Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறட்டுப் பிடிவாதம் எதற்கு? வாருங்கள் வைகோ!

Featured Replies

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் கலைஞரின் காலை வாரிவிட்டு "தவிர்க்க முடியாத" காரணத்தால் போகாத இடம் சென்றீர்களே! நீங்கள் நினைத்த மரியாதை கிடைத்ததா? கறுவேப்பிலை மாதிரி தானே உங்களையும் உங்கள் தொண்டர்களையும் நீங்கள் நாடிச்சென்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்? தோழர் திருமாவளவனுக்கு இருக்கும் சுயமரியாதையில் கிஞ்சித்தும் உங்களுக்கு கிடையாதா?

நீங்கள் கூட்டணியில் இருக்கும் இயக்கத்துக்கும், உங்கள் இயக்கத்துக்கும் எந்தெந்த கொள்கைகளில் ஒத்தக் கருத்து உண்டு என்று விளக்க முடியுமா? பொடா சட்டம் ஆகட்டும், ஈழத்தமிழர் பிரச்சினை ஆகட்டும் எதில் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

உங்கள் இயக்கத்தின் கருத்துக்களை ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள் ஓரணியில் திமுக கூட்டணியில் திரண்டிருக்கும்போது அபஸ்வரம் மாதிரி நீங்கள் மட்டும் எதிரணியில் அடிமையாய் இருப்பதை உங்கள் தொண்டர்கள் ரசிப்பார்களா?

நீங்கள் சிறையில் இருந்தபோது உங்கள் தொண்டர்கள் நடத்திய ஒரு கோடி இயக்கத்துக்கு முதல் கையெழுத்துப் போட்டவர் உங்களது அப்போதைய கூட்டணித் தலைவர் டாக்டர் கலைஞர். இப்போது ஈழத்தமிழருக்காக போராட்டங்கள் அறிவித்தீர்களே? உங்கள் தற்போதைய கூட்டணித் தலைவரின் பங்கெடுப்பு அதில் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா?

காலமெல்லாம் சேது சமுத்திர திட்டத்துக்காக திமுக எம்.பி.யாய் நாடாளுமன்றத்தில் உரிமைக்குரல் கொடுத்தவர் நீங்கள். அந்த சேது சமுத்திரத் திட்டத்தையே வேண்டாமென்று கூறும் அதிமுக தலைமையோடு நீங்கள் வைத்திருக்கும் கூட்டணி உங்கள் உள்ளத்தை உறுத்தவில்லையா?

82ஆம் ஆண்டு கலைஞர் மீது "உளி" கொண்டு தாக்குதல் நடத்திய கொலைவெறியனை அடித்து நொறுக்கியவர் நீங்கள். கலைஞரின் மூக்குக் கண்ணாடி அப்போது கீழே விழுந்ததை கண்டு முகம் சிவந்து கதறித் துடித்தவர் நீங்கள். அப்போது நீங்கள் தானே தலைவனுக்காக தற்கொலைப் படையாம் "தொண்டர் படையை" திமுகவிலேயே முதன்முறையாக நெல்லையிலே அமைத்தீர்கள்?

கலைஞர் "கட்டி வா" என்றால் "வெட்டி வந்து" அவர் காலடியில் நீங்கள் சமர்ப்பித்ததால் தானே "நெல்லை எனக்கு எல்லை" என்று பெருமையாக கலைஞர் சொன்னார். என் போர்வாள் வைகோ என்று பெருமிதப்பட்டார். கலைஞர் எதிர்க்கட்சியாய் இருந்தபோது அவருக்கு செருப்பாக உழைத்து கழகத்தை கட்டிக் காத்த நீங்கள் அவர் ஆட்சியை அலங்கரிக்கும் போது அருகில் இருந்து அழகுபார்க்க வேண்டாமா? உதயசூரியன் இருள்நீக்கும் என்று ஓயாமல் தமிழகமெல்லாம் போர்ப்பரணி பாடி வந்தீர்களே? இப்போது ஒளிபிறந்திருக்கிறது. எதற்கு இருட்டில் போய் முடங்கி கொள்கிறீர்?

காலமெல்லாம் கால் வலிக்க எதிர்க்கட்சியாய் நடந்தது போதும். ஓய்வெடுக்க தாய் வீடு வாருங்கள். உங்களுக்கு வேறு பணி காத்திருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினையில் உங்களோடு தோள்சேர்ந்து வாளை சுழற்ற உங்கள் கூட்டணித் தலைமை தயாராய் இல்லை. இன்னும் ஏன் அழையாவீட்டில் விருந்தாளியாய் இருக்கிறீர்? ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கலைஞர் தனியாகவும், நீங்கள் தனியாகவும் குரல் கொடுத்தால் அது தலைநகருக்கு எட்டுமா? தமிழர் ஓரணியில் சேர்ந்து உரத்து குரல் கொடுத்தால் டெல்லி கோட்டைக் கதவுகள் நொறுங்கி விடாதா?

நீங்கள் வாளையும், வேலையும் களத்திலே வீசி போர்புரியப் போவது பகைவருடனா? இல்லை உங்கள் சொந்த சகோதரருடனா என்பதை முடிவுசெய்யுங்கள். சரித்திரத்திலே பல நல்ல குணங்கள் கொண்ட அவுரங்கசீப் சொந்த தந்தையுடனும், சகோதரர்களுடனும் மோதியதாலே தான் "கருங்காலி" என்ற அவச்சொல்லை பெற்றான். உங்களுக்கு சரித்திரத்தை நாங்கள் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. தந்தை மகனுடன் மோதிய ஈரானிய கதை நீங்கள் சொல்லி தான் எங்களுக்குத் தெரியும். அந்தக் கதையின் முடிவு அறியாதவரா நீங்கள்?

சுதந்திர இந்தியாவில் ஐம்பதாண்டு காலமாக நிகழாத அதிசயமாக பெரும்பாலான ஒத்த கருத்து கொண்ட தமிழர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். பெரியாரும், அண்ணாவும் எதற்கெல்லாம் போராடினார்களோ அதையெல்லாம் நிறைவேற்றும் காலம் கனிந்திருக்கிறது. இப்போது நாம் செய்யப்போகும் சாதனைகளை வருங்கால சரித்திரம் பறைசாற்றப் போகிறது.

சீக்கிரமாக முடிவெடுங்கள் கலிங்கப்பட்டியாரே... சரித்திரத்தில் உங்கள் பெயர் எப்படி இடம்பெற வேண்டுமென்பதை.

(http://madippakkam.blogspot.com)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபஸ்வரம்

இந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம் :roll: :roll:

இந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம் :roll: :roll:

எல்லோரும் ஒரே வகையான இசைக்குறிப்புகளை வாசிக்கும் பொழுது அக்குழுவில் ஒருவர் மட்டும் தவறாய் வாசிப்பது தான் அபஸ்வரம் எனும் சமஸ்கிருத சொல்லால் குறிக்க பெறும்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இயக்கத்தின் கருத்துக்களை ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள் ஓரணியில் திமுக கூட்டணியில் திரண்டிருக்கும்போது அபஸ்வரம் மாதிரி நீங்கள் மட்டும் எதிரணியில் அடிமையாய் இருப்பதை உங்கள் தொண்டர்கள் ரசிப்பார்களா?

தேடி தேடி பார்த்தேன் ஒத்திசைவில்லாத அல்லது எதிராக என்று இருந்த்து பிறேம் சார்

கலைஞர் "கட்டி வா" என்றால் "வெட்டி வந்து" அவர் காலடியில் நீங்கள் சமர்ப்பித்ததால் தானே "நெல்லை எனக்கு எல்லை" என்று பெருமையாக கலைஞர் சொன்னார். என் போர்வாள் வைகோ என்று பெருமிதப்பட்டார். கலைஞர் எதிர்க்கட்சியாய் இருந்தபோது அவருக்கு செருப்பாக உழைத்து கழகத்தை கட்டிக் காத்த நீங்கள் அவர் ஆட்சியை அலங்கரிக்கும் போது அருகில் இருந்து அழகுபார்க்க வேண்டாமா? உதயசூரியன் இருள்நீக்கும் என்று ஓயாமல் தமிழகமெல்லாம் போர்ப்பரணி பாடி வந்தீர்களே? இப்போது ஒளிபிறந்திருக்கிறது. எதற்கு இருட்டில் போய் முடங்கி கொள்கிறீர்?
:lol::lol::(

லக்கி , கலைஞர் நெல்லைக்கு போய் விட்டு வந்து முரசொலியில் திரு.வைகோ குறித்து எழுதியது " நெஞ்சினிக்கும் நெல்லை " எனும் கட்டுரை. இப்போதும் என் நினைவில் உண்டு :( :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் ஒரே வகையான இசைக்குறிப்புகளை வாசிக்கும் பொழுது அக்குழுவில் ஒருவர் மட்டும் தவறாய் வாசிப்பது தான் அபஸ்வரம் எனும் சமஸ்கிருத சொல்லால் குறிக்க பெறும்

உதவிக்கு நன்றி :lol:

  • தொடங்கியவர்

லக்கி , கலைஞர் நெல்லைக்கு போய் விட்டு வந்து முரசொலியில் திரு.வைகோ குறித்து எழுதியது " நெஞ்சினிக்கும் நெல்லை " எனும் கட்டுரை. இப்போதும் என் நினைவில் உண்டு :lol: :lol: :(

ஒரு முறை குமரி மாவட்டத்தில் கலைஞருக்கு ஏதோ கசப்பான அனுபவம் கிடைத்தது. அப்போது அவர் சொன்னது "நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்களுக்கு தொல்லை" என்று. இதில் இருக்கும் "குமரி"-க்கு இரட்டை அர்த்தம் உண்டு. ஆனால் கலைஞர் சொன்ன "நெல்லை எங்களுக்கு எல்லை" என்பதன் முழுப் பாராட்டும் வைகோவையேச் சேரும்.....

மற்றது ஜெயலலிதாவா :lol:

மற்றது ஜெயலலிதாவா :(

என்னையா குமரியா அதுவும் ஜெயலலிதாவா குறை நினைக்கவேண்டாம் :lol::lol:

எனக்கு ஒன்று மட்டும் நண்றாக விளங்குது... லக்கிக்கு வைகோவின் மீது இருக்கும் வாஞ்சை அல்லது அன்பு... என்னதான் அவரை ஏசினாலும் மிகவும் மரியாதை வச்சிருக்கிறார்...! :P :P :P

நிறைய உரிமை எடுக்கிறீங்கள் லக்கி... :wink: :lol::lol:

வைகோ மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைக்கின்ற தவறை ஒரு போதும் செய்ய மாட்டார்.

அதுவும் இந்த நேரத்தில் செய்யக்கூடாது.

எதிர்க்கட்சியாக இருப்பதே மதிமுகவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.

உண்மையே தல.... எப்படியோ கண்டுபிடிச்சிட்டீங்க....

அந்தப் பதிவை நன்றாகப் படித்துப் பார்த்தால் தெரியும். நான் அழைப்பது உள்ளாட்சித் தேர்தலுக்கோ அல்லது திமுக, மதிமுக பரஸ்பர வளர்ச்சிக்கோ அல்ல.....

பெரியாரும், அண்ணாவும் விட்டுச் சென்றிருக்கும் பணிகளை தமிழ் சமுதாயத்திற்கு செய்ய வைகோ மாதிரி செயல்வீரர்கள் கலைஞருக்கு கண்டிப்பாக இந்த தருணத்தில் தேவை....

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து அதிமுகவில் இருந்து பழைய திராவிடத் தலைகள் கூட ஒன்று கூட ஆரம்பித்திருக்கிறது.....

இந்த நேரத்தில் வைகோ மட்டும் ஒதுங்கி நிற்பது சரியல்ல......

  • தொடங்கியவர்

வைகோ மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைக்கின்ற தவறை ஒரு போதும் செய்ய மாட்டார்.

அதுவும் இந்த நேரத்தில் செய்யக்கூடாது.

எதிர்க்கட்சியாக இருப்பதே மதிமுகவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.

நாலு பேரு நல்லது நடக்கணும்னு நெனைக்கிறப்போ உங்களை மாதிரி ஒரு சிலர் இதுமாதிரி மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருப்பது சகஜம் தான்....

ராமருக்கு பட்டாபிஷேகத்தை நாடே கொண்டாடியபோது கூனி மட்டும் வருந்தவில்லையா? அதுமாதிரி நெனைச்சுக்கறேன்.... :lol::lol::(

நாலு பேருக்கு அல்ல. மூன்று பேருக்கு. 100இல் மூன்று பேருக்கு.

அரசை ஆதரிக்கின்ற பொழுது ஒரு அளவிற்கு மேல் எந்த விடயத்திலும் போராட்டங்களை நடத்த முடியாது என்பது லக்கிலு}க்கிற்கு தெரிந்திருக்கும்.

பாமக எப்பொழுது மத்திய அரசில் இணைந்ததோ, அன்றில் இருந்து மருத்துவர் ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைக் குறைத்து விட்டார். அவர் ஈழத் தமிழர்கள் பற்றி பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. அப்படி திருமாவளவனும் ஆகி விடுவாரோ என்று மனம் பக்,பக் என்று அடிக்கிறது. இதில் வைகோ வேறு இணைய வேண்டுமா?

அனைத்து ஈழ ஆதரவு சக்திகளும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு அமைதியாவது தமிழின விடுதலையை விரும்பாத பார்ப்பன சக்திகளுக்கே துணை புரியும்.

எனக்கு ஒன்று மட்டும் நண்றாக விளங்குது... லக்கிக்கு வைகோவின் மீது இருக்கும் வாஞ்சை அல்லது அன்பு... என்னதான் அவரை ஏசினாலும் மிகவும் மரியாதை வச்சிருக்கிறார்...! :P :P :P

நிறைய உரிமை எடுக்கிறீங்கள் லக்கி... :wink: :lol::lol:

நானோ லக்கியோ, வைகோ விமர்சிப்பது என்பது எங்கள் குடும்பத்தில் ஒருவர் வழிதவறி போகிறாரே என்கிற கோபத்தில்தான். மற்றபடி அவரின் வளர்ச்சியில் மகிழ்வோம், தாழ்ச்சியில் வருந்தும் உள்ளம்தான் திராவிட இயக்கம் எங்களுக்கு கற்று தந்தது.

நாலு பேரு நல்லது நடக்கணும்னு நெனைக்கிறப்போ உங்களை மாதிரி ஒரு சிலர் இதுமாதிரி மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருப்பது சகஜம் தான்....

ராமருக்கு பட்டாபிஷேகத்தை நாடே கொண்டாடியபோது கூனி மட்டும் வருந்தவில்லையா? அதுமாதிரி நெனைச்சுக்கறேன்.... :lol::lol::(

என்ன சபேசன் நீங்கள் மாற்றுக்கருத்தாளாரா? இவர்கள் இணைவது எங்களுக்கு பலமே. குமரி ஓரு மனநோயாளி அவர் எப்போதுமே எம்மை ஆதரிக்கமாட்டார்.விடுதலைக்கு ஆதரவானவர்கள் தமிழ்நாட்டில் பலமாக இருப்பது இன்றைய காலகட்டத்துக்கு அவசியம்.

வை.கோ தன் கட்சியின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டால் தாராளமாக சூர்ப்பனகையுடன் இருக்கட்டும். ஈழம் மலர ஆசையிருந்தால் சரியான முடிவை எடுக்கட்டும்

சபேசன் என்னதான் முகமூடி அணிந்திருந்தாலும் சில நேரங்களில் சுயரூபம் தெரிந்துவிடுகின்றது. :oops: :oops:

மேற்கோள்:

நாலு பேருக்கு அல்ல. மூன்று பேருக்கு. 100இல் மூன்று பேருக்கு.

அரசை ஆதரிக்கின்ற பொழுது ஒரு அளவிற்கு மேல் எந்த விடயத்திலும் போராட்டங்களை நடத்த முடியாது என்பது லக்கிலு}க்கிற்கு தெரிந்திருக்கும்.

பாமக எப்பொழுது மத்திய அரசில் இணைந்ததோ, அன்றில் இருந்து மருத்துவர் ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைக் குறைத்து விட்டார். அவர் ஈழத் தமிழர்கள் பற்றி பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. அப்படி திருமாவளவனும் ஆகி விடுவாரோ என்று மனம் பக்,பக் என்று அடிக்கிறது. இதில் வைகோ வேறு இணைய வேண்டுமா?

அனைத்து ஈழ ஆதரவு சக்திகளும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு அமைதியாவது தமிழின விடுதலையை விரும்பாத பார்ப்பன சக்திகளுக்கே துணை புரியும்.

வன்னியன் இதை மீண்டும் படியுங்கள். இதில் ஏதாவது வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள். வைகோவும் இடையில் கலைஞருடன் இருந்த பொழுது ஈழத் தமிழர் விடயத்தில் அடக்கி வாசித்ததை மறந்து விடாதீர்கள்.

  • தொடங்கியவர்

பாமக எப்பொழுது மத்திய அரசில் இணைந்ததோ, அன்றில் இருந்து மருத்துவர் ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைக் குறைத்து விட்டார். அவர் ஈழத் தமிழர்கள் பற்றி பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. அப்படி திருமாவளவனும் ஆகி விடுவாரோ என்று மனம் பக்,பக் என்று அடிக்கிறது. இதில் வைகோ வேறு இணைய வேண்டுமா?

சபேசன்!

என்ன சொல்கிறீர்கள் என்று புரிந்து தான் சொல்கிறீர்களா?

மே மாதத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் யாராவது "புலிகள், ஈழம்" என்று பேச முடிந்ததா?

திமுக ஆட்சி மலர்ந்த பின்பு தானே இதையெல்லாம் குறைந்தபட்சம் பேசவாவது முடிகிறது?

ஈழவன் கூட இது குறித்து ஊடகங்களில் ஆட்சிமாற்றத்துக்கு பின்பு நிகழ்ந்த மாற்றம் என்று பதிவிட்டதாக ஞாபகம்.....

ஏதாவது எடக்கு மடக்காக பேச வேண்டும் என்றே பேசுகிறீர்களோ?

கடைசியாக மருத்துவர் ராமதாஸ் விடுதலைப்புலிகள் பற்றி எப்பொழுது பேசினார் என்று யாராவது சொல்வீர்களா?

தேசியத் தலைவரின் 50ஆவது பிறந்த தினத்திற்கு வாழ்த்துச் சொல்லுகின்ற பொழுது அவர் "பிரபாகரன்" என்று சொல்வதற்கு மிகவும் கஸ்ரப்பட்டார். மென்று முழுங்கி "மாவீரனுக்கு வாழ்த்துக்கள்" என்று சொல்லி முடித்தார். நிலைமை இப்படி இருக்கிறது.

கலைஞருடன் இணைந்து அமைதியா இருப்பதை விட, ஜெயலலிதாவுடன் இணைந்திருந்து எமக்காக குரல் கொடுக்கட்டும்.

  • தொடங்கியவர்

வன்னியன் இதை மீண்டும் படியுங்கள். இதில் ஏதாவது வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள். வைகோவும் இடையில் கலைஞருடன் இருந்த பொழுது ஈழத் தமிழர் விடயத்தில் அடக்கி வாசித்ததை மறந்து விடாதீர்கள்.

ஆஹா.... அற்புதம்.... அட்டகாசமாக கருத்தாடுகிறீர்கள்....

வைகோ Off ஆனது ஜெ.வுடன் கூட்டணி சேர்ந்தப் பின்பு தான்.... அதற்கு முன்னதாக அவர் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தபோது ஜாமினில் வெளிவர விடுதலைப் புலிகளைப் பற்றி பேச மாட்டேன் என்று ஜெ. அரசுக்கு எழுதி கொடுத்து தான் வெளிவர வேண்டி இருந்தது.....

என்ன அழகா பிளேட்ட மாத்தி போடுறாங்கப்பா.... இவங்க பேச்சையும் சில பேர் நம்புறாங்களே... அது தான் கொடுமை.....

  • தொடங்கியவர்

கலைஞருடன் இணைந்து அமைதியா இருப்பதை விட, ஜெயலலிதாவுடன் இணைந்திருந்து எமக்காக குரல் கொடுக்கட்டும்.

ஆமாம். ஜெயலலிதா ஒருவர் தான் ஈழத்தமிழ் மக்களுக்கு விடிவெள்ளி.... :lol::lol::(

வாழ்க ஜெயலலிதா! வாழ்க சபேசன்!

வைகோ அதிமுக கூட்டணியில் இணைந்தார். பின்பு அதிமுக பாஜகவுக்கு ஆதரவை விலக்கிய பின்பு வைகோ தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்தார். அதில் திமுகவும் இணைந்தது. சில மாதங்களின் பின்பு வைகோ கலைஞருடன் நெருக்கமானார். இக் கூட்டணியில் சில காலம் நீடித்தார்.

இக் காலகட்டத்தில் வைகோ ஈழத் தமிழர் குறித்து அடக்கியே வாசித்தார். இதையே நான் குறிப்பிட்டேன்

அதன் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியை விட்டு பிரிந்து, தனித்து நின்றார். அவர் திமுக கூட்டணியை விட்டு விலகி நின்ற பொழுதே மீண்டும் விடுதலைப்புலிகள் பற்றி பேசினார். அப்பொழுதுதான் அவர் பொடாவில் கைதானார்.

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுடன் இணைந்திருந்து எமக்காக குரல் கொடுக்கட்டும்.

இதுக்கு என்ன அர்த்தம் என்று தான் கேட்டேன்... ஜெயலலிதாவுடன் இணைந்து யாரால் உங்களுக்கு குரல் கொடுக்க முடியும்? :lol::lol::(

திரும்ப திரும்ப காமெடி பண்ணாதீங்க சார்....

ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கின்ற வைகோவால் ஈழத் தமிழர்களுக்காக ஊர்வலம் நடத்த முடிகிறது. விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் ஆதரிப்பேன் என்று பேச முடிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தியுங்கள் என்று மன்மோகன் சிங்கை வற்புறுத்த முடிகிறது. ததேகூவினரை வெளிப்படையாக சந்திக்கவும் முடிகிறது.

கலைஞருடன் இருக்கின்ற யாராலும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றோம் என்று சொல்ல முடியவில்லை. ததேகூவினரை வெளிப்படையாக சந்திக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கின்ற வைகோவால் ஈழத் தமிழர்களுக்காக ஊர்வலம் நடத்த முடிகிறது. விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் ஆதரிப்பேன் என்று பேச முடிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தியுங்கள் என்று மன்மோகன் சிங்கை வற்புறுத்த முடிகிறது. ததேகூவினரை வெளிப்படையாக சந்திக்கவும் முடிகிறது.

என்னய்யா திரும்ப திரும்ப சின்னப்பிள்ளைத்தனமா பேசுறீங்க?

இப்போ நடக்குறது கலைஞர் ஆட்சி.... இது எல்லாத்தையும் செய்ய முடியும்....

ஜெயலலிதா ஆட்சி நடத்தினப்போ முயற்சித்தவர்கள் எல்லாம் பொடா சட்டத்திலே உள்ளே போனாங்க.....

அய்யோ.... அய்யோ...... முடியலை.... என்னால முடியலை...... :lol::lol::(

உங்களுக்கு தமிழ்நாடு எங்கிருக்கு? என்ன நடக்குதுன்னு தெரியாம சும்மா குன்ஸா கல்லாங்கோல் போடுறீங்களா? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.