Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் இன்றாகும் (தமிழர் படைபலத்தின் முக்கிய நாள்)

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான்.ஆவணி 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.
முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஆவணி 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஆவணி 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?
**********************************************************************************
அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.
வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஆவணி 25.
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

வன்னியில் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைப்பு.
************************************************************************************
வன்னியில் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் சிங்கள காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
வன்னியிலும், யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுப் பெறுமதி மிக்க அமைவிடங்கள் அடையாளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் இப்போது அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவலாக வெளியாகியுள்ளமை தெரிந்ததே. இந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் போலீசாரும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவது பறறிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் இவ்வாறே உடைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நடைபெற்ற வேளையில்கூட இந்த நினைவுச்சின்னத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு மீள்குடியமரச் சென்றதன் பின்னரும் அந்த நினைவுக் கல் எவ்விதமான பாதிப்பும் இன்றி இருந்துள்ளது. ஆனால் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒருவாரம் வரையில் இருந்த போது, இந்த நினைவுக் கல் உடைக்கப்பட்டுள்ளது. இது விஷமிகள் சிலரின் கீழ்த்தரமான வேலையாகவே கருதப்படுகின்றது.
இந்த நினைவுக் கல் உடைந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றன. விளையாட்டு மைதானமும் இருக்கின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை ஊர் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். எனினும் உடைந்து கிடக்கின்ற வரலாற்றுச் சின்னமாகிய பண்டார வன்னியனின் நினைவுக்கல் கவனிப்பாரற்று கிடக்கின்றது. இதனைப் பராமரிப்பதற்கு எவருமே இன்னும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Replies 3.9k
  • Views 331.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை தெரேசா பிறந்த தினம்.

ஆகஸ்ட் 26, 2016 – அன்னை தெரேசா அவர்களின் 106வது ஜனன தினம்
யாருமே அருகில் நெருங்கக்கூட விரும்பாத தொழுநோயாளிகளை கூடவே இருந்து அன்பு செலுத்தி அரவணைத்த கருணை உள்ளம் அவர். ஒருமுறை விருந்து ஒன்றுக்கு சென்ற அன்னை திரும்பும் நேரத்தில் அங்கே உண்டவர்கள் மிச்சம் மீதியாக விட்டிருந்த உணவுப்பண்டங்களை ஒரு பொதிக்குள் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டிருந்தாராம். "ஏன் அவ்வாறு எச்சில் பண்டங்களை நீங்கள் எடுக்கிறீர்கள்" என்று கேட்டதற்கு அவரின் பதில் "இந்த உணவுப்பண்டங்களையெல்லாம் கண்ணால் கூட பார்த்திராத எத்தனையோ ஏழைக்குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தான்" என்றவாறு இருந்தது. அன்னையின் கருணையை, அன்பை 
விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.

 
Image may contain: text and one or more people

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19ம் திருவிழா ..

 
மயூரப்பிரியன் mayurapriyan's photo.

19ம் திருவிழா ..

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி 
 
ms_kalki.jpg
 
 
1968 .எம்.எஸ். அவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்ற ஆண்டு.
அந்த வருடம் ‘விகடனில்’ ( 22 டிசம்பர் , 68 இதழில்) வந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் இதோ! 
 
இசைக்கு ஒரு ராணி!

 
 டி.டி.கிருஷ்ணமாச்சாரி

 
''இன்று மாலை சௌந்தர்ய மஹாலில் ஒரு பெண் பாட்டுப் பாடுகிறாள். போவோம் வாருங்கள்...'' என்று என்னுடைய நண்பர் ஒருவர் என்னை அழைத்தார். அவர் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன். மேடையில் ஒல்லியாகமெலிந்த உருவம் கொண்ட ஒரு சிறு பெண் பாடிக்கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. 'கணீர்என்ற அந்தச் சாரீரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ''பரவாயில்லைசின்னப் பெண் நன்றாகப் பாடுகிறாள். நல்ல சாரீரம்'' என்று என் நண்பரிடம் கூறினேன்.

 
''பிரமாதமான சாரீரம். ’ஏனாதி ஸிஸ்டர்ஸ்’ என்று ரொம்பப் பிரபலமானவர்கள் உண்டு. அதில் பெரியவளுடைய சாரீரம் பிரமாதமாக இருக்கும். இந்தப் பெண்ணுடைய சாரீரம் அதை விடச் சிறப்பாக இருக்கிறது'' என்றார் என் நண்பர்.

 
இது நடந்தது 1931-ம் ஆண்டுஆகஸ்ட் மாதம்.

 
ஆமாம். நான் கேட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் முதல் கச்சேரி அதுதான்!

 
அதன்பிறகு, நான் எம்.எஸ். கச்சேரி கேட்கவே இல்லை. சங்கீத உலகிலே ஒரு பெரிய பரபரப்பையே அவர் உண்டாக்கிக்கொண்டு இருந்தார். எங்கு பார்த்தாலும் 'எம்.எஸ்.எம். எஸ்.என்ற பேச்சுத்தான்! இடையில்சினிமாவில் சேர்ந்து நடித்தார் என்று கேள்விப்பட்டேன். நான் எதையும் பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில், எ.எஸ்.ஸின் பாட்டில் ஜி.என்.பி.யின் சாயல் இருக்கிறது என்று சிலர் என்னிடம் சொல்வார்கள்.   

 
எம்.எஸ். கச்சேரி என்னை வெகுவாகக் கவர்ந்தது 1953-ல்தான். அந்த நாள் கூட எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஜனவரி 25-ம் தேதிடி.எம்.எஸ். மணி வீட்டில் கல்யாணம். நான் போயிருந்தேன். என்னை முதல் வரிசைக்கு அழைத்துக்கொண்டு போய்அப்போது முதல்மந்திரியாக இருந்த ராஜகோபாலாச்சாரியார் பக்கத்தில் உட்கார வைத்து விட்டார்கள்.

 
''முன்னெல்லாம் நல்லா பாடிண்டிருந்தா. இப்போ கொஞ்சம் மாறுதல் இருக்கு'' என்று என்னிடம் சொன்னார் ராஜகோபாலாச்சாரி. எனக்கென்னவோ அன்றைய கச்சேரி ரொம்ப நன்றாகவே இருந்தது. அப்போதுதான் எம்.எஸ்-ஸிடம் பரிபக்குவம் ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

 
''நீங்க சொல்றது சரியில்லே. இப்பத்தான் அவர் சங்கீதத்திலே ஒரு பரிபக்குவம் ஏற்பட்டிருக்கு. உணர்ச்சியோடு பாடுகிறார்'' என்று என்னுடைய அபிப்பிராயத்தை ராஜகோபாலாச்சாரியிடம் சொன்னேன்.

 
அது ரொம்பவும் உண்மை. அப்போது அவருக்குசெம்மங்குடியோட சிட்சை! நல்ல அப்பியாசம் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு எம்.எஸ். கச்சேரியை அடிக்கடி கேட்கஎனக்கு அவகாசம் ஏற்பட்டது. டெல்லிக்கு அடிக்கடி வருவார். வரும்போது சில சமயம் என் வீட்டில் தங்குவதுண்டு. அந்தச் சமயத்திலெல்லாம் அவருடைய சங்கீதத்தை நான் கேட்பேன். ''நீ தேர்தலுக்கு நில். இப்போது உனக்கு இருக்கிற மவுசுக்கு ஜெயித்துவிடுவாய்" என்று வேடிக்கையாகச் சொல்வேன்.

 
சங்கீதம்தான் எம்.எஸ்.ஸுக்கு உலகம். அதைத் தவிரஅவருக்கு வேறு சிந்தனையே கிடையாது. எப்போதும் அதே தியானம்தான்.

அவர் சங்கீதத்திலே ஒரு சிறப்புபடிக்குப் படி விருத்தி! பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிற மனப்பக்குவம் அவ ருக்கு உண்டு. சாதகம்உணர்ச்சிகிரகித்துக்கொள்கிற சக்தி எல்லாம் உண்டு. பகவான் நல்ல சாரீரத்தைக் கொடுத்திருக்கிறார். சாதகம் செய்து அந்தச் சாரீரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார் அவர். எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட இனிய சாரீரம் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்வேன். அவருடைய க்ரமேண ஞான அபிவிருத்திஅவரை விடாமல் கேட்கிறவர்களுக்கு நன்றாகப் புரியும்.

 
சமீபத்திலே ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன். சக்ரவாஹ ராகம் பாடி, 'சுகுண முலேகாபாடினார். அது ரொம்ப இடக்கான ராகம். கொஞ்சம் இப்படி அப்படிப் போனால்சௌராஷ்டிரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். அன்றைக்கு அவர் பாடினதுபெரிய வித்வான்கள் வரிசையில் அவருக்கு ஓர் இடம் இருக்கிறது என்பதை நிரூபித்தது.

அவர் கச்சேரியை வெளிநாட்டுக்காரர்கள் கேட்டு ரசித்திருக்கிறார்கள். நம் சங்கீதத்தை அவர்கள் எவ்வளவு தூரம் ரசித்திருப்பார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால்எம்.எஸ். ஸுடைய வாய்ஸ் அவர்களை மயக்கியிருக்கும்.

 
ஜவஹர்லால் அவரை 'இசைக்கு ஒரு ராணிஎன்று சொன்னார். அது முற்றிலும் உண்மை!

 
பரிபூர்ண பக்தியுடன்விநயத் துடன் பெரியவர்களிடமிருந்து நல்லதை எல்லாம் கிரகித்துக் கொண்டு, 'வித்வத்தன்மையை அடைந்திருக்கிற திருமதி எம்.எஸ்.ஸை. இந்த வருஷம் மியூசிக் அகாடமி கௌரவிப்பது ரொம்பப் பொருத்தம்.

               

 [ நன்றி: விகடன் ] 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரும் எதிர்பார்த்திருந்த பதவி விலகல் அறிவித்தலை வெளியிட்டுள்ளார் கனடாவின் முன்னாள் பிரதமர் ஷ்ரீபன் ஹாப்பர்.

கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற பொதுத் தேர்தலை தோல்வியின் எதிரொலியாக தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ரூடோவிடம் பறிகொடுத்த தினத்தில் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகியிருந்தார் ஹாப்பர்.

தற்போது தான் வகித்துவந்த கல்கெரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலுள்ளார் இருந்து விலகும் முடிவை அவர் வெளியிட்டுள்ளார்.

Greetings, fellow Calgarians and fellow Canadians.

Today I wish to inform you that I am stepping down as the Member of Parliament for Calgary Heritage.

For a total of nearly eighteen years, I have had the tremendous honour of representing Calgary in the Parliament of Canada. On seven occasions, I have been deeply humbled by your trust and support, time and again. And I leave elected office proud of what our team accomplished ...

See More
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 27: நவின அஞ்சல் முறையை அறிமுகப் படுத்திய ரோலண்ட் ஹில் மறைந்த நாள் இன்று.'
1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார்

 
Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் அலேசாண்டரின் இறுதி ஆசைகள்
? மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்
?என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்
தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !
?நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!
?என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!
?தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்
?அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!
?தலைசிறந்த மருத்துவர்களால்கூடஎன்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கக !!
?நான் இந்த பூமியில் சேகரித்த, கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்கக.!!
?எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!
நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"
உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த "வீரமங்கை" செங்கொடியின் 5 ஆண்டு வீரவணக்கம் நாள் இன்றாகும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.

தூக்குக் கயிறய் தூக்கிலிட தீக்குளித்தாள் செங்கொடி.
https://www.youtube.com/watch?v=msueUbpTiUw

தோழர் செங்கொடி ஆவணப்படம்
https://www.youtube.com/watch?v=D-dD6SYwIug

 
Image may contain: 1 person , text

"வீரமங்கை" செங்கொடி...

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்ட மரத்தின் கிளைகளிலே ...

பச்சை மரங்கள் பட்ட மரங்களை 
கண்டுகொள்வதே இல்லை. 
இந்த பட்ட மரமும் ஒரு காலத்தில் 
பச்சை மரமாக இருந்து தான்.

இந்த பட்டமரத்தில் படங்களாக தொங்குபவர்கள்
பச்சைமரமாக இருந்த போது பூவாக , பிஞ்சாக , காயாக , கனியாக இருந்தவர்களே..

ஏதோ ஒரு கிளையில் மீண்டும் துளிர்கள் , துளிர்க்கும் எனும் நம்பிக்கையில் , அடி மரம் இன்னும் சாயாமல் நம்பிக்கையுடன் இருக்கின்றது.

இந்த அடிமரங்களை பேரம் பேசும் சக்திகளும் 
எம்முடனே இருக்கின்றன. 
மரம் சாய முதலே வெட்டி சாய்க்கவும் 
ஒரு கூட்டம் தருணம் பார்த்து காத்திருக்கின்றது.

மரம் பட்டாலும் அடி மரம் வைரம் பாய்ந்ததாகவே இருக்கின்றது. மீண்டும் தன் கிளைகள் துளிர்க்கும் எனும் நம்பிக்கையில் ......

(வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஊர்தி )

#இன்று #சர்வதேச #காணாமல்_போனோர் மற்றும்#வலிந்து_காணாமலாக்கப்பட்டவர்கள் #தினம்

மயூரப்பிரியன்.

 
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry
 
Comment
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14188340_1414911201857566_60468723709322994_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ சப்பர திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

14188665_1415508871797799_8568569393062228768_o.jpg
 
14088406_1415508868464466_8698010314361670933_n.jpg?oh=8878154853ba62d742d7202728fc5649&oe=5849758D
 
14195211_1415508955131124_2170305685033041371_o.jpg
 
14138794_1415509041797782_5096405279647391408_o.jpg
 
14141726_1415509058464447_818756931512645261_n.jpg?oh=8765334e13a3934befda7889107278d6&oe=584D6442
 
14202640_1415509131797773_7117496555956654087_n.jpg?oh=4119dfc25671105b05f93bca333fe80d&oe=583AB3BC
 
14141626_1415509171797769_2975531425260917037_n.jpg?oh=a59999e46d33241b4916a9956b7bc74e&oe=583C3D12
 
14117782_1415509195131100_2493278379413142514_n.jpg?oh=222228fdf7af54beb2d433761b6913a5&oe=5885A639
 
14141577_1415509238464429_1731067704878466989_n.jpg?oh=b8859312c8471718c4ea606eb204afe0&oe=588675AC
 
14089106_1415509531797733_3979100323730331184_n.jpg?oh=04a0348c735d99f357996ebfd916baa2&oe=5882A574
 
14212603_1415509555131064_5865512457677387412_n.jpg?oh=41395af1184997deb59f6045bf0fc564&oe=5886676B
 
14138689_1415509558464397_6845868230649369983_o.jpg
 
 
14124412_1415509595131060_5933064834858337197_o.jpg
 
 
14124486_1415509688464384_5609073827474541438_o.jpg
 
 
14115684_1415509718464381_8589618337807344140_o.jpg
 
14138868_1415509785131041_7893114829138668681_o.jpg
 
14212031_1415509811797705_4871060468709133821_n.jpg?oh=a7dc8af9e3b9a0ccf691fcf07fcfb96e&oe=584B3F8D
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா ........

14183930_1416049868410366_3975893375802252373_n.jpg?oh=ef6c520018002f470a981d3c6c98e5c0&oe=583F7530

14206042_1416049968410356_6089147357399016365_o.jpg

14095913_1416049795077040_4815870618353495545_n.jpg?oh=edbae03ed175bdfa0cabf0a6455ccd68&oe=58482847


14203091_1416050451743641_8573125829030043631_n.jpg?oh=7c88f319380971a5af09aa43d51d060c&oe=584A76BE
14184563_1416050078410345_4250258427739720099_n.jpg?oh=2bf7281ffb8b24ddd464b07499fc93ce&oe=58518588

14195262_1416049625077057_4437458096526374570_o.jpg

14199485_1416049511743735_1957607877557484454_n.jpg?oh=d172b51cce52efcf5f70a3c401105120&oe=58492729

14138239_1416049475077072_3341687675987001485_o.jpg

 

14141695_1416049478410405_4044733769343657211_n.jpg?oh=06b4c202a7dce907d6166ad10cff87e5&oe=5884A169

 

14124430_1416049211743765_8365168760268585238_o.jpg

 

14212596_1416049248410428_7022511302492822672_n.jpg?oh=b6b8811619bf8858c40fcd24f8ee85b4&oe=584347B314102223_1416050471743639_6436641489328304168_n.jpg?oh=6b1e9bfbfdc17477a62e13a341ec943f&oe=584A6D84

14102155_1416049785077041_9022609244322127056_n.jpg?oh=7677f0e8aff04105e6440b2fccddaaa4&oe=583E63EE

14195449_1416049811743705_499997020068384905_o.jpg

14212607_1416049955077024_7348509659895506043_n.jpg?oh=812f27eafa7f575acaf6ad7e2b64e954&oe=5839085A

14088548_1416049278410425_4495025212253984089_n.jpg?oh=b2e077c2b07d1c2c37423d6e8a51a4f2&oe=5853A3CA

14183843_1416049965077023_3986154984675318627_n.jpg?oh=b02502090a342fcbec05e93d6c54ac91&oe=5840F31F

14183731_1416050958410257_2369485805245184585_n.jpg?oh=04a4221168389ffc2d6c977dbbed33e6&oe=584C7C38

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14199239_1744888205759655_6863566974793127159_n.jpg?oh=5be34aac2ac22b0244e1a3bf623bd468&oe=58810867

14184328_1302030433171061_2574634483015503015_n.jpg?oh=a27f63f00c8ede179faf7949503daec5&oe=584055A714211938_1302030269837744_809128690305445505_n.jpg?oh=085f44767ce11c9fd530915f423158f4&oe=5885EB9A14102518_1302029999837771_8065950621497562379_n.jpg?oh=395e411b9be968dffe146164166a41f2&oe=584F8797

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காபுரோ ரூச் ரிவர் மாகாண இடைத் தேர்தலில் Raymond Cho வெற்றிபெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியை முதல் தடவையாக கொன்சவேட்டிவ் கட்சி வெற்றி கொண்டுள்ளது.

14222339_10153953154237992_8779794261704714847_n.jpg?oh=14b87134ded79f8bbdfac0204aedaad5&oe=584E45BC
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

தம் உறவுகளின் வருகைக்காக காத்திருந்தது , கண்ணீர் சிந்தி , 
கண்ணீர் வற்றி போன இந்த கண்கள் , ஐ.நா செயலாளரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் ..

யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளரின் வருகையை முன்னிட்டு அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை....

 

 

14142037_1418748028140550_9199136441189058086_n.jpg?oh=79ff9a39c1e03189b1f937449b055da6&oe=58813B44
 
14222140_1418748051473881_5932171528527393671_n.jpg?oh=f6f5a47a430b7725a3741c30efa0d012&oe=5844018F
 
14212063_1418748041473882_7089293564729244332_n.jpg?oh=0d567e91e744a0cc8758f79f57474f75&oe=58494E07
 
14225533_1418748144807205_270126115899469518_n.jpg?oh=24bdd6db627153858dd94c92ad6f892b&oe=584BBF1E
 
 
14225590_1418748171473869_7366571707520013621_n.jpg?oh=c76761e12f1a70c113905a69a29393a4&oe=5882D68F
 
14238075_1418748211473865_6091201583032601402_n.jpg?oh=1c499808ae9ed933b07b6198fdb3d5bf&oe=584D13A0
 
14199537_1418748258140527_2577873360947358490_n.jpg?oh=f926bd28ef367976960747460aa46ce7&oe=587D2E48
 
14192105_1418748408140512_2364008403497027917_n.jpg?oh=122534165a081a1768c4bf281f6f879d&oe=583B99F9
 
 
14237634_1418748464807173_5513245914092424991_n.jpg?oh=0f94dafb271f4e9fea8fb58556a92de2&oe=584F87C5
 
14212696_1418748504807169_4229835832669315021_n.jpg?oh=4d5465eec2d47c019deed1fd4e74fd14&oe=584DA29A
 
14202773_1418748598140493_852212195550210570_n.jpg?oh=c0d81370148d74ea77a781e71f88fdaa&oe=58439C80
 
14192668_1418748651473821_2363195776426556196_n.jpg?oh=a66c5dba00d9f2f982b41ba9fe649a7e&oe=587E356B
14222223_1418748744807145_7490919045078645042_n.jpg?oh=17c65cac822c60e598b3afec2cc47df3&oe=58451101
 
14199632_1418748874807132_4031064857067141657_n.jpg?oh=1fd9bd4a184fe926c11b91d70107cf52&oe=583F2BC9
 
 
இப்படி இன்னும் நிறைய காணாமல் போனோரின் உறவுகளின் காத்திருப்புக்கள் தொடர்ந்த வண்ணம்................
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 · 

ஊர்வன

பறப்பனவற்றுக்கு
எல்லாம் காதல் 
பற்றி யார் வகுப்பு
எடுத்திருப்பார்கள்.......?

 
No automatic alt text available.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப். 8: உலக கல்வியறிவு தினம்:

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14322326_1131851163569634_8019424012273032140_n.jpg?oh=45ad3bda9068578b8541f33fbb35b513&oe=584ADBEE

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அறிவியல் மேதையாக எல்லோருக்கும் தெரியும். அவருக்குள் பரவிக்கிடந்த விஞ்ஞான சிந்தனையில் ஆங்காங்கே வெளிப்படும் மெய்ஞான சிந்தனைகள் நமக்கு இருட்டில் வெளிச்சம் காட்டும் நட்சத்திரங்களாக இருக்கின்றன. 

ஐன்ஸ்டீன் unified theory of distance parallelism என்ற தலைப்பில் சமர்பித்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் சமன்பாட்டில் இருந்த பிழையை கொலம்பியா பல்கலைகழகத்தில் முதுகலை இயற்பியல் படித்துக்கொண்டிருந்த ஹெர்பெர்ட் சால்செர் (Herbert Salzer) என்ற 23 வயது நிரம்பிய மாணவர் அப்போது ஐன்ஸ்டீன் உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞராக இருந்தார். தான் கண்ட பிழையை கடிதமாக ஐன்ஸ்டீனுக்கு எழுதினார்.

கடிதம் கிடைத்ததும் "நான் சொல்ல வந்த சமன்பாடு வேறு. நீ சொல்லும் சமன்பாடு வேறு" என்று பதில் கடிதம் எழுதினார்.

ஆனாலும் அந்த கேள்வி அவரை ஆராய்ச்சி கட்டுரையை எடுத்து திரும்பவும் மீளாய்வு செய்தார். அந்த மாணவர் சுட்டிக்காட்டிய தவறு சரியானது என தெரிந்த அவர் மறுபடியும் அந்த மாணவருக்கு கடிதம் எழுதினார்.

எனது பக்கம் தான் தவறு இருக்கிறது என்று அந்த மாணவருக்கு கடிதம் எழுதியதோடு தன்னுடைய தவறை பகிரங்கமாக அனைத்து அறிவியல் அறிஞர்கள் மத்தியிலும் அறிவித்தார்.

அவருடைய விஞ்ஞான அறிவை விட இந்த மெய்ஞான அறிவு என்னை மிகவும் கவர்ந்தது. செய்த தவறை பலர் முன்னிலையில் ஒத்துக்கொள்வது ஒரு மிகப்பெரிய பண்பு. நம்மிடம் மெல்ல மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கும் பண்புகளில் இதுவும் ஒன்று.

நம் தவறுகளை ஒத்துக்கொள்ளும் போது அந்த ஒரு நிமிடம் வேண்டுமானால் நாம் முட்டாளாகிறோம். அதனால் வாழ்நாள் முழுவதும் புத்திசாலியாக திகழும் வாய்ப்பை பெறுகிறோம்.

வாழ்க்கை மிகவு எளிதானது. பலர் "வியர்வையின் நாற்றம்" என்பதை சிலர் "உழைப்பின் பன்னீர் துளிகள்" என்பர். இருவரையும் சந்தோசப்படுத்த நினைக்கும் போது தான் நாம் மனதில் தோன்றியதை சொல்லமுடியாமல் போய்விடும். ஐன்ஸ்டீன் யாரையும் சந்தோசப்படுத்த நினைக்கவில்லை. அதனால் தான் அவரால் வெளிப்படையாக தன்னுடைய தவற்றை ஒப்புக்கொள்ள முடிந்தது.

தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வோம்.
மனம் இலேசாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தாவரங்கள் தமக்கான உணவை தாமே தயாரித்துக் கொள்வது மாதிரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14212159_355368314794614_6211314216796517585_n.jpg?oh=3ad223188306f28547aa8b3c32fe45f8&oe=587E3714

உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று (10.09) அனுஷ்டிக்கப்படுகிறது.
World Suicide Prevention Day

'மனம் விட்டுப் பேசுவதன் மூலம், மற்றவர் மனதுகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தற்கொலை செய்வதை தடுப்போம்,தவிர்த்துக்கொள்வோம்' என்பதே இவ்வருட உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாக அமைந்துள்ளது. 

தற்கொலை செய்து கொள்வோருள் அநேகருக்கு மனநோய்களும், மன அழுத்தங்களும் காணப்படுகின்றன.
மானசீக உபாதைகளுக்கான சிகிச்சைகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. 
இருந்த போதும் மானசீக நோய் களுக்கு சிகிச்சை பெறுவதைப் பொறுத்தவரை குறைவாகவே அவதானம் செலுத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏன் என்றால் அங்கெ ஒரு நடிகை நின்றுகொண்டிருந்தாள், அவளை சுற்றிதான் அவ்வளவு கூட்டமும். ஒருவர் ஐன்ஸ்டின் அருகில் வந்து நீங்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானி உங்களை விட்டு ஒரு நடிகை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஐன்ஸ்டின் சொன்னார் பார்பதற்காக என்றல் என்னிடம் பார்பதற்கு என்ன இருக்கிறது என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Papaya fruit & bird...1f604.png?1f61d.png?

Sahana Sahana's photo.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால் ஒரு தமிழ்ப் பெண் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளார்.

அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தேசத்தின் இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வெள்ளை மாளிகையில் 8.9.2016 வியாழக்கிழமை கவிதை வாசித்தனர்.

மாயா ஈஸ்வரன் தனது ஆங்கிலக் கவிதையில்:

’கடந்த 16 ஆண்டுகளாக நான் இழந்த பலவற்றைவிட மிக முக்கியமான ஒன்றை நான் தொலைத்து விட்டேன். தலைமுடி உதிர்வதைப்போல் எனது இனத்தின் அடையாளத்தை நான் உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் எனது தாய்மொழியான தமிழைப்பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன. தாயே!, வெகுவிரைவில் நான் வழுக்கைத் தலையாகி விடுவேனோ? என்று அஞ்சுகிறேன்’ என்று வாசித்தார்.

தாய்மொழியான தமிழ்ப்பற்று தொடர்பான தனது கவிதையை மாயா வாசித்து முடிப்பதற்குள் அந்த கவியரங்கத்தில் இருந்த அனைவரும் உணர்ச்சிப்பெருக்கில் நெகிழ்ச்சியடைந்து, பலத்த கரவொலி எழுப்பி பாராட்டினர்.

அமெரிக்க அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமாவும், மேடையில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார். பின்னர் அவர், ‘‘மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்’’ எனப் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், ‘‘நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதைகளை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி நிறைந்தது’’ என்றார்.

மேற்கு மத்திய பகுதி (Midwest), தென்கிழக்கு (Southeast), தென்மேற்கு (Southwest), வட கிழக்கு (Northeast), மேற்கு (West) – என அமெரிக்காவின் ஐந்து பகுதிகளின் பிரதிநிதிகளாக ஐந்து இளம் கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், மாயா ஈஸ்வரன் (தென்கிழக்கு),கோபால் ராமன் (தென்மேற்கு) ஆகிய இருவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மொழி: தமிழ்நாட்டில் மாபெரும் இனஅழிப்பு சதி

திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு செய்த கேடுகளில் உச்சமானது, தமிழ் குழந்தைகள் மீது “ஆங்கில வழிக் கல்வியை” திணித்ததுதான். இதனை தொடங்கியவர் எம்ஜிஆர். தொடர்ந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.

ஆங்கில மொழியை கற்பதற்கும் ஆங்கில வழியில் கற்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாதவாறு குழப்பி – தமிழ்நாட்டிலிருந்து தமிழை ஒழிக்கும் வேலையை திராவிட ஆட்சியாளர்கள் மிகத்திறமையாக செய்துவிட்டனர். மொழியறிவு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத தமிழக நடுத்தர வகுப்பு மக்கள் இக்குற்றத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

இது ஒரு இன அழிப்பு சதி ஆகும். இந்த பேரழிவின் பாதிப்புகள்

- See more at: http://www.canadamirror.com/canada/69668.html#sthash.b3wyKBiQ.ID4PK0tq.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மாயா என்றாலே மாயம் செய்வார்களோ??  அந்த ஆங்கில கவிதையை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைத்து விடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாரதியாரின் 98ஆவது நினைவு தினம்!

14291675_1286092161404096_2528952472625599843_n.jpg?oh=871d200c10803191e86acc46bdd377d6&oe=583CE2FC

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

மாயா என்றாலே மாயம் செய்வார்களோ??  அந்த ஆங்கில கவிதையை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைத்து விடுங்கள்.

இதில் இணைக்கபட்டுள்ள் லிங்கில் 14.10 நிமிடங்களின் பின் பாருங்கள் நுணா..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.