Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு இந்தியா செல்வதை விரும்பாத ஜனாதிபதி மஹிந்த தனது பிரதிநிதியூடாக அதிருப்தியை சம்பந்தருக்கு தெரிவித்தாராம்!

Featured Replies

sam%20mahi%208856252565.jpg

 

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியா செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி கடும் சீற்றமடைந்து, தனது கடும் அதிருப்தியை தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்தாராம். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- கூட்டமைப்பு குழுவினரின் இந்திய விஜயம் குறித்து அரசாங்கத்துக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது குறித்து தான் ஏமாற்றம் அடைந்திருக்கிறார் என்றும் ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊடாக சம்பந்தனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம், தன்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டது என்றும், கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர்; அரசாங்கத்திற்கும் அவர்களுக்குமிடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையில், ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதாலேயே நான் ஆளுநரை மாற்றவில்லை.
 
சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது என்றும் அவர் தன்னுடைய பிரதிநிதி ஊடாக கூட்டமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளார். எனினும் சம்பந்தர் ஜனாதிபதியின் இந்த மிரட்டலை ஏற்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "நான் தமிழ் கட்சியின் தலைவர், நாங்கள் அரசியல் தீர்வொன்றுக்காகப் பாடுபடுகிறோம். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அங்கு செல்கிறோம்" என்று அந்தப் பிரதிநிதியிடம் சம்பந்தன் நேரடியாகவே தெரிவித்திருந்தார் என்றும் இப்போது செய்தி வெளியாகியுள்ளது.
 
இதேவேளை கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து கொழும்பு சீற்றமடைவதற்கு இன்னொரு காரணமும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை தனது பதவியேற்பு விழாவில் சந்தித்தன் பின்னர் அரசாங்க பிரதிநிதிகள் எவரையும் சந்திக்கவில்லை.
 
இந்திய பிரதமரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இலங்கை பிரதிநிதி ஒருவருடனேயே இடம்பெற்றிருக்கவேண்டும் என தான் கருதுகிறார் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு அனுமதிவழங்கியுள்ளதன் மூலமாக இந்திய அரசு, இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும், அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று கொழும்பு அரசதரப்பு வட்டாரங்கள் கருதுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -
 
http://malarum.com/article/tam/2014/08/24/4825/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.XWYCErzH.dpuf
 

தமிழ்தேசியக்கூட்டமைப்பு தனியே இந்தியாவுடன் பேசியது தவறானது! இப்படிச் சொல்கிறார் அமைச்சர் வாசுதேவ -
 
vasudeva%2065642122.jpg
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியமை தனக்கு அதிருப்தி தருகிறது என்று தெரிவித்திருக்கிறார் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. இதுகுறித்து அவர், பி.பி.ஸி.க்கு தெரிவித்துள்ளவை வருமாறு:-
 
இந்தியாவுடன் இலங்கை அரசாங்கமும் தமிழர் தரப்பும் சேர்ந்து பேச்சு நடத்தியிருக்கலாம் என்று தான் நான் கருதுகிறேன். இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரும் இந்தியாவுடனான பேச்சில் கலந்துகொண்டிருந்தால் மட்டுமே அது முறையாக அமைய முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகவும் இலங்கை அரசாங்கம் தனியாகவும் இந்திய அரசுடன் பேச்சுவதன் மூலம் நன்மைகளை எட்டமுடியாது. குறைந்த பட்சம் ஏனைய மாகாணசபைகளில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரங்களையாவது வடக்கு மாகாணசபைக்கு அளிப்பதற்காக அரசாங்க தரப்பை இணங்கச் செய்யும் முயற்சிகளில் தாம் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள இடதுசாரித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
 
http://malarum.com/article/tam/2014/08/23/4817/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5.html#sthash.MxiVljFv.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் சுப்ரமணியசாமிக்கு இலங்கையில் முக்கியத்துவம் தரப்படுவது ஏன்?? ::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.