Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பரசரின் மடுப் பயணத்தை குழப்பும் சதித்திட்டம் தான் மர்மவிமானம்!

Featured Replies

பாப்பரசரின் மடுப் பயணத்தை குழப்பும் சதித்திட்டம் தான் மர்மவிமானம்!

pop.jpgத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, மடுத் திருத்தலத்துக்கும் பயணம் செய்வார் என்பது உறுதியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற மடுத்திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில், திருப்பலி ஒப்புக்கொடுத்து உரையாற்றிய, கர்தினால் மல்கம் ரஞ்சித், பாப்பரசர் பிரான்சிஸ் மடுத் திருத்தலத்துக்கு வருவார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

வரும் வரும் ஜனவரி 13ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், பாப்பரசர், மறுநாள் காலையில், காலிமுகத்திடலில், ஆராதனை நடத்துவார்.

அதையடுத்து மடுத் திருத்தலத்துக்கு செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது.

பாப்பரசரின் பயணத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஏற்கனவே, வத்திக்கானில் இருந்து வருகை தந்த அதிகாரிகளும், சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளும் தனித்தனியாக மடுவுக்குச் சென்று ஆராய்ந்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று மடுத் திருத்தலத்தில், ஆவணித் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, ஆளில்லாத - சிறிய ரக விமானம் ஒன்று கடும் இரைச்சலுடன் வானில் பறந்ததை அங்கிருந்த மக்கள் அவதானித்தனர்.

சுமார் 5 இலட்சம் வரையான மக்கள் திருப்பலியில் பங்கேற்றிருந்த போது, வானில் வட்டமடித்த இந்த விமானம், சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்றே கருதப்பட்டது.

ஆனால், மடுத் தேவாலயத்தின் மீது பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் தமக்குச் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் பத்மன் டி கோஸ்தா தெரிவித்துள்ளார்.

இதனால், பாப்பரசரின் மடுப் பயணத்தை, குழப்பும் சதித்திட்டம் ஏதும் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

மர்ம விமானம் மடுவுக்கு மேலாக பறந்ததாக செய்திகள் பரவ விடப்படுவதன் மூலம், பாப்பரசர் அங்கு செல்வது பாதுகாப்பற்றது என்று வத்திக்கானுக்கு மறைமுகமான வலியுறுத்துவதே இந்த சதியின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிறிலங்கா விமானப்படைக்குத் தெரியாமல், சிறிலங்கா வான்பரப்பில் எந்தவொரு விமானமும் பறக்க முடியாது என்ற நிலையில், சிறிலங்கா விமானப்படையே குறித்த விமானத்தைப் பறக்கவிட்டு பாப்பரசரின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மடுவுக்குப் பயணம் செய்யும் பாப்பரசரை, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என்றும், போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டும் என்றும், மன்னார் ஆயர் தரப்பில் வத்திக்கானிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் பாப்பரசரின் காதுகளை எட்டவிடாமல் தடுப்பதற்காக, அவரது மடுப் பயணத்திட்டத்தை குழப்ப சிறிலங்கா அரசாங்கமே திட்டமிட்டுச் செயற்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

witness.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.