Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்ச்சி கடந்து வந்த பாதை! ஒரு ஜிலு ஜிலு பயணம்

Featured Replies

anuratha%20cut%20out.jpg

 

மூக்கு இருக்கும் வரை எப்படி ஜலதோஷம் இருக்குமோ, அதுபோல கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. அட.. அவ்வளவு ஏன்? மசாலா இல்லாமல் சாம்பார் வைக்கமுடியுமா? அதுமாதிரிதான் கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. எந்த டைப் படமாக இருந்தாலும் அதில் கவர்ச்சி கட்டாயம் இருக்கும்.
 
சில படங்களில் இலைமறைகாயாக இருக்கும். சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் இருக்கும். சில படங்களில் அது திணிக்கப்படும்போதுதான் பளிச்சென்று தெரியும்.
 
 தமிழில் 'ரொப் 10' படங்களில் ஒன்றான 'உதிரிப்பூக்கள்' படத்தில் விஜயன் தன் கொழுத்தியாளை பலாத்காரம் செய்யாமல் அவளை நிர்வாணப்படுத்தி "உங்களை இந்தக் கோலத்தில் பார்த்த முதல் ஆள் நான்தான்" என்று சொல்லும் காட்சியும், கொழுத்தியாள் நிர்வாணமாக கிடக்கும் காட்சியும் கவர்ச்சியில்லாமல் வெறென்ன? '16 வயதினிலே' படத்தில் டாக்டர் மயிலுவை ஒவ்வொரு இடமாகத்தொட்டு அதற்கு விளக்கம் சொல்லும் காட்சியும் பாவாடை நனையாமல் ஆற்றை கடக்கும் காட்சியும் கவர்ச்சி தானே? 'அரங்கேற்றம்' படமே கவர்ச்சியை மையமாக கொண்டதுதான்.
 
pramila.jpg
 
பிரமிளா
 
பிரமிளாவின் ஆடையில்லா முதுகில் கரன்சி நோட்டுகள் ஒட்டிக் கிடப்பதெல்லாம் கவர்ச்சிதானே. மிக உன்னதமாக மதிக்கப்படும் படங்களிலேயே கூட கதையோடு இணைந்த கவர்ச்சி உண்டு என்பதற்காகத்தான் இந்த உதாரணங்களே தவிர சம்பந்தப்பட்ட படங்களை குறைத்து மதிப்பிட அல்ல. கவர்ச்சி என்பது கலையோடு கூடிய ஒரு அழகியல். அது தவறல்ல. பரதநாட்டிய அடவுகளில் இருந்து கோயில் சிற்பங்கள வரை கவர்ச்சி கலந்தே இருக்கிறது. அதிக மிகைப்படுத்தும்போதோ, அல்லது திணிக்கும்போதோதான் ஆபாசமாகிறது.
 
jothi%20laxmi%20cut%20out.jpg
ஜோதிலட்சுமி 
 
 
கருப்பு வெள்ளை காலத்தில் கலக்கியவர்கள்
 
இந்த கவர்ச்சி தமிழ் சினிமாவில் காலத்துக்கேறப பல வண்ன ஆடை அணிந்தே வந்திருக்கிறது. கருப்பு வெள்ளையில் புராணப் படங்கள் வந்து கொண்டிருந்தபோது அந்தப் புரத்து ராணிகள் கை இல்லாத ரவிக்கை அணிந்து வந்ததே அதிகபட்ச கவர்ச்சி, மெல்லிய உடை அணிந்து நடித்தாலும் கருப்பு வெள்ளை படத்தில் அந்த வித்தியாசம், தெரியாமல் அவர்கள் கையில்லாத ரவிக்கை அணிந்து நடிப்பதாக நினைத்தே ரசிகன் ஜொள்ளினான்.
 
'மனோகரா' காலத்தில் டி.ஆர். ராஜகுமாரி கண்களிலேயே கவர்ச்சியை அள்ளித் தந்தார். அவர் புருவத்தை நெளித்தி புசும் வசனங்கள் ரசிகனை கிரங்க வைத்தது. ஜெயமாலினி அவரைத் தொடர்ந்து பல நடிகைகள் கருப்பு வெள்ளையில் அணிவகுத்து வந்தனர். ஆங்கிலப் படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவுக்கு வந்தபோது அதே பாணியில் 'கன்பைட்' காஞ்சனாக்களும் 'ரிவால்வர்' ரீட்டக்களும் வந்தார்கள். சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயமாலா போன்றவர்கள் இறுக்கமான உடை அணிந்தும், ஆண்களைபோல வீர சாகசங்கள் செய்தும் ரசிகர்களை குதுகாலப்படுத்தினார்கள்.
 
கருப்பு வெள்ளையிலிருந்து வண்னத்துக்கு சினிமா இடம் பெயர்ந்தபோது கவர்ச்சிக்கென்று தனி நடிகைகள் உருவானார்கள். இவர்கள் கவர்ச்சி நடிகையாகவே சினிமாவுக்கு வந்தவர்கள் அல்ல. நாயகியாக வந்து அதை தொடர முடியாமல் கவர்ச்சி நடிகைகளாகவும், கவர்ச்சி ஆட்டக்காரிகளாகவும் மாறினார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, விஜயலட்சுமி, ஹெலன், மாயா என்ற ஒரு பட்டாளமே படையெடுத்தது.
 
இவர்கள் காலத்தில்தான் கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி ஆட்டங்கள் வந்தது. “மச்சான் அந்தப் படத்துல "மூணு கிளப் டான்ஸ் இருக்குடா" என்று ரசிக மகாஜனங்கள் படத்துக்கு கிளம்பிய காலம் அது. மாயா ஜால படங்கள் போர்வையில் இவர்கள் நடித்தது எல்லாமே படு கவர்ச்சி படங்கள்தான். 
 
 
cid%20sagunthala%20cut%20out.jpg
சீ.ஐ.டி. சகுந்தலா
 
கவர்ச்சியின் பொற்காலம்
 
இவர்களுக்கு அடுத்த கால கட்டம்தான் கவர்ச்சியின் பொற்காலம். நாற்பதை தாண்டியவர்கள் கவர்ச்சி ஆட்டம் போட்டு பயமுறுத்திக் கொண்டிருந்தபோது ஸ்மிதா வந்தார். ஆந்திராவின் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த ஸ்மிதா வண்டிசக்கரத்தில் "வா மச்சான் வா வண்ணாரபேட்டை சிலுக்கோட கையால வாங்கிக்குடி சிவ்வுனு ஏறிடும் தாங்கிப்புடி" என்று ஆட்டம்போட்டு ஒட்டு மொத்த இளைஞர் பட்டாளத்தையும் ஒரே பாட்டில் வலைத்துப்போட்டு, ‘சில்க்’ ஸ்மிதா ஆனார். 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினாலும் அடுத்து அவர் தேர்ந்தேடுத்தது கவர்ச்சி ஆட்டத்தைதான். அவரது காமம் பொங்கி வழியும் கனிகளும் அண்ட மாமுனிவரையும் அசைத்துப்போடும் அவர் உடல் கட்டும் ஒட்டு மொத்த இளைஞர் கூட்டத்தையும் 'சில்க்…. சில்க்…' என்று புலம்ப வைத்தது. மாஜி கவர்ச்சி நடிகைகள் வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு விடைபெற்றார்கள்.
 
சில்க் புயல் ஓங்கி அடித்ததில் உச்சத்துக்கு போனவர் நாயகியாக நடிக்க தொடங்கினார். ’சில்க் சில்க் சில்க்’ என்று அவர் பெயரிலேயே படம் எடுத்தார்கள். சில்க் ஹீரோயினானதும் அவர் இடத்தை பிடிக்க வந்தார் அதுவரை ஹீரோயினாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த அனுராதா. அவரது ஆட்டத்துக்கு தியேட்டரே ஆடியது. தனக்கு போட்டியாக இன்னொருவர் வந்து விட்டார் என்பதை உண்ர்ந்த சில்க், நாயகி வேடத்தை தூக்கி போட்டி விட்டு மீண்டும் களத்தில் குதித்தார். அப்புறம் நடந்தது எல்லாமே கவர்ச்சி தீபாவளிதான்.
 
சில்க் ஸ்மிதா 'பொன்மேனி உருகுதே'…., 'நேத்து ராத்திரி எம்மா….' என சில்க் கொடுத்த கவர்ச்சிக்கு முன்னால் ஒரு கட்டத்தில் அனுராதாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த இருவரின் ஆட்டத்துக்கு நடுவில் 80களின் ரசிகர்கள் திக்குமுக்காடிக் கிடந்தார்கள்.
 
கமல் ரசிகர், ரஜினி ரசிகர் என்று பிரிந்த மாதிரி அனுராதா ரசிகன், சில்க் ரசிகன் என்றும் பிரிந்து கிடந்தார்கள். சில்க்கின் ஆட்டத்தைப் போலவே அவரது சொந்த வாழ்க்கையும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாய் இருந்ததால் அவர் எப்போதும் லைம் லைட்டிலேயே இருந்தார்.
 
ஒரு நாள் அதிகாலை பொழுது அவர் தன் ஆட்டத்தை தானே முடித்துக் கொண்ட போது ஒட்டு மொத்த தமிழகமும் ரகசியமாய் அழுதது. கவர்ச்சி பொற்காலமும் முடிவுக்கு வந்தது. சில்குக்குப் போட்டியாக களம் இறங்கிய டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோரும் பேக் டு பெவிலியன் ஆனார்கள். சில்க்கிற்கு பிறகு கவர்ச்சி களம் கொஞ்சம் காலியாகத்தான் இருந்தது. ஒரு சிலர் வந்தார்கள் வந்த வேகத்தில் காணாமற் போனார்கள். அதன் பிறகு அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீயும், பபிதாவின் மகள் லக்க்ஷா உள்ளிட்ட சிலர் கவர்ச்சி களத்திற்கு வந்தார்கள். அவர்களால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 'வசூல்ராஜா' எம்.பி.பி.எஸ்’ படத்தில் சிரிச்சு சிரிச்சு சீனாதாவோடு வந்த ரகசியாவின் பெல்லி நடனத்துக்கு ரசிகர்கள் அடிமையனார்கள்.
 
'வயத்துல இம்புட்டு விஷயம் இருக்கானு' ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவருக்கு போட்டியாக வந்தார் முமைத்கான். 'என் பேரு மீனாகுமாரி'ன்னு இவர் பஸ்ஸில் போட்ட ஆட்டம் பலரின் பல்லை எகிற வைத்தது. இவர்கள் இருவருமே ஆடிக் களைத்து ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். அதன் பிறகு மும்பையிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒல்லிப்பிச்சானாய் வந்து யார் யாரோ ஆடிவிட்டு போனார்கள். யார் முகமும் மனதில் பதியவில்லை. பெருந்தொகை கொடுத்து மல்லிகா ஷெராவத் மாதிரியான பாலிவூட் ஹாட் நடிகைகளை இறக்கி ஆட்டம் போட வைத்தார்கள். பெரும்பாலான படத்தில் ஹீரோயின்களே கவர்ச்சி ஆட்டம் ஆடி விடுகிறார்கள்.
 
டாப் ஹீரோயின்களாக இருப்பவர்களே பெருந்தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு கல்லா கட்டுகிறார்கள். இதனால் கவர்ச்சி நடிகைகள் என்ற தனி ரகம் இப்போது இல்லை. இப்படியாக கவர்ச்சி பல காலகட்டங்களை தாண்டி இப்போது அது தனி வட்டமாக இல்லாமல் எங்கும் நீக்கமற கிடக்கிறது. கவர்ச்சி என்ற வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தால் விஸ்வரூபமாய் நிற்பது சில்க் ஸ்மிதா மட்டும்தான். அவரது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்திப் படம் வசூலைக் குவித்ததோடு விருதுகளையும் குவித்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன் என்பது இதுதானோ? -
 
Silk%20Smitha%20Actress%20Hot%20Sexy%20S
 
silk%20smitha.jpg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி  என்றால் ஞாபகம் வருபவர்  சிலுக்கு....

அவரைக்கடைசியாகக்காணும் வரை தேடவேண்டியிருந்தது.. :D

ஆனால் இது வரை இவர்கள் எவரினதும் ரசிகனாக  இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி  என்றால் ஞாபகம் வருபவர்  சிலுக்கு....

அவரைக்கடைசியாகக்காணும் வரை தேடவேண்டியிருந்தது.. :D

ஆனால் இது வரை இவர்கள் எவரினதும் ரசிகனாக  இருந்ததில்லை.

 

https://www.youtube.com/watch?v=psfxD9s6MpI

 

நான்.... இந்தப் படம், பார்த்ததிலிருந்து சிலிக்கின், பரம ரசிகன்.

ஆஹா.... என்ன, நவரசம் சொட்டும்  நடிப்பு. :wub:  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

வெள்ளிக்கிழமை  பரிசு.. :icon_mrgreen:  :icon_mrgreen:

 

Edited by விசுகு

பிரமிளா என்று சீமாவின் படம் போட்டிருக்கு. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.