின்றது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் காஸா தாக்குதலைக் கண்டித்து ரம்ழான் தினத்தன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஜம்மி யத்துல் உலமா, சூறா சபை மற்றும் ஏனை முஸ்லிம் அமைப்புகள், அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள் என அனைவரும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், அந்த 200 மாணவிகள் கடத்தப்பட்ட போதோ அல்லது 2012, ஒக்டோபர் 9 ஆம் திகதி பாகிஸ்தானில் வைத்து கல்விக்காக குரல் கொடுத்த மலாலா சுடப்பட்ட போதோ ஏன் இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தீவிரவாத செயற்பாடுகளுக்கு இவர்களும் ஆதரவளிக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. மேலும், உலகையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் இஸ்ரேலில் பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்றை அழித்துள்ளனர். "மிகவிரைவில் பிரிட்டனுக்குள்ளும் நுழைவோம்'' என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் பிரிட்டிஷ் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அவர்கள் அண்மையில் வெளியிட்ட வரைபடம் ஒன்றில் இலங்கைக்குள்ளும் ஊடுருவவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாபெரும் அபாயத்தைக் கண்டுக்கொள்ளாது எமது நாட்டின் பாதுகாப்புப் பிரிவானது அலட்சியமாக உள்ளது. இந்த அலட்சியம் தொட ருமானால், மிக விரைவிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் இலங்கைக்குள் நுழைந்து விடுவார்கள். ஷரியா சட்டமும் அமுலுக்கு வந்துவிடும். இஸ்ரேலில் கத்தோலிக்க தேவாலயம் தாக்கப்பட்டது போல இங்கும் பெளத்த, புனிதத் தலங்களான ருவன் வெலிசாய மற்றும் தலதா மாளிகை அழிக்கப்படும். ஆகவே, எமது நாட்டின் பாது காப்புப் பிரிவினர் இதுவிடயத்தில் அலட்சியமாக இருக்காது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்'' என்றார் அவர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=114173&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருடன் ஒரு தீர்வுக்கு வாருங்கள்

இல்லையென்றால்..............? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.