Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person , candles
எழுதுங்களேன் – நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்...
ஏராளம்… ஏராளம்
எண்ணங்களை – எழுத
எழுந்துவர முடியவில்லை

 

 

எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால்
முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்...
 

"கப்டன் வானதி 

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய எழுச்சி வாரம் 2016

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லறை தெய்வங்களின் அழைப்பு 
........................................................................

இந்த நாளுக்காய்  
காத்திருந்த எம்  
உதிரங்களே
உங்கள் வரவுக்காய்  
நாங்களுமிங்கே 
கட்டிப்பிடித்து அழ 
கல்லறைகள் இல்லையென 
கலங்கவேண்டாம் ஈழ மண்ணிருக்கிறது

வாருங்கள் பேசுவோம்  
எம் ஈழ இன நாளைய  
விடியல் பற்றி பேசுவோம் 

உங்களோடு ஓநாய்கள் 
வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் 
ஈகைச் சுடரேற்ற ஈழம்பற்றி பேச 
தேசத்தை விற்று தேசியம்பேசும்
தமிழனென சொல்லும் தமிழன் 
வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் 

போராட்டம் பற்றிய அறிவோ 
ஈழ இன உணர்வே இல்லாதோர் 
போட்டியிட்டனர் அரசியலில் 
முழக்கமிட்டனர் சட்ட சபைதனில் 
முள்ளிவாய்க்கால் பற்றி 
கதிரையில் பதவி அடுத்தநாள்  
அங்கே அமைதி 
அவர்களும் வரக்கூடும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் 

நாம் மட்டும் பேசுவோம்  
நாளைய எம் ஈழ இன
விடியல் பற்றி பேசுவோம்

முன்னைய இந்நாளில்  
எம் தலைவன் உரை கேட்ட நீங்கள் 
அந்த உரையினை இன்று உணர்ந்தவர்களாய் ஒன்றுகூடி வாருங்கள் ஒருமனதாய் வாருங்கள்
வழிபிறக்கும் வலி விலகும் வாருங்கள் பேசுவோம் 

#மன்னார் பெனில்#

Image may contain: 3 people , outdoor

கல்லறை மேனியர்
கண் துறப்பர்
கார்த்திகை
நாளிலே...!

Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சிக்கு வைக்கப்பட்டவையல்ல இந்த கல்லறைகள்...

இவை சாட்சிக்கு வைக்கப்பட்டவை...

மாவீரர் நாள் 1f64f.png?1f622.png?
(வரிகள் புதுவை அண்ணா)

Image may contain: sky, tree, cloud and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lest we forget.

Image may contain: plant, flower, text and nature
 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கர் உனக்கு சாவோர் முடிவே
எங்களுக் கோ நின் சாவு தான் தொடக்கம் !

கண்கள் மூடிய களத்தின் முதற்புலி
உந்தன் வழி எங்கள் உயிர்வழி ஆனது !

பாவிகள் தமிழன் உயிரை பறித்தநாள்
சாவினைத் தடுக்க சாவினை ஏற்றாய் !

விழுவோ ருக்காய் அழுவோர் மண்ணில்
அழுவோருக்காய் வீழ்ந்தோய் - பார்த்தோம் !

தழைக்க ஓங்கித் தமிழீழ பொழில்
முளைக்க நீயே முதல் விதை ஆனாய் !

எங்கள் மண் உன் சாவில் உயிர்க்கும்
எங்கள் வாழ்வுன் உதிர்வில் பூக்கும்.!

- காசி ஆனந்தன்

Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்க் குடியமர்ந்த பின்னரும் கடந்த ஏழு வருடங்களாக தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாதவர்களாக தமிழ் மக்கள் தவித்து வந்துள்ளனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழிகாட்டலுக்கு அமைய  கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மக்கள் உணர்வுடன் பங்குபற்றி துய்மையாக்கும் பணியில் ஈடுப்பட்டுவந்தனர்.

இதேவேளை (27.11.2016) திட்டமிட்டபடி கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாலை வேளையில் மணி ஒலிக்கப்பட்டு 6.00 மணிக்கு பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின் தனித்தனியாகஅமைக்கப்பட்டிருக்கும் சுடர்கள் ஏற்றப்பட்ட மாவீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தப்படவுள்ளது.

எனவே குறித்த கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மாலை 4.00 மணியளவில் வருகைத் தந்து மாவீரர்களை அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையினர் அழைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக
தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 
வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Image may contain: fire
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் ஈழம்"

போராளிகள் 
இறந்து கொண்டிருக்கும்
மண் என்றார்கள்...

திருத்தினேன்...

போராளிகள் 
பிறந்து கொண்டிருக்கும்
மண்...!!!

- காசி ஆனந்தன்

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விதைகளுக்கு விழிநீர் ஊற்ற தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம்

November 27, 2016
 
 

image-0-02-06-2e31ed654f747a4b7ae45b8d8190ddad0e185da7f430f3ce277cc274424a5a33-v
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஆனால் யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்க் குடியமர்ந்த பின்னர் கடந்த ஏழு வருடங்களாக தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாதவர்களாக தமிழ் மக்கள் தவித்து வந்துள்ளனர். ஆனால் இன்றைய தினம் குறித்த அஞ்சலி நிகழ்வினை கிளிநொச்சியில் உள்ள  கனகபுரம் மற்றும்  முழங்காவில் துயிலுமில்லங்களில்  நடத்துவதற்கான  பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

image-0-02-06-4f77d4383d64ff82773a7b5db20236d4a3825f068c132889438eb440465af6ea-vimage-0-02-06-28b38c7307d6579f80efc977aaa281dabb47e9be9bb72c3ed7d151adea8fa227-vimage-0-02-06-590e198dc111cd46a6f2413a715be25bd18a14ae4b5f54d5dcf048d49a978a79-v image-0-02-06-923a4d86a5710a99ac8459a076febe37af7631aab71e24715834449b0a938be7-v image-0-02-06-c59a649749a86a6b469f9baf50526f7e81454165cc0a3eeb717c5f36e362be28-v image-0-02-06-d48ce8f200a0c4c7d488efce41baebe424f4cc37c2edfe324981918995e60f90-v

 

மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு ... அ.மயூரன் .

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு ... அ.மயூரன் .

மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதநாகரிகம் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இவ்வளர்ச்சிப் பாதைக்கு வழிசமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். 

அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூரியது தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர். 


தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீரர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது. பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர். 
அத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீரர்களின் நினைவுதினமான கார்த்திகை 27 ஆம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுதின விழாஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட. இது குறித்த மேலதிக விடயங்கள் ஆராயப்படவேண்டியவையே. 

அதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்லமையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும் தான் பிரகடணப்படுத்திய சுதந்திர தினத்தை (1948) ஆண்டு தோறும் தேசிய வீரர்கள் தினமாகக் கொண்டாடி வருவதனைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள் தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த ககானா என்கின்ற விடுதலை அமைப்பினர். முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர். 

450 ஆண்டுகவீளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்தது. அந்த நாள் இன்றும் சுதந்தி;ர தினமாக இல்லாது விடுதலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம். ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். 

மேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொங்; படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான 03.09.1969 ஆம் ஆண்டை வியட்நாமின் தேசிய வீரர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை. இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களை நினைவு கூருகின்றது. அதேபோல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீரர்களை தவறாது கௌரவித்து நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது. 

இன்று ஈழத்தமிழர்களின் வரலாற்று பண்பாட்டுவிழுமியத்துடன் கலந்துவிட்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரினது இதழ்கள்.பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது. 

“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது. “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது. “சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. 

“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது. 


சுதந்திர தமிழீழ விடுதலையை அடிநாதமாகக் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி போரிலே தங்களுயிர்களை தாரைவார்த்து தமிழர் மானம் காத்த மாவீரர் நாளை வர்ணிக்க மனித மொழிகளில் வார்த்தையில்லை. ஏரிநட்சத்திரங்களாக விடுதலையின் விடிவெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் நாள். கார்த்திகை 27 கார்மேகம் கார்த்திகையில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்களின் கால்கள் நனைக்கும் நாள். ஈடினையற்ற ஈகங்கள் புரிந்து அளப்பரிய அற்புதங்கள் செய்து மயிர்கூச்செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச்செய்த இந்த வீரமாவீரர்களின் வீரத்திருநாள் கார்த்திகை 27.  
சங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீரர்களை புதைத்து அவர்களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்கமுறை காணப்பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீரர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது. தமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள். போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானூற்றில் பரவலாகக் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததனை இலக்கியங்கள் சான்றாக்கிறது. திருக்குறளிலும் போரில் இறந்த வீரர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது. 

அந்தவகையில் மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீரர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்;ணிலே சிறப்பாக இடம்பெற்றது.

இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செய்து கௌலீரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்றார் சன்சூ. அத்துடன் போரில் மாண்ட வீரர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத்தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான். என்று சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருந்தோம். 

அன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத்தலைவர் பிரபாகரனாக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே. அதேபோல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது. என விரிவாகக் கூறுவதைக் காணலாம். சங்ககாலப் பாடல்கள் பலவும் இவ்வீரர்களை எவ்வாறு நினைவு கூரப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. 

முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீரர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1307 மாவீரர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீரர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீரர்கள் மாத்திரம் விதைக்கப்பட்டனர். 

ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீரர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. விதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு விதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்பப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். இந்த மாவீரர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும். அத்துடன் 1990 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர் வாரத்தை மக்களுக்குள் நடைமுறைப்படுத்தி மாண்ட வீரர்களைக் கௌரவிக்கும் முகமாக புலிகளின் கொடியாக இருந்த புலிக்கொடியைதேசியக் கொடியாக அறிவித்து அதில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற எழுத்துக்களையும் நீக்கினார். 

அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீரர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்;ட துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீரர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.07 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீரர்களுக்கு நினைவு கூரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு 19.887 மாவீரர்களுக்கும், கடந்த 2008 ஆம் ஆண்டு 24.600 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும், முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் கிட்டத்தட்ட 43.000 மாவீரர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வழியனுப்ப உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் உலகெங்கும் கார்த்திகை தீபத்தை இம்மான வீரர்களை மௌனமாக வணங்குகிறது. 


தமது வாயிலிருந்து விடுதலைப் போர் பற்றிய எதுவித உண்மைகளும் தெரியவரக்கூடாது என்பதற்காக தனது நாக்கை வெட்டி மாவீரனான கப்டன்.-பாலன். சயனைட் உண்டு வீரகாவியமான மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள். தம்முயிர்களைத் துச்சமென மதித்து உடலையே கந்தகமாக்கி வெடித்து உயிர் நீத்த கரும்புலிகள். எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே அழித்த கேணல் கிட்டு போன்ற மாவீரர்கள். தன்னுடலை மெழுகுதிரியாக்கி உயிர்நீத்த திலீபன், வியட்நாமின் வியட்கொங் படைகளை வழிநடத்தி அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட வியட்நாமிய ஜெனரல் வோ நியூ கியன் ஜியாப் போல் தமிழர் படைகளை 25 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி ஒவ்வொரு தாக்குதல்களையும் தலைமை ஏற்று விடுதலைப் போரை ஒரு மரபுவழிப்படையணியாக மாற்றி தேசியத் தலைவருக்கு பக்கபலமாக இருந்த படைத்தளபதிகளான பிரிகேடியர்கள் பால்ராஜ், தீபன், ஜெயம், சொர்ணம், சூசை, சசிகுமார் மாஸ்ரர், மணிவண்ணன், பானு, தமிழ்ச்செல்வன், துர்க்கா, விதுஷா, என தமிழீழத்தாய் பிரசவித்த வீரத்தின் சிகரங்கள் அனைவரும் கார்த்திகைபூ போலவே வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர்களே. 

பொதுவாக விடுதலைக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீரர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர். மாறாக ஏகாதிபத்தியத்தின் மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காஅரசு இறந்த வீரர்களை நினைவு கூருவதை பொதுவாகக் காணமுடிவதில்லை. ஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்;ட 58132 அமெரிக்க வீரர்களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீரர்கள் நினைவுநிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவுசின்னத்திற்கருகில் 75 மீ உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அதில் வியட்நாமில் இறந்த 58132 அமெரிக்க வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன. இந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்துவைக்கப்பட்டன. 

ஆனால் இன்று இராணுவக் ஆக்கிரமிப்புக்குள் தமிழீழ தேசம் விழுங்கப்பட்டதனால் அங்கு உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. உலகப் பொது வழக்கங்களுக்கும், இராணுவ விழுமியங்களுக்கும் மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இவ் கல்லறைகள் இடிப்பு மனிதநாகரிக விழுமியங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். இவ் ஈனச்செயலுக்கு சிங்களதேசம் என்றோ ஒரு நாள் பதில்சொல்லியே ஆகவேண்டும். 

மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீரர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுகின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். ஆனால் இன்று வெறும் படங்களிலும் வீடியோ காணொளிப்பதிவுகளிலுமே மாவீரர் துயிலுமில்லங்களைக் காண முடியும். எனினும் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கல்லறைகள் அங்கே அழிக்கப்பட்டாலும் சில துயிலுமில்லங்களில் இம்முறை தீபங்கள் ஏற்ற தமிழிழமக்கள் தயாராகிவிட்டனர். ஏமக்காக வீழ்ந்த வீரர்களுக்காக உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களிலும் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது அவர்களின் 
கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.

Majura Amb's photo.
Majura Amb's photo.
Majura Amb's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்.

 
November 27, 2016
 

pict_20161127_181635
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும்  பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட  போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள்  இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தது.

அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.

pict_20161127_181138

இன்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக  மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர். மாலை 6.5 மணிக்கு மணியோசை எழுப்பட்டு பொதுச் சுடரேற்றப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரன்  அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து  மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும்  மாவீரர் வணக்கப் பாடல்   ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான  எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள் எனும் வரிகள் ஒலிக்கும் போது  கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன்  உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது

kkk-3

கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத  போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த  இடத்தில்  நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை. எனது பிள்ளையை அவனது புதைக்குழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது. ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று  சுடரேற்றி அஞ்சலி செலுத்வேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. எனவே எனக்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயிலுமில்லம்  கடந்த காலத்தில் இருந்தது போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார் ஒரு மாவீரரின் தாய்.

pict_20161127_181216

இவ்வாறு பலர் தங்களினது உணர்வுகளை கண்ணீராகவும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முதலாக துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில்ஆயிரக்கணக்கான  பொது மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

kkk-8

இவ்வாறு முழங்காவில் மற்றும் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை  மாவீரர் துயிலும் இல்லங்களிலும்  மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது

pict_20161127_181342

dsc_0078dsc_0090pict_20161127_181354

dsc_0125dsc_0144dsc_0155pict_20161127_181523pict_20161127_182449

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி.

November 27, 2016
November 27, 2016

 

img_2728img_2726img_2727

யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்

img_2731img_2732img_2733img_2734

img_2718img_2719img_2723img_2724

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா சுந்தரபுரத்தில்  உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கார்த்திகை 27 நினைவேந்தல்

 வவுனியா சுதந்திரபுரத்தில்  கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை உணர்வு பூர்வமாக   அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு சாந்த நாயகி நற்பணி மன்ற உறுதுணையுடன் அநீதிக்கும், அடக்குமுறைக்குமான அமையத்தின் ஏற்பாட்டில் முகவும் எழுச்சி பூர்வவாமாக கொண்டாடப்பட்டது. இன் நிகழ்வில்  சந்திரகுமார் கண்ணன், மாணிக்கம் ஜெகன், செ.சபாநாதன், மாவீரர் குடும்பங்கள் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்..

தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில்  நினைவேந்தல் நிகழ்வை இறை ஆசியுடன் ஆரம்பித்து பின்னர் நினைவேந்தல் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இந் நாளில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் அக வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இருபது மாவீரர் குடும்பங்களுக்கான உணவுப்பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.IMG_2428IMG_2433 IMG_2485 IMG_2486 IMG_2489 IMG_2491 IMG_2492 IMG_2494 IMG_2663 IMG_2667 IMG_2672 IMG_2676 IMG_2677 IMG_2679 IMG_2680 IMG_2693 IMG_2697 IMG_2698 IMG_2699 IMG_2701 IMG_2702

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லாம் சரி..
புல்லரித்துப் போகும் அந்த 
அசரீரி வாக்கு மட்டும் 
இன்னும் ஒலிக்கவேயில்லை.

செல்வை.
27.11.2016

 
No automatic alt text available.

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வு...அலை கடல் என திரண்ட உறவுகள்.

 
Suthan Nada's photo.
Suthan Nada's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

இறுதி யுத்தத்தின் பின் முழங்காவில் துயிலுமில்லத்தில் கண்ணீர் மல்க மாவீரர் நாள் அனுஸ்டிப்பு

தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை னோதிராஜா ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்படுகின்றது.

தமிழன விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்யத வீர மறவர்களை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ம் திகதி மாவீரர் நாளாக தமிழ் மக்கள் நினைவு கூறுகின்றனர்

 

யுத்தத்தின் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் தன்வசப்படுத்தி தமிழ்மக்களை மாவீரர் நாளை அனுஸ்டிக்கவிடமால் தடுத்து வந்தனர்.

தங்கள் பிள்ளைகளின் கல்லறைக்கு எப்போது விளக்கேற்றுவோம் என்ற ஏக்கத்துடன் தவித்த வந்தனர் தமிழ் மக்கள். அந்த ஏக்கம் இன்று நிறைவேறியது 9 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி முழங்காவில்

மாவீரர் துயிலும் இல்லம் கண்ணீர் மழையால் நனைந்தது இன்று மாலை முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த 5000 அதிகமான மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர் தங்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றினர்.

சரியாக இன்று மாலை 6.03 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பின்னர் 6.05 பிரதான பொதுச்சுடர் ஏற்றபட்டது. பொதுச்சுடரினை தமிழத் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மா.வை சேனாதிராஜா ஏற்றினார். தொடர்ந்து சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் விளக்கேற்றனர். அப்போது மாவீரர் பாடால் ஒலிக்கபட்டது அப்போது முழங்காவில் மாவீரர் துயிலும் கண்ணீர் மழையால் நனைந்து. அப்போது முழங்காவில் மாவீரர் துயிலும் சோகமயமானது.

15284029_696523670511598_116347766642638630_n

 

15284180_571108166415125_5211971089011027805_n

15134679_571108013081807_3858968032552189047_n

15135887_979083552236813_8030102515306317340_n

15181119_696523840511581_7437671737479708553_n

15181140_696523617178270_5678098064603405962_n

15181180_979083515570150_1169244522706701134_n

15192545_696523330511632_1078964491480624318_n

15220090_571107889748486_4046702783792423905_n


By.ekuruvi.com
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30,000 ஆயிரம் மக்கள் லண்டனே நடுங்க மாபெரும் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு - வீடியோ இணைப்பு 

 

 

maaveerar-naal2016.JPG
maaveerar22.jpg
 

லண்டனில் உள்ள நகரில் எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில், உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் இதில் கலந்துகொண்டு தமது வீர வணக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மும்முறை கடல் புலிகளை நினைவுகூரும் வண்ணம் , அருகில் உள்ள ஆற்றில் படகில் கடல் புலிகளின் கப்பல் போல ஒரு படகு வடிவமைக்கப்பட்டு , அதிலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.

சுமார் 30,000 ஆயிரத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இங்கே புடைசூழ்ந்துள்ளார்கள். லண்டன் மத்திய நகரமே அதிர்ந்துகொண்டு இருக்கிறது.
 
firstlook%2Bmaaveerar%2Bnaaal.jpg
 
 


 

 

 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான உணர்வென்பது ஆழ்மனதில் இருந்து உருவாக வேணும் 
சும்மா வெளிவேசத்துக்கு உணர்வுள்ளவனாக காண்பித்தால் ஏதோ ஒரு இடத்தில் உங்களின் வேஷம் கலையும் 
இப்படி தான் இன்றைக்கு பலதின் வேஷம் கலைந்து கொண்டிருக்கிறது. 
உதாரணத்திற்கு
அமைதியான முறையில் மிகவும் மனபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டிய மாவீரர் நாளை ஒரு கழியாட்ட நிகழ்வாக ஒழுங்கு செய்து கொண்டாடி மகிழ்ந்த தமிழ் நாட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிப்பிடலாம் .

 
Image may contain: 8 people , people smiling , text
அது ஒண்ணும் இல்ல இந்த மான் துள்ளி துள்ளி பேசும் போது நிறைய விசில் சத்தங்களை கேட்டு பழக்க பட்ட மான் அது தான்..அட அடுத்தவன்ட இளவு வீடு உங்களுக்கு களியாட்ட விடுதியா.....1f605.png?1f613.png  

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசை நிலைகுலைய செய்த மாவீர் தினம்!

Sunday 27th Nov 2016 18:16 PM

Image

மணி ஒலிக்க ,மாவீரர் நினைவு பாடல் ஒலிக்க மக்கள் மனம்திறந்து கதறிஅழ கல்லறைகள் சுடர்ந்தது .

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னி பெருநிலப்பரப்பில் துயிலும் இல்லங்கள் வெறும் காடுகளாய் ஆக்கப்பட்டது இன்றையநாளில் அவை மீண்டும் புனிதம் பெற்றது .

கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் இன்றையநாளில் பெரும் உணர்வெழுச்சி கண்டது ,மக்கள் அணிதிரண்டவிதம் அரசை நிலைகுலைய செய்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஒவ்வொரு தமிழனின் ஆத்மாவும் அந்த வீரரை மனம் நிறுத்தி சாந்தி கண்டது .

இன்றைய கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல முதன்மை சுடரை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை பெற்றோரும் உற்றோரும் ஏற்றி வைத்தனர் – மணி ஒலிக்க ,மாவீரர் நினைவு பாடல் ஒலிக்க மக்கள் மனம்திறந்து கதறிஅழ கல்லறைகள் சுடர்ந்தது .

1%2819%29.jpg

2%2812%29.jpg

3%2811%29.jpg

4%288%29.jpg

5%289%29.jpg

6%2810%29.jpg

7%285%29.jpg

8%283%29.jpg

9%284%29.jpg

10%285%29.jpg

11%284%29.jpg

12%284%29.jpg

13%283%29.jpg

14%282%29.jpg

15%283%29.jpg

16%283%29.jpg

17%283%29.jpg

18%282%29.jpg

19%281%29.jpg

20%281%29.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 27 இல் விதையாகியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய கனகபுரம் துயிலுமில்லம்.
பலரின் கண்ணீர்களுக்கு மத்தியில் தம் உயிரினை ஆவூதியாக்கிய எம்மவர்களுக்கு 8 ஆண்டுகளிற்கு பின்பு வீரவணக்கம் 15241989_667076736786427_4581760017795590055_n.jpg?oh=c56bf7378da749090f6c2584634abe12&oe=58C9B9E015192542_667076730119761_7151150133464357230_n.jpg?oh=4c0724fd0ccfe2ceba33fff9de45bdce&oe=58BE262815241163_667076733453094_8580008929508831830_n.jpg?oh=2ba0fe07fff53791a92ccb1c2d98b66c&oe=58C59B5A15178132_667076820119752_2080805832914436534_n.jpg?oh=67dbf5d8f3f9c62d061ec918a832e65e&oe=58D19FB615253648_667076826786418_183373877089677682_n.jpg?oh=333854ba42490180b2963b74790ce123&oe=58BD92E415267607_667076823453085_2501039690725202505_n.jpg?oh=f5c7dee4fe944b7276bd6969cd63ebb0&oe=58BFCBE815267607_667076823453085_2501039690725202505_n.jpg?oh=f5c7dee4fe944b7276bd6969cd63ebb0&oe=58BFCBE815181476_667076876786413_42321173786464947_n.jpg?oh=7aafafd9e740175569eaa54eb5e293b1&oe=58C36F5315193597_667076886786412_494872898247975521_n.jpg?oh=13e5c2801ca5fc3e97a2cc9ac33152c6&oe=58B144B915267902_667076890119745_9004991790732643804_n.jpg?oh=71fe7274438a44889fdde9622320dc3a&oe=58B39ED5

15193535_667076980119736_5464106584815867736_n.jpg?oh=d9aec9ccb60214df48d313e822010d5e&oe=58C7156115171131_667076973453070_1734000477306378052_n.jpg?oh=1923c9955392cd2c8bc0f8d7579bcf77&oe=58C9CC9615241932_667077080119726_8140487565366145247_n.jpg?oh=23dd0c716cd348e66dbb0fd91cb1f98f&oe=58FBDDEC15267673_667077090119725_4832896228874248842_n.jpg?oh=2e720efdb0828ca747ccee16d1177e52&oe=58B0EE2A15203156_667077103453057_2808162483481954340_n.jpg?oh=9d7b41b91a9d78e936047ec455ff3df7&oe=58CFD58B15192639_667077136786387_8381121827793419753_n.jpg?oh=8457e7c4e8d39275432dc821ca0ab1cf&oe=58CF950915202550_667077173453050_445232201564049275_n.jpg?oh=95c49d7ec4e967fab9162de97e1b90ef&oe=58D028B5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம் மறவர்களை நெஞ்சில் நிறுத்தி ஒன்றாய் கூடியுள்ளோம் - லண்டன்

 

 

15235939_658520707662146_4978502992882839028_o.jpg

 

15196097_658520710995479_2709038486283204035_o.jpg

 

15170885_10210747701184564_5720731577373390242_n.jpg?oh=3138de52da7ba32650603d064868c7f4&oe=58F9D90015181373_10210747701384569_5010540279800814851_n.jpg?oh=8e7a50da12ca029fec16979596044b14&oe=58B4484015171253_10210747701784579_7771571263555122821_n.jpg?oh=bc1bd1869a273bbeed9cd8b90cbfb4ce&oe=58BB310015284136_10210747702224590_9220011249991104607_n.jpg?oh=81c6cba4225d04e45f74c49b91373107&oe=58CCED0B15171181_10210747728065236_735222135732321375_n.jpg?oh=ad9bfb8fa7d487e4cd59962f177ccaa6&oe=58B91C82

15193638_10210747728105237_5294202330265605311_n.jpg?oh=1cc09891ade286d303c176b4aa146805&oe=58B6457315202642_10210747742505597_4619716324932450297_n.jpg?oh=55d62831c236710e9aa256f2f8284c72&oe=58C9649415241276_10210747742585599_5531215930212028768_n.jpg?oh=f850b49242a86d500d007d20d759e25f&oe=58AE907015193594_10210747848868256_6377400627661639530_n.jpg?oh=a2e2351cff58abd81c060eb4845e4df4&oe=58BF7C37

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த
எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும்
குட்டிமணி , தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற
இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

Image may contain: sky, cloud and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: sky, night, outdoor and nature
ஈழப்பிரியன் தமிழ் 
வானுயர ஏற்றிவிடடோம் புலிக்கொடி...எமக்கு தடை போட பகைவனே உன்னால் முடியாது.அடர்ந்த வன்னி காட்டுக்குள் பறக்குது புலிக்கொடி ..முடிந்தால் கண்டுபிடி.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.