Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10394595_313595095502133_445677500379314

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்டனி வான் லியூவன்ஹாக்...

 

2_2169990f.jpg

 

ஹாலந்து ஆராய்ச்சியாளர் ஆன்டனி வான் லியூவன்ஹாக்கின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 

• வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தவர், உறவினரிடம் கணிதம், இயற்பியல் கற்றார். தெரிந்த ஒரே மொழி, தாய்மொழி டச்சு.

 

• 22 வயதில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார். உள்ளூர் அரசியலிலும் பிரபலமானார். நூல்இழைகளின் தரத்தைப் பரிசோதிக்க ஜவுளி வியாபாரிகள் பூதக்கண்ணாடி பயன்படுத்துவது வழக்கம். இவர் அதுபோலச் செய்தது நூலிழைகளுக்கும் அப்பாற்பட்ட நுணுக்கமான ரகசியங்களைக் கண்டறியும் ஆர்வத்தை தூண்டியது.

 

• 1668-ல் சாதாரண லென்ஸ்களை தயாரிக்கக் கற்றார். ராபர்ட் ஹூக் எழுதிய ‘மைக்ரோகிராஃபியா’ என்ற புத்தகத்தைப் பார்த்த இவருக்கு மைக்ரோஸ்கோப் தயாரிப்பதில் ஆர்வம் பிறந்தது. மெல்லிய லென்ஸ், மைக்ரோஸ்கோப் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கினார். ஒருசெல் உயிரினம் குறித்து முதன்முதலில் அறிவித்தார்.

 

• பொருளை 30 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மைக்ரோஸ்கோப் கருவிகள்தான் இவரது காலத்தில் இருந்தன. இவர் உருவாக்கிய மைக்ரோஸ்கோப் 200 மடங்குக்கும் அதிகமாக பெரிதாக்கிக் காட்டின. இதுகுறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி இதழில் கட்டுரை வெளியானதும் பிரபலமடைந்தார்.

 

• ரத்த அணுக்கள், உயிரினங்களின் விந்தணுக்களை முதன்முதலில் கண்டறிந்தார். ரத்தச் சிவப்பு அணுக்கள் பற்றி முதன்முறையாகப் பதிவு செய்தார். மைக்ரோஸ்கோப் வழியாக உயிரினங்களில் காணும் காட்சிகளை ஓவியர் உதவியுடன் வரைந்து உரிய விளக்கங்களை குறிப்பிட்டு, லண்டன் ராயல் சொசைட்டிக்கு தொடர்ந்து அனுப்பினார்.

• 500-க்கும் மேற்பட்ட ஆப்டிகல் லென்ஸ்களை தயாரித்தார். 25 விதமான மைக்ரோஸ்கோப்களை உருவாக்கினார்.

 

• ஒரு ஆய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிப் புத்தகம்கூட இவர் எழுதியது இல்லை. ஆனால், ராயல் சொசைட்டிக்கு இவர் அனுப்பிய 1677 கடிதங்களும் நுண்ணுயிரியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தன. ராயல் சொசைட்டி நூலகத்தில் இந்த கடிதங்கள் முக்கிய ஆவணங்களாக இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

• அவரது நுணுக்கமான ஆய்வுத் திறனும், தணியாத ஆர்வமும் ‘நுண்ணுயிரியல் தந்தை’ என்ற பெருமையை பெற்றுத் தந்தன.

 

• அறிவியல் மேதைகள் மட்டும் அங்கம் வகிக்கும் லண்டன் ராயல் சொசைட்டி, இவரது ஆய்வுத் திறனை கவுரவித்து இவரையும் உறுப்பினராக சேர்த்துக்கொண்டது.

• கடைசிவரை நுண்ணுயிரி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் 90-வது வயதில் இறந்தார்.

 

தகின்டு என்னும் பக்கத்திலிருந்து.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுய நலத்திற்காக சுயத்தை இழக்கும் மனிதன்..ஒரே சலவையில் வெளுத்துப் போன சாயம் தான்..!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Mississauga real estate agent wins $20M lottery prize

web-$20_million_winner%21___Content.jpg
That's $20,000,002 - don't forget the $2
Mississauga’s Velauthan Vamadevan is $20 million richer after winning Lotto 6/49.
 
 
 

Mississauga News

MISSISSAUGA – Mississauga’s Velauthan Vamadevan is $20 million richer after following a whim.

 

 

The father of three, who has been playing the lottery for 20 years, won the $20-million jackpot from the Oct. 18 Lotto 6/49 draw.

“I never expected it, I never thought I would win,” said the 62-year-old real estate agent.

 

Velauthan said he purchased his ticket just hours before the draw on Saturday. “It was my son’s birthday and I decided to give it a shot. I was at the gas station filling up, so I purchased one Quick Pick.”

When he got home, Velauthan placed his ticket on a shelf and forgot about it.

 

“Then I heard the winner was from Mississauga so I checked a couple of tickets I had in my wallet,” he said. “But they weren’t the winning tickets. I thought maybe someone else I know from Mississauga was the winner.”

 

On Tuesday night, Velauthan found the ticket he left on the shelf.

 

“I got on the computer and looked up the winning numbers. I was speechless,” he said.

 

He then phoned his wife. “She didn’t believe me. But then she checked the numbers and so did all my kids.”

Velauthan arrived at the OLG Prize Centre in Toronto Wednesday morning, a little bleary-eyed with his ticket. “I had a sleepless night. I didn’t bother validating the ticket at a store. I just wanted to come to the Prize Centre."

 

Velauthan has yet to decide what he will do with the money.

“It is a miracle this has happened after 30 years of being in Canada. I’m still shocked. I knew since Sunday there was a winner and I kept thinking, ‘What a lucky guy!’ I guess you never know.”

 

The winning ticket was purchased at Eglinton Husky on McLaughlin Rd

 

 

http://tamilculture.ca/tamil-canadian-buys-lottery-ticket-on-sons-b-day-and-wins-20m/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கங்கள்......அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

1535480_490394434436909_8948106172124450

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்த்து சண்டையிடுவதற்கு

அதிக புத்திசாலித்தனம் தேவையில்லை,

புரிந்து கொண்டு

விட்டுக் கொடுப்பதற்குத்தான்

அதிக புத்திசாலித்தனம்

தேவைப்படுகிறது..!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாப்லோ பிக்காசோ

 

2_2171104f.jpg

 

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.

• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.

• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.

• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.

• ‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.

• சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.

• அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.

• ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது.

• இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது.

• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகம் நல்லவனாக இருக்க நினைக்காதே..

உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்...

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே..

அடிமையாக்கி விடுவார்கள்....

அதிகம் பொறுமையுடன் நடக்காதே...

பைத்தியம் ஆகும்வரை விடமாட்டார்கள்...

வெளிப்படையாக இருந்து விடாதே..

பலர் உன்னை வெறுக்க நேரிடும்...

எல்லோரையும் நம்பி விடாதே..

ஏமாற்றப் பலர் இருக்கிறார்கள்....

கோபப்படாமலே இருந்து விடாதே...

கோமாளியாக்கி விடுவார்கள்... :(:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10565072_10154462048305717_2081311242129

 

 

வாழ்க்கையில் ஒன்றும்

நிரந்தரம் இல்லை

வந்ததும் போனதும்

வரிசையில்

நினைவுக்கு வரும்

கடைசியில் ஒன்றுதான்

உன் கூடவே வரும்

கூட்டில் இருந்து

கூவும் சத்தம்

கொஞ்சம்

குறையும் நேரம்

குடும்பத்தோடு சுற்றம் சூழ்ந்து

கும்மி அடித்துக்

கூவி அழும்...........

குச்சி கூட உன் வழியில்

துணைக்கு வராது

கூரையைக் கூடப் பிரித்தாலும்

வானம் உனக்குத் தெரியாது

கூட்டி கூட்டி

சேர்த்ததெல்லாம்

கூனிக் குறுகி

கூசி நிற்கும்

நீ சேர்த்து வைத்த

பாவம் மட்டும்

கூடவே உனக்கு

துணைக்கு வரும்............

இன்று பார்த்த கடிகாரம்

நாளை பார்க்க முடியுமோ?

இமைப்பொழுதில்

நின்று போகும்

இந்த இதய துடிப்பைக் காக்க

அந்த இறைவனுக்குத்தான் அதிகாரம்

இன்றே தான் நிரந்தரம்

இருக்கும் போதே இரப்போம்

இல்லை என்ற வார்த்தையை

இன்றோடு மறப்போம்............

வாழ்க்கையில் ஒன்றும் நிரந்தரம் இல்லை.......

அருள் நிலா வாசன் வரிகளிலிருந்து..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெளனம் பேசுவோம்

ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விசயங்களை ஒரு மெளனம் சொல்லிவிடும். மெளனம் ஒரு மகத்தான சக்தி. மெளனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள் அதை தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எதை எப்போது எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்தான், ஆனால் அதைவிட அவசியம் எப்போது பேசாமல் மெளனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது. ஒரு விசயத்தை சொல்வது கலை என்றால் ஒரு விசயத்தை சொல்லாமல் சொல்வது அதைவிட நுணுக்கமான கலை, மெளனத்தை பேச வைக்கிற கலை அது. சொல்லாமல் சொல்லும் கலை என்கின்றனர் சான்றோர். இக் கலையில் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தார் கவியரசு கண்ணதாசன் , அவர் ஒரிடத்தில் எழுதுகிறார் என் தந்தைக்கு மது, மங்கை, மாமிசம் முதலிய எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனால் நிறைய சீட்டாடுவார், நான் சீட்டு மட்டும் ஆடமாட்டேன் என்றார், இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவர் சொல்லாமலே நமக்கு புரிகிறதல்லவா?

தத்துவமேதை பெர்னாட்சா ஒரு முறை தனக்கு 25 மொழிகள் தெரியும் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார். மற்றவர்கள் எப்படி என்று விசாரிக்க " ஆமாம் என்னால் 25 மொழிகளில் மெளனமாக இருக்க முடியும் " என்றார் குறும்பாக. ளெனம் சர்வார்த்த சாதகம் என்கிறது சமஸ்கிருதம், மெளனத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். காஞ்சி பரமாச்சாரி அவர்கள் மெளன விரதம் இருப்பார், அதற்கு காஸ்டமெளனம் என்று கூறுகிறார்கள். சைகைகளால் கூட பேசாமல் இறை சிந்தனையில் தோய்ந்திருக்கும் மிக உயர்ந்த மெளனம் அது. ஆனால் தாம் அத்தைய மெளன விரதம் இருந்த நாளொன்றில் தொலை தூரத்திலிருந்து தம்மை தேடி மாணவர் குழு ஒன்று வந்தபோது அவர் தம் மெளனத்தை கலைத்து விட்டு பேசினார் என்கிறது வரலாறு. காரணம் வந்த மாணவர்கள் பார்வையற்றவர்கள் அவர்கள் தம்மைக் கண்களால் காண இயலாது தனது மெளன சைகைகளும் அவர்களுக்கு தெரியாது தம் குரலையாவது அவர்கள் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது ஆச்சாரியாரின் கருனை உள்ளம்.இதே போல் ஸ்ரீ ரமணர் மெளனத்தாலேயே ஏராளமான பேருக்கு உபதேசம் செய்திருக்கிறார். அவர் முன் அமர்ந்தால் அவரது ஒளிபொங்கும் விழிகள் அடியவர்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிடும் என்கிறார்கள் அவரைத்தரிசித்த அன்பர்கள், மெளனம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதற்கும், சண்டை சச்சரவு நேரங்களிலும் மெளனம் சாதிப்பது மிக சிறப்பை காட்டும் மாமியார் மருமகள் சண்டை, சகோதரர்கள் சண்டை, தாய்மகன் சண்டை தகப்பன் மகன் சண்டை ஏதும் வராது.

சொல்லாமல் சொல்லும் கலையால் ஒரு வினேதமான செயல்களும் நடப்பதுண்டு அன்பர் ஒருவர் நாள்தோறும் காலை ம10 மணி வரை மெளனம் இருப்பார், இது தெரியாத அவரது நண்பர் காலை 10 மணிக்குள் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றிருக்கிறார். அவர் பேசவில்லை 10 மணிக்கு மேல் பேசி அவரிடம் நண்பர் இப்படிக் கோபித்துக் கொண்டாராம். ஏனையா? பத்து மணிவரக்கும் நீங்கள் மெளனவிரதம் இருப்பதை சொல்லி தொலைத்திருந்தால் மீண்டும்மீண்டும் போன் செய்யாமல் இருந்திருப்பேனல்லவா? என்றாராம்...

 

வாசித்ததிலிருந்து....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துயரங்களைப் பிறரிடம்

கூறாதீர்கள்.பலர் அதற்காக

வருத்தப் படமாட்டார்கள்.சிலர்

அதில் மகிழ்ச்சியும் அடைவர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக அனைவருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..!!!

 

1477398_239676009531705_2145508682_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சே.குவின் இறுதி வாசகம்.

 

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க,

அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே,

சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண

மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள்

மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன

கடைசி வாசகம் இதுதான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10678829_661476923966329_809858021081659

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவற்றை

சகித்துக்கொள்வதைத்

தவிர ...

வேறு

வழியே

இல்லை !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது வாய்ப்புக்களால்

நிரம்பியது, நாம் எந்த வாய்ப்பை

பயன்படுத்துகின்றோம் என்பதைப்

பொறுத்துதான் நம் வாழ்க்கை

அமையும்....-கென்னடி

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சே குவேராவின் தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதம் !!!!!

நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வரவேண்டும். கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். அறிவுதான் இயற்கையை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியம் அல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. எல்லாவாற்றையும் விட, எப்போதும் உலகத்தின் எங்கேனும் யாருக்காவது நடக்கிற கொடுமைகளுக்கு வருத்தப்படுகிறவர்களாக இருங்கள்.
இன்னும் நிறைய காலம் போராட வேண்டியிருக்கிறது. வளர்ந்த பிறகு நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். அதற்கு உன்னை தயார் செய்து கொள். புரட்சிகரமானவளாய் இரு. உன்னுடைய வயதில் நிறைய படிப்பதும், நியாயங்களை ஆதரிப்பதும்தான் அவைகள்.

 

16119_574277626005123_240557245714296629

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை 27.10.2014 நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள்...

 

tamil-in-election.jpg

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கின் அடியில்

படர்ந்திருக்கும் இருள்

யாருக்கும் தெரிவதில்லை..

சிரிப்பின் பின்னால்

சிதறிக் கிடக்கும்

சோகம் யாருக்கும்

புரிவதில்லை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலைப்பொழுதின் அன்பு வணக்கங்கள்..அனைவருக்கும் இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்!!!.

 

 

44941_234649499998516_1494967207_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10574413_878316935514956_342460480980406

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தேர்தல் 25ற்கும் அதிகமான தமிழ் மக்கள் களத்தில் நிற்கிறார்கள் சரியானவரை தெரிவு செய்வது அனைவவரதும் கடமையுமாகும்...தமிழர் கேக்கிறார் என்பற்காக வாக்களிக்காமல் சாியான நபருக்கு வாக்களிப்பதில் உறுதி எடுங்கள்..

 

tamil-in-election.jpg

 

10374974_10204976752569402_1456554256635

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் எந்தக் கருத்தை கூறினாலும்,

அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும்

மனிதன் முன்னேற்றமடைய மாட்டான்.-பெரியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1899941_659459610835749_4232910482046958

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ஏமாற்றத்தை மட்டுமே இதுவரைக்கும் சந்தித்து வருகின்றேன். இனி எந்த உறவையும் நம்பி ஏமாறுவதற்கு நான் தயாராக இல்லை.எனக்கு நான் மட்டுமே... :( படித்ததிலிருந்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.