Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நாட்டுக்கு அவமானம்! - ஐதேக கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நாட்டுக்கு அவமானம்! - ஐதேக கூறுகிறது. 

[sunday 2014-08-10 09:00]
unp-150.jpg

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை தொடர்பாக இந்தியப் பிரதமரிடம் மன்னிப்பு கோரியது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானம் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதுக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவ்வாறான செயலானது, வெளிவிவகார அமைச்சின் செயற்பாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகிறது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் அரசியல் பேதமின்றி செயற்பட வேண்டும். இதுதவிர, பிற நாடுகள் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

  

இதன்காரணமாக, குறித்த சம்பவத்தின் பிரதிபலன்களை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நாட்டின் ஏனைய அரசாங்க நிறுவனங்களைப் போன்றே பாதுகாப்பு அமைச்சும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவே உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தன்னைத் தானே விசாரணை செய்து கொள்கின்றாரா? சகோதரர் கோதபாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா?

தண்ணீருக்காக போராட்டம் நடத்திய போது வெலிவேரியாவில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணையின் முடிவு இதுவரை வெளியாகவில்லை. இந்த கொலைகளுக்கு காரணம் என்று கூறப்படும் பிரிகேடியர் ஒருவர் இராஜதந்திர சேவையில் இணைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச துரதிஸ்டவசமாக தமது அதிகாரத்தை இழந்தவராக உள்ளார்.இது அவரின் சகோதரரான உத்தியோகபூர்வமற்ற பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் கோத்தபாயவினால் மாத்திரம் அல்ல. அனுபவமற்ற இளைஞர்களின் அரசியல் காரணங்களும் காரணமாக அமைந்துள்ளன.

அண்மையில் தமது கால்ட்டன் விளையாட்டு கழகத்தை பிரபலப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரபல பாடகர் ஒருவருடன் மாணவிகள் பயிலும் பாடசாலைகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது நாமல் ராஜபக்சவும் அவரின் குழுவினரும் மகளிர் பாடசாலைகளில் நடந்துகொண்ட விதம் குறித்த பாடசாலைகள் கட்டிக்காத்து வரும் உயரிய ஒழுக்கங்களை கேள்விக்குரியதாக்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தாம் நாட்டின் அன்பான தந்தை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவரின் உற்றார் உறவினர்கள் நாட்டின் பெறுமதியை உயிருடன் அழித்துக் கொண்டிருக்கும் போது தாம் நாட்டின் அன்பான தந்தை என்று மஹிந்த ராஜபக்ச கூறமுடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=114630&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 

rajapaksa-jayalalithaa-poster-450x337.jp

 

//இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நாட்டுக்கு அவமானம்! - ஐதேக கூறுகிறது. //

 

ஒரு நாட்டின் ஜனாதிபதி, ஒரு மாநில முதல்வரிடம்...

மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது, மாபெரும் இழுக்கு.

இதனை எதிர்த்து புத்த பிக்குகள், எல்லாம் வீதியில் இறங்கி.....

இருக்கிற கடை,  ஓடுற கார்... கண்ணாடிகளை எல்லாம் அடித்து நொருக்கி, கொழுத்தி விட வேண்டும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

rajapaksa-jayalalithaa-poster-450x337.jp

 

//இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நாட்டுக்கு அவமானம்! - ஐதேக கூறுகிறது. //

 

ஒரு நாட்டின் ஜனாதிபதி, ஒரு மாநில முதல்வரிடம்...

மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது, மாபெரும் இழுக்கு.

இதனை எதிர்த்து புத்த பிக்குகள், எல்லாம் வீதியில் இறங்கி.....

இருக்கிற கடை,  ஓடுற கார்... கண்ணாடிகளை எல்லாம் அடித்து நொருக்கி, கொழுத்தி விட வேண்டும்.

 

அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியா மீது போர் தொடுக்கவேண்டும்   :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.