Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன்: உதவிபுரிந்த சகலருக்கும் தலை வணங்குகின்றேன்: மஹேல

Featured Replies

மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன்: உதவிபுரிந்த சகலருக்கும் தலை வணங்குகின்றேன்: மஹேல

 


*உதவியஅனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன்..

*கடினமான நேரத்தில் சரியான தீர்மானம்

*நல்ல மனிதர்களில் நண்பன் குமார் சங்கக்காரவும் ஒருவர்

*தொப்பிக்கு வீட்டில் ஓர் இடம்!

*உலக கிண்ணத்துக்கு தயாராக வேண்டும்

*கடந்த வந்த பாதையும் சாதனைகளும்

*அரசியலுக்குள் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன்
Mahela-Jayawardene-Test_0_zpsc9cdb814.jp
மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன. எனக்கு பல வழிகளிலும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், மனைவி, எனது கிரிக்கெட் ரசிகர்கள், இலங்கை கிரிக்கெட் சபை, எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம், பாடசாலை, பாடசாலை நண்பர்கள், பயிற்சியாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அணி வீரர்கள் அனைருக்கும் எனது சிரம் தாழ்த்திய நன்றிகளை தெரிவித்துகொள்வதாக இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான மஹேல ஜயவர்தன கண்ணீர் நிரம்பிய கண்களுடன் தெரிவித்தார்.
191703_0_zps4f24d6f9.jpg
இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று நட்சத்திரமும் ஜாம்பவானுமாகிய மஹேல ஜயவர்தனவின் 17 வருட டெஸ்ட் அரங்கு இன்றுடன் நிறைவுக்கு வந்தது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி மஹேல ஜயவர்தனவுக்கு சமர்ப்பணமாக்கியது.
191705_0_zps9cf3f9f8.jpg
இலங்கை அணி போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் பட்டாசு கொளுத்தி ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, மஹேல ஜயவர்தனவை அணி வீரர்கள் தோலில் சுமந்து வர கண்ணீர் நிரம்பிய கண்களோடு அவர் கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து தனது கைகளை அசைத்து பிரியாவிடை பெற்றார்.

மஹேலவின் பிரியாவிடையில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார். மேலும் இரு அணிகளின் தலைவர்களுமான மிஷ்பா உல்ஹக் மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரும் தமது வாழத்துக்களை தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், எஸ் எஸ் சி கழகம், இலங்கை கிரிக்கெட் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் சார்பாகவும் மஹேல ஜயவர்தனவிற்கு ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கப்பட்டன.

இதனையடுத்து உணர்வுபூர்வமாக உரையாற்றி மஹேல ஜயவர்தன,
10556295_715398111830171_807485672342471

சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன்..

நான் அதிர்ஷ்டசாலி. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இதுவரை காலமும் விளையாட கிடைத்தமையிட்டு சந்தோசமடைகின்றேன். எனது டெஸ்ட் வரலாற்றில் பலகோணங்களில் உதவிசெய்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுளேன். முதலாவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு எனக்கு முதன் முதலாக பயிற்சிகளை வழங்கிய ஜயந்த மெண்டிஸ் மற்றும் பாடசாலை காலத்தில் பயிற்சிகளை வழங்கிய பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். மேலும் எனது பாடசாலைக்கும், பாடசாலை நண்பர்களுக்கும் எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கிளப்புக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பாடசாலை கல்வியை நிறைவு செய்தன் பின்னர் எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கிளப் பல வழிகளில் இதுவரை எனக்கு உதவி செய்துள்ளது. நான் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட வீரர்கள் பலருடன் விளையாட வாய்ப்பு கிட்டியது. அர்ஜுண ரணதுங்க, அரவிந்த டி சில்வா, ரொசான் மஹானாம, ஹஷன் திலகரட்ன, சனத் ஜெயசூரிய, ஆகியோருக்கும் களத்தில் இருக்கும் போது ஒத்துழைப்புகளை வழங்கிய முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் உள்ளிட்டோருக்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆரம்பத்தில் இருந்து எனக்கு பல வழிகளில் உந்துசக்தியாக இருந்து உதவி வந்த எனது பெற்றோருக்கும் எனது பல துன்பங்களில் பங்கேற்று உறுதுணையாக இருந்த மனைவிக்கும் எனது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். எனது கிரிக்கெட் வரலாற்றில் சரி பிழைகளை சுட்டிக்காட்டி ஆதரவு வழங்கிய ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.


சரியான தீர்மானம்

நான் மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன் என்று நினைக்கின்றேன. நனாக சுயமாகவே இந்த தீர்மானத்தை எடுத்தேன். இதன் பின்னணியில் யாரும் இலங்கை. எனது உடலநலம் மற்றும் குடும்பம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்தேன். இதன் மூலம் ஏனைய இளைய வீரர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்புக்கள் கிடைக்க கூடியதாக இருக்கும்.

149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நான் 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னர் தான் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இல்லை. வீரன் என்ற வகையில் நான் அணியின் வெற்றியினை கருத்தில் கொண்டு மாத்திரமே விளையாடுவேன். எனவே போட்டிகளில் விளையாடிய எண்ணிக்கையோ அல்லது ஓட்ட எண்ணிக்கையோ ஒன்றும் பெரிதான விடயம் இல்லை.

17 வருடங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை சாதாரண ஒரு விடயம் இல்லை. நான் கடந்த வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கின்றது. இந்த 17 வருட காலத்தில் எனது வாழக்கையில் பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.


நல்ல மனிதர்களில் நண்பன் குமார் சங்கக்காரவும் ஒருவர்

நண்பன் குமார் சங்கக்காரவுடன் கடந்த ஆறு வருட காலம் ஒன்றாக விளையாடிமையிட்டு சந்தோசமடைகின்றேன். அவர் மிகவும் திறமயான வீரர். அணிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுபவர். நான் கண்ட நல்ல மனிதர்களில் நண்பன் சங்கக்காரவும் ஒருவர். நான் இறுதியாக களத்தில் இருக்கும் போது குமார் சங்கக்கார 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்லும் போது மிகவும் வேதனையாக இருந்தது. காரணம் டெஸ்ட் அரங்கில் இருவரும் இறுதியாக இணைப்பாட்டமாக விளையாடிது அதுவே இறுதித்தருணம். சங்கக்கார டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை அவர் எடுப்பார்.
Mahela-cap_zpsa7420d2f.jpg

தொப்பிக்கு வீட்டில் ஓர் இடம்!

நான் அணிந்து இருக்கும் இந்த தொப்பிக்கு மிகவும் மரியாதை செலுத்துகின்றேன். இந்த தொப்பிளை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பாவிக்கின்றேன். இந்த தொப்பி யாருக்குமே கிடைக்காத ஒன்று. நான் ஒரு அதிர்ஷ்டசாலியாகவே கருதுகின்றேன். இதேவேளை குமார் சங்கக்காரவின் தொப்பியை கையில் எடுக்க முடியாதளவுக்கு சேதமாகியுள்ளது. ஆனால் அதனையே அவர் அணிந்து விளையாடுகின்றார்;. அந்தளவுக்கு நாம் போட்டிக்கும் இந்த தொப்பிக்கு மரியாதை செலுத்துகின்றோம். மேலும் இந்த தொப்பியை ஞாபகமாக வைப்பதற்கு வீட்டிர் ஓர் இடத்தையும் ஒதுக்கியுள்ளேன்.

உலக கிண்ணத்துக்கு தயாராக வேண்டும்

நான் விளையாடிய காலத்தில் அணிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்துள்ளனே;. மேலும் அடுத்த வருடம் நடைபெற உள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் ஆறுமாதங்கள் உள்ள நிலையில் அதற்கு தயாராக வேண்டியுள்ளது. உலகக் கிண்ணத் தொடக்கு அணிக்கு என்னால் வழங்க கூடிய ஆதவை வழங்குவேன். அந்தத் தொடருக்கு பிறகு ஒரு நாள் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவிப்பேன்.  மேலும் எதிர்காலத்தில் இலங்கை அணியின் நலன் கருதி என்னால் முடியுமான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவேன்.


அரசியலுக்குள் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன்

நான் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என தீர்மானம் எடுத்தால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மேலும் பயிற்சியாளராகும் எண்ணமும் இல்லை.


கடந்த வந்த பாதையும் சாதனைகளும்

1997 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்த  மஹேல ஜயவர்த்தன, இந்தியாவுக்கு எதிராக கொழும்பு  எஸ். எஸ்.சி.யில்  நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் 66 ஓட்டங்களை எடுத்தார். இந்நிலையில் தனது இறுதி டெஸ்ட் போட்டியையும் எஸ். எஸ்.சி.யில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

17 வருட ஸெ;ட் அரங்கில் 149 போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜயவர்தன துடுப்பாட்டத்தில் 49.84 சராசரிகளை கொண்டுள்ளதோடு 11ஆயிரத்து 814 ஓட்டங்களை கடந்துள்ளார். இதில் 34 சதங்களும் 50 அரைச்சதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சிலும் பிரகாசித்துள்ள மஹேல ஜயவர்தன ஆறு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதோடு 205 பிடியெடுப்புகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் டெஸ்ட் தொடரில் அதிக ஒட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் ஏழாம் இடத்தை பிடித்துள்ள மஹேல
டெஸ்ட்டில் அதிக பிடிகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள உள்ளார். 

இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்ட இணைப்பாட்டத்தை பெற்றவர்கள் வரிசையில் குமார் சங்க்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இரண்டாம் இடத்திலுள்ளமையும் குறிப்பிடதக்கதாகும்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/08/18/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4

 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

எப்பையோ.. போயிருக்க வேண்டியது.

 

சும்மா அலம்பாமல்... போய் சேருங்க சார். போய் தொடங்கின.. பிஸினஸ்ஸை எனியாவது ஒழுங்காக் கவனிங்க. :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.