Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது கோத்தா மகாத்தயாவின் (கோத்தாபய ஐயாவின்) அரசாங்கம்" தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்த கும்பல்

Featured Replies

colombo4_CI.jpg

வட - கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் போது அனுமதியில்லாமல் நுழைந்த அரச அனுசரணை பெற்ற பிக்குகள் உட்பட கும்பல் ஒன்று பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே  நடை பெற்றுக்கொண்டு இருந்த கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

எனினும் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுக்கு அத்துமீறி நுழைந்த கும்பலை வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் எந்த முயற்ற்சியும் எடுக்காமல் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

எவ்வாரெனினும் இந்த கலந்துரையாடலை காணமல் போனோரின் பெற்றோர்களின் சங்கம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புகளும் இனைந்து ஏற்ற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வுக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஐரோபிய ஒன்றிய மற்றும் இதர தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு இருந்தனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்குள் அத்துமீறி நுழைந்த பௌத்த பிக்குகள் அங்கிருந்தவர்களை கெட்ட  வார்த்தைகளால் திட்டி கலந்துரையாடலை உடனடியாக நிறுத்துமாறும், இது கோத்தா மகாத்தயாவின் (கோத்தாபய ஐயாவின்) அரசாங்கம் எனக் கூறியதுடன் அங்கிருந்த அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பொலிசாரை வற்ற்புறுத்தியுள்ளனர்.

 

  

 

 

நன்றி vikalpa – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
 
 
 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போனோரின் உறவினர்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்பாகவே அச்சுறுத்திய பௌத்த பிக்குகள்!

வடக்கில் காணாமற்போனோரின் குடும்பத்தினர் நேற்று கொழும்பில் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்று, வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்பாகவே, அடிப்படைவாத பௌத்த பிக்குகளால் குழப்பப்பட்டுள்ளது.

கொழும்பில் மருதானையில் உள்ள சமூக மற்றும், சமய நிலையத்தில், காணாமற்பானவர்களின் பெற்றோரின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

monks-distrub-ngo-meet-1.jpg
காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு திடீரென நுழைந்த சுமார் 20 பேர் கொண்ட அடிப்படைவாத பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தனர்.

அந்த நிகழ்வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்கத் தூதரக பதில் பிரதித் தூதுவர் மைக் ஹொனிக்ஸ்ரெய்ன், மற்றும் பிரித்தானிய, சுவிற்சர்லாந்து. ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் முன்பாகவே, இந்தக் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

monks-distrub-ngo-meet-2.jpg
அமெரிக்காவின் அனுசரணையுடன் செயற்படுவதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக, முழக்கங்களை எழுப்பியபடி, கூட்டத்துக்குள் நுழைந்த இளம் பௌத்த பிக்குகள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த இராஜதந்திரிகள், மற்றும் காணாமற்போனோரின் உறவினர்களைப் படம் பிடித்தனர்.

அமெரிக்க டொலர்களைப் பெற்று ஆடம்பரமாக வாழ்கிறீர்கள் என்றும் அந்தக் குழுவினர் கூச்சலிட்டனர்.

அமெரிக்கத் துதரக மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்த போதும், தொடர்ந்தும் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

monks-distrub-ngo-meet-3.jpg
சிறிலங்கா காவல்துறையினர் அங்கு வந்த போது, வாசலை மறித்தபடி, நின்ற குழுவினர், அந்த கட்டடத்தினுள் இருந்து இராஜதந்திரிகள், காணாமற்போனவர்களின் உறவினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளை வெளியேற விடாமல் அடைத்து வைத்திருந்தனர்.

நிகழ்வு ஆரம்பமாகிய ஒரு மணி நேரத்திலேயே அதனை பௌத்த பிக்குகள் குழப்பினர்.

அந்தக் குழுவினரைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனினும், கூட்டத்தில் பங்கேற்றவர்களை ஒருவழியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இருந்தபோதிலும் அந்தக் குழுவினர் கூட்டம் நடந்த கட்ட்டத்தின் வாயிலை மறித்தபடி தொடர்ந்தும் அமர்ந்திருந்தனர்.

அதேவேளை, இந்தக் கூட்டத்தைக் குழப்பிய பிக்குகள், மருதானை காவல் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில், மனித உரிமை ஆர்வலர்களான நிமல்கா பெர்னான்டோ மற்றும் பிறிட்டோ பெர்னான்டோ ஆகியோர், வடக்கிலுள்ள மாவீரர் குடும்பங்களைத் திரட்டி வந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

தேசியத்துக்கு எதிரான துரோகிகளின் எந்த கூட்டத்தையும் குழப்பும் உரிமை தமக்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலதில் பௌத்த பிக்குகளால் குழப்பப்பட்ட சிவில் சமூகத்தின் நான்காவது நிகழ்வு இதுவாகும்.

இதனிடையே, காணாமற்போனோரின் உறவினர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை தாம் முதல் முறையாக நேரில் பார்த்ததாக, அமெரிக்க பதில் பிரதித் தூதுவர் மைக் ஹொனிக்ஸ்ரெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலும் எங்கள் முன் வந்து உங்கள் கதைகளை கூறியதையிட்டு பெருமைப்படுவதாகவும் அவர் காணாமற் போனோரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/32916/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுக்கு அத்துமீறி நுழைந்த கும்பலை வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் எந்த முயற்ற்சியும் எடுக்காமல் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

 
 
என்னப்பா  இது?
எய்தவன் இருக்க
அம்பை  நோவானேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.