Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகளை ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்! - என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மனித உரிமைகளை ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்! - என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும. 
[Monday 2014-09-08 07:00]
dullas-alahapperuma-150-news.jpg

சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மனித உரிமையானது சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக மாறியிருப்பதைத் தடுப்பதற்காக புதிய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கும் ஒரு அமைப்பாக மாறிவிட்டது. இவ்வாறானதொரு அமைப்பில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் அரசாங்கம் இணங்கமாட்டாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன. அந்த நாடுகளுக்கு எமது பிழையற்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளோம்.

நவநீதம்பிள்ளையோ அல்லது புதிய ஆணையாளரோ இலங்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பின்னர் அதற்கான பதிலை நாம் வழங்குவோம். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றை கொண்டுவரும் அளவுக்கு எந்தவிதமான பிழையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு சரியானதொரு வரை விலக்கணத்தை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். மேலைத்தேய நாடுகளுக்கு எதிராக செயற்படுகின்ற மத அமைப்புகள் சிலவற்றை மாத்திரமே பயங்கரவாத அமைப்பு என்றும் ஏனையவற்றை விடுதலை இயக்கம் என்றும் சித்தரிக்கின்றனர்.

பயங்கரவாதம் என்பதற்கு சரியானதொரு வரைவிலக்கணம் உருவாக்கப்பட வேண்டும். இதனையே நாம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தொடர்ந்தும் கோரி வருகின்றோம் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=116386&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.