Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
06ம் திருவிழா- 02.08.2017
Albums
 
20525437_1536426553046377_39650387866000
 
20597211_1536424913046541_73690080739737
 
20479523_1536424966379869_76869074314606
 
20525545_1536425209713178_91280891894583
 
20525489_1536425223046510_47431492944982
 
20476602_1536425493046483_22284026171374
 
20476336_1536425226379843_31715177868130
 
20476544_1536425483046484_46631822994026
 
20604473_1536425489713150_82746454259277
 
20479783_1536425839713115_53662033495293
 
20526045_1536425823046450_39185139471336
 
20476442_1536424676379898_71864109856576
 
20525936_1536424696379896_56904402906595
 
20526374_1536426746379691_31307272858834
 
20526345_1536424476379918_69333621745208
 
20604227_1536426343046398_84567898384242
 
20526372_1536426306379735_56254311756610
 
20621988_1536424603046572_41589701158120
 
20525463_1536425816379784_54139966166315
Like · Comme
20525366_1536424406379925_29643721483082
 
20622024_1536424353046597_36090120039528
 
20604239_1536424906379875_18519860247017
 
20604350_1536424403046592_17876769154278
 
Nalluran.com
 
  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Vaiththilingam Pirasanna 
 
முதலாவது படம் தாயகம் என்பது எல்லோருக்கும் தெரியும் 
இரண்டாவது புகைப்படம் கனடாவிலயாம் :

இரண்டிலும் கம்பி வேலி/ ஈழத்தமிழர்கள்

Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:
Vaiththilingam Pirasanna 
 
முதலாவது படம் தாயகம் என்பது எல்லோருக்கும் தெரியும் 
இரண்டாவது புகைப்படம் கனடாவிலயாம் :

இரண்டிலும் கம்பி வேலி/ ஈழத்தமிழர்கள்

Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
 

இந்த படம் எதை காட்டுகின்றது என்றால் தமிழன் முற்றுமுழுதான சுயநலம் கொண்டவன் என்பதையே ....... இந்த இனத்தில் பிறந்ததை நினைத்து கவலை கொள்கின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

#அதிசய_சிவன்_தலங்கள் #01

ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.

Image may contain: outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீல் ஆம்ஸ்ட்ராங் - நிலாவில் முதலில் இறங்கிய விண்வெளி வீரர்

நிலாவில் முதல்முறையாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் (1930) பிறந்தார். முழுப் பெயர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங். தந்தை ஆடிட்டர். 6 வயதில் முதன்முதலாக தந்தையுடன் விமானத்தில் பறந்தார். விமானம் ஓட்டும் ஆசை இவருக்கு அப்போதே துளிர்விட்டது.

விமான ஓட்டுநர் உரிமம் பெற்றபோது இவருக்கு வயது 16. பள்ளிப்படிப்பை முடித்ததும், அமெரிக்க கடற்படையின் உதவித்தொகை பெற்று பர்டியூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் பொறியியலில் சேர்ந்தார். நடுவில், கொரியப் போரில் அமெரிக்க கடற்படையின் ஜெட் விமான பைலட்டாகப் பணியாற்ற அழைப்பு வந்தது.

* கடற்படையில் 1952 வரை பணியாற்றிய பிறகு, மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்றார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* நேஷனல் அட்வைஸரி கமிட்டி ஃபார் ஏரோநாட்டிக்ஸ் அமைப்பின் (தற்போதைய நாசா) விண்வெளித் திட்டத்தில் 1962-ல் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அந்த அமைப்பின் கமாண்ட் பைலட்டாகவும் பணியாற்றினார். பல அதிவேக விமானங்களைச் சோதனை செய்தார்.

* மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் 1969-ல் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். அதன் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.

* நிலாவில் தரையிறங்கிய முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அங்குள்ள பாறைத் துகள்களை சேகரித்தனர். தங்களது காலடித் தடங்கள் உட்பட பல புகைப்படங்களை எடுத்தனர்.

* அமெரிக்க தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் நிலாவில் கழித்தனர். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹீரோவாகப் புகழப்பட்டார்.

* சார்லட்ஸ்வில் நகரில் உள்ள கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ் ஃபார் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் நிர்வாகியாக 1971 வரை பணியாற்றினார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

* உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.

* இவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்’ 2005-ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 ஆகஸ்ட் 25-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

Image may contain: 1 person, suit

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

August 6, 2017

 

எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்த நாள் சிறப்பு பதிவு:
ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் இளம் வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின்னர் வறுமையான சூழலிலேயே படித்து வந்தார். போலோ மற்றும் நீச்சலில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர் இவர். ஒருநாள் நீர்நிலையில் ஒரு சிறுவன் தத்தளிப்பதை பார்த்து உதவினார் இவர், அந்தச் சிறுவன் பிரபு வீட்டு பிள்ளை. அவரின் அப்பா பிளெமிங்கின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். அந்தத் தத்தளித்த சிறுவன் வருங்காலத்தில் பிரிட்டனின் பிரதமர் ஆன சர்ச்சில் !

பாலிடெக்னிக் படித்துவிட்டு புனித மேரி மருத்துவப்பள்ளியில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட பின்னர் ஆல்மோத் ரைட் எனும் நுண்ணுயிரி ஆய்வாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே டைபாய்ட் நோய்க்கு தடுப்பூசி போடும் முறையைக் கண்டறிந்தார். பின் தன் துறை சார்ந்தே பேராசிரியர் ஆனார். லைசோசோம் நோய்களைத் தடுப்பதையும்,நோய் எதிர்ப்புக்கும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்தார்.

ஸ்டைபாலோ காகஸ் பாக்டீரியா இருந்த ஒரு தட்டை மூடாமல் அப்படியே திறந்துவிட்டு நகர்ந்துவிட்டார் இவரின் உதவியாளர். அடுத்த நாள் காலையில் அப்படியே திறந்து கிடப்பதை கண்டு உதவியாளரை கடிந்து கொண்டார். அவர் அதைக் கொட்ட எடுத்துக்கொண்டு போன பொழுது அவசரப்படாமல் அந்தத் தட்டை வாங்கி நுண்ணோக்கியில் வைத்து பார்த்தார். நீல நிறத்தில் எதோ ஒன்று பாக்டீரியவை தின்று தீர்த்து இருந்தது. அந்த நீல நிற பூஞ்சை தான் பெனிசிலின் எனும் அற்புதம். உலகின் முதல் ஆன்டிபயாடிக் கண்டறியப்பட்டது. நிமோனியா,தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்குத் தீர்வு தருகிற அற்புதத்தைப் பென்சிலின் செய்கிறது.

உலகைக்காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்தவர் என்று அலெக்சாண்டர் ப்ளேமிங் கொண்டாடப்படுகிறார். அவருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர் ஹோவர்ட் ஃப்ளோரே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய இணைக்குப்பிள்ளையாகப் பிறந்தவர். அப்பா ஷூ வியாபாரி மருத்துவப்பட்டம் பெற்ற பின்பு முனைவர் பட்டம் பெற்று நோயியல் துறைப் பேராசிரியராக உயர்ந்தார். லைசோசோம் பாக்டீரியாக்களைக் கொல்கிற ஆற்றல் வாய்ந்தது. அதில் எச்சில் மற்றும் கண்களில் காணப்பட்டது. அதைக்குறித்தே முதலில் ஆய்வுகள் செய்தார்.
பெனிசிலியம் பாக்டீரியக் கிருமிகளைக் கொள்வதாகப் பிளெமிங் கண்டறிந்து இருந்தார். அதை அவரால் பிரித்தெடுக்க முடியவில்லை. அந்த ஆய்வில் இறங்கலாம் என்று இவரும்,செயின் என்கிற சக ஆய்வாளரும் அதைப்பற்றிய குறிப்பை ஒரு மருத்துவ இதழில் படித்ததும் முடிவு செய்தார்கள். ராக்பெல்லர் அமைப்பு நிதியுதவி
அளித்தது. பல்வேறு ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வுகளை முடுக்கினார் செயின் பெனிசிலினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். நார்மன் ஹீட்லே பெனிசிலின் உற்பத்தியை பெருக்குவதைக் கவனித்துக்கொண்டார். 

மனிதர்கள் மீது இதைச் செலுத்துவதன் பொழுது ஏற்படும் தாக்கங்களை ஃப்ளோரே ஆய்வு செய்தார். பெனிசிலின் பிரித்தெடுக்கப்பட்டது. அதை எட்டு எலிகள் மீது இவரின் குழு சோதிக்க முடிவு செய்தது. ஸ்ட்ரேப்டோகாக்கி எனப்படும் கொடிய பாக்டீரியா செலுத்தப்பட்டது. நான்கு எலிகளுக்குப் பெனிசிலின் தரப்பட்டது. அவை நான்கு மட்டும் பிழைத்துக்கொண்டன.

கூரான பொருளில் நோய்க்கிருமி இருந்தாலோ,அல்லது காற்றில் இருந்து கிருமி காயத்தின் மீது தாக்குதல் புரிந்தாலோ வெட்டியெடுக்கிற அளவுக்கு அவை வேகமாக வளர்ந்தன.

ஆல்பர்ட் அலெக்சாண்டர் எனும் நபரை ரோஜா முள் குத்தியது. அவரின் முகம்,கண்கள் எல்லாமும் வீங்கியிருந்தன. நோய்த்தொற்றால் ஒரு கண் நீக்கப்பட்டது. இன்னொரு கண்ணையும் மூடியிருந்தார்கள். 

அவருக்குப் பெனிசிலின் என்கிற அற்புதத்தைத் தர முடிவு செய்தார் ஃப்ளோரே. ஓரளவுக்கு அவர் தேறிக்கொண்டு இருக்கும் பொழுதே மருந்து போதாமல் அவர் இறந்து போனார். அவரின் சிறுநீரில் இருந்து மருந்தை மீட்கும் முயற்சிகள் தோற்றது குழந்தைகளிடம் மட்டும் ஆய்வு செய்வது என்று முடிவு செய்தார். அப்படிச் செய்து படிப்படியாகப் பெனிசிலின் உற்பத்தியை பெருக்கும் முறையை அடைந்தார்கள்.
புத்தக ஷெல்பில் இருக்கும் இழைகளைக்கொண்டு பெனிசிலின் திரவத்தை வடிகட்டினார்கள்.

பெனிசிலின் உற்பத்தியை பெரிய அளவில் செய்யப் பேடன்ட் செய்வதில் கவனம் செலுத்தாமல் அமெரிக்காவுக்குக் கள்ள விமானத்தில் ஏறிப்போனார்கள். அங்கே விவசாய ஆய்வகம் ஒன்றில் பெனிசிலினை வளர்க்கும் திரவத்தைக்கண்டார்கள். பெரிய அளவில் பெனிசிலின் உற்பத்தி சாத்தியமானது. வடக்கு ஆப்ரிக்காவில் உலகப்போர் சமயத்தில் சென்று சேர்ந்தார். அங்கே இருந்த வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அப்பகுதியை வெட்டி காயத்தை ஆறவிடுகிற பழக்கம் இருந்தது. இவர் காயங்களைத் தைக்கச்சொன்னார். பெனிசிலினை செலுத்தினார். காயங்கள் வேகமாக ஆறின. மாயம் நிகழ்ந்தது. பிளெமிங் கண்டுபிடித்த அற்புதம் ப்ளோரே குழுவின் முயற்சியால் பல லட்சம் வீரர்களைக் காப்பாற்றியது.
அவருக்குப் பல்வேறு கவுரவங்களை அவர் நாட்டு அரசு செய்தது. ஆஸ்திரேலிய கரன்சியில் அவர் முகத்தை வெளியிட்டது.

அவரோ நேர்முகங்கள் தராமல் அமைதியாகவே இருந்தார். “பல்வேறு நபர்களின் சாதனை இது !அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்ததும் காரணம் “ என்று தன்னடக்கமாகச் சொன்னார் ப்ளோரே. பெனிசிலின் மக்களின் உயிர்களைக் காப்பாற்றி மக்கள்தொகை பெருக்கத்துக்கு வழி வகுத்ததைக் கண்ட அவர் அதைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
- பூ.கொ.சரவணன்.

Image may contain: 1 person
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா நினைவு தினம் இன்று
2ம் உலகப்போரின் போது ஜப்பானின், ஹிரோஷிமா மீது 1945, ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. ஆனால் "லிட்டில்பாய்' என்கிற இந்த அணுகுண்டு வாங்கி உயிர் பலி எவ்வளவு தெரியுமா, ஒரு லட்சத்துக்கும் மேல். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது.

Image may contain: cloud, night, outdoor, water and nature
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ”தேரோட்டம்” ..... மாலையில் ”குத்தாட்டம்” கனடா ஶ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே. »»» ரவீந்திரநாத் தாகூர்

***வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் 76-ம் நினைவு நாள்.

 

⇨ உலகில் இரண்டு தேசங்களின் (இந்தியா,பங்களாதேஷ்) தேசிய கீதத்தினை இயற்றிய ஒரே நபர்.

⇨ நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிய நாட்டவர் என்கின்ற பெருமையும் இவரையே சாரும்.( இலக்கியம் – 1913)

Image may contain: 1 person, beard and text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

#அதிசய_சிவன்_தலங்கள் # 02

சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை. சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

 
No automatic alt text available.படித்ததிலிருந்து......
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவியரீதியில் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி உலக பூனைதினமாக  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில்பூனைகள்தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

 
 
zcat2.JPG
 

 

  • உலகில் 40 வகையான பூனை இனங்களில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பூனைகள் உலகில் வாழ்கின்றன.
  • ஆய்வுத் தடயங்களின் பிரகாரம்உலகில் கி.மு 3600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வீட்டுப் பூனைகள்வாழ்ந்துவருகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.
Lovely-Cute-Cat-Pictures-Photos-Images.jpg
  • பூனைகள் மணித்தியாலத்திற்கு 30 மைல்கள் வேகத்தில்ஓடக்கூடியவையாகும்.
  • பூனைகளுக்கு சுவை அரும்புகள் இல்லை.
  • பூனைகள் 100 இற்கும் மேற்பட்ட வித்தியாசமானசத்தங்களை எழுப்பக்கூடியவையாகும்.
  • சராசரியாக பூனை ஒரு நாளில் 16-18 மணித்தியாலங்கள்உறங்குகின்றன.
Zebra+Like+Cat+Sleeping+On+A+Bed.jpg
  • மனிதர்களின் கைரேகையினைப் போன்றே பூனைகளின்மூக்கு ரேகைகள் தனித்துவமானவையாகும்.
  •  பூனையின் காதில் அவற்றின் இயக்கத்தினைகட்டுப்படுத்தும் 32 தசை நார்கள் உண்டுஇதனால்பூனைகள் தமது காதினை 180° வரையும்அசைக்கக்கூடியதுடன்அவை தனது இரண்டுகாதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடியஆற்றலினையும் கொண்டவையாகும்.
home-cat.jpg
  •  பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகமானதாகும்.
  • விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை Félicette (“Astrocat”) ஆகும். பிரான்ஸ் நாட்டினால் 1963ம் ஆண்டுஅக்டோபர் 13ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தப்பெண் பூனை தனது விண்வெளிப் பயணத்தின் முடிவில்உயிருடன் பூமியினை வந்தடைந்தமைகுறிப்பிடத்தக்கதாகும்.

 

minet-spatial-icon-357x304.jpeg
 
இங்கே சுவாரஷ்சியமான விடயம் என்னவென்றால் Félix என்கின்ற பாரிஸ் நகர தெருப்பூனையே விண்வெளிக்கு அனுப்பமுடிவு செய்யப்பட்டிருந்ததுஇந்த ஆண் பூனைதப்பிச்சென்றமையினால் கடைசி நிமிடத்தில் Félicette என்கின்ற பெண் பூனைக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தமைகுறிப்பிடத்தக்கதாகும்.
 
  • 32 மாடிகள் (320மீற்றர்கள்உயரத்திலிருந்து பூனைகள்கொங்கிறீட் தரையில் விழுந்தாலும் அவை பெரும்பாலும்உயிர்பிழைத்து விடுகின்றன.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

#அதிசய_சிவன்_தலங்கள் #03

எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம். உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.

Image may contain: sky, cloud and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழிசைப்பண்கள்
**************************************************
உலகின் முதல் இசை 
தமிழிசையே!!
***********************************************
இசைத்தமிழின் தொன்மை – 74
***********************************************

பழந்தமிழிசையில் பண்கள்
**********************************
**************************************************
தமிழ்க்கீர்த்தனைக் காலம் : கி.பி.1550 - 1800
*******************************************

கீர்த்தனை என்பது இசைப்பாடல் வகைகளுள் ஒன்றாகும். 

பெரும்பாலும் இறை புகழ் பாடும் இசைப்பாடல்களாக உள்ளன. 

பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய நிலையில் 
எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் நிலையில் 
இவை அமைந்துள. 

கலித்தொகைப்பாடலில் உள்ள தரவு, தாழிசை, சுரிதகம் 
இவ்வகை முன்னோடிகளாக உள்ளன. 

இவ்வகையில் தமிழில் கீர்த்தனைப் பாடல்கள் 
சீகாழி முத்துத்தாண்டவர் கி.பி.1525 - 1605 காலம் முதல் தொடங்கிற்று. 

முத்துத்தாண்டவர் திருஞான சம்பந்தரைப் போல் 
சீகாழியில் பிறந்தவர். 

இவர் பாடிய 60 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள. 

இவர் தமிழ்க் கீர்த்தனையின் தந்தையாக விளங்குகிறார்.

நாட்டியத்திற்குரிய பதம் என்கிற இலக்கிய வகையையும் 
இவர் படைத்துள்ளார். 

தமிழ்நாட்டியப் பதத்தின் தந்தையாகவும் 
இவர் போற்றப்படுகிறார். 

இவர் பாடிய நாட்டியப் பதங்கள் 25 கிடைத்துள. 

இவர் தமிழ்க் கீர்த்தனை பாடிய காலம் கீர்த்தனைக் 
காலமாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.

முத்துத் தாண்டவரைத் தொடர்ந்து 
பாபநாச முதலியார் (கி.பி.1640-1740) 
மிகச் சிறந்த இயலிசைப் புலவராக உள்ளார். 

இவர் படைத்த கும்பேசாக் குறவஞ்சி எனும் நூலைப் பாடியுள்ளார். 

குறவஞ்சி நூலின் முதல் நூலாக இந்நூல் திகழ்கிறது. 

இவரைத் தொடர்ந்து இராமநாடகக் கீர்த்னை பாடிய 
சீகாழி அருணாசலக் கவிராயர் உள்ளார். 

கம்பராமாணயத்தை இசை நாடகக் கீர்த்தனையாக 
இவர் இயற்றியுள்ளார். 

இவர் இசை நாடகக் கீர்த்தனை பாடிய முதன்மையராக 
உள்ளார். 

இவரைத் தொடர்ந்து தில்லைவிடங்கன் 
மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787) உள்ளார். 

பழிப்பதுபோல் புகழ்ந்து பாடும் நிந்தாஸ்துதியில் அமைந்த தமிழ்க் கீர்த்தனை பாடிய முன்னோடியாக இவர் உள்ளார். 

இவர் பாடிய 25 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள.

முத்துத்தாண்டவர்,  
அருணாசலக் கவிராயர், 
மாரிமுத்தாப்பிள்ளை 
மூவரையும் சீர்காழி மூவர் என்றும் 
தமிழ்க் கீர்த்தனை பாடிய மூவர் 
என்றும் அழைப்பர். 

இவர்கள் பெயரால் சீர்காழியில் மணிமண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது. 

தமிழக அரசு சீர்காழி மூவர் விழாவையும் 
ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

இம்மூவர்களையும் தொடர்ந்து “தாயே யசோதா” என்று தொடங்கும் தோடி இராகக் கீர்த்தனை பாடிய 
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (1715 - 1775) உள்ளார். 

இவர் பாடிய 11 க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் 
இன்று வழக்கில் உள்ளன. 

இவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை இறைவன் மீது அருணாசலக் கீர்த்தனை பாடிய வீரணப் புலவர் (1720 - 1810) உள்ளார். 

இவர் பாடிய 398 இசைப்பாடல்கள் உள.

இக்காலத்தில் பள்ளு நாடகம், நொண்டி நாடகம், குறவஞ்சி என்கிற இசை நாடக இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.

குறவஞ்சியில் மட்டும் சுமார் 130 நூற்கள் உள. 

கும்பேசர் குறவஞ்சி, குற்றாலக் குறவஞ்சி, 
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, விராலிமலைக்குறவஞ்சி, தியாகேசர்குறவஞ்சி என்கிற நாட்டிய நாடகங்கள் தோற்றம் பெற்றன.

குமரகுருபரர் (1615 - 1688), 
பரஞ்சோதி முனிவர் (1675 - 1725), 
அவிநாசி நாதர் (1725 - 1785), 
தொட்டியக்கலை சுப்பிரமணிய முனிவர் (கி.பி.1740-1810) போன்றோர் தோன்றி நூற்களைப் படைத்துள்ளனர். 
இந்நூற்களில் இசைபற்றிய செய்திகள் உள.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும் 
இதர கீர்த்தனைகளையும் 
பாடிய கோபால கிருஷ்ணபாரதியார் (1790-1885) 
இசைத்தமிழ் உலகிற்குப் பெரிதும் 
சேவை புரிந்தவராக உள்ளார்.

இவரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனை மிகச் சிறந்த 
இசை நாடக நூலாகும். 

இவரின் ஏனைய கீர்த்தனைகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. 

இவரையும் சேர்த்து தமிழ்க் கீர்த்தனை நால்வர் என்று கூறும் வழக்காறும் நிலவுகிறது.

18, 19 நூற்றாண்டுகளில் இசைத்தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகளைத் பலர் தந்துள்ளனர். 

இராமகவி (1750-1810) என்பார் தஞ்சையிலிருந்து 
சென்னைக்குச் சென்றவர். 

இவர் பாடிய 9 பதங்கள் அச்சில் வந்துள. 

பாலகவி செண்பக மன்னார் (1789 - 1840) 
பார்வதி திருக்கல்யாண நாடகம், 
சிவராத்திரி நாடகங்களை எழுதியுள்ளார். 

ஆனைஐயா (1798 - 1824) தஞ்சை இரண்டாம் சரபோஜி 
அவையில் இருந்தார். 

இவரும் இவரின் சகோதரர் ஐயாவையர் சிறந்த இசைவிற்பன்னர்களாக இருந்தனர். 

தெலுங்கு, தமிழ் மொழிகளில் இசைப் பாடல்களைப் 
பாடியுள்ளனர். 

26 தமிழ்க் கீர்த்தனங்கள் வழக்கில் உள. 
வைத்தீசுவரன் கோயில் சுப்பராமையர் (1800-1850) 
வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமாரசாமி மீது 
76 பதங்கள் பாடியுள்ளார். 

இவை குஜ்லி பதிப்பில் வெளிவந்துள்ளன. 

கனம் கிருஷ்ணய்யர் (1825-1880) கன இராகங்களில் 
பாடுவதில் வல்லவர். 

இவர் கவித்தலம் இராமபத்திர மூப்பனார் மீது குறவஞ்சி பாடியுள்ளார். 

இவர் பாடிய 57 கீர்த்தனைகளை உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்துள்ளார்.

இசைத்தமிழ் அறிஞர்களுள் 
நீலகண்ட சிவனும் (1839-1900) ஒருவராவார். 

இவர் பாடிய இசைப் பாடல்கள் திருநீலகண்ட போதம் 
என்கிற பெயரால் 1895 இல் அச்சில் வந்துள. 

தேவாரம், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் போல் 
இவை உள. 
இவர்4446 பாடல்கள் வெளிவந்துள்ளன. 

தஞ்சை கரந்தையைச் சார்ந்த ஆறுமுக உபாத்தியாயர் (1820-1890) பாடிய கீர்த்தனங்கள் சிவ சுப்பிரமணிய சுவாமி கீர்த்தனம் 
என்கிற பெயரில் அச்சில் வந்துள.

மரக்கத்தூர் ஆறுமுக சுவாமிகள் (1827-1888) 
போலீஸ்காரராக இருந்தவர். 
கிளிக் கண்ணி பாடியுள்ளார். 

தஞ்சை வாசுதேவ கவிபாடிய 76 பதங்கள் 
தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் மூலம் 
வெளிவந்துள்ளன. 

இவர்களைப் போல் பலர் இசைத்தமிழ்ப் பாடல்களைப் படைத்துள்ளனர். 

அருட்பிரகாச இராமலிங்க அடிகளார், 
வேதநாயகம் பிள்ளை, 
கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள், 
மாம்பழக் கவி, 
காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார், 
குணங்குடி மசுதான் சாகிப் 
போன்றோர் இசைத்தமிழ் வளர்த்த 
சான்றோர்களாக உள்ளனர்.

இராமலிங்க அடிகளார் (1823 - 1874) படைத்த 
திருவருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. 

இவை 5818 பாடல்களைக் கொண்டுள. 
இவைகளில் 1011 பாடல்கள் இசைப் பாடல்களாக உள்ளன. 

இவை இன்றைய இசை அரங்குகளில் 
பாடப் பெற்று வருகின்றன.

மாயூரம் வேத நாயகம் பிள்ளை (1826 - 1889) பாடிய 
சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்கிற இசைப்பாடல்கள் 
இன்றைய இசை அரங்குகளில் பாடப்பெற்று வருகின்றன. 

192 இசை உருப்படிகள் உள. 

கிளிக்கண்ணி என்கிற இசை வகை உருப்படிகளைப் பாடிய கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள் (1820 - 1890) காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்தவர். 

இவர் பாடிய 102 கிளிக்கண்ணிப் பாடல்கள் உள. 
இவரைப் பின்பற்றி பாரதியார் கிளிக் கண்ணிப் பாடல்களைப் பாடியுள்ளார் பலரும் பாடி வருகின்றனர்.

மாம்பழச் சிங்க நாவலர் (1836 - 1884) பழனியில் பிறந்தவர் மூன்றாவது வயதில் ஏற்பட்ட அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார். 

இவர் பாடிய பாடல்கள் கீதாமிர்தசாரம் என்கிற பெயரில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 56 கீர்த்தனைகள் உள.

காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) பாடிய காவடிச்சிந்துப் பாடல்கள் கிளிக் கண்ணியைப் போல் 
இசைத்தமிழ் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உளது.

இப்பாடல்களில் அமைந்துள்ள இசையமைதி அப்துல்காதர் 
என்கிற இசுலாமியரையும் பாரதியாரையும் ஈர்த்தது. 

இவர்களைப் போல் பலரும் காவடிச் சிந்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

குணங்குடி மஸ்தான் சாகிபு (1825 - 1875) பாடிய பாடல்கள் இசைத்தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன.

இவைகளைத் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் 
கண்டு கொள்வதில்லை என்பதும் மிகவும் வருந்துதற்குரிய ஒன்றாகும்.

இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்:
1. திருவாரூர் இராமசாமி பிள்ளை
2. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
3. இராமகவி
4. ஆனை ஐயா
5. பட்டாபிராமய்யர்
6. கனம் கிருஷ்ண ஐயர்
7. பராங்குசதாசர்
8. நீலகண்ட சிவம்
9. பட்டணம் சுப்ரமணிய ஐயர்
10. செவற்குளம் கந்தசாமிப் புலவர்
11. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
12. சுந்தர முதலியார்
13. ஆறுமுக உபாத்தியாயர்
14. முருகேச கவிராயர்
15. சுப்பிரமணிய பண்டிதர்
16. செய்யூர் செங்கல்வராய சாஸ்திரி
17. அகத்தியலிங்க கவிராயர்
18. இராசப்ப முதலியார்
19. சின்னசாமி நாயுடு
20. சரவணபவ தாசர்
21. வ. த. சுப்ரமணிய பிள்ளை
22. நமச்சிவாய நாவலர்
23. குப்புசாமி கிராமணி
24. காஞ்சி சபாபதி முதலியார்
25. கிருஷ்ணசாமி ஐயா
26. வேலாயுதக் கவிராயர்
27. கோவிந்தராச தேசிகர்
28. சண்முக முதலியார்
29. சாமிநாத தாசர்
30. பாலசுப்ரமணிய முதலியார்
31. காமியப்பக் கவிராயர்
32. முத்துசாமிக் கவிராயர்
33. வடலூர் வள்ளலார் இராமலிங்கர் (கீர்த்தனைகள்)
34. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (காவடிச் சிந்து)
35. குணங்குடி மஸ்தான் சாகிபு
36. கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்
37. கவி குஞ்சரபாரதி
38. முத்துத் தாண்டவர்
39. பாபநாசம் சிவன்
40. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
41. பாரதியார்
42. தேசிக விநாயகம் பிள்ளை பல கீர்த்தனைகளை இயற்றினார்.
43. பாரதிதாசன்
44. சுத்தானந்த பாரதியார்
45. பெரியசாமித்தூரன் தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

***********************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
08/08/2017

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தது முதல்தான் எத்தனை படிப்பு 
முதுமையில் படிக்கும் புத்தகம் ஏக்கம் 
முடிவினில் படிக்கும் புத்தகம் தூக்கம் 
படித்ததை முடித்ததன் பரீட்சைதான் இறப்பு!

-கவிஞர் வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.

ஆகஸ்ட் 12: சர்வதேச இளையோர் நாள் இன்று.

இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.
அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது
.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்.....,
''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.
உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.
.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது''.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி – உலக யானை தினம்

உலகளாவியரீதியில் யானைகளினை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக யானை தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகளாவியரீதியில் யானைகள் தத்தங்களுக்காகவும், ஏனைய செயற்பாடுகளுக்காகவும் கொல்லப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன, மேலும்  மனிதன் - யானை மோதல்களின் காரணமாகவும் யானைகள் கொல்லப்படும் நிகழ்வுகளும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
 
ele2%2B(2).JPG
 
1980ம் ஆண்டளவில் ஆபிரிக்காவில் 1.2 மில்லியன்யானைகள்  வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டிருந்ததுஆனால்தற்சமயம் அண்ணளவாக 430,000 யானைகளே வாழ்வதாககணிப்பிடப்படப்பட்டுள்ளது.  
 
அந்தவகையில், யானைகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!
 
  • தரைவாழ் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கினமான யானைகளில் ஆபிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்ற இரண்டு வகையினங்கள் உண்டு. ஆசிய யானைகளை விடவும் ஆபிரிக்க யானைகள் பெரியவையாகும்.
7159-1.jpg
  • ஆபிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு இனங்களுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆசிய யானைகளில் ஆண் இனத்திற்கு மாத்திரமே கொம்பு உண்டு. யானைகள் தனது கொம்பினை நிலத்தினை தோண்டுவதற்கும், உணவினை கண்டறிவதற்கும் பயன்படுத்துகின்றன.
 
original-29952-1403096446-15.jpg
 
  • தரைவாழ் உயிரினங்களில் மிகப்பெரிய மூளையினைக் கொண்டவையாக யானைகள் விளக்குகின்றன. இதன் நிறை 5 கிலோகிராமிலும் அதிகமாகும்.
  • யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே தூங்கும் தன்மை கொண்டவையாகும். யானை தூங்கும் போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும்.
Phant.jpg
  • விலங்கினங்களில் மிகநீண்ட கர்ப்ப காலத்தைக் கொண்டவிலங்கினம் யானை ஆகும்பெண் யானைகள் 22 மாதங்களின் பின் குட்டியினை பிரசவிக்கின்றது.
elephant-family.jpg
  • யானையின் தும்பிக்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட தசைநார்கள் உண்டு.
  • யானைகளுக்கு 24 பற்கள் உண்டு.
  • யானைகள் தெளிவான கண்பார்வையினைக் கொண்டிருக்காவிடினும், அவை மிகச்சிறந்த மோப்ப சக்தியினையும், கேட்டல் சக்தியினையும் கொண்டவையாகும்.
  • பாலூட்டிகளில் துள்ளிக் குதிக்க முடியாத ஒரே உயிரினம் யானை ஆகும்.
  • யானை ஒரே நேரத்தில் தனது தும்பிக்கையினால் 7.5 லீற்றர்நீரினை உறிஞ்சிக்கொள்ள முடியும்.
original-21664-1403098154-16.jpg
  • ஐவரி கோஸ்ட், கென்யா, லாவோஸ், மொசாம்பிக், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு யானை ஆகும்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 left handers day ?

Image may contain: 13 people, people smiling, text

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) .1f642.png:)

பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின்போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள் வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிறவிலேயே சிலருக்கு இடது கை பழக்கம் ஏற்பட்டிருக்கும். இடது கை பழக்கம் உடையவர்கள் கத்தரிகோல், தாழ்ப்பாள், பீரோ கைப்பிடி, கிடார், கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசை உள்ளிட்ட பொருட்களை கையாளும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.
இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும்போது பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது ஓர் அறிவியல் ஆய்வு. நவீன விஞ்ஞான விளக்கங்களின்படி இடது கை பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்களாகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையைத் தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்கள். இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13-ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் வித்யாசங்கர் கூறும்போது, “இடது கை பழக்கம் பிறப்பிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. பெருமூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மைய விழையம் (மெடுல்லா ஆப்லங்கட்டா) என மூன்று பகுதிகளை மனித மூளை கொண்டுள்ளது. இதில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. பெரும்பாலானோருக்கு இடதுபக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலதுபக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படும். ஒரு சிலருக்கு வலதுபக்க அரைக்கோளம் மேலோங்கி இருப்பதால் இடதுபக்க பழக்கம் ஏற்படுகிறது. இப்படி இயற்கையாக அமைந்ததை மாற்ற முயற்சித்தால் அவர்களது கை எழுத்து சிதைவதுடன், பின்னாளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்” என்றார்.
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல் களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். நுட்பமான பணிகளை மேற்கொள் வதிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள, விவாதத் திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
வேலணையூர் ரஜிந்தன்
3 hrs · 
 

#ஹைக்கூ_விதிகள்
""""""""""""""""""""""""""""""""
( தொடர் - 01)

முனைவர் பட்டத்திற்காக ஹைக்கூ கவிதைகளை ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள் தமிழ் ஹைக்கூ க்களின் பல் வேறு விதிகளை இனங் காட்டியுள்ளார்கள். தற்போது அந்த விதிகளே ஹைக்கூ எழுதும் பெரும்பாலான கவிஞர்களால் பின்பற்றப் படுகின்றன. 

கவிதைகளில் மரபுக் கவிதையாகட்டும் , புதுக் கவிதையாகட்டும் அல்லது பின் நவீனத்துவக் கவிதையாகட்டும் ஏன் ஹைக்கூ கவிதையாகட்டும். எந்த வடிவமானாலும் அவற்றிற்கு ஒரு கட்டுக் கோப்பான இலக்கண விதிகள் இருந்தால்த்தான் அவை காலா காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

திருக்குறள் இதற்கு வலுவானதொரு சான்றாகும். ஈரடிகளாயினும் சிறப்பான ஒழுங்கு விதிகளைக் கொண்டு அமைக்கப் பட்டிருப்பதால் கால காலமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

அதிலிருந்தும் ஓரடியை மேலதிகமாகக் கொண்ட - நம் எல்லோராலும் நேசிக்கப் படுகின்ற - ஹைக்கூ வடிவமானது அழியாது என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் உள்ள விதிகளைக் கடைப்பிடித்து அதன்படி எழுதுவதே உன்னதமான நிலைப்பாடாகும்.

அந்த வகையில் இத் தொடரில் முதலில் நாம் எடுத்துக் கொள்ளப் போகும் முக்கிய விதியானது:

மூன்று அடிகள் - அதாவது மூன்று வரிகள். அதில் முதல் இரு அடிகள் ஒரு கூறாகவும் ஈற்றடியானது வாசகர் எதிர்பாராத ஒரு திருப்பமாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

இதை விரித்துக் காட்ட நாம் ஒரு ஹைக்கூவை எடுத்துக் கொள்வோம்.

ஓடிவரும் நதி
கட்டி அணைத்துக் கொள்கிறது

"என்ன... நதி கட்டி அணைக்கிறதா? எப்படிய்யா? என்னையா உளர்ரீங்க...?"

அப்படியென்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம் அப்படித்தான் தோன்ற வேண்டும்.
வாசகரை இப்படி ஒரு மயக்கத்திற்கு ஆளாக்குவதே முதல் இரு அடிகளின் வேலையாகும்.

நன்கு கவனிக்குக! இங்கு சாத்தியமில்லாவிட்டாலும், பொருண் மயக்கம் இருந்தாலும் தமிழ் இலக்கணப்படி
முதல் அடியில் உள்ள நதி என்ற எழுவாய் ஆனது இரண்டாம் அடியில் உள்ள கட்டியணைக்கிறது என்ற பயனிலையில் முடிவுற்று இரு அடிகளும் ஒரு கூறாகி மேற்படி ஹைக்கூ விதிக்கு உட்படுகிறது.

இனி யாரும் எதிர் பாராத திருப்பமாக மூன்றாவது அடி 

கடல்

என வந்து அங்கே ஓடி வருகின்ற நதி எதையும் கட்டியணைக்கவில்லை. மாறாக அந்த நதியைத்தான் பாசத்தோடு கடல் அன்னை கட்டியணைத்துக் கொள்கிறாள் என்று கவிஞன் சொல்கிறான்.
இப்போது கவிதையை ஒன்றாகப் பார்ப்போம்.

ஓடிவரும் நதி
கட்டி அணைத்துக் கொள்கிறது
கடல்..!
-- பைசர் சுல்தான்

இதே போன்று இன்னொரு கவிதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

நட்ட மரக் கன்றுகள்
நகர்ந்து செல்லத் தயங்குகின்றன

"யோவ் எப்படிய்யா நட்ட மரக் கன்றுகள் நகரும்?"

இதை எழுதிய கவிஞரிடம் உண்மையில் இக் கேள்வி கேட்கப் பட்டது. ஆனாலும் மேற் சொன்னது போல சாத்தியமில்லாவிட்டாலும், பொருள் மயக்கமானாலும் மரக் கன்றுகள் ஆன எழுவாய் ஆனது தயங்குகின்றன எனும் பயனிலையில் முடிந்து முதல் இரு வரிகளும் ஒரு கூறாகி விதிக்கு உட்படுகின்றது.

இனி எதிர்பாராத திருப்பமாக வரும் மூன்றாமடியானது

வான் மழை மேகங்கள்

என வந்து "மரங்கள் நடுங்கள் மழை பெய்யும் என மக்கள் அடிக்கடி கூறுவார்களே! அதை நம்பி யாரோ ஒரு அப்பாவி இங்கு அதிகமான மரக் கன்றுகளை நட்டு வைத்திருக்கிறானே... நாம் இவ்விடத்தில் ஒரு சின்னத் தூறலாவது போடாமல் எப்படி இங்கிருந்து நகர்ந்து செல்வது?" என்று அந்த மேகங்கள் தயங்குவதாக கவிதையை அமைத்திருக்கிறான் கவிஞன்.

நட்ட மரங்கள்
நகர்ந்து செல்லத் தயங்குகின்றன
வான் மழை மேகங்கள்..!
-- முகம்மட் அஸாத்

இனி மேற்படி விதிக்குப் பொருந்தாத ஒரு கவிதையைப் பார்ப்போம்.

வங்கியில் கொள்ளை
உடைக்கப் பட்டிருக்கிறது
காவலாளியின் மண்டை..!

இங்கு 

வங்கியில் கொள்ளை
என்ற முதல் அடியானது மறைமுகமாக அவ்விடத்தில் முற்றுப்புள்ளி எடுக்கிறது.
ஏனெனில் முதல் அடியில் வரும் கொள்ளை எனும் எழவாய் ஆனது இரண்டாவது வரியில் எந்தப் பயனிலை கொண்டும் முடிக்கப்படவில்லை. உடைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பயனிலையாக எடுக்கலாம் என்றால் கொள்ளை உடைத்தல் என்று யாரும் சொல்வதில்லை. மாறாக கொள்ளை அடித்தல் என்று சொல்லப்படுவதுண்டு. ஆகவே இரண்டாவது வரி அடிக்கப்பட்டிருக்கிறது என்று வந்திருந்தால் விதிக்கு உட்பட்டு முதல் இரு அடிகளும் ஒரு கூறென வந்திருக்கும்.

ஈற்றடி ஒரு திருப்பமாக வர வேண்டும் என்ற அடுத்த விதியையும் இக்கவிதை மீறுகின்றது. எப்படி?

உடைக்கப் பட்டிருக்கிறது
காவலாளியின் மண்டை.

என பின் இரு அடிகளும் இணைந்துதான் திருப்பத்தைக் கொண்டுவருகிறது.
இது நாம் கேள்விப் படாதது. என்றாலும் இப்படியும் புதிதாக ஒரு விதியை அமைக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
காரணம் எவ்வித விதிகளையும் கவனத்தில் கொள்ளாமல் சும்மா ஒரு முழு வசனத்தை மூன்றாகக் கிள்ளிப் போட்டு விட்டு ஹைக்கூ எழுதிவிட்டதாக இன்று நினைக்கிறார்கள் பலர்.

ஹைக்கூ எழுத ஆசைப்படுவதோ எழுதுவதோ ஒன்றும் தப்புக் கிடையாது. அது அவரவர் உரிமை. மேலும் ஹைக்கூ என்பது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமும் கிடையாது.( சிலர் சொந்தம் கொண்டாடுகின்றனர் )
ஆனாலும் புதியவர்கள் அதை எழுதத் தொடங்கு முன் நிறையத் தேடிப் படித்து முடிந்தவரை விதிகளுக்கு உட்பட்டு எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

இவண்,
என்றும் தங்கள் தோழமையுள்ள,
சத்தார் எம். அஸாத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறந்தும் மறக்கமுடியாத நாள்.

Image may contain: 52 people, people smiling
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இந்திய நண்பர்களுக்கும்.71 ஆவது ...#சுதந்திர_தின_நல்_வாழ்த்துக்கள்..........#Happy_independence_day..... ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.