Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் புலிவாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் புலிவாசம்

4891d779994cb213f421236ea72f496a.jpg

இலங்கையில் இடம்பெற்ற மூன்று நாள் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த ஜனதாக் கட்சி என்ற ஒரே ஒரு நபரைக் கொண்ட இந்தியாவிலுள்ள சாதனைக் கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி ,

"இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை''எனக்கூறி வாங்கிய கூலிக்கு வஞ்சகமில்லாமல் மாரடித்துப் போயுள்ளார். ""என்னைக் கேட்டுத்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார்'' என அவர் சவால் விட்ட குரல் காற்றில் கரையேற முன்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மத்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியா சென்று விட்டனர். இப்படி மூக்குடைபடுவதும் மொட்டைத் தலையில் குட்டு வாங்குவதும் அவருக்கு இது தான் முதல் தடவையல்ல. ஆனால் சுவாமி இவை பற்றியயல்லாம் கவலைப்படுவதில்லை. அவர் எப்போதுமே வாங்கிய கூலிக்கு ஏற்ற விதமாக உளறிக் கொட்டிக் கொண்டேயிருப்பார். இலங்கை ஆட்சியாளர்களும் பாதுகாப்பு செயலரும் அவர் தான் இந்தியாவின் குரல் என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி சிங்கள மக்களை ஏமாற்றிக் கொண்டேயிருப்பர். இந்த நாடகத்தின் அடுத்த காட்சியை அரங்கேற்றியுள்ளார் சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான ஆய்வாளர் என இலங்கை அரசால் வர்ணிக்கப்படும் ரோஹான் குணவர்த்தனா. அவர் தனது ஆய்வில் கண்டறிந்த "அரும்பெரும் விடயங்களை' கொழும்பில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் வெளியிட்டுள்ளார். அவரது முதலாவது ஆய்வு முடிவு டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் ஆகிய முன்னாள் ஆயுதப் போராளிகளை அரசில் இணைத்திருக்கக் கூடாது என்பதும் அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதுமாகும்.அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று தான். ஆனால் அவரின் இனவாதக் கண்களுக்கு அமைச்சர் வீரவன்ச மட்டும் கண்களில் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் இரண்டாவது கண்டுபிடிப்பு "" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோரும் புலிகள் எனவும் அவர்களை அரசியலில் பிரவேசிக்க விட்டது அரசாங்கத்தின் தவறு'' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர. சம்பந்தன் புலிகளால் குறிவைக்கப்பட்டோர் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ­வை விடத் தானே முன்னிலையில் இருந்ததாக ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்படவில்லை. அப்படியான ஒரு நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் மறு உருவமே என்ற கண்டுபிடிப்பு ஒரு அற்புதமான சர்வதேச ஆய்வாளரின் சாதனை தான். மூன்றாவதுகண்டுபிடிப்பு ""ஜாதிகயஹல உறுமய, பொதுபலசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இனவாதக் கட்சிகள். அவை தடை செய்யப்பட்ட வேண்டும்'' என்பதாகும். தமிழ் மக்களுக்கு உரிமையை வழங்கக் கூடாது என்பதில் விடாப்பிடியாக நிற்பதுடன் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளையும் வன்முறைகளையும் மேற்கொண்டு வரும் பொதுபல சேன போன்ற இனவாத கட்சிகளுக்கு நிகராக ரொஹான் குணவர்த்தனா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நோக்கியுள்ளார். பொதுபலசேன, ஜாதிக யஹல உறுமய என்பன ஏனைய இனங்களின் உரிமைகளை இல்லாமல் செய்து இலங்கையை ஒரு தனி பெளத்த சிங்கள நாடாக உருவாக்கவும் ஏனைய இனங்களை அடிமைப்படுத்தவும் முன்னின்று செயற்பட்டு வருபவை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பறிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. தமிழர்களும் இலங்கைப் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஏனைய சமூகங்களுடன் சமமாக வாழ வைப்பதை கொள்கையாகக் கொண்டது கூட்டமைப்பு. எனவே கூட்டமைப்பினர் எந்த ஒரு இனத்தின் உரிமைகளுக்கும் எதிராகக் செயற்படுவது கிடையாது. அப்படியான நிலையில் அடக்குபவர்களையும் அடக்கப்படுவோரையும் ஒரே தராசில் போட்டு இனவாத முத்திரை குத்தியுள்ளார் இந்தச் சர்வதேச ஆய்வாளர். இன அழிப்புக் கொள்கையும் இன அழிப்பிலிருந்து பாதுகாக்கும் கொள்கையும் ஒன்றாகப்படுமளவுக்கு அவரின் ஆய்வின் இலட்சணம் உள்ளது. அவரின் நான்காவது கண்டுபிடிப்பு ""வடபகுதி மக்கள் போர் முடிந்து ஐந்து வருடங்களாகியும் புலிச் சிந்தனையிலிந்து விடுபடவில்லை'' என்பதாகும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அதிகாரப் பகிர்வைக் கோருதல், நமது பாரம்பரிய குடியிருப்புக் காணிகள் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற பேரில் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராடுதல் ,புலிகள் மீளுருவாக்கம் பெறுகிறார்கள் எனக் கூறப்பட்டு அப்பாவி மக்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தல், தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்தல் போன்ற அநீதிகளுக்கு எதிரான நிலைகள் தான் புலிச்சிந்தனை என்றால் தமிழ் மக்கள் என்றுமே அதிலிருந்து விடுபடப்போவதில்லை. அநீதி களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது மெத்தப்படித்த சர்வதேச ஆய்வாளர்களுக்கு இனவாதமாகவும், புலிச்சிந்தனையாகவும் தெரிந்திருக்கிறது. ரொஹான் குணரட்னா, சுப்பிரமணிய சுவாமி போன்ற கூலிக்கு மாரடிக்கும் கும்பலை வைத்து உண்மைகளை மறைக்க முயல்கிறது இலங்கை அரசு . இலங்கையின் போர்க்குற்றங்களையும் ஜனநாயக விரோதப் போக்கையும் மறைத்துப் பிரசாரம் செய்ய லிபேட்டி இன்ரர்ந­னல் என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு இலட்சக்கணக்கான டொலர்களை இலங்கை அரசு வழங்கியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதை இலங்கை அரச தரப்பு மறுக்கவில்லை. ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதியுடன் நெருங்கிப் பழகக் கூடிய ஒருவர் உட்பட பல முகவர்களை இலங்கை தொடர்பான பிரசாரங்களுக்கு குறித்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதே வரிசையில் தான் சுப்பிரமணிய சுவாமியும், ரொஹான் குணரத்தினமும் அரசால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் போலவே தென்படுகிறது. ஆனால் இவர்கள் சொல்லும் நம்ப முடியாத பொய்க் கருத்துக்களால் சிங்கள மக்களை மட்டுமே ஏமாற்ற முடியுமேயயாழிய சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் அபகீர்த்தியே ஏற்படும். ஆனால் இலங்கை ஆட்சியாளர்களையும், கூலிக்கு மாரடிப்பவர்கள் பற்றியும் சர்வதேசம் புரிந்து வைத்துள்ளமையால் இவர்களின் வடக்கின் புலிவாசம் போன்ற ஏமாற்றுகள் செல்லுபடியாகப் போவதில்லை.

http://onlineuthayan.com/News_More.php?view

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.