Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலிய உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறு ஏறாவூரில் பிரசாரம்

Featured Replies

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
இஸ்ரேலிய நாட்டினதும் யூதர்களினதும் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஏறாவூர் நகரில் பிரசாரம் செய்யப்படுகின்றது.
 
ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரத்தின் ஓரங்கமாக நகரெங்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
 
'யூதப் பயங்கரவாதிகளின் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிப்போம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
 'அன்பார்ந்த நெஞ்சங்களே! இஸ்லாமிய பெருமக்களே!
 
பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் சஹீதாக்கப்பட்ட மற்றும் காயமடைந்து போதிய வைத்திய வசதியின்றி அவதியுறும் எமது உறவுகளுக்காக தொடர்ந்தும் நாம் பிரார்த்திப்போம். எமது இஸ்லாமிய அப்பாவிச்  சகோதரர்களின் இரத்தத்தையும் மாமிசத்தையும் புசிக்கத் துடிக்கும் யூதர்கள் அல்லாஹ்வின்   சாபத்திற்குள்ளானவர்கள். 
 
இஸ்ரேலிய யூதப் படைகள்  பாலஸ்தீன மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இறை இல்லங்களுக்கும்  ஏற்படுத்திய பேரழிவுகளை மனித நேயமிக்க எந்த உள்ளமும் மன்னிக்காது.
 
இவ்வாறான யூதர்களுக்கு நிதி சேர்க்கும் வர்த்தக நிறுவனங்களின் பெரும்பாலான உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாக காஸாவில் ஆயிரக்கணக்கில்  பொதுமக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து ஈனச்செயலை புரிந்துகொண்டிருக்கும் யூதர்களுக்கு நாமும் பொருளாதார ரீதியில் மறைமுகமாக உதவுகின்றோம் என்பதை எமது சமூகம் மறந்து செயற்படுகின்றது.
 
யூதர்களின் உற்பத்திப் பொருட்களை நாம் பாவிக்காது பகிஷ்கரிப்பதன் மூலமாக அவர்களுக்குச் சென்றடையும் பொருளாதார ரீதியான உதவிகளை எம்மாலும் தடுக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என துண்டுப்பிரசுரங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 

'இஸ்ரேல் மீது சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும்'

 

'பலஸ்தீன் காஸாவில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும்' என ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமுனைக் கேட்டுள்ளது.

 
இது தொடர்பாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எல்.எம்.பளீல் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்;கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ஐ.எல்.எம்.சஹீது தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 
 
'அண்மையில் காஸாமீது இஸ்ரேல் மேற்கொண்ட கண் மூடித்தனமான தாக்குதல் மனிதாபிமானமுள்ள அனைவராலும் மிகவும் கண்டிக்கத்தக்க மிகவும் துக்ககரமான நிகழ்வாகும்.
 
இலங்கைக்கு எதிரான விடயத்தில் கைகோர்த்துச் செயற்பட்ட மேற்குலக நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பலஸ்தீன் விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 
 
மேலும் பலநாடுகள் காஸா தாக்குதல் விடயத்தில் நடுநிலமை வகிக்கத் தவறியதுடன், நியாயத்தை கூறாது மௌனமாக இருக்கின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் காஸா தாக்குதல்களுக்கு எதிராக பலமான அழுத்தங்களை இஸ்ரேல் மீது பிரயோகிக்கவில்லை. 
 
இத்தகைய செயற்பாடுகள் மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் மதிப்பளிக்காது முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதையே காட்டுகின்றது.  
 
ஐக்கிய நாடுகள் சபையானது காஸா தாக்குதல் விடயத்தினை மனிதாபிமானத்துடன் நடுநிலையாக நோக்க வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கின்றோம். 
 
தாக்குதல் நடவடிக்கையானது முஸ்லிம்களிகளின் புனித மாதமாகிய நோன்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும்  கண்டிக்கத்தக்கதும் மதச் சுதந்திரத்தை  மீறும் செயலாகவும் உள்ளது.
 
தாக்குதலின்போது  குடிமனைகள், அகதிமுகாம், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றின்மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதல் காரணமாக குழந்தைகள், பெண்கள், அப்பாவிப் பொதுமக்கள் என்ற ரீதியில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 
 
மேலும் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளடன் அங்கவீனர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த நேரத்திலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
மொத்தத்தில் காஸா தாக்குதலானது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது. 
 
இன ரீதியான தாக்குதல்கள்களை ஐக்கிய நாடுகள் சபை அனுமதிக்கக்கூடாது. பலஸ்தீன் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது ஐக்கிய நாடுகள் நாடுகள் சபையின் முக்கிய பணியாகும்.
 
எனவே உலக மக்களுக்கு உரிய   பாதுகாப்பையும் , உரிமைகளையும் பெற்றுத்தரவேண்டிய மேலாதிக்கமுள்ள சபையாகத் திகளும் ஐக்கிய நாடுகள் சபையானது காஸா தாக்குதல் விடயத்தில் பக்கசார்பற்ற முறையில் சர்வதேச விசாரணையை முன்மொழிய வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றோம்' என்று அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறு ஏறாவூரில் பிரசாரம்

 

 

'இஸ்ரேல் மீது சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும்'

 

 'அன்பார்ந்த நெஞ்சங்களே! இஸ்லாமிய பெருமக்களே!

 

தனியவே  நின்று வெல்லலாம்  என்று முடிவெடுத்தாச்சு  போல..

எப்படி கேட்கமுடியும்  மற்றவரை..

எப்பொழுதாவது உதவியாக  இருந்து  இருக்கின்றோமா வரலாற்றில்.... :(  :(  :( 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இஸ்ரேலிய நாட்டினதும் யூதர்களினதும் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஏறாவூர் நகரில் பிரசாரம் செய்யப்படுகின்றது

அடேயப்பா ...! என்னவொரு பாரதூரமான முடிவு.....எப்படி உங்களால் மட்டும் இப்படி சிந்திக்கமுடியுது ...?

ஏறாவூரில் பகிஷ்கரிப்பதனால் இஸ்ரேல் ஒரே நாளில் வங்குரோத்து ஆகிவிடுமே ....?

கடவுளே  உனக்கு  இரக்கமே இல்லையா....இனி இஸ்ரேலை யார் காப்பாற்றுவது ...?

போங்கடா நீங்களும் உங்கட வெத்து சீனும் .... :lol: 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா ...! என்னவொரு பாரதூரமான முடிவு.....எப்படி உங்களால் மட்டும் இப்படி சிந்திக்கமுடியுது ...?

ஏறாவூரில் பகிஷ்கரிப்பதனால் இஸ்ரேல் ஒரே நாளில் வங்குரோத்து ஆகிவிடுமே ....?

கடவுளே  உனக்கு  இரக்கமே இல்லையா....இனி இஸ்ரேலை யார் காப்பாற்றுவது ...?

போங்கடா நீங்களும் உங்கட வெத்து சீனும் .... :lol: 

 

 

 

ம்ம்ம்

யூதனுடைய பொருட்களை  தூக்கி  எறிவதென்றால்..

அம்மணமாகத்தான் நிற்கணும்...

நிற்பார்கள் என  எதிர்பார்க்கின்றோம்... :(

  • கருத்துக்கள உறவுகள்

 

ம்ம்ம்

யூதனுடைய பொருட்களை  தூக்கி  எறிவதென்றால்..

அம்மணமாகத்தான் நிற்கணும்...

நிற்பார்கள் என  எதிர்பார்க்கின்றோம்...  :(

ஏற்கனவே அது தானே நிலைமை

நல்லகாலம் அண்ணை

இஸ்ரேலில் போய்  விழட்டும் என்று இங்கிருந்து கல்லை எறியவில்லை  

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அது தானே நிலைமை

நல்லகாலம் அண்ணை

இஸ்ரேலில் போய்  விழட்டும் என்று இங்கிருந்து கல்லை எறியவில்லை  

 

 

ஒற்றுமையற்றவர்களின் போராட்டம் என்னவாகும்  என்பதற்கு  உலகவரலாற்றுப்பாடம்  இவர்கள் :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.