Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவுப்பொழுதின் நினைவலைகள்" கவிதைத் தொகுதியிலிருந்து..

 

1013233_1398491423774473_413582210641623

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை

குழந்தையாய் பிறந்து

துன்பங்கள் மறந்து

துள்ளித் திரிந்திட ஆசை....

 

இனிய காலை வணக்கம்,,,

 

10253936_10152397132092944_5659853154387

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழ்மையிலும் நேர்மை

கோபத்திலும் பொறுமை

தோல்வியிலும் விடாமுயற்சி

வறுமையிலும் பரோபகாரம்

துன்பத்திலும் மனோபலம்

செல்வத்திலும் எளிமை

பதவியிலும் பணிவு-வேண்டும்

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் என்பது

கண்கள் திறந்தால்

காணமல் போகும் ...!

நினைவுகள் என்பது

காலம் கடந்தாலும்

அது உயிரோடு வாழும்......!

--மன்சூர்--

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் கொஞ்சம் நியாயங்கள் உண்டு அதை உங்களிடம் தெரிவிப்பதற்கான நேரமும், துணிவும் தான் இல்லை..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கனடா ஒட்டாவா நகரில் போர் நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்று இருக்கிறது.காயமடைந்த ஒரு போர் வீரர் மரணடைந்துள்ளார்.

 

shot1.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1935ம் ஆண்டு சோவியத் புரட்சி நாட்காட்டி ஒன்றின் ஆறு-நாள் வாரமொன்றின் அக்டோபர் 22 பக்கம்...

 

 

640px-Sixday.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்களால் உருவான பறவைகள்.

 

10685523_989624037729728_530476672557561

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனாக வாழ்வது பெரிதல்ல...மனிதாபிமானத்துடன் வாழ்வது தான் பெரிது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1833-அல்பிரட் நோபல் , சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர்.

 

 

1146490_993354797356652_7334772531137061

 

அறிவியலாளர், நோபல் பரிசு நிறுவனருமான ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் அக்டோபர் 21; 1833

ஆல்பிரெட் நோபல் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

ஆல்பிரெட் நோபலினின் தந்தை இம்மானுவேல் புகழ் பெற்ற பொறியியலாளர். ஸ்டோக்ஹோம் நகரத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் வறுமையின் காரணமாக ரஷ்யா நோக்கி நகர்ந்தார். அங்கே போர் நடக்கும் சமயங்களில் உபயோகப்படுத்தும் வகையில் கன்பவுடரைப் பயன்படுத்தினார். ஆனாலும் போர் முடிந்தபின் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டார்; அவரின் பிள்ளையான ஆல்பிரெட் நோபலோ கவிதை, இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.

மகனின் ஆர்வத்தை அதிர்ந்த தந்தை ஏற்கனவே வேதி பொறியியல் படித்திருந்த மகனை பாரிஸில் புகழ் பெற்ற ஒரு வேதியியல் நிபுணரிடம் அனுப்பினார்; அங்கேதான் நைட்ரோ க்ளிசரனை பார்த்தார்; அது வெடிமருந்து பவுடரை மாதிரி பலமடங்கு ஆற்றல் மிகுந்து இருந்தது, எனினும் அது கொஞ்சம் அழுத்தம், வெப்பம் மாற்றங்களில் கூடவெடித்து விடும் தன்மை கொண்டிருந்தது.

அதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் ஆய்வில் ஈடுபட்டார் மனிதர். இதில் தன் தம்பியையே ஒரு வெடிவிபத்தில் இழந்தார். அப்பொழுது 'மரணத்தின் வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்!' என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க அதிர்ந்தார் அவர். ஆல்பிரெட் நோபல் ஸ்டா க்ஹோமில் ஆய்வு செய்ய அரசு தடை விதித்தது.

இறுதியில் அவர்கள் நாட்டில் கிடைக்கும் கேய்சல்கர் எனும் களிமண்ணை கலந்து டைனமைட்டை உருவாக்கினார், அது மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள், பாலங்கள் கட்டப் பயன்பட்டது. ஆனால் அதையே போரில் பயன்படுத்தி பல உயிர்களைக் குடிக்க ஆரம்பித்தன ராணுவம், உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு அவர் நாற்பத்தி மூன்று வயதிலேயே நொந்து போய் முடங்கிப்போனார் .

ஆல்பிரட் நோபல் உதவியாக பெர்த்தா என்கிற பெண் செயலராக வந்தது அவர் வாழ்வில் பெரிய மாற்றம். அவரின் பாவத்துக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் பெர்த்தா. உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என ஒரு நூலையும் எழுதினார். பின் நோபலை விட்டு பிரிந்து திருமணம் செய்துகொண்டு அவர் வெளியேறிவிட்டாலும் அவரின் தாக்கத்தில் நோபல் தனிமையில் தன்னால் ஏற்பட்ட அழிவிற்கு பிராயசித்தம் தேட யோசித்ததன் விளைவு அவரின் உயிலில் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள அவரின் சொத்தில் இருந்து வரும் வட்டியில் வருடாவருடம் அமைதி அறிவியல் உலக முன்னேற்றம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு தருபவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என அவர் அறிவித்து விட்டு போனதன் விளைவாக உண்டானதே நோபல் பரிசு.

இலக்கியம்,இயற்பியல், வேதியியல் மருத்துவம் . உலக அமைதி பொருளாதாரம் ஆகியத்துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

* நோபல் பரிசு சில துளிகள்... *

* நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருது இரண்டையும் பெற்றவர் பெர்னார்ட் ஷா.

* நோபல் பரிசு உருவாக்கப்பட்ட பொழுது பொருளாதாரத்துக்கு பரிசு நோபலின் உயிலில் குறிக்கப்படவில்லை ;1968 ஆம் ஆண்டில் இருந்தே அப்பரிசு வழங்கப்படுகிறது.

* ஹிட்லர் தன் காலத்தில் தன் நாட்டவர் மூவர் நோபல் பரிசை பெறுவதை தடுத்து இருக்கிறார் ;அவர் மறைந்த பின் அப்பரிசை அவர்கள் பெற்றுக்கொண்டாலும் பணம் கொடுக்கப்படாமல் போனது ;ஒன்லி பதக்கம் என கறாராக சொல்லிவிட்டது கமிட்டி.

* நோபல் அமைதி பரிசு காந்திக்கு வழங்கப்பட்டதே இல்லை ;அவருக்கு 1948 இல் வழங்க நியமனம் செய்யப்பட்ட சில நாட்களில் கொல்லப்பட்டதால் அப்பரிசு அவருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் அவ்வருடம் மட்டும் கொடுக்கபடாமலே போனதாக சொல்லப்படுவதுண்டு .காந்திக்கு பரிசு கொடுக்கப்படாமல் போனதற்கு பகிரங்க மனிப்பு கேட்டது நோபல் கமிட்டி.

நோபல் பரிசின் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் விருந்துக்கான பணத்தையும் முழுக்க பெற்று அதையும் சமுக சேவைகளுக்கு செலவிட்டார் அன்னை தெரசா.

* இறந்தவர்களுக்கு பெரும்பாலும் நோபல் பரிசுகள் வழங்கப்படுவதில்லை ;2011 இல் ஒரு கூத்து நடந்தது .மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஸ்டெய்ன்மென் அதற்கு மூன்று நாட்கள் முன்னமே மரணம் அடைந்து இருந்தார். இது தெரியாமலே பரிசை அறிவித்து விட்டனர் .ஆனால்,அப்பரிசை திரும்பபெறவில்லை கமிட்டி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

523034_512972348736585_392700455_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ வெற்றிக்காக

போராடும் போது

வீண் முயற்சி என்று

சொல்பவர்கள்,

நீ வெற்றி பெற்ற பின்

விடா முயற்சி என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1465214_629427473765854_1636354616_n.jpg

 

 

சிப்பிக்குள் முத்து...

மனிதனுக்குத் தெரிந்த விலைமதிப்பற்ற, ஒப்பற்ற நவரத்தின கற்களின் வகைகளில் ஒன்றே முத்துச் சிப்பி. குர்ஆன், பைபிள், மற்றும் வேதங்களிலும் முத்துக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சிப்பிகளும் ஒரு விலங்கினம் எனலாம். இதன் அறிவியல் பெயர் பிங்டெடா யூகோட்டா . தமிழகத்தில் மன்னார் வளை குடா, குஜராத்தில் கட்ச் வளைகுடா கடல்பகுதி களில்தான் அதிகமான முத்துக்குளிப்பு நடந்து வந்தது.

கடலில் மூழ்கிச் சென்று முத்துச்சிப்பிகள் சேகரிப்பதையே முத்துக்குளித்தல் என்கிறார்கள். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் மணப்பாடு வரை கடலில் 160 கி.மீ.தூரம் வரை 600 வகையான முத்துச்சிப்பி படுகைகள் இருந்தாலும் 6 வகைகள்தான் இப்போது இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை இவற்றின் வளர்ச்சிக் காலமாக இருப்பதால் அலைகள் குறைந்தும் கடல் தெளிந்தும் இருக்கும்போது முத்துக்குளிப்பு நடைபெறும். இக்காலங்களில்தான் குறைந்தபட்சம் 2 லட்சம் முத்துச் சிப்பிகள் வரை சேகரித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளிப்பின் மைய மாக விளங்கியது தூத்துக்குடி. அதன் காரணமாக இந்த நகருக் கு முத்து நகர் என்ற பெயரும் வந்தது. கடலில் உள்ள முத்துச் சிப்பி படுகைகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம் என்பதால் முத்துக்களின் வளமும், முத்துக் குளிப்பும் மீன்வளத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 10-20 கி.மீ. தூரத்தில் 15-25 கி.மீ. ஆழம் வரை இலை வடிவத்தினாலான முத்துச்சிப்பிப் படுகைகள் தென்படும். கடலுக்கு அடியில் உள்ள பாறைகள், முத்துச்சிப்பிகள் அதில் ஒட்டி வளர பேருதவியாக இருக்கின்றன.

மன்னார் பகுதியில் சேறு அதிகம் இல்லாததால் கடல் நீர் கலங்கவோ, சிப்பிகளின் வளர்ச்சி குறையவோ வாய்ப்பில்லை. சிப்பிகளுக்குத் தேவையான இயற்கை தாவர நுண்ணு யிரிகள்,ஆக்சிஜன் ஆகியனவும் முத்துச்சிப்பி படுகைகள் வளமுடன் அமைவதற்கு ஏற்ற வாய்ப்பாகவும் உள்ளது.

சிப்பிக்குள் முத்து உருவாவதைப் பற்றி பல மூட நம்பிக்கை கதைகள் அதிகமாக அலைந்து கொண்டிருந்தாலும் உண்மையில் முத்து உருவாவது அதன் உட்கரு நுழைவதைப் பொறுத்தே அமையும். எல்லாச் சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. எந்தச் சிப்பியில் முத்து இருக்கும் எதில் இருக்காது என்பதையும் யாரும் அறிய முடிவதில்லை.

சிப்பிக்குள் ஏதேனும் ஒரு வேற்றுப் பொருள் சிப்பிகளுக்குள் நுழைந்து உட்கருவாக செயலாற்றி அதனை சுற்றி நேக்ரி எனப்படும் பொருளை உற்பத்தி செய்து மூடி அதில் உருவாகும் மாந்தில் என்ற ஒரு திரவத்தின் மூலமாகத்தான் முத்து உருவாகும். இவ்வாறு இயற்கையாகவே சிப்பிகளுக்குள் முத்துக்கள் தோன்றி முத்துச் சிப்பிகளாகிவிடுகின்றன.

கடல் மாசுபடுதல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இதன் வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முத்துச்சிப்பி படுகைகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்துக் குளித்திட முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10153791_593641654091866_306177013104409

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகு..

 

1888640_987218134636985_5694066313302608

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1522187_622798834422479_1933144420_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தில் பரவும் சோகத்தை மறைக்க உதிக்கும் புன்னகை, மிக அழகானது.

சொல்லிட முடியாத அர்த்தங்கள் பல அதில் பொதிந்திருக்கும்…!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை சூரிய கிரணம் வர இருப்பதனால்  வழமையாக நடைபெற்று வந்த கேதார கெளரி விரத இறுதி நாளான இன்று ,மாலை 5 மணியின் பின் ஆலயங்கள் சில மூடப்பட்டும் எனவும்  கெளரி நூல் எடுக்கும் நிகழ்வு நாளையும் தொடரும் எனவும் அறியக் கூடியதாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மகளுக்கு "
- ஒரு தந்தையின் கடிதம்

மகளே !
நீ மாறி விட்டாயா ?மாறி விடு ! - ஒரு குழந்தையைப் போல் மாறி விடு;
இயற்கையின் நிகழ்வுகளை
இயற்கையாய் எதிர்கொள்;
எரிச்சல் , கோபம் இத்யாதி இத்யாதி எல்லாம்
இருக்கட்டும் சில வினாடிகள் மாத்திரம்!
செய்யக் கூடியதை மட்டுமே சொல்!
சொன்னதைச் செய்!
இலக்கை நிர்ணயித்து விடு! - அதை நோக்கி
எழுச்சியாய்ப் புறப்பட்டு விடு .
எது வந்துற்ற போதும்
" அதனால் என்ன? " என்று கேள்;
" அடுத்தது என்ன ? என்று யோசி;
கோபம் உன் மிகப் பெரிய பலவீனம்;
நேரம் உன் மிகப் பெரிய மூலதனம்;
கேடு கெட்ட திரைப்படம், தொலைபேசி, அலைபேசி
ஈடுகட்ட முடியா நேர இழப்பு -தேவையா? யோசி;
பயனுள்ள வேலை , பயனிலா வேலை என்று
பட்டியலிட்டுத் தினமும் பழகி வா!
காதல் , சூது , கயவர் சேர்க்கை
மோதல் , வாதம், அரசியல் ஈர்ப்பு
இவை எதுவும் உனக்கு எப்போதும் வேண்டாம்.
உற்சாகத்துடன் கூடிய படிப்பு
அளவான தூக்கம் , முறையான உடற்பயிற்சி
இவைகளைப் பெறச் செய்வாய் முயற்சி !
கூடா நட்பை விட தனிமை மேலானது!
உண்மையான நல்ல நட்பு
உனக்குக் கிடைக்கும்உன்னதமான புதையல் ;
அறிவார்ந்த பண்புள்ள நண்பர்கள்
அளவோடு இருக்கட்டும்.
நூலகமே உன் கோவில் ;
நூல்களே உன் வழிகட்டி;
தன்னம்பிக்கைதான் உன் தாய்!
விடாமுயற்சி உன் தந்தை !
ஒழுக்கம் உன் கடவுள்;
உயர்வு பெற உழைப்பாய் -
உனக்கு என் வாழ்த்துக்கள் !!
-- அன்புடன்
உன் நட்புத் தந்தை

அனுப்பியவர் :
சுகுமார் ஏகலைவ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hummingbird என்று அழைக்கப்படும் ஓர் ஓசனிச்சிட்டு..

10482287_849584981742370_353747647509566

 

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவது என்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகள் படைத்து ஓர் இடத்தைப் பெற்றுவிட்டன! அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஓர் பறவை பற்றி நீங்கள் இந்த அறிவு டோஸில் தெரிந்துகொள்ளலாம்.

 

உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5cm நீளம் மற்றும் 2g நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று அழைக்கப்படும் ஓர் ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற உலக சாதனையை படைத்ததும் இல்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்ற சாதனையையும் படைத்துள்ளது.

 

அனைத்து ஓசனிச்சிட்டுகள் போன்றும் இந்த Bee Hummingbird முன்னே பறப்பது மட்டும் இல்லாமல், மேலே, கீழே மற்றும் பின்னே பறக்கும் பறவை ஆகும். மேலும் நின்ற நிலையிலேயே மிதக்கும் திறனையும் கொண்டதாகும். அப்படி மிதப்பதற்கு இந்தப் பறவை அதன் இறக்கைகளை ஒரே நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடிக்க வேண்டும். இப்படி அதிவேகத்தில் அடிக்கும் இறக்கைகளை மனித கண்களால் பார்க்கவே முடியாது.

 

பொதுவாக இந்தப் பறவை ஒரு பூவில் இருந்து இன்னுமோர் பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், அதனது சிறிய பரிமாணம் மற்றும் பறக்கும் திறன் காரணமாக இந்த வல்லுநர்கள் ஒரு நாளில் மட்டுமே 1500 பூக்களை தொட்டு விடுகின்றன.

 

அறிவு டோஸ் என்னும் பக்கத்திலிருந்து.......

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக அனைவருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ கீழே விழுந்து விட்டால்

உடனே எழுந்து விடு....

இல்லை என்றால் இந்த

உலகம் உன்னை புதைத்து

விடும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10424987_313661165495526_497924176611643

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக விரதங்களைக் கடைப்பிடிப்பவர்களுக்கான விபரம்..இன்று ஸ்கந்த சஷ்டிவிரத ஆரம்பம்.

 

 

 

 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.