Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி எல்லா இணையங்களிலும் வலம் வந்தது ஒரு மிருகக்காட்சிச் சாலையில் கொரில்லா குரங்கு ஒன்றிடம் சிக்கிய சிறுவனை மீட்பதற்காக அந்த குரங்கை காவலர்கள் சுட நேர்ந்தது இந்த செய்தி அன்றைய நாளின் பிரித்தானிய சகல ஊடகங்களிலும் தலைப்புச்செய்தியாக பேசப்பட்டது என் இதயத்தை பாதித்த நிகழ்வாகிப்போனது அந்த குரங்கு எந்த தீங்கும் செய்யாத நிலையில் ஒரு முன் எச்சரிக்கைக்காகவே சுடப்பட்டது
ஆதலால் அதன் மரணத்தை இரங்கலாகவே பேசிக்கொண்டார்கள்

மான் வேட்டையில் ஈடுபட்ட குற்றத்திற்காக நடிகர் சல்மான்கான் மீது
இன்றுவரை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது
மேலும் மிருக வதைக்கான கடும் சட்டங்கள் உலக நாடுகள் முழுவதிலும் அமுலில் உள்ளது
இதன் பொருள் யாதெனில் உயிர் யாருடையதாயினும் அதை கொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை என்பதேயாகும்
மனித உரிமைச் சட்டங்களும் அதைத்தான் கூறுகின்றது

ஒரு கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதற்குகூட அதிக ஆண்டுகள் எடுக்கின்றது
இப்படி ஒரு குற்றத்திற்கான தண்டனை
தீர்க்கமான விசாரணையின் பின்னரே வழங்கப்படுகிறது

ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இலங்கையில் குருவிகளை சுடுவதைப்போல எம் இளைஞ்ஞர்கள் இருவர் பொலிசாரால் சுடப்பட்ட சம்பவம் உலக ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்
மற்றும் மன்னிக்கமுடியாத குற்றமாகும்
தமிழர்மீது நடத்தப்படுகிற ஒரு வகைமாதிரியான இன அழிப்பின் தொடற்சியாகவே இதை கருதவேண்டும்
குற்றவாளிகள் யாராயினும் மரணதண்டனைக்கு உரியவர்களே
அண்மையில் அராபிய இளவரசன் ஒருவருக்கு கொலை வழக்கின் அடிப்படையில் மரணதண்டனை விதிக்கப்பட்டது அந்நாட்டின் சிறந்த நீதியை புலப்படுத்துகிறது
எமது நாட்டிலும் திறமான நீதி உள்ளதுதான் ஆனால் தமிழர் தாயகப்பகுதிக்குள் அந்த நீதி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு அம்மணமாய் அலைகிறது

எம் மக்களே இதை நாம் பாரா முகமாக விட்டால் தொடற்சியான இன அழிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்
ஒரு பாலியல் வல்லுறவுக்காக பொங்கி எழுகிறோமே அறிவீர்களாக இன்று நிகழ்ந்தேறியதும் ஒரு பாலியல் வல்லுறவுத்தான்
தமிழ்த் தேசியத்தின் பவித்திரம் சிதைக்கப்பட்டிருக்கிறது
ஜனநாயகம் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது
எமது இறைமை தனிமனித சுதந்திரம் மானபங்கப்படுத்தப்பட்டிருக்கிறது
நீதி கேட்போம் உறவுகளே
எம் தேசத்தில் பிணங்களை புதைக்க இடமில்லைத் தோழர்களே
இதை தடுக்காவிடின்
எதிர்த்து கதைத்ததற்காகவும் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியதற்காகவும்
இரவில் நடமாடியகுற்றத்திற்காகவும்
எதிர்காலத்தில் எம் சகோதரனின் நண்பனின் தந்தையின் பிணங்களும் வீதியில் கிடக்கும்

அநாதி 
மார்க் ஜனா

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலை மாணவன் சுலக்சன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்..

போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு

October 22, 2016
13,531 Views
 
 

img_7757
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

யாழ்ப்பாணம்  வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு  காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ்  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.  அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.

அங்கு வைத்து காவல்துறையினர்  எங்களிடம் தெரிவித்தனா் இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது.  காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.

சம்மந்தப்பட்ட  காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள்,  அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

காவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும்  தந்து எல்லா செலவையும் செய்யவாா்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னாா்கள்

நாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும் ;  அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள்  செய்யிறம் என்றும் சொன்னாா்கள்.  ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை  காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்

பிறகு  கொழும்பிலிருந்து  காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம்.  உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றாா்கள் என கொல்லப்பட்ட  யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளாா்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2016
Posted on ஒக்ரோபர் 24, 2016 by yarlpavanan
readingcompetition

யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாக, பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.

எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) பதிலைத் தயாரித்து அனுப்பமுடியும்.

முதற் பரிசு – 15 அமெரிக்க டொலர்
இரண்டாம் பரிசு – 10 அமெரிக்க டொலர்
மூன்றாம் பரிசு – 05 அமெரிக்க டொலர்

இலங்கையிலிருந்து வங்கிக் கணக்கு ஊடாகப் பணம் அனுப்ப இயலாமையால், PAYPAL/ WALLET கணக்கு ஊடாகப் பரிசில்களை வழங்க எண்ணி உள்ளோம். போட்டியாளருக்கு PAYPAL/ WALLET கணக்கு இல்லையாயின், அவர்களது நம்பிக்கையான நண்பர்களின் PAYPAL/ WALLET கணக்கிற்கும் அனுப்பி வைக்கப்படும்.

மேலதிகத் தகவலறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
https://seebooks4u.blogspot.com/2016/10/2016.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபுரங்களை
நோக்கி ஏங்குகிறது
எங்கள்  
லயத்துவீடுகள்

 

 

மு.காளிதாசன் கவிதைப் பகுதியிலிருந்து...

Image may contain: house and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

சுதந்திரதின தேவி சிலை நிறுவி 130 ஆண்டுகள்!

அமெரிக்கா என்றதும் ஞாபகம் வரும் நினைவுச் சின்னம் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலை. கையில் சுதந்திர தீபத்துடன் கூடிய 305 அடி உயர பிரமாண்ட சிலை. இந்த சிலை நிறுவப்பட்டு இன்றுடன் 130 ஆண்டுகள் ஆகின்றன.

கடந்த 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்காவுக்கு பிரான்ஸ் மக்கள் வழங்கிய பரிசுதான் சுதந்திர தேவி சிலை. சிலையை வடிவமைக்கும் பணி பாரீசில் தொடங்கி 9 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. 1884-ம் ஆண்டு சிலை உருவாக்கி முடிக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் பிரான்ஸ் சிற்ப கலைஞர் பிரட்ரிக் அகஸ்தே பார்தோல்டி. இவர் தனது தாயின் முகத்தை மாடலாக வைத்து இந்த சிலையை உருவாக்கி உள்ளார். பின்னர் இவரே அமெரிக்கா சென்று சிலையை எந்த இடத்தில் வைப்பது என்று அப்போதைய அமெரிக்க அரசுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நியூயார்க் துறைமுகம் அருகில் உள்ள தீவில் வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்த சிலை சர்வதேச சுதந்திரம், ஜனநாயகத்தின் சின்னமாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் லிபர்டி தீவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை காண உலகின் பல நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த சிலை நிறுவப்பட்டு இன்றுடன் 125 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு கோலாகல விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலையை நிர்வகித்து வரும் தேசிய பூங்கா அமைப்பு, சிலைக்குள் உள்ள படிக்கட்டுகளை புனரமைக்க உள்ளது. இதற்காக நாளை முதல் சிலை மூடப்படுகிறது. எனினும், லிபர்டி தீவை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

சிலையின் சிறப்பு அம்சங்கள்:
* சிலையின் கிரீடத்தில் 7 முட்கள் உள்ளன. இவை சிலையை சுற்றி உள்ள 7 கடல்களை குறிக்கின்றன. கிரீடத்தில் 25 ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன.
* சுதந்திர தேவியின் இடது கையில் விடுதலை பெற்றதற்கான பத்திரமும், வலது கையில் சுதந்திர தீபமும் உள்ளது.
* சிலையை உருவாக்க ஸ்டீல் பிரேம் வடிவமைத்தவர் பிரான்ஸ் இன்ஜினியர் குஸ்டாவ் ஈபிள். இவர்தான் பின்னாளில் ஈபிள் டவரையும் வடிவமைத்தார்.
* கடும் புயல், சூறாவளியையும் தாங்கும் வகையில் இரும்பு, செம்பு போன்றவற்றை பயன்படுத்தி சுதந்திர தேவி உருவாக்கப்பட்டுள்ளது.
* சிலையின் உயரம் 151 அடி. பீடத்துடன் சேர்த்தால் 305 அடி. சிலைக்குள் 354 படிக்கட்டுகள் உள்ளன. அதன் மூலம் சிலையில் உச்சியில் உள்ள கிரீடம் வரை சென்று நியூயார்க் நக ரின் அழகை ரசிக்கலாம்.
* சுதந்திர தேவியின் 2 கண்களுக்கு இடையில் உள்ள தூரம் 2.5 அடி. சிலையின் மூக்கு 4.5 அடி. வாய் 3 அடி.
* இவ்வளவு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட சுதந்திர தேவி சிலையின் மொத்த எடை 225 டன். இதில் 100 டன் செம்பு, இரும்பு, மற்ற கட்டுமானப் பொருட்கள் அடங்கும்.

Sahana Sahana's photo.
Sahana Sahana's photo.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் மீண்டும்
மொட்டவிழ்பதில்லை...

Image may contain: flower, plant and nature
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலர் விரும்பாமலேயே வந்து போகின்றன 
இந்தத் திருநாட்கள்....

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கத்தோடு;
தீபத்திருத்திரு நாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் நல் வாழ்த்துக்களை தெரிலித்துக் கொள்கிறேன்.

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 தங்களின் நினைவளியா நினைவுகளை இவ்வாறு மீட்டுகின்றனர்.
 

உதட்டில் புன்னகை புதைத்தோம், 
உயிரை உடம்புக்குள் புதைத்தோம், 
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்..

(இதே நாள் 30 .10 .1995 ம் ஆண்டு கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 லட்சம் மக்கள் யாழை விட்டு ஒரு இரவில் வெளியேறிய நாள் )

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sunday, 30 October 2016

 

tm_toolbar_logo.gif    

 

 

ஜன்னலுக்கு வெளியே!!

 
அது ஒரு முதியோர் இல்லம். இரண்டு வயதானவர்கள் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். ஒருவருக்கு முதுகுத்தண்டில் கோளாறு. அதனால் மல்லாந்து எப்போதும் படுத்திருப்பார். இவரைப்போல இன்னொருவரும் நடமாட முடியாதவர். சர்க்கரை வியாதிக்காரர். அவருடைய கட்டில் ஜன்னலோரமாக இருந்ததால் எப்போதும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பார். 

வருடக்கணக்காக அங்கேயிருந்ததால் இருவரும் நல்ல சினேகிதர்களாக மாறியிருந்தார்கள். இருவரையுமே பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை. அதனால் எப்போதுமே தங்களுக்குள் ஏதாவது பேசியபடியே நாட்களைக் கழித்தார்கள். 

ஒரு நாள் படுத்திருந்தவர் ஜன்னல் பெரியவரிடம் அங்கே தெருவில் என்ன நடக்கிறது? எனக்கு சொல்லுங்கள்' என்று கேட்க, அவருடைய நண்பர் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தார்.
" அங்கே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. நிறைய குழந்தைகள் விளையாடிக்கொன்டிருக்கிறார்கள். பார்க்கவே அழகாய் இருக்கிறது"

படித்திருந்தவர் சொன்னார்

 " அங்கே என்ன நடந்தாலும் அவ்வப்போது எனக்குச் சொல்லுங்கள். அதையெல்லாம் கேட்பதால் மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது"

அடுத்த நாள் ஜன்னல்காரர் ' தூரத்தில் ஒரு கோவில் தெரிகிறது. ஏதோ உற்சவம் போல இருக்கிறது வாண வேடிக்கைகள் எல்லாம் அமர்க்களப்படுகின்றன" என்றார்.

"இது பங்குனி மாதம் இல்லையா? பங்குனி, சித்திரையெல்லாம் உற்சவங்கள் நிறைய இருக்கும். குணமானதும் நான் கோவிலுக்குப்போகப்போகிறேன்" என்றார் படுக்கைக்காரர் உற்சாகத்துடன்.

இன்னொரு நாள் அந்த வழியாகச் சென்ற கல்யாண ஊர்வலத்தைப்பற்றி, மாப்பிள்ளையின் அழகைப்பற்றி ரசித்துக் கூறினார். படுக்கைக்காரருக்கு கல்யாணத்தையே நேரில் பார்த்தது போல இருந்தது. 

ஒரு வாரம் கழித்து ஒரு சிறு குழந்தை தன் அம்மாவிடம் அடம் பிடித்து சாலையில் போகும் ஐஸ் வண்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கிய கதையை சுவைபடச் சொன்னார். படுக்கைக்காரருக்கு அந்தக் காட்சியை தானே நேரில் கண்டது போல இருந்தது.சிரித்தவாறே " பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் சண்டையில் எப்போதும் குழந்தைகள் தான் ஜெயிக்கும்" என்று குதூகலித்தார். 

மறுபடியும் ஒரு நாள் ஜன்னலுக்கு வெளியே பூத்திருந்த பூக்களின் அழகை ரசித்து பேசிக்கொண்டிருந்தவர் மயங்கி விழ, உடனேயே அவரை ஸ்ட்ரெச்சரில் போட்டு வெளியே கொன்டு போனார்கள். அன்றும் அடுத்த நாளும் அவர் வராமலேயே போக, படுத்திருந்தவர் அவரைப்பற்றி விசாரித்தார். ஜன்னல்காரர் இறந்து விட்டதாக அவர்கள் சொன்னதும் அவர் அப்படியே துக்கத்தில் துயரத்தில் மூழ்கிப்போனார். தினமும் நண்பரை நினைத்து நினைத்து மருகினார். 

ஒரு நாள் நர்ஸிடம் சொல்லி தன் படுக்கையை ஜன்னலோரமாக மாற்றச் சொன்னார். மிகவும் பிரயாசைப்பட்டு கையை ஊன்றி பாதி நிமிர்ந்து ஜன்னலுக்கு வெளியே நோக்கினார். 

அங்கே தெரிந்ததோ ஒரு உயரமான மதில் சுவர் தான்!

திகைத்துப்போய் நர்ஸிடம் கேட்டார்.

" இங்கே ஒரு மதில் சுவரல்லவா இருக்கிறது! தினமும் என்னென்னவோ தெரிவதாய் அவர் ரசித்து ரசித்து சொன்னாரே?"

" உங்களுக்கு சந்தோஷம் தருவதற்காக அவர் கற்பனை செய்து சொல்லியிருப்பார்!"

நர்ஸ் சொன்னதும் அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். நர்ஸ் மேலும் சொன்னாள்.

" உங்களுக்காவது இந்த சுவர் தெரிகிறது. அவருக்கு அதுவும் தெரியாது. ஏனென்றால் அவர் பார்வையை இழந்தவர் அய்யா!"

பெரியவர் அப்படியே பிரமித்துப்போய் அமர்ந்திருந்தார். தனக்குள் அத்தனை சோகங்கள் இருந்தும் அடுத்தவரை மகிழ்விக்க வேண்டுமென்று வாழ்ந்த அவர் எத்தனை உயர்ந்த மனிதர்!

உங்களின் சொந்த நிலைமை எப்படியிருந்தாலும் அடுத்தவருக்கு சந்தோஷம் ஏற்படும்படி நடந்து கொள்ளுங்கள். ஒருவரிம் முகத்தில் புன்னகை பூக்கும்படி செய்தீர்களென்றால் அதையும் விட உயர்ந்த விஷயம் வேறெதுமில்லை!! 
 

படித்ததிருந்து.......
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தஷஷ்டி விரத ஆரம்பம்...!

Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Happy Halloween!

Image may contain: text

ம்...

குரு அரவிந்தன்

மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது. பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.
பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்கள். சில சமயங்களில் வீட்டில இருப்பவர்களும் பயங்கரமான வேடமணிந்து விருந்து கேட்டு வந்த பிள்ளைகளுக்குப் பயம் காட்டுவார்கள். அதன்பின் பிள்ளைகள் கொண்டுவந்த தட்டிலே இனிப்பு, சொக்லட் போன்றவற்றைப் போடுவார்கள். மாலை 5மணியில் இருந்து இரவு ஒன்பது, பத்து மணிவரை அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று (Tricks or Treats) இனிப்பு வகைகளைச் சேகரிப்பார்கள். இப்படிச் சேகரித்துக் கொண்டு வந்தவற்றைத் தரம் பிரித்து பிடித்தவற்றைத் தாங்கள் எடுத்துக் கொண்டு வேண்டாத மிகுதியைப் பெற்றோரிடம் தள்ளி விடுவார்கள்.
கலோவின் தினத்திலன்று சூனியக்காரி, கறுப்புப் பூனை, வெளவால், ஆந்தை, சிலந்தி, சிலந்திவலை, எலும்புக்கூடு, மண்டை ஓடு, பூசணிக்காய், விளக்குமாறு, சூலம் போன்ற விளையாட்டுப் பொருட்களால் வீட்டின் வாசலை அலங்கோலம் செய்து வைத்திருப்பர். பெரிய பூசணிக்காயை (Jack-o-Lantern) எடுத்து அவற்றைப் பயங்கர முகங்களைப் போலச் செதுக்கி அதன் வடிவைமாற்றி வாசலில் வைத்திருப்பர். இருட்டில் இருக்கும் அவற்றில் மெழுகு திரிகளைக் கொளுத்தி மெல்லிய வெளிச்சத்தை ஏற்படுத்தியிருப்பர். பயங்கரமான இடத்தை நோக்கிப் போவது போன்ற ஒரு சூழலை இங்கே ஏற்படுத்தியிருப்பர். இந்த வாரத்தில் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் போய் பிசாசு கதைகள் சொல்வதிலும், அப்படியான பயங்கரப் படங்களைக் குடும்பமாகச் சென்று பார்ப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவர். நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கலோவீன் கேளிக்கை விருந்துகளுக்கு கலோவீன் ஆடைகள் அணிந்து முகத்திற்கு மைபூசிச் செல்வர்.
இந்த மாதத்தில் அனேகமான கடைகளில் கலோவின் தினத்திற்கான பொருட்களே முக்கிய வியாபாரப் பொருட்களாக இருக்கும். கலோவீன் ஆடைகள், முகமூடிகள் போன்ற பொருட்கள் அதிகமாக விற்பனையாகும். கலோவீன் கதைகள் அடங்கிய புத்தகங்கள், கலோவீன் புகைப்படங்கள், கலோவீன் ஒளிப்பட குறுந்தட்டுக்கள் போன்றவையும் அதிகம் விற்பனையாகும். அங்காடிகளில் பெரிய, சிறிய பூசணிக்காய்கள், ஆப்பிள் பழங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருக்கும். வேலைத்தலங்களில் மட்டுமல்ல, பாடசாலைகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் விதம் விதமான ஆடைகள் அணிந்து, முகத்திற்கு மைபூசி வருவார்கள். பெண்கள் தேவதைகள், மந்திரக்காரி, சூனியக்காரி போன்று ஆடைகள் அணிந்திருப்பர். காலோவீன் வாழ்த்து மடல்கள் வரைந்து ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வர். பத்திரிகைகள் சிறுவர்களுக்கான கலோவீன் சித்திரம் வரையும் போட்டி, கலோவீன் நிறம் தீட்டும் போட்டி போன்றவற்றை இந்த வாரங்களில் நடத்துவர். பெரிய அங்காடிகளிலும் சிறுவர், சிறுமிகளை ஊக்குவிப்பதற்காக இப்படியான நிறம் தீட்டும் போட்டிகளை நடத்திப் பிள்ளைகளுக்குப் பரிசுகள் கொடுப்பர்.
இத்தினத்தில் அனேகமானவர்கள் முகமூடி போட்டும் உருமாற்றம் செய்தும் இருப்பதால் மாலை நேரத்தில் நகர் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கும். சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக் கருதி, மாலைநேரத்தில் குழந்தைகள் தனியே செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கும். 1978ம் ஆண்டு கலோவீன் என்ற பெயரில் ஜோன் காப்பென்ரரின் நெறியாள்கையில் ஆங்கிலப் படம் ஒன்றும் வெளிவந்திருந்தது. 2007ம் ஆண்டு மீண்டும் கலோவீன் படம் ஒன்று இதே பெயரில் றொப் சோம்பியால் (Rob Zombie) படமாக்கப்பட்டது

Sahana Sahana's photo.
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலோவீன்   சொக்லேட் .1f383.png?1f383.png?1f383.png?

Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர வன்னி நாட்டு இறுதி அரசனும் வெள்ளையருக்கு எதிராக போரிட்ட சுதந்திர வீரனுமான பண்டார வன்னியன் நினைவு தினம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை  1  வந்தாச்சு....

Image may contain: plant, flower, nature and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

03.11.2016

லைக்கா (Laika, ரஷ்ய மொழி: Лайка), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குத்ர்யாவ்க்கா" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. லைக்கா (பெண் நாய்)

விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.[1]

லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

 

No automatic alt text available.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை அரசன் தந்த திருச்செந்தூர் கொடி மரம்! - கந்த சஷ்டி சிறப்புப் பகிர்வு -

 

14900503_1119950731454483_8211651467231807422_n.jpg?oh=4711f61658ca7f251a86ce557f6ace89&oe=5886C64E
"""""""""""""""""""""""""""""""""""""""'"'""""""""''"""

கடல் அலைகள் வருடுவதால், 'திருச்சீரலைவாய்' என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், 'ஜெயந்திபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூரசம்ஹாரம்’ என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து, கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ‘கபாடபுரம்’ குறிப்பிடப்பட்டிருப்பதால், ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.

ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, வெண்பா அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளம்.

137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவார்கள். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன்,‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது.

ஆதிசங்கரர் வடநாட்டு திக் விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி, ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி, முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.

இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.

திருச்செந்தூர் கோயில் மடைப்பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!’ என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ‘‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்றார் சாஸ்திரியார். பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.

- கவிஜீ வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
குளிர் கால நேர மாற்றம்.

374119_284537274913428_1375930607_n.jpg?oh=874caf7ae75d8c5e485645b71c48cca5&oe=588B9FD1

6.11.2016 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். .இன்றிரவு தூக்கத்திற்கு செல்பவர்கள் முற் கூட்டியே உங்கள் கடிகாரங்களை சரி செய்து விட்டு தூங்க செல்லுங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, யாயினி said:
குளிர் கால நேர மாற்றம்.

374119_284537274913428_1375930607_n.jpg?oh=874caf7ae75d8c5e485645b71c48cca5&oe=588B9FD1

6.11.2016 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். .இன்றிரவு தூக்கத்திற்கு செல்பவர்கள் முற் கூட்டியே உங்கள் கடிகாரங்களை சரி செய்து விட்டு தூங்க செல்லுங்கள்...

ஐரோப்பாவில் நேரமாற்றத்திற்கு பல காரணங்களை சொல்கிறார்கள். உதாரணத்திற்கு சக்தி விரயத்தை சேமித்தல்.
நேரமாற்றம் அவசியமில்லை என பலவழிகளில் பலத்த கண்டனங்களும் விவாதங்களும் ஐரோப்பாவில் இருக்கின்றன.
கனடாவில் என்ன விதமான காரணங்களை சொல்கிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன்வெற்றி பெற்ற நாள் இன்று!06.11.1860: 
ஆபிரகாம் லிங்கன் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் எனக் கருதினார். 1860 ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக ஆபிரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார்
இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்,
தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல முயன்றதற்கு இடங்கொடாமல் அமெரிக்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றதை லிங்கனின் தலையாய சாதனையாகக் கூறலாம்.
1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நான்சி ஹாங்க்ஸ். லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை.
அப்போதைய அமெரிக்க சமூகத்தில் நிலவி வந்த வெள்ளையார்-கறுப்பர் இடையேயான வேறுபாடு மற்றும் அடிமை முறை ஆகியவற்றை லிங்கன் முற்றிலுமாக எதிர்த்தார். அதன்படி 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. லிங்கனின் அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார்.
அதற்கு பிறகு லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பாவில் நேரமாற்றத்திற்கு பல காரணங்களை சொல்கிறார்கள். உதாரணத்திற்கு சக்தி விரயத்தை சேமித்தல்.
நேரமாற்றம் அவசியமில்லை என பலவழிகளில் பலத்த கண்டனங்களும் விவாதங்களும் ஐரோப்பாவில் இருக்கின்றன.
கனடாவில் என்ன விதமான காரணங்களை சொல்கிறார்கள்?

இங்கும் சக்தி விரயத்தை சேமிக்கும் முகமாகவே இந்த நேரமாற்றம் ஏற்படுத்தபடுவதாக அறியக் கூடியதாக இருக்கிறது..உண்மையாக நேரமாற்றம் என்ற ஒன்று தேவை தானா என்ற ஒரு கேள்வியும் எளத்தான் செய்கிறது..நடைமுறையில் இருப்பதை மாற்றுவதும் சற்று கடினம் தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14963364_10209851444035784_6584681262391047769_n.jpg?oh=5467fc44030830448589ac92601c0dfe&oe=589BC32E

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நோட்டாவது உழைத்து தேயும் ஏழையின் கையில் சேருமா

Shanmugapriya Mani's photo.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.