Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 முந்நீர்:-மூன்று வகையாக நீர் சேர்ந்து உருவானதால் முந்நீர் எனப்பட்டது. அவை: ஆற்று நீர், ஆறுகளிலிருந்து கடலில் சேரும் நீர்., ஊற்று நீர், இயற்கையாகவே கடலின் தரைப் பரப்பிலுள்ள ஊற்றுகளிலிருந்து சுரக்கும் நீர்., வேற்று நீர், மழை போன்ற இயற்கையின் மற்ற செயல்களால் கடலில் சேரும் நீர்.....

 

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இது எனது 109 ஆவது பக்கம்...வந்து புரட்டிச் செல்லும் அத்தனை உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
Image may contain: plant, flower and nature
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது.

1. புத்தகங்களை துணை கொள்.
2. உடலுழைப்பை அதிகரி.
3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
4. குளிர் நீரில் குளி.
5. கொஞ்சமாய் சாப்பிடு.
6. தியானம் கைகொள்.
7. இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.
10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
11. ஆத்திரம் அகற்று.
12. கேலிக்கு புன்னகை தா.
13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
14. நட்புக்கு நட்பு செய்.
15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
17. அன்பு செய்தால் நன்றி சொல்.
18. இதமாகப் பேசு.

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! ! 

வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

கேள்வி பதில் பாகம் 4 என்ற நூலில் 
இந்த அற்புதமான யோசனைகளை
பாலகுமாரன் அவர்கள் சொல்கிறார்.

Image may contain: 1 person, beard and text
படித்ததிலிருந்து........
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாசாவில் சாதனை படைத்த வன்னித் தமிழ் பொறியியலாளன் 

அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே “அகரன்” என பெயரிட்டுள்ளார்.

இது குறித்த செய்திகளும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவரின் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

யார் இவர் ?

முல்லைதீவை வசிப்பிடமாக கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் புதல்வனே
ரானேந்திரன் .இவர் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிர மணிய வித்தியாசாலை
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்று பின்னர்

சென்னை Srm பல்கலைக்கழகத்தில் விண்பொறியியல் இளங்கலை அறிவியல் கற்றவர்.

பல்கலையால் அப்போது அனுப்பப்பட்ட நுண்செய்மதி ஒன்றில் கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

Isro வின் பல இணைப்பகங்கள் உள்ளடங்கலாக இந்தியாவில் பல வான்பொறியியல் நிறுவனங்களில்
கற்கைப்பயணம் மேற்கொண்டிருந்தவர்.

விண்ணறிவியல் தொடர்பான பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பட்டப்பின் கல்வி தற்போது அமெரிக்காவில்.
Spacecraft navigation dynamics and contol- விண்கலம் செலுத்துகை இயக்கவியலும்
கட்டுப்படுத்தலும் என்கின்ற நுண்ணறிவியலில் ஆய்வுக்கல்வியை மேற்கொள்பவர்.

இது தொடர்பில் பதினொரு செயற்றிட்டங்களிலும் ஈடுபட்டவர்.

விண்கலங்களை தாய்க்கலத்துடன் இணைக்கும் முறையின் மேம்பாடு பற்றி தனி ஆய்வை மேற்கொள்பவர்.

பல செயற்றிட்டங்கள் மற்றும் ஆய்வுமுறைகள் தொடர்பில், அமெரிக்க விண்வெளிவீரர்கள் மற்றும்
அறிவியலாளர்கள் பலரது பாராட்டைப்பெற்றவர்.

காலவெளி அறிவியலில் மேற்கொள்ளும் தனிப்பட்ட ஆய்வுகளுக்காக அமெரிக்க அறிவியலாளர்களின்
கவனத்தைப்பெற்றவர்.
பாராட்டையும்.

வியாழக்கோளின் சுழற்சியால் விளையும் பொதுச்சார்பு விளைவுகளில் ஒன்றான காலவெளிச்சட்ட
இழுகையான Einstein thirring lense விளைவை மையப்படுத்திய அறிவியல் உரையாடலில்
நாசாவின் கோளியல் காந்தமண்டல ஆய்வுக்கூட அறிவியலாளரால் பதிலளிக்க இயலாத ஆய்வுக்கேள்வி
என அவையில் பாராட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விண்ணறிவியல் சார்ந்த பல அறிவியல் மாநாடுகளில் பங்குகொண்டவர்.

வானூர்தி அறிவியல் ,ஏவுகணை அறிவியல், செய்மதித்தொழில் நுட்பம் உள்ளடங்கலான பல
பிரிவுகளில் செயற்றிட்டங்களை மேற்கொண்டவர்.

கற்கை நெறி சார்ந்து தற்போது வடிவமைத்த ஏவுகணைக்கு அகரன் எனப்பெயரிட்டார்.

வரும் மாதங்களில் மேலும் திறன்வாய்ந்த ஏவுகணைகளால் தமிழை அழகுபடுத்துவேன் என தெரிவித்தார்.

Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 1 person, sky and outdoor

 

14907642_1804284703120375_85244318041297
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1887: உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்போர்னில் நடைபெற்றது.

Image may contain: one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hrs · 
 

இறைவன் நம்மை சோதிப்பதும்...!!

குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.
“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.

ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.

“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.” என்று கூறினார் குரு.
மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.

மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன.

இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்டார் குரு.

"இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவைதான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். 

இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.

“தெரியவில்லை."

"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார்.

அதிலிருந்து தேன் வெளியேவந்தது.
மற்றொரு ஜாடியை கவிழ்த்தார்.
அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள்என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது.

இரண்டும்
ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் அது வெளியே தெரியாமல் இருந்தது.

ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது."
"இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும்வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். 

ஆனால் சோதனையை சந்திக்கும்போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது."
"நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. 

நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார்.
“மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான்அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?”

அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!”
“இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள்வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்று யோசித்து பாருங்கள்!

”கெட்டவர்களுக்கும் 
சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். 

ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவிசாய்ப்பதில்லை.

இறைவன் நம்மை சோதிப்பதும் நமது: உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே.
அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள.............!!!

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, coffee cup, drink and closeup
ராதா ஸ்ரீ
ஒரு நாள் தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.

திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற சாதாரண கோப்பைகள் வரை பல வகைகள் இருந்தன. 

அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்

இப்போது பேராசிரியர் பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.

வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை. 

*"எளிமையாய் வாழுங்கள்!*

*கருணையுடன் பேசுங்கள்*

*எல்லோரையும் நேசியுங்கள்!*

*வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்"*

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.

- தி.ஜானகிராமன் 

(கல்கி-27.08.1961- மோகமுள் நாவல் பிறந்த கதை குறித்த நேர்காணல் )

Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On March 13, 2017 at 5:58 PM, புங்கையூரன் said:

இதென்ன கேள்வி..?

எழுதுங்கள்...யாயினி!

ஒரு ஹைக்கூ திரி ஒன்று தொடங்குங்கள்!

பூந்து விளையாடுவோம்!

ஆ...ஆ..நான் ஏதாச்சும் சொல்ல வெளிக்கிட்டால் உங்களைப் போல் சில உறவுகளைத் தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை..இருக்கும் பக்கத்தையே ஒழுங்காக எடூத்து செல்கிறேனோ தெரியவில்லை..சோ; உங்களால் முடிந்தால் பொது அறிவுகளோடு ௬டிய ஆக்கத்தை எமக்காக எடுத்து வாருங்களன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இனிய வெள்ளி காலை வணக்கம்..

 · 
Image may contain: 2 people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

St Patrick's day 17.03.2017

170px-St._Patrick%27s_Day_greetings.jpg

St. Patrick's Day greetings card from the early C20
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் அட்டை மோசடி குறித்த குற்றச்சாட்டில் 25 வயதான நிருபா ஜெகதீஸ்வரன் கைது !!!!

 · 
 
Image may contain: 1 person, closeup
ThesiyamLike Page
2 hrs · 

கடன் அட்டை மோசடி குறித்த குற்றச்சாட்டில் 25 வயதான நிருபா ஜெகதீஸ்வரன் கைது !!!!

கடன் அட்டை மோசடி குறித்த குற்றச்சாட்டில் Ajax நகரத்தைச் சேர்ந்த 25 வயதான நிருபாஜெகதீஸ்வரன் என்பவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

During October 2016, the Toronto Police Service Financial Crimes Unit, along with investigators from the Toronto Transit Commission, started an investigation.

It is alleged that:

- a woman would attend various TTC collector booths throughout the city purchasing rolls of tokens

- the woman would produce a forged credit card as payment

- the credit cards were encoded with stolen credit card data

- the woman would also purchase pre-paid gift cards using forged credit cards

- a search warrant was executed at the woman's residence

- 42 forged credit cards along with equipment capable of encoding cards were recovered

On Wednesday, March 15, 2017, Niruba Jegatheeswaran, 25, of Ajax, was arrested. She is charged with:

1) 14 counts of Unauthorized Possession Credit Card data
2) 14 counts of Possession of Credit Card Obtained By Crime
3) Possession of Property Obtained by Crime over $5000
4) Fraud Over $5000
5) Possess Instrument for Copying Credit Card Data
6) Unlawful Possession of an Identity Document

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாசறு பொன்னே வருக

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே

பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.
‘உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.
நல்ல வேளையாகப் பிணமானாள்.
இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்’.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு பகிர்வு

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

* பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

* அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

* மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Krishanti_Vignarajah_1600x800-770x603.jp

Inspirational Tamil Women: Michelle Obama’s right hand woman, Krishanti Vignarajah

Source: Birchbox

This month, and every month, we celebrate powerful and influential women. We remember and reflect on what women all over the world have done in pursuit of equality, and celebrate those who have broken the glass ceiling (or part of it, at least). One of these incredible women is Krishanti Vignarajah, the powerhouse behind initiatives like Michelle Obama’s Let Girls Learn, and her firm, Generation Impact. Krishanti Vignarajah’s work is fueled by the belief that if given adequate support and opportunities, girls can change the world.

As a young girl, Vignarajah escaped the growing violence in Sri Lanka to came to America with her parents and brother. The daughter of two teachers, her parents instilled the importance of education.“For me, like for so many women and girls around the world, education was the springboard – the eye-opening, world-expanding fairy dust that gave me a chance to realize my potential,” says Vignarajah.

With the help of amazing teachers and mentors, Vignarajah earned a Master’s degree in Political Science and a B.S. in Molecular Biology from Yale College, where she later returned for Law School. As if that’s not impressive enough, Vignarajah also became a Marshall Scholar at Oxford University. “I’ve been blessed to learn from inspiring teachers and work with amazing people every day of my life, from Yale to Oxford,” she said.

Throughout her incredible educational journey, Vignarajah began to feel a “personal responsibility to help girls around the world fulfill theirs.” Enter: Michelle Obama and the Let Girls Learn initiative, which helps girls around the world to receive a quality education that empowers them to reach their full potential. Serving as Policy Director to Michelle Obama, Vignarajah worked alongside the First Lady to lead this influential initiative.

But Vignarajah’s work didn’t stop when the Obama’s left the White House. She started her own firm, Generation Impact, which partners with nonprofits and social enterprises to create strategic partnerships and execute innovative strategies to positively impact on the world. She works to tackle issues like education, entrepreneurship and women and girls empowerment, allowing Vignarajah to continue the work she is so passionate about.

In our opinion, Krishanti truly defines Pretty Mighty and we honor the way she has forged a path for so many women who are facing similar challenges that she did early in her life. She is a reminder that while we’ve made incredible progress, we still have a long way to go and that every effort helps. What makes you feel Pretty Mighty?

 

http://www.thamarai.com/lifestyle/society/tamil-women-michelle-obamas-right-hand-woman-krishanti-vignarajah

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....................................................................

இந்திய கார் ஓட்டப்பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் கார் விபத்தில் மரணம்

March 18, 2017

ashwin-sundar-wife-nivetha21.jpg
கார்  ஓட்டப்பந்தயத்தில்  சர்வதேச சம்பியன் பட்டம் மற்றும்  தேசிய அளவில் பட்டம் வென்ற  இந்திய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர்  விபத்தில்  உயிரிழந்துள்ளனர்.

பிரபல கார் பந்தைய வீரர் அஸ்வின் இலங்கையைச் சேர்ந்த நிவேதா  என்பவரை திருமணம் செய்து ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று  உணவருந்திவிட்டு இன்று அதிகாலை வேளையில் திரும்பிக் கொண்டிந்த வேளை இந்த பவிபத்து இடம்பெற்றுள்ளது.

காரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதியதாகவும் இதனால் கார் தீப்பற்ளிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/21444

சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Ashwin_Sundar_07567.jpg

சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம்காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது. தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியவர். அவருடைய மறைவு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

car23434343_09146.jpg

படம்:கே.ஜெரோம்

 

www.vikatan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பெண்களின் ஆடையை பெண்களே சிந்திக்க.....
மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, 

மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,
" ஹானா, இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.

தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "

என்னை உற்று நோக்கியவராக,
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..!

 
Image may contain: 3 people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*?

*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*

*தேவைக்கு செலவிடு........*

*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*

*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*

*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*

*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*

*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*

*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*

*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*

*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*

*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*

*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*

*உன் குழந்தைகளை பேணு......*

*அவர்களிடம் அன்பாய் இரு.......*

*அவ்வப்போது பரிசுகள் அளி......*

*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*

*அடிமையாகவும் ஆகாதே.........*

*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* 

*காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*

*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*

*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*

*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*

*ஆனால்......*
*நிலைமையை அறிந்து* 
*அளவோடு கொடு*

*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*

*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*

*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*

*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*

*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*

*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*

*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*

*நண்பர்களிடம் அளவளாவு.*

*நல்ல உணவு உண்டு.....*

*நடை பயிற்சி செய்து.....*

*உடல் நலம் பேணி......*

*இறை பக்தி கொண்டு......*

*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*

*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*

*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரே இன்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் இது...

எங்கள் உறவுக்காரருக்குள் என்றைக்குமே அசைக்க முடியாத சொத்தாக இருந்தது கல்வி மட்டும் தான் அதிலும் சாதாரண தரத்தில் முதல் முதல் 10 A எடுத்துக் காட்டியவள் இவள் தான்.
உயர்தரத்தில் பெரிதாக எதிர்பார்த்திருந்தோம் ஆனால் பரீட்சைக் காலத்தில் நடந்த மச்சாளின் இழப்பானது (இவளின் தாயார்) மூத்த பிள்ளையான அவளின் கல்வியை கேள்விக் குறியாக்கியது.

அதன் பின் பங்களாதேஸ் போய் Bsc முடித்து ஹொலண்ட் போய் Environmental Technology இல் Msc யும் முடித்து தன் திறமையை மீண்டும் நிருபித்ததும் அல்லாமல் இன்று சர்வதேச விருது ஒன்றையும் பெற்றுள்ளாள்.

அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் the sustainability research network நிறுவனம் சர்வதேச மட்டத்தில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்கு வந்த 12 கட்டுரைகளில் ஒன்றாக இருந்து இறுதியில் முதல் இடம் பெற்றிருக்கிறது.

ஆய்வு எதைப்பற்றியது என்றால் (implementing bioremediation technologies to degrade chemical warfare and explosives from war affected regions in srilanka) போர் நடந்த பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ததுடன் அந்த இரசாயணப் பொருட்களை செயற்கையாகவும் இயற்கையாகவும் எப்படி அழிக்கலாம் என்ற தீர்வையும் முன் வைத்திருந்தார்.

முன்னர் டென்மார்க் இல் சமர்பித்து அங்கிருந்து தெரிவாகியே அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு இந்த விருது கிடைத்துள்ளது. அடுத்து அவுஸ்திரெலியாவில் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றி அவளுக்குரிய வெற்றியல்ல எங்களது வெற்றியாகவே பார்க்கிறோம். வாழ்த்துக்கள் மகள். இது உன்னுடைய வெற்றியின் ஆரம்பம். உன் கடமையை சரியாய்ச் செய்தாய் இலக்கியா.

Image may contain: 2 people, people standing

மதிசுதாவின் பக்கத்திலிருந்து...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • இனிப்பு - தசையை வளர்க்கின்றது-முதல் சுவைக்கு கடந்த வாரம் தொடக்கம் எனக்கு தடை விழுந்து விட்டது.
  • புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
  • கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
  • உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
  • துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
  • கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது -எஸ்.பி.பாலசுப்ரமணியம்

March 19, 2017
March 19, 2017
 

sp-balasubramaniam367833-60.jpg

இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  தனது முகப்புத்தக பக்கத்தில் இதனைத் தொிவித்துள்ளாா்.

 

அதில்  தொிவிக்கப்பட்டுள்ளதாவது

என்னுடைய ரசிகர்களுக்கு வணக்கம். கடந்த வார இறுதியில் சியாட்டிலிலும், லாச் ஏஞ்சல்ஸிலும் நடந்த இசைக்கச்சேரிகளுக்கு வந்தவர்களுக்கும், நிகழச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், என்னுடைய மகன் சரண், பாடகி சித்ரா மற்றும் இசைக் கச்சேரி ஓருங்கிணைப்பாளர்களுக்கும்  கடிதம் அனுப்பியுள்ளார். அதாவது இளையராஜா இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதி இல்லாமல் இனி பாடக் கூடாது எனவும் மீறி பாடினால் அபராதத்தொகையை சட்டப்படி கொடுக்க வேண்டியிருக்கும் எனவும்  குறிப்பிட்டிருந்தது. ஆனால் எனக்கு இந்த சட்டத் திட்டஙகள் மீது சரியான புரிதல் இல்லை.

எனது மகன் சரண் சர்வதேச அளவில் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து, அதற்கு எஸ்.பி.பி.50 என்று பெயர் வைத்து டொரண்டோவில் தொடங்கினோம். இதனைத்தொடர்ந்து ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் இசைக் கச்சேரியை நாங்கள் நடத்திவருகிறோம். ஆனால் அப்போதெல்லாம் வராத கடிதம், இப்போது வந்துள்ளது என்பது தான் எனக்கு புரியவில்லை. இது தான் சட்டம் என்றால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் .

எனவே இந்த சூழலில், இனிமேல் நானும், எங்கள் குழுவினரும் இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை இசைக்கச்சேரியில் பாட மாட்டோம். ஆனால் கச்சேரி நடக்க வேண்டும். கடவுளின் அருளால் இளையராஜா தவிர, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை நான் பாடியுள்ளேன். உங்கள் ஆசீர்வாதம்… அந்த பாடல்களை இனிவரும் இசைக்கச்சேரிகளில் நான் பாடுவேன். இனிவரும் இசைக் கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

உங்கள் அனைவரிடமும் என்னுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால் இது குறித்து எந்த விவாதமோ, கருத்தோ கூறவேண்டாம். கடவுளின் எண்ணம் எதுவோ அதுவே நடக்கட்டும் என  எஸ்.பி.பி குறிப்பிட்டுள்ளார்.

spb234.jpg

 

http://globaltamilnews.net/archives/21570

http://globaltamilnews.net/archives/21570

----------------------------------------------------------------------------------------------

spb-2-770x315.png

SPB 50 World Tour: Tamil Music composer Iliayaraja calls in the lawyers

S.P Balasubramaniam & Ilayaraja, two legendary icons in the South Indian music industry are about to enter a dispute which could change the future of Indian music.

spb-ilaiyaraja.png

S.P. Balasubramaniam is a renowned, award winning, South Indian playback singer who is currently celebrating his 50th anniversary in the Indian music industry with a world tour. SPB 50 Grand World tour began in 2016 and so far concerts have been conducted in major international cities including Toronto, Moscow, Colombo, Kuala Lumpur, Singapore & Dubai.

ilaiyarajah-sbp-770x433.jpg

The American leg of the tour started on the 11th March in Seattle, followed by Los Angeles on the 12th March 2017. There are a further 12 concerts to be conducted in America, home to a large South Indian (Tamil, Telugu, Malayalee & Kannada) diaspora. 

ilaiyaraja-2.jpg

Award winning, South Indian music composer Iliayaraja who is credited with composing many of the hit songs sung by S.P Balasubramaiam, has instructed his lawyers to seek compensation should his compositions be performed at future concerts. 

In a statement published via S.P.B’s Facebook page on Saturday 18th March 2017, the S.P.B shared the following.

Dear all, Greetings from US. Had great shows in Seattle and LA last weekend. Grateful for the love you all showered upon us and the profesdional way the organizers conducted the shows.

Couple of days back, an Attorney representing Shri.Iliaya Raja, sent legal notices to me, Smt.Chithra, Charan, organisers of the concerts in different cities and the managements of all the venues, which says that we are not supposed to perform compositions of Shri.Iliayaraja without his permission, if so, it is breaking the copyright law and have to pay huge financial penalities and face legal action. Let me say, I am ignorant of these legalities. 

My Son designed this world tour and wekick started this SPB50 conncert tour in August in Toranto, then we performed in Russia, Srilanka, Malaysia, Singapore, Dubai and did lots of shows in India too. I did not get any feelers from Shri. Raja’s office at that time. I dont know why now when we started our US tour. As I said earlier, I am ignorant of the law. If it is a law, so be it and I obey it.

In these circumstances, our troupe can not perform Isaijnani’s compositions from to day. But the show should happen.By God’s grace I have sung lots of other composer’s songs too which we will present. Hope you all will bless our concerts as usual.

I am always grateful for your love and affection. I only request you all not to have any harsh opinions and discussions regarding this. If this is the design of God, I obey it with reverence. Sarvejanah Sukhinobhavanthu.

The news has shocked many as the two icons are portrayed in the media as friends with a long working relationship. Friendship aside, should Ilayaraja be compensated for his compositions being performed?

 

http://www.thamarai.com/music/kollywood/spb-50-world-tour-tamil-music-composer-iliayaraja-calls-in-the-lawyers

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கால ஆரம்ப நாள்..

 · 
No automatic alt text available.
1379841_10150004552801901_46920949689522
 
 
added a new photo.
No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: bird
 

சிட்டுக்குருவி சில துளிகள் !

* ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

* ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களின் பல்வேறு நாடுகளில் பல வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. புல்வெளி சிட்டுகள், மாலைச் சிட்டுகள், கறுப்புச் சிட்டுகள், காடுகளில் வாழும் நரிச் சிட்டுகள் எனப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன.

* தானியங்கள், புழுக்கள், பூச்சிகள், பூக்களின் மொட்டுகள் என அனைத்தையும் சிட்டுக்குருவிகள் உண்ணும். மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் கிளி, புறா போன்று இவை மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது இல்லை. எனவே, இவற்றை செல்லப் பறவைகளாக வளர்ப்பது கடினம்.

* சஹாரா பாலைவனப் பகுதியில், மஞ்சள் நிறத்தில் அழகாகக் காணப்படும் ஒரு வகை சிட்டுக்குருவி, சூடான் தங்கச் சிட்டுக்குருவி (Sudan Golden Sparrow). மாலை நேரங்களில், ஆயிரக்கணக்கான குருவிகள், கூட்டமாக நகருக்குப் பறந்துவந்து, இரை தேடும்.

* சிட்டுக்குருவிகள், சராசரியாக 13 சென்டிமீட்டர் இருக்கும். சிட்டுக்குருவி வகைகளில் மிகப் பெரியது, கிளி சிட்டுக்குருவி (Parrot-billed Sparrow). மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இவை, 18 சென்டிமீட்டர் இருக்கும். எடை சுமார் 40 கிராம்.

* சங்க இலக்கியங்களில், 'குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது. 

* இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியப் பகுதியில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி வகை, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated Sparrow). கழுத்துப் பகுதியில் மஞ்சளாக இருக்கும் இந்த வகையைக் கண்டுபிடித்தவர், பறவையியல் அறிஞர் சலீம் அலி.

* உலகின் நவீன மாற்றங்கள் காரணமாக, சிட்டுக்குருவிகள் உலகம் முழுவதுமே அருகிவரும் இனமாக உள்ளன. உலக அளவில் பல வகை சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

கே.யுவராஜன்

........................................................................................................................

சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்போம்…!!!

 
sparrows_575.jpg


சிறிய தானியம்போன்ற மூக்கு;  சின்னக் கண்கள்;  சின்னத் தலை;  வெள்ளைக்கழுத்து;  அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறுகருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்தமுதுகு;  சிறிய தோகை;  துளித்துளிக் கால்கள்...... இத்தனையும் சேர்த்து ஒருபச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்.’
என விந்தை அழகு கொஞ்சும் விதமாக சிட்டுக் குருவியினை வர்ணிக்கின்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அந்தவகையில்,2010ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ம் நாள் சர்வதேச சிட்டுக் குருவிகள் நாளாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.

wsd.jpg

வீட்டு சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவைகளின் நாளாந்த வாழ்க்கை போராட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுமே இத்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளின் நகர்ப்புற, மற்றும் கிராமப்புற இயற்கை வாழிடங்கள் மிக அதிகளவில் சரிவடைந்துவருகின்றன.

சிட்டுக்குருவிகளின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது எம்மை சூழவுள்ள சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற மாறுதல்களை வெளிப்படுத்துகின்ற ஒரு குறிகாட்டியாக விளங்குகின்றது.

இது நமது சுகாதார மற்றும் நல்வாழ்வுக்கான சாத்தியமான தீங்கு விளைவுகலை வெளிப்படுத்துகின்ற எச்சரிக்கை மணியாகவும் விளங்குகின்றது. அதிகரித்த அளவிலான நுண்ணலை மாசு காரணமாக பாரியளவிலான சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.

இன்றைய நவீன யுகத்தில் மனிதனின் வாழ்விடங்கள் மாடி வீடுகளாகியதும், இயற்கை பாதுகாப்பரண்களாகிய மரங்கள் அழிக்கப்படுவதும் சிட்டுக்குருவிகள் அருகி வருவதற்கு காரணங்களாகும். இதற்கும் மேலாக செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகின்ற கதிர்வீச்சுக்கள் சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கத்தினை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி அவற்றின் இருப்பினை கேள்விக்குறியாக்கி சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சியில் பிரதான பங்காற்றுகின்றது. மேலும் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதினால், அந்த தானியங்களை உண்ணுவதாலும் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன.

சிறிய பறவை இனங்கள் இயற்கையழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துபவை மேலும் இயற்கையின் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் காப்பதிலும், வனங்களின் பரவலுக்கும் இந்தச் சிட்டுக்குருவிகள் உதவுகின்றன.

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இயற்கையின் படைப்பான சிட்டுக்குருவிகளினை அழிவிலிருந்து காப்பாற்ற முன் வருவோமாக……

***

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
It's supposed to be cooler tomorrow in Toronto. The forecast shows a low of -8°C.
 
WWqhbNIBJB6.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.