Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் 2014 செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

ஹோபர்ட் அணி வெற்றி
செப்டம்பர் 21, 2014.

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஹோபர்ட் அணி, கோப்ராஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.           

ஐதராபாத்தில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’, ‘பி’ பிரிவு போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கேப் கோப்ராஸ், ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதின.            

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த கோப்ராஸ் அணிக்கு ஆம்லா(8), ரமேலா(21) ஏமாற்றினர். அதிரடியாக ஆடிய ரிச்சர்ட்டு லீவி, ஹில்பெனாஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். இவர் 42 ரன்களுக்கு வெளியேறினார். விலாஸ்(25), கேப்டன் ஜஸ்டின் ஆன்டாங்(10) ஓரளவு கைகொடுத்தனர். கடைசி கட்டத்தில் பிலாண்டர்(32*), ராபின் பீட்டர்சன்(25*) வெளுத்து வாங்க, கோப்ராஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது.          

 

பின் கடின இலக்கை விரட்டிய ஹோபர்ட் அணிக்கு டங்க்(54) அதிரடி துவக்கம் தந்தார். கேப்டன் டிம் பெய்ன்(7), சோயப் மாலிக்(8) நிலைக்கவில்லை. வாணவேடிக்கை காட்டிய பிலிஜார்டு வெற்றியை உறுதி செய்தார். ஹோபார்ட் அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.      

ஆட்டநாயகன் விருதை வென்ற பிலிஜார்டு(48 பந்தில் 78 ரன், 4 பவுண்டரி, 5 சிக்சர்) மற்றும் வெல்ஸ்(17) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/09/1411318080/HobartHurricanesCapeCobrasChampionsLeagueT20CricketAidenBlizzard.html

 

  • Replies 66
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காம்பிர் அணிக்கு கலக்கல் வெற்றி: லயன்ஸ் அணி ஏமாற்றம்
செப்டம்பர் 21, 2014.

 

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கேப்டன் காம்பிர் அரைசதம் விளாச, கோல்கட்டா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லயன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.     

ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ் ‘டுவென்டி–20’, ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி, ‘பவுலிங்’ தேர்வு செய்தது.     

 

நரைன் ஜாலம்: லயன்ஸ் அணிக்கு அகமது ஷேசாத் அசத்தல் துவக்கம் தந்தார். ஜாம்ஷெட்(10), கேப்டன் முகமது ஹபீஸ்(9) நிலைக்கவில்லை. அரைசதம் கடந்த ஷேசாத்(59), பியுஸ் சாவ்லா வலையில் சிக்கினார். பின் ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன் ஜாலத்தில் பாகிஸ்தான் அணி சிதறியது. இவரது வலையில் முதலில் நசிம்(0) வெளியேறினார். தனது அடுத்த ஓவரில் உமர் சித்திக்(2), ஆசிப் ராசாவை(0) அடுத்தடுத்து அவுட்டாக்கினார்.      

கடைசி கட்டத்தில் வகாப் ரியாஸ், உமர் அக்மல்(40) அதிவிரைவாக ரன் சேர்த்தனர். லயன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ரியாஸ்(14) அவுட்டாகாமல் இருந்தார்.     

 

காம்பிர் அரைசதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு காம்பிர், உத்தப்பா சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். கேப்டனுக்குரிய முறையில் ஆடிய காம்பிர் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில் உத்தப்பா(46) அவுட்டானார். சிறிது நேரத்தில் முஸ்தபா பந்தில் காம்பிர்(60) போல்டானார். அடுத்து, பிஸ்லா(6), யூசுப் பதான்(11), டென் டஸ்காட்டே(12), ரசல்(1) விரைவில் வெளியேறிய போதும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆசிப் ராசா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்ய குமார் யாதவ் வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து, தொடர்ந்து தனது 11வது வெற்றியை பதிவு செய்தது. யாதவ்(14) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை கோல்கட்டா அணியின் சுனில் நரைன் வென்றார்.

 

 

http://sports.dinamalar.com/2014/09/1411322930/KolkataLahoreChampionsLeagueT20CricketGambhir.html

  • தொடங்கியவர்

சிஎஸ்கே-டால்பின் இன்று பலப்பரிட்சை: பிரியாணி ஆக்ரோஷத்தை போட்டியில் காண்பிப்பாரா டோணி? 

 

 

 பெங்களூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் இன்று, சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டால்பின் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி விளிம்பில் இருந்து அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. சிஎஸ்கே-டால்பின் இன்று பலப்பரிட்சை: பிரியாணி ஆக்ரோஷத்தை போட்டியில் காண்பிப்பாரா டோணி? இந்தப் போட்டியில் தோற்றால் சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். மோர்னே வான் விக் தலைமையிலான டால்பின்ஸ் அணியும் தொடக்க ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்சுடன் தோற்று இருந்தது.

 

அதிலும் கடைசி இரு பந்தில் 2 சிக்சரை விட்டுக் கொடுத்ததால் அந்த அணிக்கு வெற்றி நழுவிப் போனது. டால்பின்ஸ் அணிக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் இப்போட்டி இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில், பிரியாணி சாப்பிட அனுமதிக்காததை கண்டித்து சண்டை போட்ட டோணி, அதே ஆக்ரோஷத்தை டால்பினுக்கு எதிரான போட்டியிலும் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

 

Read more at: http://tamil.oneindia.in/news/sports/clt20-chennai-super-kings-today-meet-against-dolphins-211419.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ரெய்னா விஸ்வரூபம்: சென்னை அபார வெற்றி
செப்டம்பர் 22, 2014.

 

பெங்களூரு: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரெய்னா 90 ரன்கள் விளாச, சென்னை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டால்பின்ஸ் அணியின் போராட்டம் வீணானது.

பெங்களூருவில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ்  ‘டுவென்டி–20’ ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் சென்னை, தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டால்பின்ஸ் அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.     

சிக்சர் மழை: சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித்(7) ஏமாற்றினார். பின் பிரண்டன் மெக்கலம், ரெய்னா சேர்ந்து துாள் கிளப்பினர். டால்பின்ஸ் பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், ரன் மழை பொழிந்தனர். மெக்கலம் 49 ரன்களுக்கு(29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார்.      

 

நழுவிய சதம்: ஜோன்டா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா, அரைசதம் கடந்தார். தனது அதிரடியை தொடர்ந்த இவர், ஆசை தீர சிக்சர்களாக அடித்தார். 43 பந்தில் 90 ரன்கள்(4 பவுண்டரி,8 சிக்சர்) விளாசிய இவர், பிரைலிங் பந்தில் அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதே ஓவரில், தான் சந்தித்த முதல் பந்திலேயே கேப்டன் தோனி(0) போல்டாகி ஏமாற்றினார். டுபிளசி(30) ஓரளவுக்கு கைகொடுத்தார்.     

ஜடேஜா அதிரடி: கடைசி கட்டத்தில் மிரட்டிய ரவிந்திர ஜடேஜா, மகாராஜ் ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி சேர்த்து 24 ரன்கள் அள்ளினார். டுவைன் பிராவோ(11) நிலைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(40), அஷ்வின்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மிரட்டல் துவக்கம்: கடின இலக்கை துரத்திய டால்பின்ஸ் அணி, துவக்கத்தில் சென்னை அணிக்கு கடும் சவால் கொடுத்தது. நெஹ்ரா, அஷ்வின் வீசிய பந்துகள் சிக்சர், பவுண்டரிக்கு பறந்தன. வான் விக் 7 பந்தில் 17 ரன்கள் விளாசினார். 2.3 ஓவரில் 50 ரன்களை எட்ட, பதட்டம் ஏற்பட்டது. டெல்போர்ட் 9 பந்தில் 34 ரன்களுக்கு வெளியேற, சென்னைக்கு நிம்மதி பிறந்தது. மகாராஜ்(8), கோடி(37), ஜார்ஸ்வெல்டு(30), அன்டில்(22) ஆறுதல் தந்தனர். டேரின்(0), ஜோன்டா(9) ஏமாற்ற, டால்பின்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இத்தொடரில் சென்னைக்கு முதல் வெற்றி தேடித் தந்த ரெய்னா, ஆட்டநாயகன் விருது வென்றார்.

முதலிடம்     

நேற்று ‘மெகா’ ஸ்கோரை எட்டிய சென்னை (242/6), சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக ரன் எடுத்த அணிகள் வரிசையில் முதலிடத்தை ஒடாகோ அணியுடன்(242/4, எதிர்– பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், 2013, ஜெய்ப்பூர்) பகிர்ந்து கொண்டது.

 

 

http://sports.dinamalar.com/2014/09/1411405128/ChennaiDolphinsChampionsLeagueT20CricketSureshRaina.html

  • தொடங்கியவர்

 

பிரண்டன் மெக்கல்லம், நேற்று டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு சிக்ஸரைத் தடுத்துப் பிடித்த விதம்

 

  • தொடங்கியவர்

டி20 கிரிக்கெட்டில் அணிகளின் அதிகபட்ச ஸ்கோர்கள்: சில சுவையான தகவல்கள்
 

 

பெங்களூருவில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டால்பின்ஸ் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்களில் 242 ரன்கள் குவித்தது. 11வது முறையாக டி20 கிரிக்கெட்டில் ஸ்கோர் 240 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு இலங்கையின் நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி ஸ்ரீலங்கா ஏர் எஸ்.சி அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட்டில் 245 ரன்களைக் குவித்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணி 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கென்யாவுக்கு எதிராக 260 ரன்களைக் குவித்தது. இதுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டி20-யில் ஒரு அணி எடுக்கும் அதிகபட்ச ஸ்கோராகும்.

 

சமீபமாக 29, ஆகஸ்ட் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு எதிராக சவுதாம்ப்டனில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது.

ஒட்டுமொத்தமாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே டி20 கிரிக்கெட்டில் 20 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து சாதனையைத் தன்வசம் வைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் புனெ வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சாலஞ்சர்ஸ் அணி இந்தச் சாதனையை நிகழ்த்தியது. கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 175 நாட் அவுட் என்று சாதனை படைத்தார்.

 

2011ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான கிளஸ்டர் ஷயர், மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக 254/3 என்ற ஸ்கோரை எட்டியது.

 

2006ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டின் ஆரம்பக் காலக் கட்டங்களில் இங்கிலாந்தின் சாமர்செட் அணி 250/3 என்ற ஸ்கோரை எட்டியது.

 

2010ஆம் ஆண்டு கராச்சி டால்பின்ஸ் அணியினர் லாகூர் ஈகிள்ஸ் அணிக்கு எதிராக 243/2 என்று அதிகபட்ச ஸ்கோரை எட்டியது பாகிஸ்தான் உள்நாட்டு டி20 சாதனையாகும்.

 

2008ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் எசெக்ஸ் அணி சசெக்ஸ் அணிக்கு எதிராக 242 ரன்கள் குவித்தது.

 

2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட்டில் ஒடாகோ அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் 242 ரன்கள் எடுத்தது.

 

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரெய்னா அதிரடி மூலம் 242 ரன்கள் விளாசியது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6438501.ece

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் லீக்: ரன் மழையில் சென்னைக்கு முதல் வெற்றி
 

 

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் குரூப் ஏ ஆட்டத்தில் டால்பின்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. ஆட்ட்நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

டெல்போர்டின் அதிரடி துவக்கம்

243 என்ற இமாலய இலக்கை விரட்ட வந்த டால்பின்ஸ் அணிக்கு, முதல் ஓவர் வெகுச் சிறப்பாக அமைந்தது. துவக்க வீரரான டெல்போர்ட், ஆசிஷ் நேரா பந்துவீச்சை பதம் பார்த்தார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 20 ரன்கள் குவிந்தன. இதில் வைடில் வந்த 3 ரன்களும் அடக்கம்.

அடுத்த ஓவரை வீச வந்த அஸ்வினுக்கும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. மற்றொரு துவக்க வீரர் வான் வைக்கும், 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் அதிரடியைத் தொடர்ந்தார். ஆனால் 4-வது பந்தில் லெக் பிஃபோர் முறையில் அவர் ஆட்டமிழந்தார். முதல் ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கியதால், மூன்றாவது ஓவரை வீச மோஹித் சர்மா ஆயத்தமானார். ஆனால் அந்த ஓவரின் முதல் பந்தையே டெல்போர்ட் சிக்ஸருக்கு விளாசினார். அடுத்தடுத்து பவுண்டரி, இரண்டு ரன்கள், பவுண்டரி என ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர, தனியாளாக தனது அணியை டெல்போர்ட் கரை சேர்த்துவிடுவார் என்ற நிலை உருவானது.

 

அந்த ஓவரின் கடைசி பந்தை, சாமர்த்தியமாக நிதானமாக வீசினார் மோஹித் சர்மா. டெல்போர்ட் அதை தவறாக கணித்து பவுல்டானார். 9 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த டெல்போர்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தாலும், அவர்களால் களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை. 10 ஓவர்களில் டால்பின்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்திருந்தது.

 

கட்டுப்படுத்திய பிராவோவின் பந்துவீச்சு

11-வது ஓவரை வீச வந்த பிராவோ, தனது இரண்டாவது பந்திலேயே நிலைத்து ஆட முயற்சித்த செட்டியை 38 ரன்களுக்கு வெளியேற்றினார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே வர, டால்பின்ஸ் அணி பின்னடைவைச் சந்தித்தது. மீண்டும் 14-வது ஓவரை வீச வந்த பிராவோ, அந்த ஓவரின், மீண்டும் இரண்டாவது பந்தில் ஜார்ஸ்வெல்டை பெவிலியனுக்கு அனுப்ப, கடைசி பந்தில் ஸ்மித் ரன் அவுட் ஆனார். அந்த ஓவரில் 1 ரன் வர, சென்னையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

சீரான இடைவேளையில் டால்பின்ஸ் மட்டையாளர்கள் அனைவரும் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் கடைசி பந்தில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது. சிறப்பாக பந்துவீசிஅ பிராவோ 4 ஓவர்கள் வீசி, 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோஹித் சர்மா 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

 

முன்னதாக, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைக் குவித்தது. வெண்ணைத் தனமான பிட்சில் அல்வா ரகப் பந்து வீச்சை சென்னை அணியினர் பிரித்து மேய்ந்ததில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. டால்பின்ஸ் அணியின் பவுலர் ஒருவர் பெயர் கேஷவ் ஆத்மாநந்த் மகராஜ். உண்மையில் மகாராஜாதான் அவர். ரன்களை அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

 

அதுவும் கடைசியில் ‘சர்’ ஜடேஜா அவரது லாலிபாப் ரக இடது கை நேர் நேர் தேமா பந்துகளை 3 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்து அந்த ஒரு ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. 'வள்ளல்' மகராஜ் தனது 4 ஓவர்களில் 54 ரன்களை வழங்கி தன் பெயருக்கேற்ப நடந்து கொண்டார்.

இவர் தனது 24 பந்துகளில் 3 பந்தில் மட்டுமே ரன் கொடுக்கவில்லை. மற்றபடி 6 சிக்சர்களை வாரி வழங்கினார். சுரேஷ் ரெய்னா இந்த வெண்ணைப் பிட்சின் அல்வாப் பந்து வீச்சை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு மைதானம் முழுதும் சிக்சர்களைப் பறக்கவிட்டார். 27 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதம் கடந்த ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 90 ரன்கள் எடுத்து கடைசியில் போனால் போகிறது என்று அவுட் ஆகிச் சென்றார்.

 

தொடக்கத்தில் அதிரடி வீரர் டிவைன் ஸ்மித் நம் மகராஜை ஒரு சிக்சர் அடித்தார். ஆனால் அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆனால் அடுத்த 7 ஓவர்கள் மெக்கல்லமும் ரெய்னாவும் காட்டடி தர்பாரை நடத்திக் காட்டினர். சுமார் 7 ஓவர்களில் 91 ரன்கள் விளாசப்பட்டது. மெக்கல்லம் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆகும் போது சென்னை 8.2 ஓவரில் 99 ரன்களை விளாசி 200 ரன்களைக் கடக்க அடித்தளம் அமைத்தது.

டுபிளேசி களமிறங்க ரெய்னா தனது சிக்சர் மழையைத் தொடங்க, மோசமான பந்து வீச்சும், தரமற்ற ஃபீல்டிங்கும் சேர்ந்து கொள்ள அடுத்த 6 ஓவர்களில் 65 ரன்கள் வந்தது. அதாவது 14.2 ஓவர்களில் 164/2 என்று இருந்த போது ரெய்னா 90 ரன்களில் அவுட் ஆனார். தோனி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அருமையான யார்க்கரில் பவுல்டு ஆனார். ஃபிரைலிங்க் அந்த யார்க்கரை வீசினார். இல்லையெனில் தோனியும் புகுந்திருந்தால் 250 ரன்களுக்கும் மேல் கூட சென்றிருக்கும்.

 

ஜடேஜா களமிறங்கி நம் மகராஜின் ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்து 5 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். கடைசியில் 14 பந்துகளில் அவர் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 40 நாட் அவுட். டிவைன் பிராவோவுக்கு சில அருமையான யார்க்கர்கள் விழ அவரால் 11 ரன்களையே எடுக்க முடிந்தது. அஸ்வின் 4 நாட் அவுட்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6435925.ece


ஹோபர்ட் அணி வெற்றி
செப்டம்பர் 23, 2014.

 

ராய்ப்பூர்: நார்த்தர்ன் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அசத்திய ஹோபர்ட் அணி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராய்ப்பூரில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் ‘டுவென்டி–20’ தொடரின் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், நியூசிலாந்தின் நார்த்தர்ன் நைட்ஸ், ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

முதலில் ‘பேட்’ செய்த ஹோபர்ட் அணிக்கு டங்க்(12) ஏமாற்றினார். கேப்டன் பெய்ன்(43) ஓரவுளக்கு கைகொடுத்தார். அதிரடியாக ஆடிய பிலிஜார்டு(62) அரைசதம் கடந்தார். ஹோபர்ட் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. சோயப் மாலிக்(45), பிர்ட்(7) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின் சவாலான இலக்கை விரட்டிய நார்த்தர்ன் அணிக்கு டெவ்சிச்(2) நிலைக்கவில்லை. ஹில்பெனாஸ் ‘வேகத்தில்’ வில்லியம்சன்(3), பிலின்(0), வாட்லிங்(9) வெளியேற, 6.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 19 ரன்கள் எடுத்து தத்தளித்தது.  ஸ்டைரிஸ்(37), சவுத்தி(21) ஆறுதல் தந்தனர். நார்த்தர்ன் அணி 16.4 ஓவரில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/09/1411494604/NorthernKnightsHobartHurricanest20championsleaguewon.html

  • தொடங்கியவர்

சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 43 ரன்களை விளாச அரையிறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா
 

 

ஐதராபாத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சுனில் நரைன் மற்றும் சைனமன் (இடது கை லெக்ஸ்பின்) பவுலர் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சில் திணறி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இழந்த 7 விக்கெட்டுகளில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி கேப்டன் ஆடம் வோஜஸ் மட்டுமே நிதானத்தைக் கடைபிடித்து இரண்டு புதிர் ஸ்பின்னர்களிடத்திலும் சிங்கிள் எடுப்பதன் அவசியத்தை அறிந்திருந்தார். இதனால் அவர் 52 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

வோஜஸ், சிம்மன்ஸ் இணைந்து 9 ஓவர்களில் 68 என்ற நல்லத் தொடக்கத்தை கொடுத்தனர். 30 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்த சிம்மன்ஸ் விக்கெட்டை சைனமன் பவுலர் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். உத்தப்பா ஸ்டம்ப்டு செய்ய அவர் ஆட்டமிழந்தார்.

 

அதிரடி மன்னன் மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் எடுத்த நிலையில் உத்தப்பா ஸ்டம்ப்டு செய்ய குல்தீப் யாதவிடம் ஆட்டமிழந்தார்.

சுனில் நரைனின் கேரம் பந்துகளும் குல்தீப் யாதவ்வின் இடது கை கூக்ளியும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியினரை திணறடித்தது. வேறு வழியில்லாமல் அவர்கள் அர்த்தமற்று மட்டையை சுற்றத் தொடங்கி வீழ்ந்தனர்.

இவர்கள் இருவரால் 120/2 என்று இருந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நரைன் 9வது முறையாக இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் இது ஒரு சாதனை. கடைசியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 151/7 என்று முடிந்தது. தொடக்கத்தில் யூசுப் பத்தான் டைட்டாக வீசி 4 ஓவர்களில் 22 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

 

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் உத்தப்பா 23 ரன்கள் எடுக்க மற்றோர் தொடங்கி பிறகு வெளியேற 14.1 ஓவரில் 87/5 என்று ஆனது.

15வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 2 சிக்சர்களை அடித்தார் பிறகு மேலும் 2 சிக்சர்களை விளாசி 19 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வெற்றி பெறச் செய்தார்.

கம்பீர் (2) காலிஸ் (6) சொதப்ப பாண்டே 24 ரன்களையும், டென் டஸ்சாதே 15 ரன்களையும் எடுக்க யூசுப் பத்தான் 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்ததும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆட்ட நாயகனாக இடது கை சைனமன் பவுலர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-43-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article6445488.ece

 

  • தொடங்கியவர்

சென்னை அணிக்கு சிக்கல்: மழையால் போட்டி ரத்து
செப்டம்பர் 25, 2014.

 

பெங்களூரு: சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று பெங்களூருவில் நடக்க இருந்த சென்னை, லாகூர் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தானது.  இதனால் பெர்த் அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் சென்னை அணி வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடக்க இருந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஐ.பி.எல்., அணியான சென்னை, பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணிகள் மோத இருந்தன. ஆனால் கனமழை காரணமாக ‘டாஸ்’ கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.

 

சிக்கல் எப்படி: ‘ஏ’ பிரிவில் இதுவரை முடிந்த லீக் போட்டிகளின் முடிவில், 12 புள்ளிகளுடன் கோல்கட்டா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு சென்னை (6 புள்ளி), பெர்த் (4), லாகூர் (2) அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. சென்னை அணி, அரையிறுதிக்கு முன்னேற பெர்த் அணிக்கு எதிராக பெங்களூருவில் நாளை நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். பெர்த் அணி அரையிறுதிக்கு தகுதி பெற, மீதமுள்ள 2 போட்டிகளில் சென்னை (செப். 27), லாகூர் (செப். 30) அணிகளை வீழ்த்த வேண்டும். லாகூர் அணி, அரையிறுதி வாய்ப்பை பெற அடுத்து நடக்கவுள்ள போட்டிகளில் டால்பின்ஸ் (செப்., 27), பெர்த் (செப்., 30) அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

 

http://sports.dinamalar.com/2014/09/1411662760/ChennaiLahoreChampionsLeagueT20CricketRain.html

நானும் காவல் இருந்ததுதான் மிச்சம் .

தொடர்ந்து இணையுங்கள் நவீனன் .

  • தொடங்கியவர்

நானும் காவல் இருந்ததுதான் மிச்சம் .

தொடர்ந்து இணையுங்கள் நவீனன் .

 

ம்ம் நானும் தான், மழை வந்து குழப்பி விட்டுது.

நாளைக்கு ஜெயலலிதாவின் வழக்கு தீர்ப்பும் பெங்களூரில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் இன் போட்டியும் பெங்களூரில் :o

  • தொடங்கியவர்

சூப்பர் ஓவரில் கோப்ராஸ் வெற்றி: பார்படாஸ் அணி பரிதாபம்
செப்டம்பர் 26, 2014.மொகாலி:

 

பார்படாஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில், கோப்ராஸ் அணி ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது.

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கேப் கோப்ராஸ், வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோப்ராஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.    

 

கார்டர் சதம்: பார்படாஸ் அணிக்கு டவ்ரிச் (0), ரீபெர் (1) அதிர்ச்சி கொடுத்தனர். முனவீரா 42 ரன்கள் எடுத்தார். பிராங்க்ளின் (3), மெண்டிஸ் (10) ஏமாற்றிய போதும், ரன் மழை பொழிந்த ஜோனாதன் கார்டர், 64 வது பந்தில் சதம் அடித்தார்.      

பார்படாஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. கார்டர் (111 ரன்கள், 5 சிக்சர், 10 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.      

‘திரில்’ வெற்றி: கடின இலக்கைத் துரத்திய கோப்ராஸ் அணிக்கு லீவி (39), ஆம்லா (59) நல்ல துவக்கம் கொடுத்தனர். ரமெலா (14), விலாஸ் (14), பீட்டர்சன் (9) என, வரிசையாக மெண்டிஸ் சுழலில் சிக்கினர். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், 12 ரன்கள் மட்டும் எடுத்த பார்படாஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. இப்படி இரு அணிகளும் ஒரே ஸ்கோரை பெற, போட்டியின் முடிவு ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது.

 

கோப்ராஸ் வெற்றி: பின், ‘சூப்பர் ஓவரில்’ முதலில் ‘பேட்டிங்’ செய்த கோப்ராஸ் அணி 11 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பார்படாஸ் அணி முதல் 3 பந்தில், ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் எடுத்தது. அடுத்த பந்தில் முனவீரா (1) அவுட்டானார்.      

ஐந்தாவது பந்தில் 2 ரன் எடுக்க, வெற்றிக்கு கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டன. இதில், கார்டர் 2 ரன்கள் தான் எடுத்தார். முடிவில், பார்படாஸ் அணி 10 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/09/1411751080/ChampionsLeagueT20CricketCapeCoprasBarbados.html

  • தொடங்கியவர்

கட்டாய வெற்றியை நோக்கி சென்னை: பெர்த் அணியுடன் இன்று மோதல்
செப்டம்பர் 26, 2014.

 

பெங்களூரு: சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், சென்னை, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. வருண பகவான் வழிவிடும் பட்சத்தில், சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.           

இந்தியாவில், 6வது சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதில் கோல்கட்டா, பஞ்சாப், டால்பின்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. பெங்களூருவில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஐ.பி.எல்., அணியான சென்னை, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை சந்திக்கிறது.  

         

கட்டாய வெற்றி: கோல்கட்டாவுக்கு எதிராக தோல்வி அடைந்த சென்னை அணி, டால்பின்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணியை வீழ்த்தி எழுச்சி கண்டது. சென்னை, லாகூர் அணிகள் மோதிய போட்டி மழையால் கைவிடப்பட, இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து 6 புள்ளிகளுடன் உள்ள சென்னை அணி, அரையிறுதிக்கு முன்னேற இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இப்போட்டியில் தோல்வி அடைந்தால், சென்னை அணி அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில், 8 புள்ளிகளுடன் சென்னை அணி, மற்ற போட்டிகளில் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.        

   

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்க வேண்டும். டால்பின்ஸ் அணிக்கு எதிராக 43 பந்தில் 90 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா, மீண்டும் அதிரடி காட்டலாம். ‘மிடில்–ஆர்டரில்’ டுபிளசி, கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா அசத்தும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். வேகப்பந்துவீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா, மோகித் சர்மா, டுவைன் பிராவோ நம்பிக்கை அளிக்கின்றனர். ‘சுழலில்’ அஷ்வின், ஜடேஜா கூட்டணி கைகொடுத்தால் நல்லது.        

   

டால்பின்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணியை வீழ்த்திய பெர்த் அணி, கோல்கட்டாவிடம் வீழ்ந்தது. பெர்த் அணி அரையிறுதிக்கு முன்னேற, மீதமுள்ள இரண்டு போட்டியில் சென்னை, லாகூர் (செப். 30) அணிகளை வீழ்த்த வேண்டும். பேட்டிங்கில் கேப்டன் ஆடம் வோக்ஸ், மிட்சல் மார்ஷ் கைகொடுக்க வேண்டும். ‘சுழலில்’ பிராட் ஹாக் அசத்தலாம். ‘வேகத்தில்’ நாதன் கூல்டர்–நைல் மிரட்டலாம்.           

80 சதவீத வாய்ப்பு

சென்னை, பெர்த் அணிகள் மோதும் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. பெங்களூருவில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 

          

டால்பின்ஸ்–லாகூர் பலப்பரீட்சை           

பெங்களூருவில் இன்று நடக்கும் மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், டால்பின்ஸ் (தென் ஆப்ரிக்கா), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் மோதுகின்றன. இரண்டு லீக் போட்டியிலும் தோல்வி கண்ட டால்பின்ஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. கோல்கட்டாவிடம் வீழ்ந்த லாகூர் அணிக்கு, சென்னைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் 2 புள்ளிகள் கிடைத்தது. மீதமுள்ள இரண்டு போட்டியிலும் (எதிர்–டால்பின்ஸ், பெர்த்) சிறந்த வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில், லாகூர் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.

 

http://sports.dinamalar.com/2014/09/1411751274/ChampionsLeagueT20CricketChennaiPerth.html

  • தொடங்கியவர்

பலே பஞ்சாப் அணி: அரையிறுதிக்கு முன்னேறியது

மொகாலி: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு பஞ்சாப் அணி(12 புள்ளி) சுலபமாக முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் நார்த்தர்ன் நைட்ஸ் அணியை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மொகாலியில் நேற்று இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், பஞ்சாப், நியூசிலாந்தின் நார்த்தர்ன் நைட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நார்த்தர்ன் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

சேவக் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு அனுபவ சேவக், இளம் மனன் வோரா சேர்ந்து அசத்தல் துவக்கம் தந்தனர். இருவரும் அதிரடியாக ஆட, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில், வோரா(65) அவுட்டானார். திசாரா பெரேரா(16), மேக்ஸ்வெல்(7) நிலைக்கவில்லை. அரைசதம் கடந்த சேவக், 52 ரன்களுக்கு வெளியேறினார். கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் மிரட்ட, பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. மில்லர்(40), சகா(2) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய நார்த்தர்ன் அணிக்கு டேனியல் ஹாரிஸ்(9), கேன் வில்லியம்சன்(20), டெவ்சிச்(28), பிலின்(12) ஏமாற்றினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 15.2 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

‘ஹாட்ரிக்’ வெற்றி: ஏற்கனவே ஹோபர்ட், பார்படாஸ் அணிகளை வீழ்த்திய பஞ்சாப் அணி நேற்று தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்று அசத்தியது. தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்ற நார்த்தர்ன் நைட்ஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் உள்ளது.

http://sports.dinamalar.com/2014/09/1411754420/PunjabKnightsChampionsLeagueT20CricketSemifinal.html

  • தொடங்கியவர்

லாகூர் அணிக்கு முதல் வெற்றி: டால்பின்ஸ் அவுட்
செப்டம்பர் 27, 2014.

 

பெங்களூரு: டால்பின்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ போட்டியில், லாகூர் லயன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பெற்ற டால்பின்ஸ் அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

பெங்களூருவில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரின், ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ், தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லாகூர் அணி கேப்டன் முகமது ஹபீஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

உமர் அபாரம்:

லாகூர் அணிக்கு அகமது சேஷாத் (6), நசிம் ஜாம்ஷெத் (10) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சல்மான் (1), கேப்டன் முகமது ஹபீஸ் (1) ஏமாற்றினர். பின் இணைந்த சாத் நசிம் (43), உமர் அக்மல் (73*) ஜோடி, சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. கடைசி கட்டத்தில் ஆசிப் ராஜா (19*) கைகொடுக்க, லாகூர் லயன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. டால்பின்ஸ் அணியின் பிரைலிங்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

பிரைலிங்க் அரைசதம்:

கடின இலக்கை விரட்டிய டால்பின்ஸ் அணிக்கு டெல்போர்ட் (0), செட்டி (2), மகராஜ் (0) ஏமாற்றினர். வான்டியர் (29), கேப்டன் வான் விக் (36) ஓரளவு கைகொடுத்தனர். ஜோன்டோ (8), வான் ஜார்ஸ்வெல்டு (3) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய பிரைலிங்க், 20 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். டால்பின்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பிரைலிங்க் (63 ரன்கள், 27 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். லாகூர் அணி சார்பில் ஹபீஸ், முஸ்தபா இக்பால், சாத் நசிம் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

இதன்மூலம், முதல் வெற்றியை பதிவு செய்த லாகூர் அணி, 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ‘ஹாட்ரிக்’ தோல்வி கண்ட டால்பின்ஸ் அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து ஏமாற்றியது.

http://sports.dinamalar.com/2014/09/1411834608/umarakmallions.html

 

  • தொடங்கியவர்

.சென்னை அணி அசத்தல் வெற்றி: பெர்த் அணி அவுட்
செப்டம்பர் 26, 2014

 

பெங்களூரு: பெர்த் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ போட்டியில், சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி, அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. பெர்த் அணி

வெளியேறியது

பெங்களூருவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடருக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், சென்னை, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெர்த் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

திணறல் துவக்கம்:

சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம் (11), டுவைன் ஸ்மித் (11), ரெய்னா (1) ஏமாற்றினர். ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கிய மிதுன் மன்ஹாஸ் (18), டுவைன் பிராவோ (27) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின் இணைந்த ரவிந்திர ஜடேஜா, கேப்டன் தோனி அதிரடியாக ரன் சேர்த்தனர். யாசிர் அராபத் வீசிய 19வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசிய தோனி (35 ரன்கள், 16 பந்து) நம்பிக்கை தந்தார். மறுமுனையில் ஜடேஜா அதிரடி காட்ட, சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (44 ரன், 28 பந்து, 2 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

 

சவாலான இலக்கை விரட்டிய பெர்த் அணிக்கு சிம்மன்ஸ் (13), ஆஸ்டன் (4), ஒயிட்மேன் (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். மிட்சல் மார்ஷ் (19) சோபிக்கவில்லை. கேப்டன் ஆடம் வோஜஸ் (27), டர்னர் (22), நாதன் கூல்டர்–நைல் (30) ஓரளவு ஆறுதல் தந்தனர். பெர்த் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. டுவைன் பிராவோ வீசிய 20வது ஓவரில், ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்கள் மட்டும் கிடைத்தது. பெர்த் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. யாசிர் அராபத் (12), பாரிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் ரவிந்திர ஜடேஜா வென்றார்.

 

இந்த வெற்றியின்மூலம், சென்னை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. நான்கு போட்டியில் 10 புள்ளிகள் பெற்ற சென்னை அணி, பெங்களூருவில் வரும் 30ம் தேதி நடக்கவுள்ள லாகூர்–பெர்த் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதில் பெர்த் அணி வென்றால், சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. ஒருவேளை தற்போது 6 புள்ளிகளுடன் இருக்கும் லாகூர் அணி வெற்றி பெற்றால், ‘ரன்–ரேட்’ அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் அணி நிர்ணயிக்கப்படும்.

 

http://sports.dinamalar.com/2014/09/1411751274/ChampionsLeagueT20CricketChennaiPerth.html

 

 

  • தொடங்கியவர்

சதமடித்தால் பேட் வோராவுக்கு பரிசளிக்க விரும்பிய சேவாக்
 

 

நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மனன் வோரா சதமடித்தால் அவருக்கு எனது பேட்டை பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன் என்று பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் சேவாக் 52 (37 பந்துகள்), மனன் வோரா 65 (32), டேவிட் மில்லர் 40 ரன்கள் (18 பந்துகள்) சேர்க்க, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த நார்தர்ன் அணி 15.2 ஓவர்களில் 95 ரன்களுக்கு சுருண்டது.

வெற்றிக்கு பிறகு பேசிய சேவாக், “இந்தப் போட்டியில் சதமடித்தால் எனது பேட்டை உங்களுக்கு பரிசளிக்கிறேன் என மனன் வோராவிடம் கூறியிருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரால் சதமடிக்க முடியாமல் போய்விட்டது. மொஹாலி ஆடுகளம் டி20 போட்டிக்கு ஏற்றதல்ல. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. பேட்ஸ் மேன்கள் பந்தை அடிக்கலாமா என சிந்திப்பதற்குள் பந்து சுழன்று எங்கேயோ போய்விடுகிறது. பாராட்டுகள் அனைத்தும் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கே சேரும்” என்றார்.

 

மனன் வோரா பேசுகையில், “இன்று எனக்கு மிக நல்ல நாள். நான் தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாகக் கையாண்டேன். அதனால் மிகப்பெரிய ஸ்கோரைக் குவிக்கலாம் என நினைத்தேன்” என்றார். சேவாக் தனது பேட்டை பரிசளிப்பதாகக் கூறியபோது உங்களின் மனநிலை எப்படியிருந்தது என்று மனன் வோராவிடம் கேட்டபோது, “நான் அதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறினேன். ஒரு ஷார்ட் பந்தை தவறாகக் கணித்து ஆடியதால் சதம் நழுவியது” என்றார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article6454704.ece

  • தொடங்கியவர்

தோனி, ஜடேஜா, அஸ்வின் அபாரம்; அரையிறுதிக்கு அருகில் சென்னை சூப்பர் கிங்ஸ்

 

பெங்களூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுக்க, தொடர்ந்து அடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 142/7 என்று தோற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்த அணி.

 

14 ஓவர்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமாகவே இருந்தது. பிறகு ஜடேஜா, தோனி இணை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் மட்டமான பந்து வீச்சை பதம் பார்த்தனர். கடைசி 6 ஓவர்களில் 86 ரன்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

பிரெண்டன் மெக்கல்லம், டிவைன் ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழந்ததுடன் ரெய்னா (1) ரன் அவுட் ஆனது சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது. பெர்த் ஸ்பின்னர்கள் டிவைன் பிராவோ, மிதுன் மன்ஹாஸ் ஆகியோரைக் கட்டுப்படுத்தினர். சைனமன் பவுலர் பிராட் ஹாகை ஆடத் திணறினர். இருவரும் இணைந்து 34 பந்துகளில் 23 ரன்களையே எடுக்க முடிந்தது.

 

ஜடேஜா இறங்கியபோதும் ரன்கள் குவியத் தொடங்கவில்லை. 6வது ஓவருக்குப் பிறகு 15வது ஓவரின் முதல் பந்தை பிராவோ பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் நேர் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் அவுட் ஆனார்.

தோனி களமிறங்கி அராபத்தின் புல்டாஸை லெக் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடிக்க அதுவரை நன்றாக வீசிய பிராட் ஹாக் பந்தை மேலேறி வந்து ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தார் ஜடேஜா.

தோனியின் 3 சிக்சர்களில் ஒன்று மைதானத்திற்கு வெளியே:

19வது ஓவர் பெர்த் அணியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தது. அராபத் அந்த ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். முதல் பந்தில் தோனி 2 பிறகு ஒரு சிங்கிள், பிறகு ஜடேஜா ஃபைன்லெக்கில் ஒரு பவுண்டரி, பிறகு ஒரு சிங்கிள், தோனி ஸ்டரைக்கிற்கு வந்தார்.

 

5வது பந்து உயரமான ஃபுல்டாஸ். நோ.பால், தோனி அதனை ஃபைன் லெக் திசையில் சிலபல பார்வையாளர்கள் வரிசையைத் தாண்டி அடித்தார். மீண்டும் ஒரு ஃபுல்டாஸ் அதனை ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். பந்து மேலே மேலே மேலே சென்று கொண்டிருந்தது. கீழே இறங்குமா என்ற நிலையில் கூரையில் விழுந்து மைதானத்திற்கு வெளியேயானது. ஆனால் இது தோனியின் மிகப்பெரிய சிக்சர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பந்து மிடிவிக்கெட்டில் ஒரு சிக்சர்.

16 பந்துகளில் 4 சிக்சர்கள் அடித்த தோனி 20வது ஓவரில் 35 ரன்களில் அவுட் ஆனார். ஜடேஜா 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். இவர்தான் அதிகபட்ச ஸ்கோர். கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள். சென்னை அணி 155 ரன்களை எட்டியது.

 

இலக்கைத் துரத்திய ஸ்கார்ச்சர்ஸ் பவர் ப்ளேயில் 35 ரன்கள் எடுத்தனர். 10 ஓவர்கள் தறுவாயில் 6 ரன்களுக்கும் சற்று கீழே இருந்தது ரன் விகிதம். மிட்செல் மார்ஷ் 9வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுக்க அது நோபால் ஆனது. ஆனால் அஸ்வின் வீசிய 10வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அவர் அவுட் ஆனார்.

6வது விக்கெட்டுக்காக ஆஷ்டன் டர்னர், நேதன் கூல்டர்-நைல் இணைந்து 33 பந்துகளில் 6வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தபோது ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு நம்பிக்கை துளிர் விட்டது. 13 பந்துகளில் 33 எடுத்தால் வெற்றி என்ற சிறு நம்பிக்கை நிலை தோன்றியது. ஆனால் டர்னர் ரன் அவுட் ஆக பெர்த் தோல்வி தழுவியது.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளனர். லாகூர் லயன்ஸ் 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளனர். சென்னை அணியில் அஸ்வின் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நெஹ்ரா 2 விக்கெட்டுகளையும் மோகித் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஜடேஜா ஆட்ட நாயகன்

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6454546.ece

 

  • தொடங்கியவர்

டிரிடென்ட்ஸை வீழ்த்தியது ஹரிக்கேன்ஸ்
 

 

சாம்பியன்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியில் பர்படோஸ் டிரிடெ ன்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி வீழ்த்தியது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி சண்டீகர் மொஹாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஹரிக்கேன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. டிரிடென்ட்ஸ் அணி தொடக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கார்ட்டர் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அவர் 34 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இதுதான் அந்த அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

 

ஹரிக்கேன்ஸ் தரப்பில் டோஹர்ட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹில்பெனாஸ், போலிங்கர் தலா 2 விக்கெட் டுகளை வீழ்த்தினர். டிரிடென்ட்ஸ் அணி 19.4 ஓவர் களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் குவித்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹரிக்கேன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டங்க் ரன் கணக்கைத் தொடங்கு முன்னர் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பெய்ன் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.

அதிரடி காட்டிய ஷோயப் மாலிக் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 39 ரன்களும், வெல்ஸ் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். ஹரிக்கேன்ஸ் அணி 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. டிரிடென்ட்ஸ் தரப்பில், ஹுசைன் 2 விக்கெட்டுகளும், மேயர்ஸ், முனவீரா தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6456303.ece

 

 

 

  • தொடங்கியவர்

பஞ்சாப் அணி அபார வெற்றி
செப்டம்பர் 27, 2014.

மொகாலி: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பஞ்சாப் அணி, கோப்ராஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மொகாலியில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ் தொடரின் ‘பி’ பிரிவு, முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய பஞ்சாப் அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்த கோப்ராஸ் அணிகள் மோதின.

 

முதலில் பேட் செய்த கோப்ராஸ் அணிக்கு லீவி(42), ஆம்லா(40) நல்ல துவக்கம் தந்தனர். மற்றவர்கள் சொதப்ப, 18.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு சேவக்(23), வோரா(23) வலுவான அடித்தளம் அமைத்தனர். மேக்ஸ்வெல் 23 ரன்கள் எடுத்தார். பின் சகா(42*), மில்லர்(16) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். பஞ்சாப் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து, தொடர்ந்து 4வது வெற்றியை பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/09/1411833898/sehwagiplpunjab.html

 

  • தொடங்கியவர்

கோல்கட்டாவுக்கு நான்காவது வெற்றி
செப்டம்பர் 29, 2014.

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோல்கட்டா அணி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், டால்பின்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ்  ‘டுவென்டி–20’ தொடரின் முக்கியத்துவம் இல்லாத ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய கோல்கட்டா அணி, டால்பின்ஸ் அணியை சந்தித்தது.

 

‘டாஸ்’ வென்று களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் காம்பிர் (12), காலிஸ் (6) ஏமாற்றினர். பின் உத்தப்பா(85*), மணிஷ் பாண்டே(76*) அசத்த, கோல்கட்டா அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.

 

கடின இலக்கைத் துரத்திய டால்பின்ஸ் அணிக்கு வான் விக் (34), ஜோண்டோ (32), ஆன்டிலே (37) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, டால்பின்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 151 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.

 

 

http://sports.dinamalar.com/2014/09/1412012893/champiosleaguet20kolkatadolphins.html

 

  • தொடங்கியவர்

இன்று லாகூர்-பெர்த் அணிகள் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் ஆட்டம்
 

 

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று ஏ பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் – பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தின் முடிவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் என்பதால் இப்போட்டி குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் சிறப்பான ரன் விகிதத்துடன் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும், சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறிவிடும்.

அதே நேரத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் வென்றால் லாகூர் அணி வெளியேறும். சென்னை எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பெர்த் அணி ஏற்கெனவே போட்டியில் இருந்து வெளியேறிவிட்டதால் ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

 

இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை அணி இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை என்ற நிலையில் 10 புள்ளிகளுடன் ஏ பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. ஏ பிரிவில் கொல்கத்தா தான் பங்கேற்ற 3 லீக் ஆட்டங்களில் வென்று அரையிறுதிக்கு ஏற்கெனவே முன்னேறிவிட்டது.

ஏ பிரிவில் உள்ள மற்றொரு அணியான லாகூர் லயன்ஸ் இதுவரை ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டியில் முடிவு இல்லை என்ற நிலையுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் அந்த அணி வெற்றால் மேலும் 4 புள்ளிகள் பெற்று, 10 புள்ளிகளுடன் சென்னை அணியுடன் 2-வது இடத்தை பிடிக்கும். இதையடுத்து ரன் விகிதம் அடிப்படையில் முன்னணியில் உள்ள அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

 

பெங்களூரில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

 

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6460125.ece

  • தொடங்கியவர்

நடத்தை மீறல்: எச்சரிக்கப்பட்ட பிறகு கிளென் மேக்ஸ்வெல்லின் நகைச்சுவை
 

 

மொஹாலியில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நடத்தையை மீறியதற்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் எச்சரிக்கப்பட்டார்.

கோப்ராஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சைபிராண்ட் எங்கெல்பிரெக்ட் என்பவரிடம் 23 ரன்களுக்கு பவுல்டு ஆனார் கிளென் மேக்ஸ்வெல். இதனால் வெறுப்படைந்த அவர் பெவிலியன் திரும்பிச் செல்லும் போது பவுண்டரி அருகே வைக்கப்பட்டிருந்த குப்பை போடும் தொட்டியை மட்டையால் தாக்கியதாக புகார் எழுந்தது.

இது ஐசிசி நடத்தை விதிமீறல் லெவல் 1 வகையைச் சேர்ந்தது. மேக்ஸ்வெல் தன் தவறை ஒப்புக் கொண்டார்.

 

அதாவது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதானம், மைதானத்தில் உள்ள பொருட்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துதல் விதிமீறல் ஆகும்.

லெவல் 1 என்பதால் வெறும் எச்சரிக்கையோடு தப்பித்தார் கிளென் மேக்ஸ்வெல்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் தனது ட்விட்டரில் நகைச்சுவையாக “குப்பைத் தொட்டியை தட்டிவிட்டதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதன் பிறகு குப்பைத் தொட்டியுடன் நீண்ட நேரம் பேசினேன், இப்போது எங்களிடையே உறவு நல்ல முறையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

 

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப், கோப்ராஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/article6457614.ece

  • தொடங்கியவர்

அரை இறுதி ஆட்டங்கள் வியாழகிழமை  ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

 

கொல்கத்தா நைட் ரைடேர்ஸ்  எதிர்  ஹோபர்ட் ஹரிகான்ஸ் (Hobart Hurricanes)

 

சென்னை சூப்பர் கிங்ஸ்   எதிர்  கிங்ஸ் xi  பஞ்சாப்

  • தொடங்கியவர்

லாகூர் லயன்ஸ் தோற்று வெளியேற்றம்; அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

 

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் அணி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லாகூர் லயன்ஸ் அணி வெற்றி பெற்றேயாக வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை மட்டுமே லாகூர் லயன்ஸ் எடுத்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 19 ஓவர்களில் 130/7 என்று வெற்றி பெற்றது.

லாகூர் லயன்ஸ் அணி இந்தப் போட்டியில் வெறும் வெற்றி பெற்றால் மட்டுமே போதாத நிலை இருந்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை 78 ரன்களுக்குள் மடக்க வேண்டிய நிலை இருந்தது.

 

124 ரன்களை வைத்து கொண்டு லாகூர் லயன்ஸ் அணி சிறப்பாக போராடியது, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பேட்ஸ்மென்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் 13 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 62/7 என்று சரியும் அபாயத்தில் இருந்தது.

ஆனால் மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 3 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுக்க, பிராட் ஹாக் 19 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிச்கர்களுடன் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்க லாகூர் லயன்ஸ் விதி முடிந்தது.

லாகூர் லயன்ஸ் பேட்டிங் அபத்தமாகத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே நசீர் ஜாம்ஷெட் மற்றும் உமர் சித்திக் விக்கெட்டுகளை பறிகொடுக்க மொகமது ஹபீஸ் ரன் எடுக்காமல் 2வது ஓவரில் மிட்செல் மார்ஷிடம் ஆட்டமிழக்க 2 ரன்களுக்கே 3 விக்கெட்டுகள் பறி போனது. போதாக்குறைக்கு 4வது ஓவரில் மிட்செல் மார்ஷிடம் வஹாப் ரியாஸும் ஆட்டமிழக்க 11/4 என்று சரிவு கண்டது.

 

அதன் பிறகு சாத் நசீம், உமர் அக்மல் இணைந்து ஸ்கோரை 10வது ஓவரில் 54 ஆக உயர்த்தினர். உமர் அக்மல் 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஹாக் பந்தில் அவுட் ஆனார். மொகமது சயீதும், சாத் நசீமும் இணைந்து அடுத்த 8 ஓவர்களில் 48 ரன்கள் சேர்க்க ஸ்கோர் 102ஆக உயர்ந்தது.

சாத் நசீம் 55 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிச்கருடன் 69 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். லாகூர் லயன்ஸ் 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பாரிஸ் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும், ஹாக் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் சிம்மன்சை, ஹபீஸ் முதல் ஓவரிலேயே சாய்த்தார். ஆனால் அந்த மட்டை/பேடு கேட்ச் நாட் அவுட். எட்ஜ் ஆகவில்லை. நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் புதிய பேட்ஸ்மெனுக்கு அடுத்த பந்தே எட்ஜ் ஆனது அதனை நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

 

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய 13வது ஓவரில் 62/7 என்று ஆனது பெர்த். ஆனால் 14வது ஓவரிலேயே பிராட் ஹாக் 14 ரன்களை விளாச ஆட்டம் மாறிப்போனது.

அதன் பிறகு சிலபல அவுட் முறையீடுகள் மறுக்கப்பட்டன. மிட்செல் மார்ஷ் ஆட்டம் சூடுபிடிக்க, பிராட் ஹாக் உதவியுடன் மேலும் விக்கெட்டுகள் விழாமலேயே பெர்த் வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6462282.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.