Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கி ஓடியவர் தான் சரத் பொன்சேகா! - போட்டு உடைக்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கி ஓடியவர் தான் சரத் பொன்சேகா! - போட்டு உடைக்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க. 

[Tuesday 2014-08-19 09:00]
s.b.dissanayake-150.jpg

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பின்வாங்கியிருந்தார் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர், விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டு கால போரினால் பாரியளவு அழிவுகள் ஏற்பட்டன. புலிகளிடமிருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதி முயற்சித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தார்.ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவும் முயற்சி எடுத்தார்.

  

ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க, புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 42 கடிதங்களை எழுதியிருந்தார். அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தாக்கத் தொடங்கியிருந்தனர். அப்போது யாழ் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றினார். புலிகளின் தாக்குதல்கள் காரணமாக சரத் பொன்சேகா பின்வாங்கத் தீர்மானித்தார். அதன்போது விமானம் மூலம் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை அழைத்துச் சென்று, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த தலைமையில் யாழ்ப்பாணத்தை தக்க வைத்துக்கொண்டோம்.

எனினும் போரை வெற்றிகொள்ள முடியவில்லை. ஆனையிறவு பகுதியை இழக்க நேரிட்டது.நாடு மிகவும் நெருக்கடியான நிலைமையை எட்டியிருந்தது. இளைஞர்கள் இராணுவத்தை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர். இராணுவத்தில் இணைந்து கொள்ள விரும்பவில்லை. அவ்வாறான ஓர் பின்னணியில்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்டார். இராணுவத்திற்கு தைரியமான ஓர் தலைமைத்துவம் கிடைத்தது. தாய் தந்தையர் தங்களது பிள்ளைகளை இராணுவத்திற்கு மீள ஒப்படைத்தனர். அரச தலைவர் போர் முனைக்குச் சென்றார், போர் வெற்றி கொள்ளப்பட்டது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=115212&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கி ஓடியவர் தான் சரத் பொன்சேகா! - போட்டு உடைக்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க.

------

 அப்போது யாழ் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றினார். புலிகளின் தாக்குதல்கள் காரணமாக சரத் பொன்சேகா பின்வாங்கத் தீர்மானித்தார். அதன்போது விமானம் மூலம் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை அழைத்துச் சென்று, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த தலைமையில் யாழ்ப்பாணத்தை தக்க வைத்துக்கொண்டோம்.

--------

 

அனுருத்த ரத்வத்த, வடமாகாணம் சென்று திரும்பிய உலங்கு வானூர்தி....

வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் பழுது பட்டு தரையிறங்கியது.

தவித்து நின்ற அனுருத்த ரத்வத்தையை காப்பாற்றியது, அப்போது அங்கிருந்த வன்னி விவசாயி ஒருவர்.

 

அவரை  காப்பாற்றி இருக்கா.... விட்டால், எப்போதோ..... ஈழம் கிடைத்திருக்க சாத்தியம் இருந்திருக்கும்.

மற்றவனுக்கு..... பாவம் பார்ப்பதாலும், இரக்க குணமுமே.... தமிழனை அழித்தது.

 

 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அனுருத்த ரத்வத்த, வடமாகாணம் சென்று திரும்பிய உலங்கு வானூர்தி.... வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் பழுது பட்டு தரையிறங்கியது. தவித்து நின்ற அனுருத்த ரத்வத்தையை காப்பாற்றியது, அப்போது அங்கிருந்த வன்னி விவசாயி ஒருவர்.

 

ஒரு வலது  குறைந்தவரை  கொல்லக்கூடாது  என்பதற்காக

புலிகளது கருணை  அது..

 

அவர் வீரனாம்... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வலது  குறைந்தவரை  கொல்லக்கூடாது  என்பதற்காக

புலிகளது கருணை  அது..

 

அவர் வீரனாம்... :(

 

சந்திரிக்காவுக்குத் தான் வலது கண், ஆட்டுக் கண்.

அனுரத்த ரத்வத்தைக்கு.... ஒரு கால் ஊனம். (ஊன்று கோலுடன் தான், நடமாட முடியும்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.