Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
HOME  வன்னி  முல்லைத்தீவு  ஆழிப்பேரலையின் 12ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாளை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில்!
 
 
ஆழிப்பேரலையின் 12ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாளை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில்!

ஆழிப்பேரலையின் 12ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாளை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில்!

ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 12ம் ஆண்டு நினைவு நிகழ்வு தினம் நாளை(26) முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள சுனாமி நினைவாலயத்தில் நடைபெறவுள்ளது.

2004ம் ஆண்டு தழிழர் தாயகப்பகுதிகளில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஐந்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பலியானார்கள். இதில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் முல்லைத்தீவில் பலியானார்கள்.

அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளானர்கள். பல ஆயிரம் மக்கள் தங்களுடைய சொத்துக்கள் உடமைகளை இழந்து நிர்க்கதிக்கு தள்ளப்பட்டார்கள்.
இதனை நினைவு கூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வினை முல்லைத்தீவு சுனாமி நினைவாலய குழு மற்றும் முல்லைத்தீவிசு மக்களும் இணைந்து நடத்த உள்ளனர்.

இதற்காக இன்றைய தினம் ஆழிப்பேரலை நிகழ்வுகளை அனுஸ்டிப்பதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருவதனை அவதானிக்கமுடிகின்றது.
இதேவேளை நாளைய தினம் இறைவணக்க வழிபாடுகளும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும் இடம் பெறவுள்ளன.

15723895_1222133711157866_2048598342_n.j15724168_1222133737824530_304651452_n.jp

Moment I will never forget" 1f641.png:(

boxing day tsunami..
 
Image may contain: sky and outdoor
  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிப் பேரலை 12 ஆண்டு நினைவு நாள் 26.12.2016

 · 
Image may contain: fire, candles and night
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானிய கடலில் இறந்த 5 ஈழத் தமிழ் இளைஞர்கள்: கவுன்சில் மேல் தான் பிழை!
 
 
பிரித்தானிய கடலில் இறந்த 5 ஈழத் தமிழ் இளைஞர்கள்: கவுன்சில் மேல் தான் பிழை!

பிரித்தானிய கடலில் இறந்த 5 ஈழத் தமிழ் இளைஞர்கள்: கவுன்சில் மேல் தான் பிழை!

on: December 26, 2016In: இலங்கை

பிரித்தானியாவின் எசிக்ஸ் மாநிலத்தில் உள்ள கம்பசாண்ட் என்னும் கடலில், ஆகஸ்ட் மாதம் 5 ஈழத் தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அனைவரும் அறிந்ததே. குறித்த கடல் பகுதிக்கு சுமார் 25,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாகவும். ஆனால் அங்கே எந்த ஒரு உயிர் காக்கும் காவலாளிகளும் இல்லை என்றும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

5 தமிழர்கள் இறந்தவேளை குறித்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாலும் நீந்த தெரியாதவர்கள் கடலுக்கு செல்வதனால் மற்றும் ஆழ் கடலுக்கு செல்வதனால் இது போன்ற துயரச் சம்பவம் நிகழ்வதாக தெரிவித்திருந்தார்கள். இதனை பலர் கடுமையாக எதிர்த்துள்ளார்கள்.

பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில், லைப் காட் இல்லாமல் எப்படி அக்கடற்கரை இருக்க முடியும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கவுன்சில் தனது பணத்தை மிச்சப்படுத்த இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது இல்லை. ஆனால் பணம் உழைக்கும் நடவடிக்கையில் மட்டும் இறங்குகிறது. உதாரணமாக தேவைக்கு அதிகமான டிராபிக் வார்டனை போட்டு. எல்லா காருக்கும் துண்டை வைத்து. தண்டப் பணமாக பல பல லட்சம் பவுண்டுகளை சம்பாதிக்கிறது.

மேலும் பல இடங்களில் பெரும் பணத்தை செலவு செய்து, கமராக்களை பொருத்தி. வேகமாகச் செல்லும் கார்களை படம் எடுத்து. அதிலும் பணத்தை சம்பாதிக்கிறது. ஆனால் உயிர் சம்பந்தப்பட்ட விடையத்தில் அவர்கள் பெரும் அஜாக்கிரதையாக உள்ளதாக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

15731223_1222885844415986_1706467098_n.j15748784_1222885864415984_2099265291_o.j15749606_1222885834415987_1353659255_n.j

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
HOME  வன்னி  முல்லைத்தீவு  முள்ளியவளை கயட்டை பகுதியில் ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு !
 
 
முள்ளியவளை கயட்டை பகுதியில்  ஆழிப்பேரலை  நினைவு நிகழ்வு !

முள்ளியவளை கயட்டை பகுதியில் ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு !

கடந்த 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட முள்ளியவளை நெடுங்கேணி வீதியிலுள்ள கயட்டை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வுகள் 2016.12.26 மாலை 4.30 மணிக்கு கயட்டை பிரதேசத்தில் மத வழிபாடுகளுடன் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன இணைந்து ஏற்ப்பாடு செய்த இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் திரு வ.கமலேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.து.ரவிகரன் திரு க.சிவநேசன் மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள் உறவுகள் மற்றும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

unnamed-13-1.jpgunnamed-14.jpgunnamed-15.jpgunnamed-16.jpgunnamed-17.jpgunnamed-18.jpgunnamed-19.jpg

சங்கமம்.கொம்

HOME  வன்னி  முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பில் ஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும்!
 
 
புதுக்குடியிருப்பில் ஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும்!

புதுக்குடியிருப்பில் ஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும்!

ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியும் நினைவு மண்டப திறப்பும் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வும் சிறப்புற இடம்பெற்றது .

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரவை அனர்த்ததில் உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் இறுதி யுத்தத்தில் மாவீரா் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டதை போன்று அழிக்கப்பட்டது.
இதன்பின்னர் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அந்த இடத்தில் நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது.

2016.12.26 இன்று காலை நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் திறக்கின்ற நிகழ்வும் 8.46 மணிக்கு சுடறேற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வடமாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்கள் மாவட்ட பிரதம கணக்காளர் உறவுகள் நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

unnamed-3-7.jpgunnamed-4-5.jpgunnamed-5-4.jpgunnamed-6-3.jpgunnamed-7-2.jpgunnamed-8-1.jpgunnamed-9-1.jpgunnamed-10-1.jpgunnamed-13.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Saturday, December 24, 2016

கண்ணீரை வர வைத்த கவிதை

 

ஒரு விவசாயியின் கண்ணீர்•

நெத்தில கைவச்சு நெடுக பாத்தா படுத்து கிடக்குறதெல்லாம் என்னோட பயிர் தான்... 

தண்ணி இல்லாம தலை சாஞ்சு போச்சு அதை பாத்த எனக்கு உசுரு கொல சாஞ்சு போச்சு....

வாங்குன கடனுக்கு தூங்குற இடமும் போச்சு கூலி குடுத்த காசுக்கு தாலி கூட போச்சு...

கவுர்மென்ட் ஆபிசரெல்லாம் கார் எடுத்து வராங்க கடன கட்டுனு கண்டபடி ஏசுராங்க...

பலகோடி அடிச்சவன் பந்தாவா திரியிறான் நடவுக்கு கடன் வாங்குன நானோ நடுத்தெருவுல நிக்கிறேன்...

ஊரை ஏய்க்கிறவனெல்லாம் உச்சத்தில வாழுறான் சோறு போட பிறந்த நானோ சேத்துக்குள்ள கிடக்குறேன்...

அடியாளா இருப்பவனெல்லாம் ஆடி கார்ல் போறான் விவசாயம் பன்னுற நானோ வீதியில நிக்கிறேன்.... 

என்னய்யா பாவம் செஞ்சேன்? மூத்த மக இப்ப தான் முழுகாம வந்திருக்கா, ஆஸ்பத்திரிக்கி போக கூட அப்பன் எனக்கு வக்கு இல்ல.... 

இளைய மக இப்பதான் எட்டாவது படிக்கிறா, பரிச்சைக்கு அனுப்பக் கூட பத்து ரூவா காசில்ல....

பாத்து வளத்த பசுமாடு கூட, வயித்துல பசியோட வலியில்லாம நிக்குது....

குறுவை நடவுக்கு ஒரு கொள்ளையை வித்துட்டேன்....

உரம் வாங்கிப் போட இருந்த ஒத்தை மாட்டையும் வித்துட்டேன்.... 

இனிமே ஒன்னுமில்ல என்கிட்ட அடகு வைக்க, இடிஞ்சு போச்சுய்யா என்வீட்டு செவருகூட... 

அய்யா அரசாங்க சாமிகளே! ஆண்டுக்கு ஒருமுறையாவது அணைக்கட்ட திறந்திடுங்க...

ஏய்,பட்டனத்து மனுசங்களே, உங்க வயித்துக்கு சோறு தந்த எங்க வயித்தெறிச்சல கேளுங்க... 

அடுத்த தலைமுறைக்கு அஞ்சாறு பிளாட் வாங்குனீங்களே, சோறு திங்க நிலம் வேணும்னு கொஞ்சூண்டு நினைச்சிங்களா? 

பத்திரிகை காரங்களே சென்னையில் வெள்ளம்னு முன்னால எழுதுனிங்களே...

விவசாயி வேதனை மட்டும் விளையாட்டா போச்சா? கரைவேட்டி காரங்களே தேர்தல் நேரத்தில தேடிவந்து நின்னிங்களே ஓயாம அழுகுற எங்க ஒப்பாரி கேட்கலயா?

மரங்கள வெட்டாதிங்க! மண்ணை அள்ளாதிங்க! மழை வந்து எட்டி பாக்கும் அதை மல்லுக்கட்டி விரட்டாதிங்க! நீங்க திங்கிற அரிசியெல்லாம் தண்ணீருல விளையல, அது எங்க கண்ணீருல விளையுது!

நீங்க பட்டன தட்டுனா ஏசி ஓடும், உங்க பசி ஓடுமா? உதட்டுச் சாயத்தை விலை கொடுத்து வாங்குவிங்க, விவசாயத்தை வாங்க முடியுமா? சோறு போடுற எங்களை கூறு போட பாக்காதிங்க, வாழ வச்ச எங்களை அழ வச்சு பாக்காதிங்க! ஏறு புடிச்ச நாங்க வேறு எங்க போவோம்..?

உழைச்சு பொழச்ச நாங்க களச்சு போக மாட்டோம்! ஆண்டவன் அனுப்பி வச்ச அடுத்த கடவுள் நாங்க, வயிறு பசி போக்க வந்த வள்ளலார் நாங்க! எங்க கண்ணீரையெல்லாம் கண்டுக்காம விட்ராதிங்க, எங்க அழுகையெல்லாம அலட்சியம் செய்யாதிங்க.... 

காலம் ஒருநாள் எங்களை கடவுளாக் காட்டும்...! சரித்திரம் ஒருநாள் எங்களை சாதனையா பேசும்...!  

படித்ததில் பிடித்தது

இப்படிக்கு ஓர் விவசாயி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான "1000 தென்னை வழங்கள்" திட்டத்தை நெதர்லாந்தின் மனிதநேய செயற்பாடுகளுக்கான சங்கம் Goudens Gans போட்டிக்கு விண்ணப்பித்துள்ளது. இத்திட்டம் மற்றைய நாட்டுத் திட்டங்களுடன் வாக்களிப்புக்கு விடப்பட்டுள்ளது. இந்த நல்ல தருணத்தில் நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் இலங்கை விதவைகளுக்கு உதவ முடியும். 
நீங்கள் இந்த இணைப்பை அழுத்தி உங்கள் பெயர் , மின்அஞ்சலை பதிவு செய்து அனுப்பும் போது உங்கள் மின்அஞ்சலுக்கு ஒரு பதில் வரும். நீங்கள் அந்த பதிலை அழுத்தி உங்கள் வாக்களிப்பை உறிதிப்படுத்த வேண்டும்.
முதல் தடவையாக ஒரு தமிழரின் திட்டம் மற்றைய நாட்டுத் திட்டத்துடன் போட்டிபோடுகிறது. நாம் எல்லோரும் வாக்களித்தால் நிட்சயமாக வெற்றி பெறச் செய்ய முடியும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை அனுப்பி அவரகளும் வாக்களிக்க உதவமுடியும்.
நீங்கள் வாக்களிக்க 
இதன் கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

மறக்கவேண்டாம் இதன் பின் உங்களுக்கு ஈமேயில் வரும். அதை திருப்பி அனுப்பினால் தான் உங்ஙள் வாக்கு பதிவாகும்
http://www.goudengans.nl/1000kokosnootbomen

இந்த 31/12/2016 ஆண்டு முடிவுக்குள் வாக்களிக்க முடியும் 
#முடிந்தவரை_உதவுங்கள்

safe_image.php?d=AQDbgMSUEQ0oLead&w=476&
 
GOUDENGANS.NL
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் 
நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.
ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,
கடவுளின் பரிசு. 
#Good_morning_?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 2 people, people smiling
Muhilan Sv
விமானப் பயணத்தின்போது கவனித்திருக்கிறீர்களா விமானப் பணிப்பெண்கள் தங்கள் கைகளை பின்பக்கம் கட்டிக்கொண்டுதான் நிற்பார்கள். இருக்கைகளுக்கு நடுவில் நடக்கும்போதும் பின்பக்கமாய் கைகளை கட்டிக்கொண்டேதான் நடப்பார்கள்.... காரணம் என்னவென்று தெரியுமா? 

விமானத்தில் வருகின்ற பயணிகளை எண்ணி கணக்கெடுப்பதிற்காக தங்கள் கைகளில் விசேடமாக தயாரிக்கப்பட்ட சிறிய கருவி ஒன்றை வைத்திருப்பார்கள். அதில் பயணிகளை கணக்கெடுத்து சரிபார்த்த பின்பே பயணத்தை தொடங்குவார்கள். அதை ஏன் மறைத்து வைத்திருக்கிறார்கள் என எண்ணுகிறீர்களா முன்னால் வைத்து அதை தட்டிட்டு இருந்தால் நீங்கள் எல்லோரும் அவர்களைத்தான் வாய் பார்த்திட்டு இருப்பீர்கள் 1f61c.png? அதனால்தான் எந்த இடையூறும் இல்லாமல் பின்னால் மறைத்து பணிசெய்கிறார்கள். 263a.png☺️

அட இதெல்லாம் நமக்கெதுக்கு என்று யோசிக்கிறீர்களா.... சும்மா தெரிஞ்சு வைச்சிருங்க அடுத்தமுறை பயணிக்கும்போது கவனிச்சு பாருங்க 1f603.png? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மிடமிருந்து மெதுவாக விடை பெற்றுக் கொண்டிருக்கிறது......2016.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
HOME  கட்டுரைகள்  பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு
 
 
பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு

பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு

on: December 28, 2016In: கட்டுரைகள்

பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளம் ஏறு தழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் எனப்படும் இடையர் மரபு வழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.

ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஜல்லிக்கட்டு தற்போதய தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை, அலங்கா நல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

பண்டையத் தமிழ் நூல்கள் ஏறு தழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன. பெயர்க் காரணம் ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட, ஆயர் குல ஆடவர்கள் பெண்ணிற்க்காக காளையை அடக்க ஆரம்பித்தனர்.

முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும் போது திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம். வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம்.
வட தமிழகத்தில் வடம் மஞ்சு விரட்டு என்ற பெயரில் 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி இரு புறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடப்படும் பழக்கம் இருந்தது.

மாட்டை அணையும் வீரருக்கு அந்த பண முடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக் கட்டு’ என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது எனக் கூறப்படுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறு தழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

புது டில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறு தழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி திருமணத்துக்கான முன் முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.

அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து ஆநிரை எனப்படும் மாட்டு மந்தையை கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும் அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. ஜல்லிகட்டு மாடு வளர்க்கப்படுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணக் கொடுக்கிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை.

முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந்த நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும் காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேரே நின்று தாக்கும். வலிய கொம்புகளால் அதன் உடலைக் கிழித்துக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும் மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.

மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக் கூடியவை. ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும்.

நெருங்கி வந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடி போட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊரின் தன்மையும் சேர்ந்தேயிருக்கிறது.

ஸ்பெனியில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தபடியேதான் இருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக் கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.

மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்து விடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப் பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள். ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித் தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. காலத்தின் போக்கில் மனதில் உறங்கிக் கிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் மீட்கப்படுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவுகளில் கேட்கத் துவங்கியுள்ளது.

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்று கூறுகிறது கலித்தொகை. அழிந்து வரும் தமிழனின் கலாச்சார வரலாற்றில் மிச்சம் இருப்பது ஜல்லிகட்டு மட்டும் தான்.

தமிழ் இலக்கியப் வாசிப்பும் புரிதலும் இதனை மனங்கவர் பெண்ணை அடைதற்கு வழி முறையாகவும் ஏனையோர்க்கு வீர விளையாட்டாகவும் மட்டுமே பதிவு செய்து போய் இருக்கின்றன. இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டியது பழம் மரபுகள் அனைத்தையும் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்திருப்பதில்லை. தொல்குடியின் தொடர்ச்சியாய் உருமாறிப் போன பலவற்றையும் கலை என்ற பெயரில், கூத்து என்ற பெயரில், விளையாட்டு என்ற பெயரில் அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன.

அவை படைக்கப்பட்ட போதும் பயிலப்பட்ட போதும் அவற்றின் ஆதி காரணம் இன்னதென அப்பழந் தமிழர் அறிந்திருந்தனரா என்று அறுதியிட்டுக் கூறவியலாது. ஆனால் நமக்கு இருக்கும் இன்றைய அறிவு இப்பழந் தமிழ்க் கருவூலங்களில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களையும் ஆதி மனித எச்சங்களையும் பண்பாட்டில் துடித்த சமூகத்தின் வேர்களையும் வெளிக்கொணர்வதாய் அமைதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன்.

நம் இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளைக் காட்டுகின்றன. அவற்றை அடக்கும் முயற்சியில் உயிர் நீத்த வீரர்களைக் காட்டுகின்றன. பழங்காலத்தில் காடு கரை, வீடு என்பன எல்லாம் ஒருவன் கொண்ட செல்வத்தின் அடையாளங்கள் அல்ல. ஒருவன் கொண்ட செல்வம் என்பது அவனிடம் இருக்கும் ஆநிரைகள்தான். அவற்றைக் காடுகளில் உயிரைப் பணயம் வைத்து அவன் பிடித்து வர வேண்டி இருந்தது. பழக்கப்படுத்தி அவனது பட்டியில் சேர்க்க வேண்டி இருந்தது.

“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை” என்னும் இடத்தில் செல்வம் என்பதற்கு மாடு என்றே வள்ளுவன் ஆள்கிறான். முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது.

தமிழ் இலக்கியங்கள் ஏத்திப் போற்றும் வீரமும் காதலும் இதில் உண்டு. தன் வீரத்தைக் காட்டித் தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கும் வாய்ப்பினைத் தரும் விளையாட்டாக இது தமிழ் இலக்கியப் பின் புலத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது. வீர விளையாட்டுகள் எல்லாமே பங்கேற்பாளரின் முழு விருப்பத்தோடுதான் நடைபெறுகின்றன. அதில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு அவர்களே முழுப் பொறுப்பாவார்கள்.

காயங்களும் வலியும் உயிரச்சமும் இல்லாத வீர விளையாட்டுகள் அல்லது சாகச நிகழ்ச்சிகள் எதுவுமில்லை. உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட வேண்டும் என்று முனைபவனும் என்றாலும் ஆழமான பள்ளத்தாக்கின் மேல் ஒற்றைச் சிறு கயிற்றைக் கட்டிக் கடப்பவனும் என்றாலும் உயிர் அபாயத்திற்குத் துணிந்துதான் அச்செயலில் ஈடுபடுகிறான். மெய் சிலிர்க்க உள் நடுங்கி அதை வியந்து பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும். வீரம் என்பதே உயிர் பொருட்படுத்தாமைதான்.

ஓர் இனம் தனது பண்பாட்டின் அடையாளம் என்று பேணி வருகின்ற, காக்கத் துடிக்கின்ற ஒரு மரபு சரியா தவறா என்கிற சர்ச்சை அவ்வினத்தின் உள்ளிருந்தோ புறத்திருந்தோ ஏற்படுகின்ற போது அவற்றின் சாதக பாதகங்களைச் சீர் தூக்கிப் பார்க்கவும் நன்றெனில் ஏற்கவும் தீயதெனில் புறந்தள்ளவுமான அதிகாரம் அவ்வினத்தின் கைகளில் தான் இருக்க வேண்டும். ஒற்றுமைக் குரல் என்பது நம் மொழியும் இனமும் சிதைக்கப்படும் இடங்களில் எல்லாம் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dear Zindagi

 
மன நலம் பத்தி இப்ப வெளிப்படையா எல்லோரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. ஆரோக்கியமான விஷயம். மனநலத்தை முன்னிறுத்தி ஒரு அழகான படம்.  அட்வைஸ் சொல்றாப்ல இல்லாம இயல்பா மெசஜ் சொல்லியிருக்காங்க.

தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்குன்னு தெரியாமலேயே இருக்கும் இளம்பெண்ணாக தன்னுடைய நடிப்பை ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருக்காங்கன் சொல்வதை விட காய்ராவா வாழ்ந்திருக்காங்கன்னு சொல்லலாம். தூக்கமில்லாமல் தவிப்பதாகட்டும், தன்னுடைய பாணி வேலையை செய்ய முடியாமல் தவிப்பதாகட்டும் ஆலியா ரொம்பவே முன்னேறி இருக்கிறார். ஒரு குழந்தை வளர்ந்து பெரிதானதும் அவர்களின் செயல்கள், நடந்து கொள்ளும் முறை இவை எல்லாம் குழந்தையின் இளம்பிராயத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் வெளிப்பாடுதான் என்பதை  சொன்ன விதம் பிடிச்சிருக்கு.

படம் ஆரம்பிச்சு ரொம்ப நேரத்துக்கு பிறகுதான் ஷாருக்கான் ஸ்க்ரீன்லயே வர்றார். ஜக் எனும் மனநல மருத்துவர். ஆலியாவிற்கு ஒவ்வொன்றாக புரிய வைக்குமிடம் மிக அருமை. சிறுவயதில் தன் பெற்றோரிடம் வளர்ந்திடாமல் தனது தாத்தா பாட்டியுடன் வளர்ந்திருக்கும் காய்ரா (ஆலியா) பெற்றோர்களிடம் அவ்வளவாக ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறார். அம்மா, அப்பாவிடம் தினமும் 10 நிமிடம் பேச வேண்டும் எனும் ஹோம் வொர்க் கொடுக்கிறார் ஜக். பத்து நிமிஷமா? என்ன பேச? எனும் குழம்பும் காய்ரா 4 நிமிடம் பேசியதை பெரிய சாதனையாக நினைத்து சொன்னபோது அவருக்கு அட்வைஸ் ஏதும் சொல்லாமல், அவருடைய பிரச்சனைக்கு ஆணிவேர் அடிமனதில் இருக்கும் இளம்பிராய வருத்தம் அதை தூக்கிப்போட்டு பெற்றோருடன் நல்ல உறவு பேணுவதனால் அவருடைய தற்போதைய வாழ்வில் மாற்றங்கள் வரும் என்பதை புரிய வைத்து அதை செயல்படுத்தும் விதம் அருமை.

பீச்சுக்கு தன் தந்தையோடு வந்து அலைகளுடன் கபடி விளையாடியது நினைவுக்கு வருவதாக சொல்லும் ஷாருக், ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு இனிமையான நினைவுகளை தருவது ரொம்ப முக்கியமென சொல்வது என மெசஜ்கள் போகிற போக்கில் சொல்கிறார். இப்படித்தான் படத்தில் மெசஜ்கள் சொல்லப்பட்டிருக்கு. அட்வைசாக சொல்லாமல் அவசியம் ஏற்பட்டபோது சொல்லியிருப்பது அழகு.

ஷாருக்கின் சக்தே இண்டியா மாதிரி இந்தப்படமும் அவரின் வித்தியாச நடிப்பை காட்டுது. பாலிவுட் பாதுஷா எனக்கொண்டாடப்படுபவர் இப்படி வித்தியாசமாக  நடிப்பதற்கு பாராட்ட வேண்டும்.

யாருக்குத்தான் துன்பமில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம். ஆனால் அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் இருப்பதுதான் மேலும் பிரச்சனையாக இருக்கிறது. பழையதை தூக்கிப்போட்டு புதிய வாழ்க்கையை தொடங்குவது ஒன்றுதான் பிரச்சனைக்குத் தீர்வு என அழகாக சொல்லியிருக்காங்க இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் இயக்கிய கொளரி ஷிண்டே.

நமக்குள் மாற்றத்தை எப்படி கொண்டு வரவேண்டும். இந்தப்பாட்டுல அழகா சொல்லியிருக்காங்க.

LET GO PAST SAY HI TO NEW LIFE இதுதான் இந்த படத்தின் மெசஜ். புத்தாண்டு பிறக்க இருக்கும் இந்த நேரத்தில் புதிய வாழ்க்கைக்கு ஹாய் சொல்லி உங்களுக்கு ஐலவ்யூ சொல்லிக்கோங்க. வாழ்க்கை வாழ்வதற்கே..




AxPHsayQyJxTil2UWMfGD9oeB5jiLaICqg09FP-BzKOW7St1nAqgR3F1D0CduYF-xXpApfh2d-4P8VZHkMWn6LSmPOWr1c9Vg4Hz9GrUDBtJb7A-3k_56LDW8wXwIXUmf1Znyapn2w=s0-d
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூடிவைக்க முன்னர்
நம்பிக்கையோடு
கடைசி
மூன்று பக்கங்களைப் 
பரிதாபமாகப் 
புரட்டினேன்
அது
வெறுமையாக இருந்தது
அதில்தான்
கவிதையே இருந்தது.

 · 
 
No automatic alt text available.
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான. பதிவுகள் , நன்றி தங்கச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் உறவுகளே 31.12.2016

 · 
Image may contain: flower

இத்தோடு இந்த ஆண்டுக்கான தரவுகள் முடித்து வைக்கப்படுகிறது...என் அறிவுக்கு எட்டியவகையில் அவ்வப்போது நான் இணைத்துக் கொண்ட விடையங்கள் உங்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கும் என்று நம்புகின்றேன்.பார்த்து விட்டு செல்பவர்கள் வருட இறுதியிலாவது சின்ன சின்ன விமர்சனங்களை முன் வைத்தால் அது தான் எங்கள் நேரத்திற்காக கிடைக்கும் பரிசு.எது எப்படி இருப்பினும் எல்லாம் உங்கள் விருப்பம்.அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

 · 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு இந்த ஆண்டுக்கான தரவுகள் முடித்து வைக்கப்படுகிறது...என் அறிவுக்கு எட்டியவகையில் அவ்வப்போது நான் இணைத்துக் கொண்ட விடையங்கள் உங்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கும் என்று நம்புகின்றேன்.

 

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மலர்ந்திருக்கும் புத்தாண்டை உவகையோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து ,உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!

 
Image may contain: text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலம் சேரந்திருந்தோம் என்ற
கணக்கில்லை
இன்னும் எத்தனை காலம் சேர்ந்திருப்போம் என்ற
கவலையும் இல்லை
ஆண்டுகளை உதிர்க்கும்
கால மரத்தினடியில்
எப்போதும் நாமிருப்போம்
வெவ்வேறு ஊரில்
வெவ்வேறு பேரில்
சேயோன் யாழ்வேந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா இந்த வருடம் தனது 150 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றது. அதற்காக Toronto signஇல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் ........

Image may contain: night and text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடிய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பின்னர் நடைபெறும் முதலாவது தமிழ் மரபுத் திங்களின் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு Ajax Town Hall இல் நடை பெற்றது.

 
Image may contain: 2 people, text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
tm_toolbar_logo.gif    

 

 

பிரமிடு கட்டியவர்கள் தமிழரே: 5 தொன்மையான நாகரீகங்கள்

 
பிரமிடு கட்டியவர்கள் தமிழர்களே என்பதை பல கோணங்களில் செய்து வரும் நமது ஆய்வுத்தேடலை
 
உலகின் பல்வேறு தொன்மையான நாகரீகங்களோடு 
தமிழர்களின் நாகரீகம் கொண்டிருந்த 
பிரமிடு அல்லது பிரமிடு போன்ற கட்டுமானங்களின் 
அடிப்படையிலான தொடர்புகளில் தேடுவோம்.
 
tamils%2Bscience.jpg
 
இந்த தலைப்பின் முதல் பதிவில் கண்டது போல
 
5. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில முக்கிய தொன்மையான நாகரீகங்கள்:

1. நாஸ்கா பெரும் மண் ஓவியங்கள் உள்ள இன்கா  இனம் வாழ்ந்த பெரு (தென் அமெரிக்கா) 
2. உலகின் மிகப்பெரும் பிரமிடு உள்ள மாயன் இனம் வாழ்ந்த மெக்சிகோ (மத்திய அமெரிக்கா)
3. Stonehenge எனப்படும் இங்கிலாந்தில் உள்ள குத்துக்கல் வரிசை. (ஐரோப்பா)

4. உலகின் மிகப்பெரும் கோயிலான அங்கோர்வாட் உள்ள கம்போடியா (தென் கிழக்கு ஆசியா)
5. முகவாய் சிலைகள் நிறுவப்பட்ட ஈஸ்டர் தீவுகள் உள்ள சிலி Chile (தென் அமெரிக்கா)
6. குனுங் பதாங் பிரமிடு உள்ள இந்தோனேசியா (தென் கிழக்கு ஆசியா)
7. உளூரு பாறை (Uluru or Ayer Rock) உள்ள ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா)
 
5. 1. பெரு நாட்டில் உள்ள நாஸ்கா கோட்டு உருவங்கள்:

1. பெரு நாட்டில் பறக்காஸ் தீவில் உள்ள திரிசூல விளக்கு
 
vlcsnap-2016-08-09-22h32m00s808.png
 
paracas-peru-vacation-img01.jpg
map-ballestas-islands-paracas-local-excursion.jpg

1926 ல் இன்றைய உலகத்துக்கு தெரிய வந்த பெரு நாட்டின் ஆண்டீஸ் மலையில் உருவாக்கப்பட்ட பெரிய தரை உருவங்கள், நில ஓவியங்கள். நிலத்தில் இருந்து பார்த்தால் முழுமையாகத் தெரியாது வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் வகையில் உருவாக்கப்பட்டவைகள் அவை. அவை

1. நாஸ்கா உருவங்கள் பெரு நாட்டில் நாஸ்கா பாலைவன மலைப்பகுதியில்வரையப்பட்டுள்ளன.

2. 80 கி. மீ. பரப்பளவில் அவை அமைந்துள்ளன.

3. வரையப்பட்ட உருவங்களின்  எண்ணிக்கை 70 க்கும் மேல்.

4. கி. மு. 500 - கி.பி. 500 ஆண்டளவில் உருவாக்கப்பட்டவை.

5. பெரும்பாலும் 200 முதல் 660 அடிவரை நீளமுள்ள உருவங்கள். 

6. எதற்காக வரையப்பட்டன: மத ரீதியாக அல்லது வானியல் காரணங்களாக இருக்கலாம். காண்க:
 
நாஸ்கா ஓவியங்கள் வரையப்பட்டுள்ள மலை இருக்குமிடம்: 
தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரின் ஒரு பகுதி.
 
nazca%2B2.jpg
 
பெரும் ஓவியங்கள் என்னென்ன ஓவியங்கள் என்பது பற்றிய விளக்கத்துடன் 
மத்தியில் செல்லும் சாலையின் இருபக்கத்திலும் ஆங்காங்கே மலைகளில்...
 
 
NazcaLines.jpg

இந்த பெரும் தரை ஓவியங்கள் ஆகாயத்திலிருந்து தான் பார்க்க முடியும் என்பதால் மேலிருந்து எடுக்கப்பட்ட படங்கள். எவ்வளவு பெரியது என்பதை அங்கே சாலையில் செல்லும் வாகனங்களைக்கொண்டு அறிந்து கொள்ளலாம்.
 
vlcsnap-2016-08-09-22h36m07s788.png
 
foto_lineas.jpg
 
nazcatree.JPG

அருகில் சென்று பார்த்தால்...
 
vlcsnap-2016-08-09-22h32m34s074.png

சில தரை ஓவியங்கள் அவற்றின் அளவுகளுடன் 
 
vlcsnap-2016-08-09-22h34m39s187.png
 
vlcsnap-2016-08-09-22h33m47s069.png
 
vlcsnap-2016-08-09-22h33m57s586.png
 
vlcsnap-2016-08-09-22h34m34s957.png

இதே பெரு நாட்டில் தமிழர்களைப்போன்றே இறந்த மூதாதையருக்கு திதி செலுத்தும் வழக்கம் பற்றியும், சூரிய, சந்திர வழிபாடு, நாக வழிபாடு பற்றியும், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய லோக மாதா நகரமும், நம்மூரு மேரு மலை (இமய மலை) போல அங்கும் ஒரு மேரு மலை இருப்பதையும் காண: 

5. 2. 1. மாயன்களின் பிரமிடுகளும் தமிழர்களின் தொடர்புகளும் 

மாயன்கள் தமிழர்களே என்பதை 25 விளக்கங்களோடு ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். காண்க:
எனவே இப்பதிவில் அவர்களுடைய பிரமிடுகள் பற்றி மட்டுமே காண்போம்.

உலகின் மிகப்பெரிய பெரிய மாயன்கள் உருவாக்கிய சோலுலா பிரமீடே. இப்பிரமிடு இருக்குமிடம் மாயன்கள் வசித்த மெக்சிகோ நாடே.
 
mexico-location-map.jpg
 
மெக்சிகோவில் சோலூலா 
 
cholula.jpg

மாயன்களின் சோலூலா நகரின் பெயரைக் கேட்டவுடன் தமிழக சோழர்களின் ஞாபகம் வருகிறதா?
வரனும்ல. அதுபற்றி விளக்கம் காண:

சரி, தலைப்புக்குள் வருவோம்.

அந்த சோலூலா நகரத்தில் உள்ள ஒரு மலைக்கோயில்.

மெக்சிகோவை காலனியாதிக்கம் செய்த ஸ்பானியர்கள் கட்டியிருக்கும் கிறித்தவ கோயில்.
 
vlcsnap-2016-11-26-20h28m50s793.png
 
மலை மீது கோயில் கட்டப்பட்டிருந்தாலும் கூட கோயிலின் கீழே இருப்பது மலையா ?
 
the-worlds-largest-pyramid-is-not-in-egypt.jpg
 
 மலையல்ல மறைந்திருக்கும் உலகின் மாபெரும் பிரமிடு.
 
vlcsnap-2016-11-26-20h28m36s378.png
 
பிரமிடு மீது பல்லாண்டுகளாய், பல நூறு ஆண்டுகளாய் மண் குவிந்து மலையாகிவிட்டது.
 
Cholula%2B2.JPG

கோயிலில் இருந்து எவ்வளவு தொலைவு வரை பிரமிடு இருக்கிறது, இதே போல அந்தக் கோயிலின் அடுத்த பக்கமும்.
 
cholula%2Bpyramid.jpg


பிரமிடு அமைப்பை அப்படியே இருப்பது போல "ஒரு மாதிரி வடிவம்" செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அந்த பிரமிடின் பிரமாண்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

cholula_model.jpg
 
sciencefactspyramidcholula.jpg

சோலூலா பிரமிடு எகிப்திய பிரமிடை விட உயரத்தில் குறைவு தான்.

ஒரு துணைச்செய்தி:

(சோலூலா பிரமிடின் உயரமும், சோழர்களின் தஞ்சை பெரிய கோயிலின் உயரமும்ஒன்றே-66 மீட்டர்.)
 
vlcsnap-2016-11-26-20h24m59s344.png

தஞ்சை பெரிய கோயிலின் உயரம் - 66 மீட்டர்
 
thanjavur-temple-height-angle-of-lean%252Btamilnadu-rajaraja-cholan-pride%252Bfamous-tanjore-temple-66-meter-0-degree-angle-pics-1.jpg

ஆனால் நீள அகலத்தில்...
 
vlcsnap-2016-11-26-20h25m13s696.png

பரப்பிலும், தள அளவிலும் எகிப்து பிரமிடை விட நான்கு மடங்கு பெரியது சோலூலா பிரமிடு.
 
vlcsnap-2016-11-26-20h26m51s442.png

கி. மு. 300 அளவில் கட்டப்பட்ட இந்த பிரமிடு 1910 ம் ஆண்டு வரை யார் கண்ணிலும் படாமல் காடு, மண்ணால் புதையுண்டே கிடந்திருக்கிறது.
 
cholula%2B3.png

எகிப்திய பிரமிடுடன் ஒரு ஒப்புமை
 
pyramids2.JPG

5. 2. 2. மாயன்களின் மெக்சிகோ நாட்டில் உள்ள 
மற்றொரு முக்கிய பிரமிடு நகரம் 
Teotihuacan - தேயோத்திவாகன்.

 
teotihuacanmap.jpg

தேயோத்திவாகன் என்பதன் பொருள் "கடவுள்களின் பிறப்பிடம்", "Birthplace of the gods" காண்க:
 
teotihuacancityofgods12.jpg
மேலே உள்ள படத்தில் அந்த நகரத்தில் உள்ள 3 முக்கிய பிரமிடுகள்

சந்திர பிரமிடு, சூரிய பிரமிடு,  மற்றும் பறவை நாக பிரமிடு
 
9%2Bmoon%2Bteotihuacan-10-638.jpg
3-teotihuacan-8-638.jpg
 
சூரிய பிரமிடின் உயரம் கணிக்க இன்னொரு படம்.
 
large.jpg
 
 
 
 
quezatemple.jpg
temple%2B2.jpg


இந்த 3 பிரமிடுகளும் இணைந்த அரிய புகைப்படம். 
மைய சாலையில் உள்ள மக்கள் புள்ளியாக தெரியும் அளவுக்கு 
உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதன் மூலம் 
பிரமிடுகளின் அளவினை கணிக்கலாம். 
படத்தை பெரிதுபடுத்தியும் காணலாம்.
 
6%2Btoghetr%2Bpyramid%2Bof%2Bsun%2Bmoon.jpg

இந்த 3 பிரமிடுகளும் இணைந்த வரை படம். 
 
teotihuacan_map.gif

எகிப்திய 3 பிரமிடுகளுக்கும் ஓரியன் நட்சத்திரக்கூட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை போலவே இந்த நகரத்திலும் உள்ள 3 பிரமிடுகளுக்கும் ஓரியன் நட்சத்திரக்கூட்டங்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பது அதிசயமே.

எகிப்திய பிரமிடுகள் - ஓரியன் நட்சத்திரக்கூட்டம் - தேயோத்திவாகன் பிரமிடுகள்
 
1%2Borion%2Bteotihuacanorion1a.jpg
 
 
  
The most obvious comparison, however, is that the layout of both the three pyramids at Gizeh and the three main structures of Teotihuacan represent the Belt of Orion

The Pyramid of the Moon compares with the smallest pyramid on the plateau,  
the Sun Pyramid with Khafre and 
the Temple of Quetzalcoatl, which has the largest ground plan, but never was built into a full pyramid, compares with that of Khufu. 
 

Though there are individual differences, I would suggest that the same ingredients have been used, answering to the same general ground plan: to represent the Belt of Orion, which in ancient Egypt was the symbol of Horus

ஓரியன் நட்சத்திரக்கூட்டத்தோடும், எகிப்திய பிரமிடுகளோடும் ஒப்புமைப்படுத்தி பார்க்க மேலும் விரும்புவோர் காண்க:

golden-geographic-position-of-great-pyramids.jpg

மேலும் மாயன் பிரமிடு அமைப்புகளுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசிய பாலித்தீவிலும் இதே போன்ற பிரமிடு அமைப்புகள் இருப்பது ஆச்சரியமான ஒற்றுமை.
 
temple%2B3.jpg
 
 

5. 3. Stonehenge எனப்படும் இங்கிலாந்தில் உள்ள 
குத்துக்கல் வரிசை. (ஐரோப்பா)

5100 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்ட இங்கிலாந்தில் இருக்கும் இந்த Stonehenge எனப்படும் குத்துக்கல் வரிசை என்ற தொன்மையான கட்டட அமைப்பும் வானியல் பூர்வமானது. காண்க:
sh-av-3089-w.jpg

குத்துக்கல்வரிசை எவ்வளவு உயரமானது என்பதைக்கான... 
 Stonehenge.jpg

அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கு வருகை தந்தபோது... 

obama%2Bin%2Bstonehenge.jpgசுற்றுலா பயணிகள், ஆய்வாளர்கள்...
vlcsnap-2016-12-27-23h08m15s056.png

வானியலோடு உள்ள தொடர்பில் 
சூரியனின் நிலநடுக்கோடு வருகையின் போது உருவாகும் ஒளி 
யினை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது. 
 
history-of-astronomy-11-728.jpg
 இதனை விளக்கும் விதமாய் இன்னொரு படம்.
hqdefault.jpg

மாயன்களின் பிரமிடு கடக - மகர ரேகை சூரிய ஒளி நாளில் ஏற்படும் பாம்பு உருவம் போல உருவாக்கப்பட்டது இங்கிலாந்து குத்துக்கல்வரிசை.
slide_10.jpg
 
 
 
temple%2B5.jpg
 

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகருக்கருகில் உள்ள குத்துக்கல் வரிசையும் சூரிய நிலநடுக்கோட்டு சம ஒளி நாளை குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட குத்துக்கல் வரிசையே.
 
australia%2Bwurdi.gif

 இந்தியாவின் மணிப்பூரில் உள்ள குத்துக்கல்வரிசையும் வானியலோடு தொடர்புடையதே. காண்க:
 
Stone_Erections_of_Willong_Khullen.jpg
  
குத்துக்கல்வரிசை பற்றிய ஒரு தமிழ்க் கட்டுரை.
stones%2Btamil.jpg

5. 4. உலகின் மிகப்பெரும் கோயிலான அங்கோர்வாட் உள்ள கம்போடியா (ஆசியா)

 
கம்பூச்சியா அ கம்புஜா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். 
 
cambodia-map.gif
 
கம்போடியாவிலுள்ள இனத்தின் பெயர் குமர் (khmer).
 
இந்த மக்களை கம்போடியர் என்றும் குமர் என்றும் அழைக்கின்றனர். 
1024px-Cambodia_ethnic_map.svg.png

அன்றைய கம்போடியா குமர் நாடு என்றே அழைக்கப்பட்டது. அன்றைய குமர் மற்றும் இன்றைய கம்போடியா இணைந்த நில வரைபடம். (வெள்ளைக் கோடுகள் இன்றைய நாடுகளின் எல்லைகள்; வண்ணத்தில் உள்ளவை அன்றைய நாடுகள்)
 
khmerempire-map.gif

மேரு மலையை உலகின் மையமாக நினைத்தவர்கள் தமிழர்கள். 
அதனால் இனப்பரவல் நிகழ்ந்த இடங்களில் எல்லாம் மேரு மலை என்ற பெயரை மலைகளுக்கு வைத்தவர்கள். காண்க:

இந்தோனேசியாவில் செமெரு, காண்க:  
ஆப்பிரிக்க தான்சானியாவில் மேரு மலை, 
இமய மலையின் மேற்கில் சுமேரு, காண்க:  
இமய மலையின் கிழக்கில் குமேரு, 
ஆஸ்திரேலியாவிற்கருகில் தெற்கு மேரு எனும் திமேரு (Timor), காண்க:  
அமெரிக்காவில் மிசைமேருக்கா காண்க: 
இஸ்ரேல் நாட்டில் மோரியா.

தமிழ்நாட்டின் தென் முனை குமேரு முனை. 
(குமரி முனை அல்ல

கீழே உள்ள நிலப்படத்தில் மேரு மலை (இமய மலை) தற்போதைய ஈரானிலிருந்து தாய்லாந்து வரை பெருமலையாய் பரவி இருப்பதைக் காணலாம்.

குமேரு என்பது மறுமுனை அ மலையின் முடிவில் கீழ்ப்பகுதி அ தாழ்வு பகுதி என்று அர்த்தம் பெறுகிறது.
india-physical.jpg
 
 
கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர் உருவாயிருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே தேடிப்பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். காண்க:
 
5 ம் நூற்றாண்டில் இருந்த தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு. 
சமஸ்கிருத கிரந்தம் என்று ஆரியமயப்படுத்தப்பட்டிருக்கிறது. 
பெரிதுபடுத்தியும் காணலாம். காண்க:
 
Funan_stele.JPG
khmr.jpeg
கம்போடியா நாட்டின் மிக முக்கிய நகரம் அங்கோர்வாட்.
 
Khmer-Empire.jpg
 
அங்கோர் வாட் 
இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் 
கட்டப்பட்டது. காண்க: 
angkor%2Bbuilt.jpg
 
நமது சோழப்பேரரசு உச்சத்தில் இருந்த காலம் இது. 

ராஜேந்திர சோழன் (ஆட்சிக்காலம் c. 1014–c.1044 CE) காலத்தில் சோழப்பேரரசோடு தொடர்பில் இருந்த ஆட்சி முதல் சூரியவர்மனின் ஆட்சி. காண்க:
Suryavarman I (reigned 1006 – 1050) established diplomatic relations with the Chola dynasty of south India. Suryavarman I sent a chariot as a present to the Chola Emperor Rajaraja Chola I. Suryavarman requested aid from the powerful Chola Emperor Rajendra Chola I of the Chola dynasty against the Tambralinga kingdom. After learning of Suryavarman's alliance with Rajendra Chola, the Tambralinga kingdom requested aid from the SrivijayaKing Sangrama Vijayatungavarman. This eventually led to the Chola Empire coming into conflict with the Srivijiya Empire. The war ended with a victory for the Chola dynasty and of the Khmer Empire, and major losses for the Sri Vijaya Empire and the Tambralinga kingdom. This alliance also had religious nuance, since both Chola and Khmer empire were Hindu Shivaist, while Tambralinga and Srivijaya were Mahayana Buddhist. There is some indication that before or after these incidents Suryavarman I sent a gift, a chariot, to Rajendra Chola I to possibly facilitate trade or an alliance.
 
Rajendra_map_new.svg.png
 
Chola_dynasty_map_-_Tamil.png

அங்கோர் என்றால் நகரம் என்றும், வாட் என்றால் கோயில் என்றும் பொருள். வாட் என்றால் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். 
 
heritage-tehreem-3-638.jpg

அங்கோர்வாட் கோயிலைச் சுற்றியுள்ள அகழி மேரு மலையை சுற்றியுள்ள  பெருங்கடலை குறிக்கும்.(சாகர் (கடல்) மாதாவை நினைவில் கொள்வோம்). காண்க:
Angkor-Wat-from-the-air.JPG
 
கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர், நிலம், காற்று ஆகிய தளங்கள். 

இங்குள்ள 5 கோபுரங்கள் மேரு மலையின் உயர்ந்த 5 சிகரங்களைக் குறிக்கிறது.  
 
Panchchuli_mountain.JPG
AngkorWat+5+towers.JPG
 
 















 
 
மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் ஏழுவளையங்கள்
மேரு மலையை சுற்றி இருக்கும் ஏழு மலைத்தொடர்கள். 

கோயில் கட்டப்பட்ட போது விஷ்ணு கோயிலாக இருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பௌத்த கோவிலாக(தேரவாதம்) இன்றளவும் பௌத்த கோயிலாகத் தான் இருக்கிறது. கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை. ஆனால் விஷ்ணுவுக்கு மாலையிட்டு வழிபடுகிறார்கள். 

ம் நமோ நாராணா என்ற 8 எழுத்து வார்த்தைக்கு இந்த பிரபஞ்சம் முழுதும் 8 திசையிலும் பரவியிருக்கும் விண்ணியலைக் குறிக்கும். விண்ணவம்-விண்ணு-விஷ்ணு. காண்க: 
 
கீழே அங்கோர்வாட்டில் உள்ள விஷ்ணுவின் சிலையில் 8 கரங்கள்.
 
vishnu%2Bbuddha-in-angkor-wat.jpg
 
vishnu-angkor-wat.jpg
 
Vishnu.jpg

அங்கோர் வாட் கோயிலில் பாற்கடலைக் கடையும் தமிழர்களின் வானியல் அறிவை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி கல் ஓவியமாக சுவரில் பதியப்பட்டுள்ளது.
   
பாற்கடல் புராணத்தில் தமிழரின் வானியல் அறிவு பற்றிய விளக்கம் காண:
 
AngkorWat%2Bchurning%2Bgood.jpg

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.  இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது. " இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 
காண்க: ஈகரை.
 
இந்தக்கோயில் எவ்வளவு பெரியது என்பதை கீழே அங்கோர்வாட்டின் முன்பாகக் காணப்படும் மக்களின் உயரத்தைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம். 
 
Ankhorwat+with+people.jpg
 
 
 
கம்போடியா நாட்டுக்கொடியிலும் அங்கோர்வாட் கோயில்தான் உள்ளது.
 
khmer+flag.jpg
 
5. 5. ஈஸ்டர் தீவின் பிரம்மாண்ட சிலைகளும் தமிழர் தொடர்புகளும் 

ஈஸ்டர் தீவுகள் என்று பரவலாக அறியப்பட்ட சிலி நாட்டுக்குச் சொந்தமான ரப்பா நூயி தீவுகள் மிகப்பழமையானவை தமிழர்களோடு தொடர்புடையவை.

 
polynesia-map.png


ஜேக்கப் ரோஜ்ஜவீன் என்ற டச்சுக்கார முதல் ஐரோப்பியர் 1722 ஏப்ரல் 5[8] அங்கு கரை இறங்கிய நாள் ஈஸ்டர் என்பதால் அப்பெயரை வைத்தார்.
இந்த தீவின் உண்மையான பெயர் ரப்பா நுயி (Rapa Nui) என்பதே.

இந்த தீவில் பிரம்மாண்டமான மனித முக சிலைகள்
(அவர்கள் வைத்துள்ள பெயர் முகவாய் தான் (Moai)) மொத்தம் 887 இருக்கிறது. ஒரு சிலையைக்கூட இன்றைய தொழிநுட்பம் கொண்டும் அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது.
எங்கெங்கு அந்த சிலைகள் என்ற படம். 


 
Easter+island.png
 
 
அந்த சிலைகளில் ஒரு சில 
 
easter+AhuTongariki.JPG
 
இந்த சிலைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பெரியது என்பதை அருகிலுள்ள நபர்களைக் கொண்டு காணலாம். 
 
easter%2Bisland%2BMoais.1.jpg
 
 
 
easter.gif
easter%2Bmap.png

ரப்பா நூயி தீவுகளில் வாழ்ந்து கடல்கோளில் மறைந்தவர்கள் பயன்படுத்திய குறியீடுகளும்,

சிந்து சமவெளி தமிழர்களின் குறியீடுகளும் எவ்வாறு ஒரேமாதிரியாய் உள்ளன என்று பார்த்தால் ஆச்சரியமாய்த்தான் உள்ளது.

படித்ததிலிருந்து.......

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தி.....

தஞ்சைப் பெரிய கோவில் நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 18.25 அடி அகலம் கொண்டதாகும். அதை ஒரே பாறை கொண்டு செதுக்கியுள்ளர்கள். அந்த பாறை 2500 எடை கொண்டதாக சொல்லப்படுகிறது.
அந்த பாறை பெரம்பலூர் அருகேயுள்ள பச்சைமலை என்னும் இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக வரலாறு சொல்லுகிறது. வேறு சில அறிஞர்கள், வடக்கிலிருந்து நர்மதை நதி மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.இதன் உயரம் 39.6 மீட்டர், 130அடி, எடை 635 டன், இக் கிறீஸ்துவின் சிலை பிரேசிலின் ரியோடிஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இவ் அதிசயத்தை கோகோவடோ மலைப்பிரதேசத்தில் காணலாம்.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

babyklon hanging garden:
பபிலோனின் தொங்கு தோட்டம்:
பபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.

ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.

பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.

No automatic alt text available.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.