Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி யாயினி.

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்ரம்பர் 11.அமெரிக்காக இரட்டைக் கோபிர தகர்ப்பு 15 ஆம் ஆண்டு நினைவு நாள்.

 

14292264_355887174742728_7667372689158824239_n.jpg?oh=b81174e371dcdfbfbbd4067b0ebba854&oe=587D687C

14322392_355886764742769_7909700452583128522_n.jpg?oh=1a2038b0c2740772895c45900f538a78&oe=5884E3C7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல்...?????

உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட சிலவற்றின்  நிழற்படத்தை  இங்கு தொகுத்து உள்ளேன்..!! 
 
 
IMG-20160731-WA0068.jpg
 
 
IMG-20160731-WA0067.jpg
 
 
IMG-20160731-WA0062.jpg
 
 
IMG-20160731-WA0063.jpg
 
 
IMG-20160731-WA0064.jpg
 
 
IMG-20160731-WA0065.jpg
 
 
IMG-20160731-WA0066.jpg
 
 
IMG-20160731-WA0061.jpg
 
 
IMG-20160731-WA0060.jpg
 
 
IMG-20160731-WA0058.jpg
 
 
IMG-20160731-WA0057.jpg
 
 
IMG-20160731-WA0056.jpg
 
 
IMG-20160731-WA0051.jpg
 
 
IMG-20160731-WA0052.jpg
 
 
IMG-20160731-WA0053.jpg
 
 
IMG-20160731-WA0054.jpg
 
 
IMG-20160731-WA0055.jpg
 
 
IMG-20160731-WA0050.jpg
 
 
IMG-20160731-WA0049.jpg
 
 
IMG-20160731-WA0047.jpg
 
 
IMG-20160731-WA0046.jpg
 
 
IMG-20160731-WA0045.jpg
 
 
 
 
IMG-20160731-WA0042.jpg
 
 
IMG-20160731-WA0043.jpg
 
 
IMG-20160731-WA0044.jpg
 
IMG-20160731-WA0036.jpg
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.வல்லமை தாராயோ, - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே?சொல்லடி, சிவசக்தி - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,நசையறு மனங்கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,அசைவறு மதிகேட்டேன் - இவைஅருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

பாரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துட்டிருந்த விஞ்ஞானி, 

தன் மேலதிகாரிகிட்ட, '' நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். 

மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்'' னு கேட்டாரு.

மேலதிகாரியும் அனுமதிச்சாரு.

வேலை மும்முரத்தில் மூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்தப்போ மணி இரவு எட்டரை. 

பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்கிற பயத்தோட வீட்டுக்கு போனாரு. 

வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாங்க.தான் வேலையில் மூழ்கி விட்டதையும் அதற்கு வருத்தமும் தெரிவித்தார், 

சரி குழந்தைகள் எங்கே..? ன்னு கேட்டதும் மனைவி சொன்னாங்க...... 

சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய் விட்டார்கள்.

உங்கள் மேலதிகாரிதான் வந்து அழைச்சுட்டுப் போனாரு'' னு .
விஞ்ஞானிக்கு ஒரே ஆச்சர்யம்...

விஞ்ஞானி வேலையில் மூழ்கி விட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பலை, 

குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பலை. தானே சென்று குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.... 

- அந்த மேலதிகாரியின் பெயர்... ஏ. பி. ஜே. அப்துல் கலாம்....!ஆமாம் நம்ம ஏவுகணை நாயகன் APJ அப்துல் கலாம் ......

Image may contain: 3 people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: food· 
 

செப்டம்பர் 13 ⇨ உலக சொக்லேட் தினம்

"சொக்லேட்" என்கின்ற சொல்லானது "ஆஸ்டெக்" சொல்லான "Xocolatl" என்பதிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இதன் அர்த்தம், "கசப்பான பானம்" என்பதாகும்.

உலகளாவியரீதியில் மக்கள் சொக்லேட் கொள்வனவுக்காக வருடாந்தம் 7பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தினை செலவு செய்கின்றனர்.

உலகில் வருடாந்தம் அதிகளவில் சொக்லேட் உற்பத்தி உற்பத்தி செய்து, நுகர்வு செய்கின்ற நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். அத்துடன், உலகில் வருடாந்தம் அதிகளவில் சொக்லேட் தனிநபர் நுகர்வு(12kg) இடம்பெறுகின்ற நாடு சுவிட்சர்லாந்து ஆகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Wish you all a very happy, prosperous, colorful, healthy, wealthy and funfilled Onam! Let this season brings you all lot of good luck, peace of mind and happiness.

Image may contain: text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6th year rememberance day.
We all are missing u.....

 

Image may contain: 6 people

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நிம்மதியாய் மூச்சு விட 
நிலம் கேட்டு நின்றவனின் 
பக்கத்தில் சென்று 
பருக ஒரு கோப்பை ''நீர்'' கொடுத்து... 
எழுந்து விடு 
உன் எண்ணங்களை நிறைவேற்றுகிறோம் 
என ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே 
வாழ்ந்திருப்பான் எங்கள் வரிப்புலி....
வாழ்த்தியிருப்போம் வல்லரசை.....

வீரவணக்கம் _/\_  :'( 

'நிம்மதியாய் மூச்சு விட  நிலம் கேட்டு நின்றவனின்  பக்கத்தில் சென்று  பருக ஒரு கோப்பை ''நீர்'' கொடுத்து...  எழுந்து விடு  உன் எண்ணங்களை நிறைவேற்றுகிறோம்  என ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே  வாழ்ந்திருப்பான் எங்கள் வரிப்புலி.... வாழ்த்தியிருப்போம் வல்லரசை.....  வீரவணக்கம் _/\_   :'(  dot'

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள் (15-09-1987).

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மண்ணிற்கு எப்பொழுதுமே
அதிக தாகம்
அது 
தியாகங்களையும்,புரட்சிகளையும் மட்டுமே அதிகம் அருந்துகிறது.

செல்வை.
15.09.2016

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1505372_10203437549791974_4315203018473326721_n.jpg?oh=b1a5c5b198b3bab34dca4ed7f9f82d32&oe=587FB07514359121_10157472189555717_6101145687315920243_n.jpg?oh=ef19e01067798e7575d20b238005d92b&oe=586E9B2010184_361455897356777_5018597348811675472_n.jpg?oh=a3afa5c3379f5171eb2e02918e69ae61&oe=587E3894

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புவி கவசத்தில் ஒரு துளை! சர்வதேச ஓசோன் தினம் 2016

osaaan.jpg

ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க  ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது.

ஓசோன் பற்றி...

ஓசோன் என்பது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜ‌ன் அணுக்கள்  சேர்ந்த ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனை C.F. ஸ்கோன்பின் என்பவர் கண்டறிந்தார். ஓசோனானது பூமிக்கு மேலே வாயு மண்டலத்தில் ஸ்ட்ரேடோஸ்பியரில் 10-50 கிமீ தொலைவில்  காணப்படுகிறது. ஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியை கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம். ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1% குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏவை(DNA) நேரிடையாக பாதிக்கும் இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஓசோன் துளை:

ஓசோன் துளை என்பது வளி  மண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இங்கு  ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை  ஆகும்.  உண்மையில் இது துளை இல்லை.  இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும் சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும் போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பு இல்லை. ஆனால் மனித செயல்பாட்டால் அதிக அளவில் ஓசோன் சிதைக்கபடுவதால் ஓசோனில் துளை ஏற்படுகிறது. 1980-ம் ஆண்டில் அண்டார்க்டிக்காவில் மிகப் பெரிய  ஓசோன் இழப்பு (துளை) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30% குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டது.

ozz_aa1.jpg

 

ஓசோன் இழப்பினால் ஏற்படும் விளைவுகள்:

ஓசோன் இழப்பால் அதிகமான புற ஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால் மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய் கண்பார்வை குறைபாடு நோய்தடை காப்பு மண்டலம் செயலிழப்பு எரித்திமா போன்ற பாதிப்புகள் ஏற்படும் இறுதியாக மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும்.

புவியில் உள்ள அனைத்து  தாவரங்களிலும்  பச்சையங்கள் பாதிக்கப்பட்டு  விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும்.
நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும்.

ஓசோன் படலத்தில் ஏற்படும் இழப்பை தடுக்கும்  முறைகள்:

குளோரோ ப்ளூரோ கார்பன்களுக்கு(CFC) பதிலாக ஹைட்ரோ குளோரோ ப்ளூரோ கார்பன்கள்(HCFC), ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள்(HFC), ஹைட்ரோ கார்பன்களான பியூட்டேன் புரோபேன் போன்றவற்றையும், அம்மோனியா நீர் மற்றும் நிராவி போன்றவை மாற்று பொருளாக  பயண்படுத்தலாம். ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதை தடை செய்யவோ அல்லது கடுமையான வரைமுறைகளை கொண்டு வரலாம்.குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றின் பயன்பாட்டை வெகுவாக குறைக்கலாம்.

மிக முக்கியமாக புவியில் அதிகமான மரங்களை நட்டு வளர்பதன் மூலம் ஓசோன் படல இழப்பை குறைக்கலாம்.

vikatan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.
அவை மேலே பறக்கும் பலூன்கள்.
அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.
‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள்.
‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’
‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.
சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.
‘‘ஏம்மா கேக்குற?’’
‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’
பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.
‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா. உள்ள இருக்கிற வாயுதான். என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார் வேண்டுமானாலும் உயரலாம்’’ என்றார்.
நீதி: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people and text
Thaiveedu

இலக்கியவாதி குறமகள் காலமானார்.

ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும் 
சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 
தொடர்ச்சியாக ஈடுபட்டவரும் தாய்வீடு பத்திரிகையின் எழுத்தாளருள் ஒருவருமான 
குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட 
திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் செப்ரெம்பர் 15ம் நாள் வியாழக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.

ஈழத்தின் வடக்கே - காங்கேசன்துறையில் ஜனவரி 9, 1933 இல் பிறந்தவர் குறமகள்.
தனது பாடசாலைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும் இளவாலை திருக்குடுப்பக் கன்னியர்மடத்திலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இந்தியாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாகக் கல்விகற்றவர். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடகவியலிலும் கல்வியியலிலும் பட்டயச்சான்றிதழ் (Diploma) தகைமைகளைப் பெற்றுக்கொண்டவர். 
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் 
அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.

ஈழத்திலும் பின்னர் புலம்பெயர்ந்து கனடாவிலும் தனது எழுத்துக்களின் ஊடாகவும் பேச்சுக்களின் ஊடாகவும் பெண்களின் விடுதலைக்கும், சமத்துவத்துக்குமாகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தமிழ்ச் சமூகத்துக்கு அவரது முக்கிய பங்களிப்பாக அவரது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கள் கல்வி என்கிற ஆய்வு நூலைக் குறிப்பிடலாம்.

2016 - மார்ச்சில் வெளியான தாய்வீடு அனைத்துலக மகளிர் நாள் சிறப்பிதழில் (http://thaiveedu.com/thaiveedu/index.php/special-issues.html) குறமகள் அவர்களின் விரிவான செவ்வி இடம்பெற்றுள்ளது.

http://thaiveedu.com/

LikeShow more reactions
Commen
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ பலகோடிகள் எரிந்து நாசம்:

16 செப்டம்பர் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:

கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ  பலகோடிகள் எரிந்து நாசம்:

கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து  அழிந்துள்ளன.

 
இது தொடர்பில் தெரியவருவதாவது
 
இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன.
 
தீ பிடித்து  எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
 
இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டு வரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்
 
எற்கனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்   மீள் குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தி;த்த வேளை  தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு  வழங்க்கபட்ட நிலையில் ஏனைய  வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது. இ;ந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது.
 
கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது  ஆனால் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை. கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு  சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
மேலும் ஒரு வருடதிற:;கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு  பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136040/language/ta-IN/----.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என நீங்கள் யோசித்ததுண்டா?

 
ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என நீங்கள் யோசித்ததுண்டா?
 
 
தற்போதைக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அதிவேகமாக செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான். 
 
உலகில் பெரியளவில் வர்த்தகம் செய்யும் போக்குவரத்து துறையும் விமான துறை தான்.
 
வாழ்நாளில் ஒருமுறையாவது கப்பலில் சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் விட, விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். 
 
ஆகாயத்தில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.
 
சிறு வயதில் இருந்தே விமானத்தின் மீது பேரார்வமும், அது வானில் பறக்கும் போதெல்லாம் அன்னாந்து பார்த்து வியக்கும் குணமும் கொண்ட நாம், என்றாவது அது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்திருக்க மாட்டோம்.
 
அதற்கான காரணம் இது தான்....
 
    
மங்காத நிறம்!
 
வெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் நாள்பட மற்றும் அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும். அனால், வெள்ளை அப்படி மங்காது.
    
வெப்பம்!
 
மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.
 
    
பார்க்கக்கூடிய நிலை!
 
வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
    
மறுவிற்பனை மதிப்பு!
 
விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.
 
    
குத்தகை!
 
பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.
    
செயல்பாட்டு செலவு!
 
விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். 
 
இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன..
    

படித்ததிலிருந்து......
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் முதல் இசைக்கருவி யாழ் பற்றிய ஒரு தொகுப்பு..

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச்
சிறப்பு வாய்ந்தது ஆகும்..
யாழ் என்பதற்கு நரம்புகளால்
யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்...

பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத்
தோற்கருவி,
துளைக்கருவி,
நரம்புக் கருவி,
மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்..
இவற்றில்
நரம்புக்கருவியாகிய யாழே,
தமிழர் வாசித்த முதல்
இசைச் கருவியாகும்..
நரம்புக்கருவிகளின்
வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ்..
இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த
வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம்
வகிக்கிறது..

யாழின் வரலாறு:

குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த
கருவிகளின் ஒன்று வில்..
வில்லில் முறுக்கேற்றிக்
கட்டப்பெற்ற
நாணிலிருந்து
அம்பு செல்லும்பொழுது
தோன்றிய இசையே
யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயக்
இருக்க வேண்டும்..
இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது..

பதிற்றுப்பத்து,
வில்யாழ்
முல்லை நிலத்திலேயே முதலில்
தோன்றியது என்று கூறினாலும்,
குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே
பொருத்தமுடையது..
ஏனெனில் குறிஞ்சி நிலத்தில்
தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது..
இந்த
வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால்
பல்வகை யாழாக மலர்ந்தது..
யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய
சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை..

சங்க இலக்கியங்களான புறநானூறு , கலித்தொகை , பரிபாடல்
மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும்,
சிலப்பதிகாரம், பெருங்கதை,
சீவகசிந்தாமணி
முதலிய காப்பியங்களிலும்
பக்தியிலக்கியங்களிலும்
யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன,
என்றாலும்
யாழின் வகைகளைப்
பேரியாழ்,
சீறியாழ்,
மகரயாழ்,
சகோடயாழ் என்று
அறிய முடிகிறதே ஒழிய
அதன் வடிவினை அறிய முடியவில்லை..

பல்லவர் காலக் கோயிலான
காஞ்சி கைலாசநாதர் கோயில்
(இராஜசிம்மன்)
பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்),
திருமங்கலம் கோயில் (உத்தம சோழன் ) ஆகியவற்றில்
யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன..

யாழ் கருவியின் வளர்ச்சி:

வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ்,
முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும்
நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற
நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது..

யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற
குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்..

யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும்
அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர்
என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்..
அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில்
பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டனர்ர்..
யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள்
பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள்
தோன்றியுள்ளதிலிருந்து,
யாழ் மற்றும் பாணர்களின்
மதிப்பை அறியமுடிகிறது..
அந்நூல்களில், மன்னர்கள்
பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக்
காட்டுகின்றன..

யாழ்,
பாடிக் கொண்டே இசைக்கும்
கருவியாக இருந்துள்ளது..

சாதாரண மக்களிடம்
புழக்கத்தில் இருந்த யாழ்,
ஒரு காலக்கட்டத்தில்
தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக
மாறியது..

தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர்..

அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து,
ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ்
உருவாகியது..

தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிந்தனை இல்லையென்றாலும் பின்னர் மகரயாழ்,
செங்கோடுயாழ் எனப் பல வகையான யாழ்கள் தோன்றின..
இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம்
நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது..
இதற்குப்பிறகு வடிவில்
ஓரிரு வேறுபாடுகள்
கொண்டு வீணையாக வளர்ச்சி கண்டது..
அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம்
வகிக்கிறது...

யாழும், வீணையும்:

சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில்
இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது..
ஆனால்,
பக்தியிலக்கிய காலத்தில் யாழும்
அதன்
படிவளர்ச்சியான வீணையும் ஒருங்கே காணப்பட்டன
என்பதை,
'ஏழிசை யாழ்',
'வீணை முரலக்கண்டேன்',
'பண்ணோடியைந்த வீணை பயின்றாய் போற்றி'
என்ற மாணிக்க
வாசகரின் பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன..

ஆனால்
கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின்
"வீணை என்ற யாழையும் பாட்டையும்" என்ற அடி,
யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற
பொருள் தருகிறது...

மேலும்,
"வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான்"
என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன்
கந்தருவதத்தையை யாழும், பாட்டும் வென்றான்
என்று குறித்துள்ளார்..

எனவே,
யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில்
தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய
முடிகிறது..

Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

(பாரதியார்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 4

 
அமரரான கவிமணி
File0001.jpg

செப்டம்பர் 26. கவிமணியின் நினைவு தினம்.

முதலில்,

 1954-இல் அவர் மறைந்ததும் ‘விகட’னில் வந்த கட்டுரை. 
====
 
'கவிஞர் இறந்து போய்விட்டார்கவிஞர் வாழ்கஎன்று புதிர் போடுவதுபோல் சொல்லிக்கொண்டே ஒருவர்பல்லாண்டுகளுக்கு முன் சில குழந்தைப் பாடல்களை வாசித்துக் காட்டினார். தமிழகத்தின் தெற்குக் கோடியில் நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமத்திலிருந்த ஒருவர் பாடிஒரு புனைபெயரில் வெளியிட்டிருந்த பாடல்கள் அவை. உடனே அங்கிருந்த ரஸிகர்கள் ஒருமுகமாக, 'உண்மைதான். கவி பாரதி மறைந்துவிட்டார்இந்தப் புதுமைக்கவி வாழ்கஎன்று வியந்து பாராட்டினார்கள். அந்தக் குக்கிராமவாசிதான் பல வருஷங்களுக்குப் பின் 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைஎன்று தமிழ் நாட்டில் மட்டுமல்லதமிழர் தங்கியிருக்கும் நாடுகளிலும்வட இந்தியப் பிரதேசங்களிலும் பேரும் புகழும் பெற்றவராகிஇன்று புகழுடம்புபெற்றிருக்கிறார்.

 
திருவனந்தபுரம் மகாராஜா - பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்த் தலைமைப் புலவராகத் தொண்டாற்றி, 1931-ல் ஓய்வு பெற்றுத் தேசிக விநாயகம் பிள்ளை நெற்பயிரின் வளர்ப்புப் பண்ணையான நாஞ்சில் நாட்டிலே தமிழ்ப் பயிர் வளர்த்து வந்தார். சிறந்த புலமைத்திறனும்ஆராய்ச்சித் திறனும் உள்ளவர். சேரர் வரலாறு குறித்தும்பாண்டியர் வரலாறு குறித்தும் கல்வெட்டுக்களிலிருந்து பல அரிய செய்திகளைக் கண்டு பிடித்து அவர் வெளியிட்டதுண்டு. எனினும்கவிமணியாகவே இவர் பெயர் நிலைநிற்கும்சரித்திரத்தில்!

 
கன்னியாகுமரிக்குப் பக்கத்தி லிருந்து இவரது கவி மலர்களைத் தமிழ்த் தென்றல் நாடெங்கும் சிதறியது. இம்மலர்கள் கடல் தாண்டி இலங்கைபர்மாமலாய் நாடு முதலான வெளி நாடுகளிலுள்ள தமிழர் வாழ்விற்கும் மணமும்அழகும் தந்தன. பல தமிழ்ப் பத்திரிகைகளும் போட்டியிட்டு இவரை அறிமுகப்படுத்த முயன்றன. இம் முயற்சிகளில் விகடனுக்குச் சிறப் பான பங்குண்டு. 'மலரும் மாலை யும்என்ற புத்தக வடிவில் பாடல்கள் வெளிவருவதற்கு முன்பே, 1940-ல் 'கவிமணிஎன்னும் பட்டம் கிடைப்பதற்கு முன்பேஇவர் பெயர் பிரசித்தமாகிவிட்டது.

 
 
பழந்தமிழ் இலக்கியத்திற்கும் இன்றைய தமிழுக்கும் பொற்பாலமாக அமைந்திருப்பவர் கவிமணி. இவருக்குச் சாவேதுசாகாவரம் பெற்ற கவிதையிலே இவர் அமர வாழ்வு வாழ்கின்றார்இவரது மணிவாக்கு ஒலி செய்தவண்ணமாகவே இருக்கும்.

 
[ நன்றி: விகடன் ]


இரண்டாவதாக,
 
அவர் மறைந்ததும், ”கலைமகள்” பல கட்டுரைகளை வெளியிட்டது. அப்போது வந்த ஒரு பக்கம்:
 
File0007.jpg
 
[ நன்றி: கலைமகள் ] 

கடைசியாக,
 
 
’கல்கி’ எழுதிய அஞ்சலிக் கட்டுரை:

( இதை எழுதிய சில மாதங்களுக்குப் பின் டிசம்பரில்  ‘கல்கி’யே காலமாகி விடுகிறார்.)
 
kavimaNi-kalki-54.jpg

[ நன்றி: கல்கி ]

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..*

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

*ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..*

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

*இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.*

*ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது*

*ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது*

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

*"Fault makers are majority, even they protected in most situations"*

*இன்றைய நிலை....*

*"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...*

*தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"*

படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்ணையில் இருந்து தப்பிய 46 பசுமாடுகள்: அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்

IMG_(16)பிரான்ஸ் நாட்டில் விவசாயி ஒருவரின் பண்ணையில் இருந்து தப்பிய 46 பசுமாடுகள் ஒன்றின் பின் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Loire-Atlantique என்ற பகுதியில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பண்ணையில் 46 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பண்ணையில் இருந்து அனைத்து பசுக்களும் தப்பியுள்ளன. விவசாயி தனது பசுக்களை தேடி அலைந்துள்ளார்.

ஐந்து தினங்களுக்கு முன்னர் அருகில் உள்ள மற்றொரு பண்ணையில் இவருடைய பசுமாடுகள் இருப்பதாக தகவல் அறிந்து பசுக்களை மீட்டு வந்துள்ளார்.

ஆனால், பண்ணையில் மீண்டும் அடைக்கப்பட்டதும் ஒவ்வொரு பசு மாடும் திடீர் திடீரென உயிரிழக்க தொடங்கியுள்ளது.

கடந்த 3 நாளில் மட்டும் 22 பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இச்சம்பவம் அறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த பசுமாடுகளை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, பண்ணையில் இருந்து தப்பிய பசுமாடுகள் வெளியே சுற்றித்திரிந்தபோது அளவுக்கு அதிகமாக தானியங்களை உண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பசுமாடுகள் பொதுவாக தேவையான அளவுள்ள உணவுகளை மட்டும் தான் ஓர் இரவில் ஜீரணம் செய்யும். இந்தளவை மீறி தானிய உணவுகள் வயிற்றில் சேர்ந்தால் அது ஜீரணம் ஆகாது.

இவ்வாறு உணவு ஜீரணம் ஆகாமல் வயிற்றில் இருக்கும்போது பசுமாடுகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது எஞ்சிய 24 பசுமாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த 24 பசுமாடுகளும் வழக்கமாக கொடுத்த பால் அளவு இனி மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
http://kilinochchinet.com/news/world/14639
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 27 ⇨ உலக சுற்றுலா தினம் – புகைப்படப் பகிர்வு

 
உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலாநிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம்ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலாநிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கானதீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதுசுற்றுலாவின்முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலாஎப்படி மக்களின் சமூககலாச்சாரஅரசியல் மற்றும்பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைஎடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலாநிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடுஇந்நிகழ்வை நடத்த அழைக்கப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 2003இல் பீஜிங்கில் இடம் பெற்ற கூட்டத்தில்பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும்என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல்தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா. 2007இல்இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டதுஇதன்கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத்திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).
 
 
 
 9.jpg
Y ஏழுமலை, கதிர்காமம் Y
 
2.JPG
 Y சிவன்சோலை, கிளிநொச்சி Y

 

 
1.JPG
Y வெருகல், திருகோணமலை Y

 

 
3.jpg
Y உகந்தை, அம்பாரை Y

 

 
4.JPG
Y நயினாதீவு, யாழ்ப்பாணம் Y

 

 
88.jpg
 
Y கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், மட்டக்களப்பு Y

 

 
5.jpg
Y சூரியகந்தை, இரத்தினபுரி Y

 

 
6.JPG
Y கேரதீவு, சங்குப்பிட்டி பாலம், பூநகரி Y

 

 
8.JPG
Y குமண பறவைகள் சரணாலயம் Y

 

 
Image may contain: ocean, cloud, sky, outdoor, nature and water 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.