Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நாட்டிய போரொளி' நடிகை பத்மினி மரணம்

Featured Replies

'நாட்டிய போரொளி' நடிகை பத்மினி மரணம்`

செப்டம்பர் 25, 2006

சென்னை:

பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.

கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர்.

இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர்.

தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். ஏழை படும் பாடு படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக நடித்தார். சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

எம்ஜிஆர் உள்பட அந்த கால சூப்பர் ஸ்டார்களுடன் எண்ணற்ற படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, தாய் மொழி மலையாளத்திலும் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார் பத்மினி.

தூக்குத் தூக்கி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள் பத்மினிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தன.

பின்னர் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்ததும் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டியப் பள்ளி நடத்தி வந்தார்.

1981ல் கணவரின் மறைவுக்குப் பின் மீண்டும் சென்னைக்கே திரும்பி வசித்து வந்தார். சில படங்களிலும் நடித்தார்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன் பத்மினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இரு நாட்களுக்கு முன் முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சக்கர நாற்காலியில் வந்து கலந்து கொண்டார் பத்மினி. விழா நடந்து கொண்டிருந்தபோதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கல்யாணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறிய அவர் வீடு திரும்பினார். ஆனால், நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

தூக்குத் தூக்கி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள் பத்மினிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தன.

பத்மினி தனது 4 வயதில் இருந்தே பரதம் கற்று வந்தவர். 10 வயதில் அரங்கேற்றம் நடத்தி, நாட்டியப் பேரொளி என்ற பெயர் பெற்றார்.

பத்மினிக்கு பிரேம் ஆனந்த் என்ற மகன் உள்ளார். இவரது சகோதரிகள் லலிதா, ராகிணி ஆகியோர் திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதில் லலிதாவின் மகள் தான் நடிகை ஷோபனா என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மினியின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, திரையுலகத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

'நாட்டிய போரொளி' நடிகை பத்மினி மரணம்

imagesib7.jpg

பத்மினி 2006 செப்டம்பர் 24 இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்

  • தொடங்கியவர்

கலைத்துறையில் பெயர் பெற்ற நடிகை பத்மினியின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கலைத்துறை உறவுகளுக்கும் என் குடும்ப சார்பான கண்ணீர் அஞ்சலிகளும் ஆழ்ந்த அனுதாபங்களும்.

யமுனாவின் ஆழ்ந்த அனுதாபங்கள்

கலைத்துறையில் எனக்கும் மிகவும் பிடித்தவர் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கலைத்துறை உறவுகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகளும் ஆழ்ந்த அனுதாபங்களும். :cry: :cry:

  • தொடங்கியவர்

சில வருடங்களுக்கு முன் DVD யில் பத்மினி நடித்த சித்தி திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. தனது அற்புதமான நடிப்பால் அசத்தியிருந்தார். சித்தியென்றாலே கொடுமைக்காரி என்பதை மாற்றிக் காட்டியிருந்தார். அது போல் நடிகர்திலகம் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த வியட்நாம் வீட்டிலும் சிவாஜிக்கு இணையாக வாழ்ந்து காட்டியிருந்தார். சிவாஜிகணேசனுடன் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும் பத்மினியையே சாரும்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

path2609063dp7.jpg

path26090637nd5.jpg

இதில் லலிதாவின் மகள் தான் நடிகை ஷோபனா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியா தவறான தகவலை எழுதுவார்கள்???

இப்படியா தவறான தகவலை எழுதுவார்கள்???

அது உண்மை என நினைக்கிறேன் துயா ஏனேனின் மரனசடங்கு நடப்பது சோபனா வீட்டில் என தினமணி.கொம் இல் வாசித்ததாக ஞாபகம்

கடவுளே அது நிஜம்...ஆனால் சோபனா , பத்மினியின் சகோதரன் மகள்.... அவரே அதை சொல்லி கேட்டிருக்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அநுதாபங்கள் :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியா தவறான தகவலை எழுதுவார்கள்???

இதிலையும் மாற்று கருத்தா

:?: :?: :?:

  • தொடங்கியவர்

தூயா எழுதியது:

இப்படியா தவறான தகவலை எழுதுவார்கள்???

தூயா

நீங்கள் குறிப்பிடுவது சரியானது தான். ஷோபனா பத்மினியின் சகோதரர் மகள் தான். பத்திரிகை இவ்விடயத்தை கவனிக்காமலேயே அச்சேற்றியுள்ளார்கள்.

புத்தனின் புலம்பல்:

இதிலையும் மாற்று கருத்தா

:?: :?: :?:

புத்தன்

கண்களைத் திறந்து கருத்துக்களைப் பாரும். தற்ஸ்தமிழ் பத்திரிகையில் வந்ததை நான் இங்கு இணைத்திருக்கின்றேன். உம்போன்ற மருண்டவன் கண்களுக்கெல்லாம் இருண்டதெல்லாம் பேயாகத் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயா எழுதியது:

இப்படியா தவறான தகவலை எழுதுவார்கள்???

தூயா

நீங்கள் குறிப்பிடுவது சரியானது தான். ஷோபனா பத்மினியின் சகோதரர் மகள் தான். பத்திரிகை இவ்விடயத்தை கவனிக்காமலேயே அச்சேற்றியுள்ளார்கள்.

புத்தனின் புலம்பல்:

இதிலையும் மாற்று கருத்தா

:?: :?: :?:

புத்தன்

கண்களைத் திறந்து கருத்துக்களைப் பாரும். தற்ஸ்தமிழ் பத்திரிகையில் வந்ததை நான் இங்கு இணைத்திருக்கின்றேன். உம்போன்ற மருண்டவன் கண்களுக்கெல்லாம் இருண்டதெல்லாம் பேயாகத் தான் தெரியும்.

மருண்டவன் கண்களுக்கு இருண்டது எல்லாம் பேய் அதை போல் மாற்று கருத்து எழுதுபவரின் கருத்தை வாசிப்பவர் கண்களுக்கு எல்லாமே மாற்றுகருத்து போல தான் தெறியும் நான் உங்களை சொல்லவில்லை

:lol::lol::lol:

  • தொடங்கியவர்

புத்தன்:

குருடன் ஒருவன் யானையின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆகா இதுவா யானையின் துதிக்கை இதைப் பார்த்தா மனிதர்கள் பயப்படுகின்றார்கள் என்று விழுந்து விழுந்து சிரித்தானாம். :P :lol: :P :lol:

நானும் உங்களைச் சொல்லவில்லை. :lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்:

குருடன் ஒருவன் யானையின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆகா இதுவா யானையின் துதிக்கை இதைப் பார்த்தா மனிதர்கள் பயப்படுகின்றார்கள் என்று விழுந்து விழுந்து சிரித்தானாம். :P  :)  :P  :lol:  

நானும் உங்களைச் சொல்லவில்லை. :D  :lol:  :lol:  :lol:

இதை வாசித்துவிட்டு நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்

:lol::lol::lol::lol::lol:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

இதை வாசித்துவிட்டு நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்

:lol::lol::lol::lol::lol:

தம்பீ வம்பு அண்ட் புட்டர் செத்தவீடு எண்டா அழவேணும் ராசா மார் சிரிக்கக்கூடாது

:evil: :evil: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு சார் என்ன இப்ப்டி கவலையாகிட்டிங்க

த்ரிசா மேடம் கோவிச்சுக்கப்போறிங்க

இதை வாசித்துவிட்டு நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்

:lol::lol::lol::lol::lol:

தம்பீ சிரிக்கறதை நிப்பாட்டிப்போடாதையும் பிறகு யாராவது நினைப்பினம் விசர் தெளிஞ்சிட்டுது எண்டு

:wink: :wink: :wink: :oops: :oops: :oops: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த smilies இல்லாட்டி சின்னப்பு வின் கதி அதோதான்

உந்த smilies இல்லாட்டி சின்னப்பு வின் கதி அதோதான்

உமக்கும் ஒண்டு இருக்கு பாருமன்

arnold14bp0.gif

தம்பீ வம்பு அண்ட் புட்டர் செத்தவீடு எண்டா அழவேணும் ராசா மார் சிரிக்கக்கூடாது

:evil: :evil: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil:

என்ன ஒரு உண்மையை சொல்லி போட்டார் எல்லாரும் கடைபிடியுங்கோ

:wink: :wink: :wink:

உந்த smilies இல்லாட்டி சின்னப்பு வின் கதி அதோதான்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

உமக்கும் ஒண்டு இருக்கு பாருமன்

arnold14bp0.gif

கறுப்பி அக்காவை சுட நாங்கள் விட்டிடுவோமா

:evil: :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.