Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு லட்சம் மக்கள் ஒன்றிணைந்து தியாகி தீலிபன்அவர்களின் நினைவு நாளில் மாபெரும் பேரணி! - படங்கள்

Featured Replies

இன்று தி.வேல்முருகன் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் 130 தமிழ் அமைப்புகள் மற்றும்  மாணவர்கள்  ஒன்றிணைந்து  அவசரக் கலந்தாய்வுக் கூட்டம்  காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணி வரை  நடை பெற்றது.

tamilar%20valvurimai-10.jpg

இதில் தமிழீழப் பிரசனை மற்றும் தமிழக பிரசனை தொடர்பாக பேசப்பட்டது. இக்  கலந்தாய்வுக் கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் மற்றும்  தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இதில் முதற் காட்ட போராட்டமாக ஒரு லட்சம் மக்கள் ஒன்றிணைந்து தியாகி லெப் கேணல் தீலிபன் அவர்களின் வீரசாவடைந்த நாளில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதே நாளில் தமிழர் ஒருங்கிணைப்பு  குழு  அனைத்து நாடுகளிலும் அடையாள உண்ணா நோன்பு போராட்டம்  ஏற்பாடு செய்கிறார்கள் அதற்கு இப் போராட்டம் வலுசேர்க்கும் என தெரிவித்துள்ளனர்.  

tamilar%20valvurimai-9.jpg

அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,
 

  •  தமிழீழம் மக்கள் இனக்கொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஈழ இனப்படுகொலைக்கு சான்றுரைக்கக் கூடியவர்கள் ஏராளமாய் இருந்து வரும் நிலையில் புலனாய்வுக் குழுவும் புலனாய்வு அறிவுரைக் குழுவும் தங்கு தடையின்றி இந்தியா வந்து செல்லவும், இந்தியாவில் தங்கிப் போதிய அளவு புலனாய்வுகள் செய்யவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும். இந்தப் புலனாய்வை இந்தியா ஏற்காது என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவிற்கு வர விசா தரமாட்டோம் என்று இந்திய அரசு அதிகாரிகளும் அறிவித்திருப்பது அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உரியது.

இனக்கொலைக்குத் துணை போன பழைய காங்கிரஸ் கூட்டணி அரசின் அதே தமிழினப் பகைக் கொள்கையை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் தொடர்ந்து மேலும் தீவிரமாகக் கடைபிடித்து வருவதையே இந்நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்திய அரசு இப்போக்கை மாற்றிக் கொண்டு ஈழத் தமிழர் இனக்கொலைக்கான பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க ஆவண செய்யுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழக அரசும் தன்னளவில் இந்த முயற்சிக்கு துணை நிற்கக் கோருகிறது.

tamilar%20valvurimai-8.jpg
  • இனக்கொலைக் குற்றவாளியும் ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானங்களைப் பற்றி கவலைப்படாமல், பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கொக்கரித்துக் கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவை ஐ.நா.பொதுச் செயலவையில் உரையாற்ற அழைத்திருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த அழைப்பை விலக்கிக் கொள்ளும்படி வலியுறுத்துகிறோம். ராஜபக்ச உரையாற்றும் ஐ.நா. மன்றத்தை முற்றுகையிட உலகத் தமிழர்கள் நடத்தி வரும் இயக்கத்துக்கு இக்கூட்டம் தமிழகத் தமிழர்களின் சார்பில் தன் தோழமையைத் தெரிவித்துக் கொள்கிறது.

tamilar%20valvurimai-7.jpg
  •  ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது அரசமைப்புத் திருத்தத்தையும் அதன் அடிப்படையிலான வடக்கு மாகாண சபையும் ஈழத் தமிழர் இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வாக முன்னிறுத்தும் இந்திய அரசின் நயவஞ்சக முயற்சியை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ இறைமையை மீட்பது அல்லாத எந்தத் தீர்வும் தமிழீழ மக்களின் நலவுரிமைக்குப் பயன்படாது என்று இக்கூட்டம் உறுதியாக நம்புகிறது.

இடைக்காலத்தில் தமிழீழ மக்கள் மீதான கட்டமைப்பில் இன அழிப்பைத் தடுத்த நிறுத்த ஐ.நா. ஒரு பாதுகாப்புப் பொறியை நிறுவன வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.

tamilar%20valvurimai-6.jpg
  •  தமிழீழ மக்களின் நீதிக் கோரிக்கை தொடர்பாகவும், பிற நலவாழ்வுக் கோரிக்கைகள் தொடர்பாகவும் ஐ.மு.கூட்டணி அரசின் வழித் தோன்றலாகவே இப்போதைய மோடி அரசும் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. பதவியேற்புக்கு இராஜபக்சவை அழைத்ததும், பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதும், மீனவர் சிக்கல், கச்சதீவு ஆகியவை தொடர்பாக பழைய அரசின் நிலைப்பாட்டையே தொடர்ந்து வருவதும் கண்டனத்துக்குரியது.tamilar%20valvurimai-5.jpg

  •  தமிழினப் பகைவன் சுப்பிரமணியன் சுவாமி இந்திய அரசின் கொள்கை வகுப்புக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் கொழும்புக்கு சென்று படைத்துறை பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். பன்னாட்டுப் புலனாய்வு குறித்தும் தமிழ் மீனவர் சிக்கல் தொடர்பாகவும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை முழுமையாக நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் நுழையவும் எவ்வித நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் உணர்வுள்ள தமிழர்கள் சார்பில் தடை விதிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.tamilar%20valvurimai-4.jpg

  •  ஈழத் தமிழர் இனக் கொலை தொடர்பாக நடைபெறும் பன்னாட்டுப் புலனாய்வுக்கு நாமும் இனக்கொலை சான்றுகளைத் திரட்டி அனுப்ப முடியும். அதற்கான மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து சிங்கள அரசின் குற்றங்களுக்கு எதிரான புலனாய்வுச் சான்றுகளைத் திரட்டி அனுப்பும் முயற்சிகளை மேற்கொள்ள தமிழகத்துக்குத் தமிழர்களுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.tamilar%20valvurimai-3.jpg

  • தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்களையும் அவர்களது படகுகளையும் சிறைப்பிடிப்பது தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசும் தமிழக அரசும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

வரலாற்று அடிப்படையில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டுக் கொடுக்க மறுப்பதோடு, அது இலங்கைக்கே சொந்தம் என்று இந்திய அரசு வாக்குமூலம் அளித்து வருவதும் மீனவர் சிக்கலை மேலும் கடுமையாக்கியுள்ளது. இந்திய அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கை கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

tamilar%20valvurimai-1.JPG
  •  கூடங்குளம், அணு உலை, காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுப்பு, காவிரி உரிமை மறுப்பு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்லாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் துன்பத்தில் உழல்வதும் ஆகிய தமிழினத்தின் கவலைக்குரிய சிக்கல்களைத் தீர்க்க தமிழினம் ஒன்றுபட்டு அணி திரளுமாறு தமிழக மக்களை இந்தக் கூட்டம் அறைகூவி அழைக்கிறது.

  • தமிழகத்தில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் சர்வதேசச் சட்டங்களுக்கும் உள்நாட்டுச் சட்டங்களுக்கும் புறம்பாகவும் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

குறிப்பாகச் சிறப்பு முகாம்கள் சிறை முகாம்களவே செயல்பட்டு வருகின்றன. சிறப்பு முகாம்களை உடனே இழுத்து மூடும்படியும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. ஏதிலியர் தொடர்பான 1951 ஜெனிவா ஒப்பந்தத்திலும் 1067 வகைமுறை உடன்படிக்கையிலும் இந்தியா கையொப்பமிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலியருக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வலியுறுத்துகிறோம்.
tamilar%20valvurimai-2.JPG

  • ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் உறூதியாக மேற்கொண்ட முயற்சியால் உச்சநீதிமன்றம் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான மரண தண்டனையைக் குறித்து ஆணையிட்டது.

இந்த ஆணையைத் திருத்தி மீண்டும் மூவரையும் மரண தண்டனைக்கு ஆளாக்க இந்திய அரசு செய்து வரும் முயற்சிகளை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியும் உச்சநீதிமன்றத்தில் தடைபட்டு நிற்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு அரசமைப்புச் சட்டத்தின் 161வது உறுப்பைப் பயன்படுத்தி எழுவர் விடுதலைக்கு உடனே வகை செய்ய வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.
 

  •  இனக்கொலை புரிந்ததோடு ஐ.நா. மனித உரிமை மன்றப் புலனாய்வுக்கும் அனுமதி மறுக்கும் இலங்கை அரசைப் பணிய வைக்க ஐநாவும் உலக நாடுகளும் உறுப்பு தடைகள் (Sanctions) விதிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அரசியல், பொருளியல், பண்பாட்டுத் துறைகளில் இலங்கையைப் புறக்கணிக்கும் இயக்கத்தை உலகத் தமிழர்களோடு சேர்ந்து தமிழக மக்களும் தீவிரமாக முன்னெடுக்க இக்கூட்டம் அறைகூவி அழைக்கிறது.
  •  
  • http://www.pathivu.com/news/33672/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.