Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் முறுகல்...

Featured Replies

DSC_0079(4).JPG
-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று (09) மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு சத்துருக்கொன்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் கடந்த 1990.9.9 அன்று கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் கொக்குவிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்  அவ்விடத்துக்குச் சென்றபோது பொலிஸார் அதனை தடுக்க முயன்றனர்.   இதன்போது பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பு  மாவட்ட நீதிமன்றினால் பொதுமக்கள் கூடும் இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும்போது மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாது தடுக்கவே இத்தடை விதிக்கட்டுள்ளது என பொலிஸார் நீதிமன்ற உத்தரவை வாசித்துக் காட்டினர்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலயத்தில் நாங்கள் சுடர் ஏற்றுவோம் உங்களால் தடுக்கமுடியாது எனத் தெரிவித்து சத்துருக்கொண்டான் வீர மகா காளியம்மன் ஆலயத்தில் விளக்கேற்றி   மௌன அஞ்சலி தெரிவித்தனர்.

இவ்வஞ்சலி நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் மற்றும் குறிப்பிட்ட உறவினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
DSC_0085(5).JPG
DSC_0091(4).JPG
DSC_0096(4).JPG
DSC_0097(6).JPG
DSC_0098(7).JPG
DSC_0110(3).JPG
DSC_0112(7).JPG

 

http://tamil.dailymirror.lk/--main/126194-2014-09-09-14-13-53.html

  • கருத்துக்கள உறவுகள்

சத்துருகொண்டான் படுகொலை - அஞ்சலிக்குத் தடை 

 

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில்1990ம் ஆண்டு மட்டக்களப்பு நகருக்கு அண்மித்த நான்கு கிராமங்களில் படுகொலை செய்யப்பட்ட 184 தமிழர்களை 24வது ஆண்டு நினைவு கூறும் வகையில் உள்ளுர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையொன்றின் பேரிலே மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

1990ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் மீண்டும் போர் ஆரம்பமான கால கட்டத்தில் சத்துருகொண்டான் , கொக்குவில் , பிள்ளையாரடி மற்றும் பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 184 தமிழர்கள் இராணுவ சீருடை அணிந்தவர்களினால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போனார்கள்.

"படுகொலைகள்"
140909170945_sathrukondan_memorial_pilla

கொல்லப்பட்டவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவுச் சின்னம்

 

1990ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி மாலை வேளை அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் , குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் உட்பட இந்த 184 பேரும் இராணுவத்தினரால் அவ்வேளை சத்துருகொண்டானில் அமைந்திருந்த இராணுவ முகாமொன்றிற்கே அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாக அவ்வேளை உறவினர்களால் பல்வேறு தரப்புகளிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இராணுவம் இதனை மறுத்துள்ளது.

24 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய் படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும் தமது உறவினர்களை குறித்த கிராம மக்கள் அவர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இதே நாளில் அதாவது செப்டம்பர் 9ம் திகதி சுடரேற்றி நினைவு கொள்வது வழமையாகும்.

இந்த ஆண்டு வழமை போல் நினைவு தினம் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அவ்வேளை நேற்றிரவு தொடக்கமே அதனை தடை செய்யும் வகையில் நினைவு தூபிக்கு அருகாமையில் வழமைக்கு மாறாக போலிஸார் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நீதிமன்ற உத்தரவு
140909162734_batticaloa_memorial_service

ஒரு ஆலயத்தில் நினைவுத் தீபங்களை ஏற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா

நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ. யோகேஸ்வரன் மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோர் நினைவுத்தூபிக்கு சென்று நினைவு தீபம் ஏற்ற தயாரான போது போலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.

இதன் போது போலிஸாருக்கும் அவர்களுக்குமிடையில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் போலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு காட்டப்பட்டதையடுத்து அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அங்கிருந்து திரும்பி அருகிலுள்ள ஆலயமொன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நினைவு சுடர்களை ஏற்றி விட்டு திரும்பிச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

"ஏன் இந்த வருடம் தடை?"

கடந்த 23 வரடங்களாக தமது பிரதேச மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த இந்த நினைவு கூறல்க்கு இந்த வருடம் போலிஸாரால் விதிக்கப்பட்ட இந்த தடையானது தங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்துள்ளதாக 56 வயதான கந்தையா சிவக்கொழுந்து கூறுகின்றார்.

 

கடந்த காலங்களில் நடைபெற்ற நினைவு கூறல்களில் போலிஸ் மற்றும் இராணுவம் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய சம்பவங்களும் உண்டு என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

 

இதேவேளை மரணமடைந்த பொது மக்களை நினைவு கூறுல் என்ற போர்வையில் அந்த பகுதியில் மரணமடைந்த விடுதலைப்புலிகளையும் நினைவு கூற இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்தே நீதிமன்றத்தில் இந்த தடை உத்தரவு பெறப்பட்டதாக இது தொடர்பாக போலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகன குறிப்பிடுகின்றார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/09/140909_lankamemorial.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.