Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச மன்னிப்பு தினம்!!

  • கருத்துக்கள உறவுகள்
On 1.7.2016 at 5:26 AM, யாயினி said:

.

 

இதைப்பார்த்த நண்ப னுக்கு ஒன்றும் புரிய வில்லை. “உன்னை அறைந்த போது மண லில் எழுதினாய், இப்போது உன்னை காப் பாற்றிய போது கல் லில் எழுதுகிறாய். இதற்கு என்ன அர்த் தம்?” என்று கேட்டான்.


அதற்கு அறை வாங்கிய நண்பன், “யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும்.
அதுவே நமக்கு யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்தது அழியாது” என்று சொன்னான்.....
நல்லவை நிலைக்கட்டும்.தீயவை ஒழியட்டும்

 ஒரு சிறிய கதைக்குள் எத்தனை பெரிய விடயம்.... தொடருங்கள் யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

UK First woman prime minister for 26 years 
பிரித்தானிய வரலாற்றில் இரண்டாவது தடவையாக பெண் ஒருவர் பிரதம மந்திரியாகின்றார்
It means that by 9 September, Britain will have its first female PM since Margaret Thatcher, who left No.10 in 1990.

The winner will become the UK's second ever female prime minister
Theresa May V Andrea Leadsom

‪#‎Theresa‬ May
Date of birth: 1 October 1956 
Job: Home secretary 
Education: Wheatley Park Comprehensive School; St Hugh's College, Oxford university 
Family: Married

‪#‎Andrea‬ Leadsom 
Date of Birth: 13 May 1963
Job: Energy and climate change minister
Education: Tonbridge Girls' Grammar School; Warwick university 
Family: Married with two sons and one daughter

 
Jeya Jey's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

261948_227682833932206_3740451_n.jpg?oh=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Canada day Contest winner. .?

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான நீர்வீழ்ச்சியின் அருகே உயரத்தில் நின்று ஒற்றைக் கயிறில் யோகா செய்து அசத்தியிருக்கிறார் பெண் ஒருவர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைற் தேசிய பூங்காவின் வேர்னல் நீர் வீழ்ச்சி அருகிலேயே இந்த மயிர் கூச்செறியும் சாகசத்தை செய்திருக்கிறார் 23 வயதான கிம்பெர்லி வெக்லின்.நிமிடத்துக்கு 8 லட்சத்து 60 ஆயிரம் கலன் நீர் கொட்டும் அந்த நீர்வீழ்ச்சி அருகில் தனது ஆண் நண்பரின் உதவியுடனே இந்த சாகசத்தை அவர் புரிந்துள்ளார்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந்தப் பூங்காவுக்கு அன்றைய தினம் சென்றிருந்தார். இதனால் அவர் தனது சாகச யோகாவை சிறிது நேரத்திலேயே முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதாகிவிட்டது.

 
Sivaranjan Eelamranjan Thanabalasingham's photo.
Sivaranjan Eelamranjan Thanabalasingham's photo.
  • கருத்துக்கள உறவுகள்
On 7.7.2016 at 1:39 PM, யாயினி said:

 

 

பாடல்  இணைப்புக்கு, நன்றி.... யாயினி.
அந்த ஆறு நிமிடப் பாடல், அந்தச் சிறுமியின் குரலால்....  மெய் மறக்க வைத்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேப் பாரென் பெருவாத்து – ஆஸ்திரேலியாவின் அதிசயம் (18)

 
 
cape%2Bbarren%2Bgoose%2B3.JPG


 
பெருவாத்தினங்களில் இப்படியொரு இனம் இருப்பதே உலகுக்குத் தெரியவராத நிலையில் ஆரம்பகாலத்தில் ஐரோப்பியர்இவற்றை கருப்பு அன்னங்களின் முதிராத இளம்பருவக் குஞ்சுகள் என்றே எண்ணியிருந்திருக்கின்றனர்பிறகுதான் இவைதனியினம் என்று அறியவரமுதன்முதலாகக் கண்டறிந்த இடத்தின் பெயரையே இப்பறவைக்குச் சூட்டி கேப் பாரென்பெருவாத்து (cape barren goose) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்பன்றி போன்ற அகன்ற வாய்ப்புறத்தைக்கொண்டிருப்பதால் பன்றிவாத்து என்ற பட்டப்பெயரும் உண்டுஆஸ்திரேலியாவின் குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டுமேகாணப்படும் கேப் பாரென் பெருவாத்தினம் பற்றி இப்போது பார்ப்போம்.
 
 
_1850943.JPG
 
 
அலகின் நுனியிலிருந்து வால் நுனிவரையிலான இதன் நீளம் 75 செ.மீ முதல் 1 மீவரை இருக்கலாம்எடை மூன்று முதல்ஏழு கிலோ வரையிலும் சிறகுவிரி நீளம் 1.5மீ முதல் 2மீ வரையிலும் இருக்கும்இதன் உடலோடு ஒப்பிடுகையில் தலையின்அளவு சிறியதுவெளிர்சாம்பல் நிற உடல்சிறகுப்பகுதியில் மட்டும் காணப்படும் சற்றே அடர்சாம்பல் நிறப்புள்ளிகள்இளஞ்சிவப்பு நிறக்கால்கள்கருமையான பாதங்கள் மற்றும் அலகின் மேற்புறத்தைப் போர்த்தியிருக்கும் வெளிர்பச்சை நிறதோல்சவ்வு இவற்றைக்கொண்டு இதை எளிதில் அடையாளம் காணமுடியும்பெரும்பாலான சமயம் அமைதியாகஇருந்தாலும் ஆபத்து வருவதாக உணர்ந்தால் கொம்பூதுவது போன்று கர்ணகடூரக் குரலெடுத்து எச்சரிக்கும்
 
 
 
cape%2Bbarren%2Bgoose%2B1.JPG


 
இவை வாத்தினம் என்றாலும் நீரை விடவும் நிலத்தையே பெரிதும் சார்ந்து வாழ்கின்றனகால்நடைகளைப் போலபுல்மேயும் இப்பெருவாத்துகளுக்கு விருப்ப உணவு கோரைப்புற்கள்புல்பூண்டுகள்,  இலைகள்விதைகள்சதைப்பற்றான தாவரங்கள் போன்றவைஇவற்றோடு உணவுப்பயிர்தீவனப்பயிர் போன்றவை கிடைத்தால் இன்னும்கொண்டாட்டம்தான். உவர்நீரையும் அருந்தக்கூடிய தன்மை இருப்பதால் இந்தப் பெருவாத்துகள் தீவுகளின்கரையோரங்களில் பெருமளவு காணப்படுகின்றனஇனப்பெருக்கக் காலம் அல்லாத சமயத்தில் ஊருக்குள்விளைநிலம் சார்ந்த பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன.  

 
 
_1850954.JPG


 
கேப் பாரென் பெருவாத்துகள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றனஇனப்பெருக்கக் காலத்தில் கோரைப்புல்வெளியின் திறந்தவெளியில் கூடுகட்டி முட்டையிடுகின்றனகூடுகட்டுவதுஆண்பறவையின் வேலைகுச்சிகளையும் கோரைப்புற்களையும் கொண்டு தரையில் கிண்ணிபோன்ற ஒரு பெரிய கூடுகட்டி அதனுள் மென்பஞ்சு இறகுகளால் மெத்தை அமைக்கும்பெண்பறவை ஒரு ஈட்டுக்கு நான்கு முதல் ஆறு முட்டைகள்வரை இடும்முட்டைகளை அடைகாப்பது பெண்பறவையின் வேலைகூடு கட்டும் காலத்தில் ஒவ்வொரு இணையும்தமக்கென்று எல்லை வகுத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதில் மூர்க்கமாய் செயல்படும்கூடிருக்கும் பகுதியில்நுழைய முற்படும் நாய்நரிகளை மட்டுமல்ல மனிதர்களையும் மூர்க்கமாய்த் துரத்திவெளியேற்றும்.
 
cape%2Bbarren%2Bgosling.jpg
படம் உதவி இணையம்
ஐந்து வாரங்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிந்து வெளிவரும்.  குஞ்சுகள் தாய்தந்தையைப் போல் இல்லாமல் கருப்புவெள்ளைக்கோடுகளுடன் காட்சியளிக்கும்தாய்தந்தை இரண்டும்  இணைந்து அவற்றை வளர்க்கும்.  கோழிக்குஞ்சுகளைப் போல முட்டையிலிருந்து பொரிந்து வந்தநாளிலிருந்தே குஞ்சுகள் தாமாகமேயக்கற்றுக்கொள்கின்றனபத்து வாரங்களில் பறக்கக் கற்றுக்கொள்கின்றன. 17-ஆவது வாரத்தில் தாய்தந்தையைப்பிரிந்து தன்னிச்சையாய் வாழத்தொடங்குகின்றனமூன்று வருடத்தில் முழுமுதிர்ச்சி அடைந்து இனப்பெருக்கத்துக்குத்தயாராகின்றனஇவற்றின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள்


 
cape%2Bbarren%2Bgoose%2B2.JPG
 
 
ஆரம்பகாலத்தில் உணவுக்காகப் பெரிதும் வேட்டையாடப்பட்டுவந்த காரணத்தால்இவற்றின் எண்ணிக்கைகுறைந்துகொண்டே வந்துஒரு கட்டத்தில் இவ்வினமே அழியும் நிலைக்கு வந்துவிட்டதுநல்லவேளையாக 1950 ஆம்ஆண்டின் பறவைக்கணக்கெடுப்புஅபாயமணி அடித்து ஆபத்தைத் தெரியப்படுத்தஅதன்பின் போதுமான  பாதுகாப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனநடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவின் கரையோரத்தீவுகள்பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டுஅதன் காரணமாகஇன்று ஓரளவுக்கு இவற்றின் எண்ணிக்கை பெருகியிருந்தாலும்இப்போதும் இவை அரிய உயிரினங்களின் பட்டியலில்தான் உள்ளன என்பது  கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்.
 
 
cape%2Bbarren%2Bgeese.JPG

 

http://geethamanjari.blogspot.ca

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13631584_10209665471971476_1527281808163இதழ் விரித்த பாரிஜாதம்..

இந்தப்பூ நள்ளிரவில் பூத்து சூரிய உதயத்தின் போதுவாடிவிடும் என்று நான் கேள்விப்பட்டது 

இலங்கையில் இந்த பூக்களுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் உண்டு.இவற்றை இலங்கையில் முதன் முதல் அவதானித்தவன் சீகிரி மன்னன் காசியப்பன். இவன் விடலைப்பருவத்தில் சிகிரியக் காடுகளில் விளையாடித்திரிந்தபோது சிகிரியாக் குன்றில் இம்மலர் வனத்தைப்பார்த்து ஆச்சரியமுற்று அருகில் சென்று பார்த்த போது அவை வாடியிருந்தமையை கண்ணுற்று சோகமடைந்தான்.

பின் அவற்றில் அரும்புகளும் முகைகளும் இருப்பதை அவதானித்து மொட்டவிழ்க்கும்வரை காத்திருந்தான். அதற்கு அவன் நல்லிரவு வரை காத்திருக்க நேரிட்டது. அவை மலரும் காட்சி அவனுக்கு பேருவுவகையைத்தந்தது.

அந்த பேருவகையின் ஊந்துதலே அவனுக்கு சீகிரியக்குன்றை அமைக்க வேண்டும் என்ற கனவைத்தந்தது.
அவனது தந்தை தாது சேனன் அவனை அரசனாக்க முற்பட்டபோதும் அதனை வேண்டாமென மறுத்த காசியப்பன் தன் கனவை நனவாக்க முயன்று வெற்றியும் பெற்றான். அவன் அக்குன்றின் பல இடங்களில் பாரிஜாத பூச்செடியை நட்டான்.
நாடெங்கும் தண்டோரா போட்டு அழகிய யுவதிகள் ஐந்நூறு பேரைத்திரட்டினான். அவர்களில் இருந்து மிக அழகிய பதினாறு யுவதிகளை தெரிவு செய்தான்.இந்த அழகிகள் தெரிவினை அவனது இரண்டு புத்திரிகளே மேற்கொண்டனர்.

அவன் சிகிரியாக் குன்றை நிர்மானித்து முடித்ததும் இந்த அழகிகளை மாதிரியாக வைத்து அவர்களை நன்கு அலங்கரித்து அவர்கள் கரங்களில் பாரிஜாத மலர்களை கொத்தாகக் கொடுத்து சிகிரியக் குன்றின் பாறை சுவர்களில் அவனே முன்னின்று சித்திரமாகத்திட்டினான். அவன் இதற்காக இந்தியாவுக்குச் சென்று ஓவியம் கற்று வந்திருந்தான்.

சீகிரியாக் குன்றின் பாறைச்சுவர்களில் இப்போதும் இவ் அழகிய ஆரணங்குகள் பாரிஜாத மலர்களை ஏந்தியவாறு புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் “சீகிரியாவின் அப்ஸராக்” தேவலோக நங்கைகள் என்று அழைத்து ரசிக்கப்படுகின்றார்கள். நீங்களும் சீகிரியாக் குன்றுக்குச்செல்லும் வாய்ப்புக்கிடைத்தால் சுற்றிவர சற்று எட்டிப்பாருங்கள். அதிர்ஷ்ட மிருந்தால் சில பாரிஜாத மலர்கள் உங்கள் கண்களிலும் படலாம்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Robert Catholic High School student scores a perfect 100 per cent average

Father Michel McGivney Catholic Academy students tie for second with 99.83 per cent average

York Catholic District School Board's top graduating student for the 2015-16 school year scored a perfect 100 per cent in all of her Grade 12 classes. The student and her family could not be reached at the time of publication. YCDSB expects to release her name, once permission has been granted later this month.

The Top Scholar was enrolled in St. Robert's International Baccalaureate (IB) program, which meets the Ontario curriculum and offers a rigorous, internationally-recognized curriculum. YCDSB offers the IB program at three schools: St. Robert CHS, Father Michael McGivney CA, and Cardinal Carter CHS.

Following close behind the Top Scholar were Father Michael McGivney CA students, Malavan Ragulojan and Janani Sathiaselan, who both scored an average of 99.83% in their top six Grade 12 courses.

Both Malavan and Janani opted to attend Father Michael McGivney CA specifically for its IB program after graduating from local area public elementary schools. Malavan credited "the challenging IB program and very driven classmates" for his academic success. Similarly, Janani said, "my peers in the IB program were very supportive. It was nice to face the trials and challenges of the intensive program together, because we really understood and supported each other. The administration at McGivney was incredible, and my teachers were very supportive too."

Ragulojan-Malavan.jpgDuring his four years at Father Michael McGivney, Malavan spent two years as the President of the Science Club and was Secretary of the Game Development (programming) Club. He was also a member of the school's Free the Children, and ESP (Empowered Student Partnership) anti-bullying clubs. Outside of school, he volunteers his time at a robotics camp, and with the Markham Public Library's coding camp. Malavan will begin the Health Sciences program at McMaster University in September, and would like to eventually become a neurosurgeon.

Sathiaselan-Janani.jpgJanani served as the President of McGivney's Eco Club, and as Vice-President of the ESP club. She was also a member of the school's SLAM (Student Leaders at McGivney) and OSAID (Ontario Students Against Impaired Driving) clubs. In her free time, she plays the violin. Janani will begin the Medical Sciences program at Western University in September. In the future, she would like a career where she can use her skills to help others.

The York Catholic District School Board congratulates the Top Scholar from St. Robert CHS, Malavan and Janani on their remarkable achievements, and extends its best wishes to them as they pursue their post-secondary studies.

Following is a list of the top student from each York Catholic secondary school, based on the average of their best six Grade 12 classes.

http://www.ycdsb.ca/news/archive/070816-top-scholar.html?platform=hootsuite

The Top Scholar from each York Catholic Secondary School, by Community
Student Name School Community Grade 12 Average*

* Based on the average of the students’ marks in their six best Grade 12 courses.

** Indicates a tie

Spencer Rosen Cardinal Carter CHS Aurora 99.17
Chloe Gao St. Maximilian Kolbe CHS Aurora 98.67
Sarah Trudel Our Lady of the Lake CCS Keswick 96.17
Carlo Panaro St. Joan of Arc CHS Maple 95.83
Malavan Ragulojan Father Michael McGivney CA** Markham 99.83
Janani Sathiaselan Father Michael McGivney CA** Markham 99.83
Jonathan Tian-Wei Lee St. Augustine CHS Markham 97.17
Melissa Liu St. Brother Andre CHS Markham 98.67
Pei-Yao Chen Sacred Heart CHS Newmarket 98.00
Jacqueline Lai Jean Vanier  CHS Richmond Hill 96.33
Katrina Cecco St. Theresa of Lisieux CHS Richmond Hill 99.00
Raffaele Cramarossa St. Elizabeth CHS Thornhill 99.33
-- name withheld -- St. Robert CHS Thornhill 100.00
Laura Haba Father Bressani CHS Woodbridge 98.33
Steven Duria Holy Cross CA Woodbridge 96.67
Cassandra Sansone St. Jean de Brebeuf CHS Woodbridge 98.33
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ceylon 5000 rupee bill.

 
Sahana Sahana's photo.
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புக்காரா குண்டுகள்!  இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்!

புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்!

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட  எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. 
 
இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. இன்று அதன் நினைவுநாள். 
 
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நவாலிப்படுகொலை நடைபெற்று இருபது வருடத்தின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப் படுகொலை இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார். 
 
உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். 
 
கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன. 
 
இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச்  செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது. 
 
உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு. அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது. 
 
இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு. நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்து பத்து வருடங்களின் பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் -  தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும். 
 
நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும்  அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள். ஆறாத காயம் இந்தப் படுகொலை. 
 
போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள்.  அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர். எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது. 
 
சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இனப்படுகொலைத் தாக்குதல்கள் குறித்து, ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், முன்யை அரசு என்ற வகையிலும் சந்திரிக்கா பண்டார நாயக்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள்மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர். 
 
போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை,இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன், அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு ஒன்றை காண நவாலிப்படு இனப்படுகொலைக்குப் பொறுப்பான சந்திரிக்கா, அதற்கு மன்னிப்புக் கோருவதே முதற்படியாக அமையும். இல்லாவிட்டால், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். இருதயத்தில் மீண்டும் மீண்டும் புக்காரக்கள் குண்டுகளை வீசும். 
 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13626629_1219281421467210_25783651140106   வடலி அதிகமில்லை வெறும் 699 Euro மட்டும்

இதில போட்டிருக்கிறது மலிவு விலைதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாமேதை சார்லி சாப்ளினின் நெஞ்சைத் தொடும் மூன்று கருத்துக்கள் !!

* இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது ! உங்கள் துயரங்களுக்கும் கூட இது பொருந்தும்.!

* எனக்கு மழையில் நனைய மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் அப்பொழுதுதான் நான் விடும் கண்ணீர் யாருக்கும் தெரியாது.!

* வாழ்க்கையில் வீணாக்கிய நாள்கள் எல்லாம் நாம் சிரிக்காத நாட்களாய் இருக்கும்.!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 11: உலக மக்கள் தொகை நாள் இன்று

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக சாதனைக்கு

ஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும் 
 
 

சாதனை செய்வதற்கு

ஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும் 
 
 

வெற்றி பெறுவதற்கு

ஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும் 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WHO IS RICH IN THIS WORLD?

 
 
rich-man%2B%25281%2529.jpg
Rich-man.jpgEveryone say that Bill Gates is rich and ambani is rich. I don’t believe in that. Have you guys been into their life?. They can’t live a happiest life that a beggar lives. Beggar may not be able to buy or eat what he wants. And he have to walk miles and metres if he wants to go somewhere. The rich people have them all but do you think they have happiness, do you think they have time to be with their family. Do you think they are satisfied with what they have. No definitely not, everyone have a choice in life, many of us wants to become rich, others want to become popular. But we absolutely don’t know what it is to be riches and popular. Having a Rolls Royce car is not absolutely riches having someone to carry our coffin is the real riches. Those who have good friends don’t need to worry about enemies. Those who have happiness don’t need to worry about death. When we have happiness, we have everything that is essential for life. We must have many people to support us and encourage us at the time of our tragedy other than the money that makes us to worry of loss or theft. We as humans nowadays just running behind a paper that is printed by human. We don’t earn friends or relations. We don’t spend time with our family members. Those who can manage the families financial as well as affection and love is the real rich man in this world

 
 
………..Let’s spread the breeze of love………..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண்கள்..!.

 
13606553_10206617905712398_5146736099200
உலக அதிசயப்படியலில் இடம்பெறாத
மற்றும்
பொறியியல் அதிசயமான
நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண்கள்..!.
இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர்.
இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.
சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.
இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.
ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.
இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை.
உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ கலைஞன் ஒருவரை இழந்திருக்கின்றோம்

மரிக்கார் எஸ் ராம்தாஸ்

ஆத்மா இறைநிழலில் இளைப்பாறட்டும்.

அவர் தொடர்பாக விக்கிபிடியா தரும் தகவல்கள்.

இலங்கையின் புகழ் பெற்ற வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். இலங்கையில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் அதிகமானவற்றில் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர். நகைச்சுவையில் சோபித்தது போலவே குணசித்திர பாத்திரங்களிலும் பிரகாசித்த சிறந்த நடிகர்.

வெள்ளிவிழாக் கலைஞர்

கலைவாழ்வில் 25 வருங்களை பூர்த்தி செய்த வகையில் 1990ல் தனது கலையுலக சகபாடிகளான ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், பி. எச். அப்துல் ஹமீட், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் ஒரே மேடையில் வெள்ளிவிழா கொண்டாடியவர்.

வானொலியில்

இலங்கை வானொலியில் வர்த்தகசேவையில் ஏராளமான வானொலி நாடகங்களை எழுதி, நடித்ததோடு தயாரித்தும் வழங்கியவர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்பாகிய "கோமாளிகள் கும்மாளம்" என்ற பிரபலமான நாடகத்தொடரை இவரே எழுதியதோடு, 'மரிக்கார்' பாத்திரத்திலும் நடித்து அதையே தனது சிறப்பு பெயராகக் கொண்டவர். இதுவே பின்னர் 'கோமாளிகள்' என்ற பெயரில் திரைப்படமாகியது. கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய வானொலித் தொடர்நாடகமான 'கிராமத்துக்கனவுகள்' நாடகத்தில் யாழ்ப்பாண கிராமத்தில் வாழ்ந்த ஒரு இந்திய் ஆசிரியராக குணசித்திர பாத்திரத்தில் நடித்து உருக வைத்தவர்.

தொலைக்காட்சியில்.

'மலையோரம் வீசும் காற்று', 'எதிர்பாராதது', 'காணிக்கை' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததோடு எழுதித் தயாரித்தும் இருக்கிறார்.

நடித்த திரைப்படங்கள்

குத்துவிளக்கு (திரைப்படம்)
கோமாளிகள்
ஏமாளிகள்
புதிய காற்று
மாமியார் வீடு
நான் உங்கள் தோழன்
நாடு போற்ற வாழ்க
Blendings - ஆங்கிலப்படம்
நொமியன மினிசு - சிங்களப் படம்
ஷார்மிளாவின் இதய ராகம்

நடித்த மேடை நாடகங்கள்

புரோக்கர் கந்தையா
சுமதி
காதல் ஜாக்கிரதை
கலாட்டா காதல்

 
இராஜ முகுந்தன்'s photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய பார்வையாளர்களை படமாக்கியவர் John Blanding என்கின்ற புகைப்பட கலைஞர். மிக அதிகளவில் பலராலும் பாராட்டப்பட்டு, பகிரப்பட்ட புகைப்படம் இது... காரணம் எல்லோரும் அந்நிகழ்வை கமெராவில் படம்பிடித்துக்கொண்டிருக்க வயதான அந்த மூதாட்டி மட்டும் நேரடியாக அந்த நிகழ்வை ரசித்துக்கொண்டிருக்கிறார்... 

அடுத்த நேர சிந்தனை ஏதுமின்றி அந்த கணத்தில் மட்டும் வாழுதல் என்பது இதுதான் <..

 
Muhilan Sv's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரிக்கார் ராமதாஸின் நினைவோ ஒரு பறவை…

 
background_image.jpg
மணி   ஸ்ரீகாந்தன்

மரிக்கார் என்றதும் எவருக்குமே அடுத்ததாக ஞாபகத்தில் வரும் பெயர் ராமதாஸ் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மக்களை வசீகரித்தவர் இவர். தொழில்என்ற ரீதியில் இவர் நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் இவரது பிரதான தொழில் நாடக மேடையாகவும் பின்னர் சினிமா, டெலி நாடகங்களாகவுமே இருந்தன. இலங்கைத் தமிழ் ரசிகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களை அதிகம் சிரிக்க வைத்த ஒரே நபர் ராமதாஸாகத்தான் இருக்க வேண்டும். சிரிக்க வைப்பது ஒரு சிரமமான கலை என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதை சுலபமாகச் செய்த, செய்ய முடிந்த நபர் ராமதாஸ் என்றால், அவர் எத்தனை ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும்! மேலும் அறுபதுகளைச் சேர்ந்த நம்மூர்க் கலைஞர்களில், கலையில் கரைந்தவர்கள்தான் அதிகம் பேர். வாழ்ந்தவர்கள் மிகக் கொஞ்சமானவர்களே. இவ்வகையில் நாடகம், சினிமா என கலைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் ஈடுபட்டு அவற்றின் மூலம் பொருளாதார வளத்தையும் பெருக்கிக் கொண்டவர் இவர் என்பது இன்னொரு விசேஷமான தகவல்.13-07-2016 சென்னையில் காலமான மரிக்கார் ராமதாஸின் நினைவாக அவரை 7வருடங்களுக்கு முன்பாக தினகரன் வார மஞ்சரிக்காக சந்தித்து பேசிய அந்த நேர்காணலை எனது முகநூல் நண்பர்களுக்காக மீண்டும் பதிவேற்றுவதில் மகிழ்கிறேன். 
“ராமநாதபுர மாவட்ட சிவகங்கையில் தான் நான் பிறந்தேன். நான் பிறந்து ஆறு மாதத்திலேயே என்னை கொழும்புக்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள்.

என் அப்பா பெயர் சத்தியவாகீஸ்வரன். அம்மா நாகலட்சுமி. ஆசாரமான ஐயர் குடும்பத்தில் வந்தவர்கள் அவர்கள். குடும்பத்தில் நான்தான் மூத்தவன். எனக்கு நான்கு சகோதரிகள். எனது இரண்டு சகோதரிகளுக்கு கர்நாடக இசையில் நல்ல ஈடுபாடு என் அம்மா நாகலட்சுமி இலங்கை வானொலியில் கர்நாடக சங்கீதம் இசைத்தவர். என் அப்பாவும் ஒரு நல்ல ரசிகர். என்னை அழைத்துச் சென்று பழைய படங்களைக் காட்டுவார். பழம்பெரும் நடிகர் பி. யூ. சின்னப்பா என் உறவுக்காரர்தான். அதனால் என்னவோ நான் நடிகனாக வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.
r-002.jpg
இளமையில்
 
 
வெள்ளவத்தை கிரீன்லைன் கல்லூரியில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. இப்போது அந்தக் கல்லூரியின் பெயர் ஹிசிபதன மகா வித்தியாலயம்.

அப்பாதான் என்னை அந்தப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வார். திருமதி ஆறுமுகம் டீச்சர் எனக்கு ‘அகரம்’ கற்பித்த ஆசிரியை.

அந்தப் பள்ளியில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ரியோ தியேட்டர் உரிமையாளர் நவரத்தினம், கனகேந்திரா, கனகரட்ணம், அன்டன், இப்ராஹீம் உள்ளிட்ட சிலரைக் குறிப்பிடலாம்.

நான் பள்ளிக்கூடத்தில் எஸ். எஸ். சி. வரையும் சும்மா போய் வந்தேன் என்றுதான் கூறவேண்டும். படித்தேன் என்றால் அது தவறாகிவிடும். வரலாற்றில் பதிவு செய்யும் படி நான் பெரிய குறும்பு செய்யவில்லை தான். ஆனால் குறும்பு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிரீன்லைன் கல்லூரியின் தலைமை ஆசிரியர் குருப்பு தன் சேவைக்காலத்தில் என்னைத்தான் அதிகமாக அடித்திருப்பார். ஆனால் என் அம்மாவும், அப்பாவும் என்னை எப்போதும் அடித்ததே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்னைக் கண்டாலே பயம்’ என்று சொல்லும் ராமதாஸ் தனது கலையுலக பிரவேசம் பற்றி இப்படி கூறுகிறார் :

“கலைப் பிரவேசம் பற்றி சொல்வதென்றால் என் தங்கை மஞ்சுளா சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பாட்டு பாடுவாள். அவளை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதுதான் என் வேலையாக இருந்தது. என் தங்கையைப் போல என் குரலும் வானொலியில் வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரே ஆசை. 
scan0192.jpg
 
 
ஒருநாள் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்தி வந்த சரவணமுத்து மாமாவிடம் நேரிடையாக சென்று எனக்கு ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டேன். அவரும் என் குரலை பரிசோதித்துவிட்டு சிறுவர் மலர் நாடகத்தில் ‘சிங்காரம்’ என்ற பாத்திரத்தில் நடிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கினார். அதன் பிறகு எனக்கு தொடர்ந்து நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பிறகு தமிழ் நாடக தயாரிப்பாளராக இருந்த சானாவின் நாடகத்திலும் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எனக்கு அந்த நாடகத்தில் 45 ரூபா சம்பளமும் கிடைத்தது. எனக்கு கிடைத்த முதல் சம்பளமும் அதுதான். நான் வானொலி உலகில் பிரவேசம் செய்யும் போதே ஹமீத், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் எனக்கு நண்பரானார்கள். என் கலை வாழ்க்கையும் அவர்களோடு பயணித்தது. சானா தயாரித்து வந்த ‘மத்தாப்பூ’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நான், ராஜேஸ்வரி சண்முகம், ரொசரியோ பீரிஸ், சற்சொரூபவதி நாதன் ஆகியோர் நடித்திருந்தோம். அந்த அனுபவங்களை நினைத்தாலே இன்றும் மெய்சிலிர்க்கிறது.
 
 
 
திடீர் வெடி, நடிகர்கள், வாடகை வீடு, புரோக்கர் கந்தையா உள்ளிட்ட பல மேடை நாடகங்களில் நான் தொடர்ந்து நடித்ததால் ராமதாஸ் என்ற என் பெயர் கலையுலகில் பிரகாசிக்க தொடங்கிய போதுதான் எனக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. முதல் படம் ‘குத்து விளக்கு’, அதன் பிறகு எனது நண்பரான வி. பி. கணேசனின் ‘புதியகாற்று’ படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
scan0191.jpg

எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என்ற கட்டுமஸ்தானா உடல்வாகுடன் அழகான தோற்றம் கொண்ட நடிகர்கள் உலாவந்த அந்தக் காலத்தில் இலங்கை சினிமாவால் கதைக்கேற்றபடி ஒரு சாதாரண குடும்பத்து இளைஞன் எப்படியிருப்பான் என்பதை கிரகித்து அதன்படியே ஒரு ஹீரோ அறிமுகமானார். அவர்தான் வி. பி. கணேசன். பார்க்க தனுஷ் மாதிரி இருப்பார்.

இப்போது கதைக்கேற்றபடி நாயகர்கள் வருகிறார்கள் என்று சினிமா விமர்சனத்தில் எழுதுகிறார்களே அந்த நாயகர்களின் முன்னோடியாக விளங்கியவர் தான் வி. பி. கணேஷ் என்ற அடித்துச் சொல்வேன். புதிய காற்றை தொடர்ந்து ஏமாளிகள், மாமியார் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன்’ என்ற ராமதாஸ், தினகரன் நாடக விழாவில் முதல் பரிசு பெற்ற ‘சுமதி’ நாடகத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடித்து விருதும் வென்றேன் என்கிறார் மகிழ்ச்சியுடன்.

நாடக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி ராமதாஸ் எம்மிடம் விளக்கினார். ‘அப்போது நான் நடித்த கோமாளிகளின் கும்மாளம் நாடகம் இலங்கை வானொலியில் ஞாயிறு தோறும் மாலை நான்கு மணிக்கு இலங்கை வங்கியின் அனுசரணையுடன் ஒலிபரப்பாகி வந்தது. ஒருநாள் பிரபல திரைப்பட இறக்குமதியாளர் சினிமாஸ் குணரட்ணம் என்னிடம் தொலைபேசியில் அழைத்து என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்.
 
 உடனே நான் அய்யய்யோ நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னை சந்திப்பது அழகாக இருக்காது நான் உங்களை வந்து சந்திக்கிறேன், என்று கூறிவிட்டு அவரின் இல்லத்திற்கு சென்றேன். என்னைக் கண்டதும் குணரத்தினம் கட்டிப்பிடித்து ‘நீங்கள் நடிக்கும் கோமாளிகள் தொடரை தொடர்ந்து நான் கேட்டு வருகிறேன் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர் கூடவே ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.
scan0183.jpg

ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாவதால் தாங்கள் இறக்குமதி செய்து திரையிட்டுள்ள தமிழ்ப் படங்களின் பிற்பகல் காட்சிக்குக் கூட்டம் வருவது குறைவாக இருப்பதாகவும் பெரும்பாலானோர் கோமாளிகள் நாடகத்தையே அந்த நேரத்தில் ரேடியோவில் கேட்கிறார்கள் என்றும் சொன்னவர் இந்த எனது கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாகும் நேரத்தை மாற்றும்படி வேண்டிக் கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் இதை நீங்கள் என்னிடம் கேட்பதைவிட இலங்கை வங்கியிடம் தான் கேட்க வேண்டும்... ஏனென்றால் அவர்கள்தான் அந்த நாடகத்தை ஒலிபரப்புகிறார்கள் என்றேன்.

(பிறகு குணரத்தினம் இலங்கை வங்கி தலைவரிடம் தன் கோரிக்கையை முன்வைக்க அவர் மறுத்து விட்டார்.” நாடக திரைப்பட நடிகரான அவரிடம் காதல் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம். நிறையவே களஞ்சியத்தில் இருக்கும் என்பது என் எண்ணம்.

“இப்போதும் எனக்கு பழைய ஞாபகங்கள் அப்படியே தான் இருக்கின்றன. எனக்கு கண் பார்வைதான் கொஞ்சம் மங்கி விட்டது. சிலரை அடையாளம் காண்பது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் என் மனைவியோ வீட்டுக்கு எந்த பொம்பிளை வந்தாலும் நல்லா அடையாளம் தெரியுது ஆனால் ஆண்களை மட்டும்தான் அடையாளம் தெரியிறதே இல்லைன்னு சொல்ற.

ஒருநாள் சென். பெனடிக்ஸ் மண்டபத்தில்ல ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் அதைப் பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். எனக்கு பின் வரிசையில், பெயர் ஞாபகத்தில் இல்லை, ஏதோ மேரின்னு ஒரு பெயர், அந்தப் பொண்ணும் நின்னுக்கிட்டு இருந்தது. அந்தப் பொண்ணு இலங்கை வானொலியில் ஒரு சில நாடகங்களில் நடித்திருந்தது. என்னைப் பார்த்த அந்தப் பொண்ணு நீங்கதானே ராமதாஸ்! உங்க நாடகங்க எல்லாமே ரொம்பவும் நல்லா இருக்கு என்றாள். நானும் ‘தேங்ஸ்’ என்றேன். அடுத்ததாக அவள் என்னிடம் ஒன்றை கேட்டாள்.

‘உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. நான் உங்களை காதலிக்க ஆசைப்படுகிறேன்’ என்றாள். அப்போது மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இரைச்சலாக இருந்தது. எனக்கும் அவள் என்ன சொன்னாள் என்றே புரியவில்லை. என்ன சொன்னீர்கள் என்று நான் திரும்பவும் கேட்க ‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்று அவள் சத்தமாக சொன்னாள். நான். ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப் போயிட்டேன்.

பிறகு சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நம்பி நாலு தங்கச்சிங்க இருக்காங்க! அவங்கள கரைசேர்ப்பதுதான் என் முதல் கடமை அதனால இந்த காதல் எல்லாம் எனக்கு தேவையில்லை சாரி! என்றேன். அதற்கு அவள் நன்றாக யோசித்து சொல்லுங்க என்றாள். எனக்கு நல்லா யோசித்து சொல்லுற அளவுக்கு மூளை கிடையாதுங்க என்றேன். அவள் சிரித்தாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை.

அவள் இன்று எங்கு இருக்கிறாளோ? என்று சொல்லும் ராமதாஸ் இந்த விசயம் இதுவரைக்கும் என் மனைவிக்குக்கூட தெரியாது. அப்படித் தெரிந்தாலும் பயமில்லை... அப்படி அவ வந்தாள் அவளுடனேயே போயிடுங்க.. எனக்கும் நிம்மதின்னு சொல்லுவா” என்று சொல்லிச் சிரிக்கிறார் ராமதாஸ்.
 
திருமணம் பற்றிக் கேட்டோம். வீட்டில் ஒரு படத்தைக் காட்டி, உனக்கும் வயது வந்திருச்சி... இந்தப் பெண்ணை கட்டிக்கிறியா? என்று கேட்டார்கள். நானும் சரி என்று சம்மதம் சொல்லிவிட்டேன். ஏனென்றால் என் மனைவி இப்போ இருக்கிறதவிட அப்போ அழகாதான் இருந்தாள். எனக்கு திருமணம் பேசிய விடயம் பற்றி எனது நண்பிகளான பி. எச். அப்துல் ஹமீதின் துணைவியான சசிகலா, அவரின் தங்கை கீதாஞ்சலி ஆகியோரிடம் கூறினேன். அவர்களும் போட்டோவை காட்டுங்க நாங்கள் பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கான்னு சொல்லுறோம் என்றார்கள். நானும் வீட்டில் கேட்டு போட்டோவை வாங்கி சசிகலா, கீதாஞ்சலியிடம் கொடுத்தேன். அவர்களும் அந்தப் போட்டோவை பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கு என்று நற்சான்றிதழ் வழங்கினார்கள்.” என்று சொல்லி அது ஒரு காலம் என்று பெருமூச்சி விடுகிறார் ராமதாஸ். ராமதாஸின் திருமணம் வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலில் நடைபெற்றதாம். திருமணத்திற்கு கலை உலகை சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்தார்கள் என்று சொல்கிறார் ராமதாஸ். மறக்க முடியாத நபர்கள் பற்றி கேட்டதற்கு பி. எச். அப்துல் ஹமீதை என்னால் மறக்க முடியாது என்கிறார்.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

‘கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நண்பர்கள் யாராவது வெளிநாட்டிலிருந்து வரும்போது அவர்களை அழைத்துவர நான் எனது நண்பர்கள் சிலரோடு விமான நிலையம் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது சீதுவையில் இருந்த ஒரு மதுச்சாலைக்குச் சென்று கொஞ்சமாக ஏற்றிக் கொள்வோம்.
scan0189.jpg

விமான நிலையத்திலிருந்து வரும் போதெல்லாம் அந்த மதுக்கடை ஞாபகத்திற்கு வரும்... சீதுவையை கடக்கும் போதெல்லாம் காரின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி மதுக்கடையை தேடுகிறேன்... பார்க்க முடியவில்லை....’ என்று அந்தக் காலத்தை நினைத்து ஏங்கும் ராமதாஸிடம், இன்றைக்கும் பயப்படுகிற விடயம் எது என்று கேட்டேன். ‘எழுபத்தி மூன்றாம் ஆண்டிலிருந்து என் பொண்டாட் டிக்குதான் பயப்படுகிறேன். ஏனென்றாள் என் கல்யாணம் 73ல் தான் நடைபெற்றது.”

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

என்று கேட்டதற்கு ராமதாஸ் இப்படி பதிலளிக்கிறார். “இருக்கிறது. என் குலதெய்வம் திருநெல்வேலி கலக்காடு மாரியம்மன்தான். வருடந்தோறும் அந்தக் கோயிலுக்கு சென்று படையல் போட்டு சாமி கும்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்.’ வாழ்க்கையை பற்றி ராமதாஸ் கூறும் போது... ‘வாழ்க்கை இனிமையானது. ஆனால் இன்னும் நான் வாழ்க்கையில் முழு நிறைவுபெற்றதாக நினைக்கவில்லை. இன்னும் ஏதாவது செய்ய வேண்டும், கலை சார்ந்த ஒரு வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை!”என்று தனது பழைய ஞாபகங்களின் தேடல்களிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் ராமதாஸ்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகிய நகரை அழுகை நகராக்கியவர்கள. ??
<3 ~ Prayers for Nice, France ~ <3 ~

 
Rajh Tharmalingam's photo.
   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.